Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 74 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது ( அல்குர்ஆன் : 29:45 )

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.  ( அல்குர்ஆன் : 2:152 )

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! ( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )

''இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

பொருள்:
1)    அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்
2)    கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கிறேன்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1408 )

''சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து  லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்'' என்று நான் கூறுவது, சூரியன் உதிக்கும் (பூமியில் கிடைக்கும்) பொருட்கள் (எனக்கு கிடைப்பதை) விட எனக்கு மிக விருப்பமானதாகும் என்று நபி(ஸல்)கூறினார்கள்.

(பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வே மிகப் பெரியவன்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1409 )

ஒருவர், ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்;'' என்று ஒரு நாளைக்கு நூறு தடைவ கூறினால், பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மை அவருக்கு உண்டு. அவருக்கு  100 நன்மைகள் எழுதப்படும். அவரை விட்டும் 100 தீமைகள் அழிக்கப்படும். அந் நாளில் மாலை வரை ஷைத்தானை விட்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவரை விட அதிகமாக நற்செயல் செய்தவரைத் தவிர, வேறு எவரும் இவர் கொண்டு வந்ததைவிட மிகச்சிறந்த ஒன்றை கொண்டு வந்தவராக மாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

மேலும், ''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்று ஒரு நாளில் நூறு தடவைக் கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1410)

''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்'' என்று ஒருவர் 10 தடவை கூறினால், இஸ்மாயில் நபியின் வாரிசுகளில் நான்கு அடிமைகளை விடுதலை செய்தவர் போலாவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1411 )

''அல்லாஹ்விற்கு மிக விருப்பமான சொல்லை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நிச்சயமாக அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான வார்த்தை ''சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி'' என்பதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1412 )

சுத்தமாக இருப்பது, இறை நம்பிக்கையில் பாதியாகும். ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறி அல்லாஹ்வைப் புகழ்வது, (மறுமை) தாரசை நிரப்பும், ''சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்'' கூறுவது, வானங்கள் பூமி இடையே உள்ளதை நிரப்பும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1413 )

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை ''இஸ்திஹ்ஃபார்'' கூறிவிட்டு, ''அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்க யாஃதல் ஜலாலி வல்இக்ராம்'' என்றும் கூறுவார்கள்.

பொருள்: இறைவா! நீயே அமைதி ஆவாய். உன்னிடமிருந்தே அமைதி ஏற்படுகிறது.  மதிப்பும், கண்ணியமும் உள்ளவனே! நீ உயர்ந்து விட்டாய்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அவ்ஸாயீ அவர்களிடம், ''இஸ்திஹ்ஃபார் என்பது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. ''அஸ்தஹ்ஃபிருல்லாஹ், அஸ்தஹ்ஃபிருல்லாஹ் என்று கூறுவதாகும்'' என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1415 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

^^^^^^^
''சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, வலாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்"
^^^^^^^^

நினைவில் நிறுத்திக் கொள்ள நினைவூட்டியமைக்கு ! ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

sabeer.abushahruk said...

திக்ர் செய்வதில் மனம் அமைதியுறுவதை அனுபவித்து வருபவன் என்கிற தகுதியில் சொல்கிறேன், திக்ர் செய்யுங்கள்.

இங்கு பெரும்பாலான வாகனங்களில் "லா தன்ஸ திக்ர் அல்லாஹ்" என்று ஸ்டிக்கர் ஒட்டி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, அலாவுதீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நினைவில் நிறுத்திக் கொள்ள நினைவூட்டியமைக்கு ! ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.