Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாள் இடியப்பம் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 16, 2013 | , , ,

பெருநாள் தினம் காலை உணவில் அதிமுக்கியமாக ஒன்று இல்லாவிடின் அந்தப் பெருநாளில் ஏதோ சிக்கல் இருப்பது போன்ற பிரம்மை ஏற்படுவது நம் அதிரையர்களுக்கு மட்டுமா அல்லது மற்ற ஊர்காரர்களுக்குமா என்று யோசிக்க வைத்தது.

இடியப்பம் இப்போதெல்லாம் பாக்கெட்டில் வந்து விட்டதால் இலகுவாக வேண்டிய ஹைபர் மார்கெட், சூப்பர் மார்கெட்டில் கிடைக்கிறது, ஆனால் பெருநாள் காலங்களில் அதன் தேவைகள் அதிகமாவதால் அதற்கும் நிரம்பவே அலைய வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

நேற்று முன் தினம், இங்கு துபாயில் இடியப்பம் வாங்க வழக்கமாக செல்லும் சூப்பர் மார்கெட்டில் "கழிஞ்சு போயில்ல" என்ற பதில் வந்ததும். அடுத்த படையெடுப்பு "அண்ணபூர்னா" இடியப்பம் ஃபேக்டரியை நோக்கித்தான். இஷா தொழுகைக்கு பிறகு அங்கு சென்றதும் வரிசையில் நின்ற கார்களையும், பைக்கையும் பார்த்ததும். ஆஹா ! இன்றைக்கு அவ்வளவுதான் என்ற நினைப்பு என்ற அலுப்பு தட்டியது.

அதெப்படி இவ்வளவு தூரம் வந்து விட்டு வாங்காமல் செல்வதா ? நமதூர் "அந்தக் கால" ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போன்று காத்திருந்து கிடத்தட்ட 80 நிமிடங்கள் கழிந்ததும் வேண்டிக் கொண்ட இடியப்பம் கிடைத்தது.

இது பேச்சுலர் வாழ்கைக்கு மட்டும்தான் என்று எண்ணிவிட வேண்டாம், குடும்பம் சகிதமாக காத்திருந்து வாங்கிச் செல்லவும் நம்மவர்கள் அங்கே குழுமியிருந்தனர். இன்னும் சிலரோ, சின்ன புள்ளைய அனுப்பினால் சீக்கிரம் கிடைக்கும் என்று குழந்தைகளையும் அழைத்து வந்து அவர்கள் உதவியுடனும் வாங்கிச் சென்றனர்.

சரி இந்த இடியப்பம் ஏன் அப்படியொரு முக்கியத்துவம் பெறுகிறது ? அதில் என்ன விஷேஷம் !?

நம்ம விக்கியானந்த இடியப்பம் பற்றி சொல்வது "இடியப்பம் அல்லது இடியாப்பம் என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்."

உங்க அனுபவம் எப்படிங்க ? 

அரிசி இடித்து, சல்லடை போட்டு, வறுத்து, மாவு எடுத்து, சுடுதண்ணீர் வைத்து, மாவு இட்டு, கைகடுக்க குழைத்து, உரலில் இட்டு, நூல்போல் வலைப் பின்னி, ஈடுஈடாக இடியப்ப தட்டில் பிதுக்கி எடுத்து அதனை அவித்தா இடியப்பம் செய்வீங்க ?

தெரிந்ததைச் சொல்லுங்க தொரியாதவங்க கியூல நில்லுங்க... இடியப்பம் கிடைக்கும்.

அபூஇப்ராஹீம்

9 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ். அடியேன், சென்ற விடுப்பில் ஊரிலிருந்து அதற்குத் தேவையான உபகரணங்கள், இடியாப்ப மாவு யாவும் மற்றும் பயிற்சியும் பெற்று வந்தேன், இதனால் தமியேன் வரிசையில் நிறக வேண்டியதில்லை; மாறாக யான் இடியாப்பம் மாவு குழைப்பதையும், உரலில் இட்டுச் சுற்றுவதையும் சமையற்கட்டில் வந்து “மலையாளிகள்” “எந்தா இது” என்று வியப்புடன் கேட்பதும் எனக்கு ஒரு வகையான தொந்திரவாகவும் அமையும்; இதனால் பக்குவமான அந்தச் சமன்பாடு ( 1 டம்ப்ளர் குவளை இடியாப்ப மாவுக்கு ஒன்றரைக் குவளைத் தண்ணீரைச் சூடுபடுத்த வேண்டும்) என்பதை இவர்களில் இடையூறால் குழம்பி, இடியாப்பம் சிக்கலானதும் உண்டு. ஆயினும், சமையற்கட்டில் தொந்தரவு இல்லாத சமயம் பார்த்துத் தான் செய்தால், “சூப்பர்” இடியாப்பம் சுடச்சுடச் செய்யலாம். “ரெடிமேட்” இடியாப்பம் சில நேரங்களில் முழுமையான தோற்றத்தில் இருக்காது; சுவையிலும் மாறுபடும் (அதிரையர்களின் நாக்கு எப்படியும் கண்டுபிடித்துவிடும்)

KALAM SHAICK ABDUL KADER said...

நமதூரில் முன்னர் நடந்த தப்லீக் இஜ்திமாவிற்கு வந்த அரபிகள் இந்த இடியாப்பத்தைப் பசியாற வைத்ததும் “இதை எப்படி எங்கிருந்துப் பிய்த்துத் துவங்க வேண்டும்?” என்று கேட்டனர்.

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.

ரெம்பவும் சிக்கலான ஒரு சப்ஜெக்ட்டைரெம்ப சிம்பிளாக எழுதி இருப்பது பாராட்டுக்கு உரியது.

இறைச்சிக் கறி இல்லாமல் ப்பாசி ரவ்வா வோடு சாப்பிட்டால், மூலம், மலச்சிக்கல் உடையவர்களுக்கு நல்லது.[?]

''ஆட்டுக்கறி இல்லாத பெருநாள் ஒரு பெருநாளா?'' என்று கேட்கப்படாது. டாய்லேட் எவ்வித உடல் உபாதைத் தொந்தரவுகள் இல்லாமல் இருக்வும் அவைகள் நீங்க இதுவும் ஒருவழியே]

தியாகத் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்..

மீண்டும்சந்திப்போம்..

Sமுஹம்மது.பாரூக்,அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

இடியப்பம்

சுவையான சிக்கலோடு
முதலும் முடிவும் மறைத்துவைத்த
மர்மநாவல்

கூட்டணிக்கேற்ப
குணம் மாறும்
சுவையும் சேவையும்

இளசுகளுக்கு
இறைச்சியாணத்தோடும்
பெருசுகளுக்குப்
பசும்பாலோடும்

புதுமாப்பிளைக்கு
இடியப்பச்சோறு
சுறுபிள்ளைகளுக்கு
தேங்காய்ப்பால் சீனி

கல்லூரிக் காலங்களில்
இடியப்பம் பாயா
எல்லாக் காலத்திலும்
ரவாக் கஞ்சி மஸ்த்து

எல்லோரும் விரும்பும்
ஒரே சிக்கல்
இடியப்பம்

KALAM SHAICK ABDUL KADER said...

//எல்லோரும் விரும்பும்
ஒரே சிக்கல்
இடியப்பம்\\

"சிக்” என்றிருந்தன வரிகள்; சிக்கனக் கவிதையில் சிக்கலுக்கும் சிறப்புத் தந்த ஒரே கவிஞர் நீவிர்!

Unknown said...
This comment has been removed by the author.
Shameed said...

இடியப்பத்தில்தான் சிக்கல் என்றால் அதை வாங்குவதிலுமா இத்தனை சிக்கல்

KALAM SHAICK ABDUL KADER said...

\\இடியப்பத்தில்தான் சிக்கல் என்றால் அதை வாங்குவதிலுமா இத்தனை சிக்கல்\\

எதையும் தானாகவே செய்யப் பழகினால் எதிலுமே சிக்கல்கள் இரா..

Ebrahim Ansari said...

//அரிசி இடித்து, சல்லடை போட்டு, வறுத்து, மாவு எடுத்து, // ஒன்று விடுபட்டுவிட்டது . அது கப்பி மாவு. மாவு சலிக்கும்போது உருண்டு உருண்டு வரும் அதை வாங்கி அதில் வெள்ளக்கட்டியும் தேங்காயும் கலந்து சாப்பிட்டால் சூப்பர். ( இன்று பிலட் சுகர் கூடி இருப்பதற்கு இதுவும் காரணம் அதாவது அஸ்திவாரம்) .

அதெல்லாம் ஊரில்.

அன்ன்பூர்நா கியூவில் நானும் நின்று இருக்கிறேன்.

இந்த அனுபவத்தில் யாராவது ஏமாந்தவர்கள் வந்தால் இடியப்ப மாவு ஊரில் இருந்து வரும். கடைகளில் விற்கும் கேரளா பிராண்ட் மாவுகள் நமது உரல்களிலேயே சிக்குமாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு