தொடர் பகுதி - இருபத்தி இரண்டு
பால்போர் பிரகடனம் உசுப்பி விட்ட உற்சாகத்தில் , உலகெங்கிலுமிருந்து ஓடிப்போன யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு வரத் தொடங்கி ஏற்கனவே யூதர்களின் நிலவள வங்கி மூலம் வாங்கிப் போட்ட நிலங்களில் குடியேற ஆரம்பித்தார்கள். வெர்சயில்ஸ் உடன்படிக்கை என்ற ஒப்பந்தம் மூலம் முதலாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. இந்தப் போர் பற்றி, இந்தத் தொடரில் நாம் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் துருக்கிக்கு செலவுக்கணக்கில் எழுத வேண்டியதும் பிரிட்டனுக்கு வரவுக் கணக்கில் எழுதப்பட வேண்டியதுமான பாலஸ்தீனம்தான். பால்போர் பிரகடனத்தை ஸ்டார்டராக வைத்து தங்களது விருந்தை உண்ணத் தொடங்கிய யூதர்களுக்கு பிரிட்டன் பெற்ற வெற்றி, முழு விருந்தையே படைத்தது.
ஜெருசலத்தை அல்லன்பே என்ற தளபதியின் கீழ் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்த பிரிட்டன், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை இழைக்கத் தொடங்கியது.
உலக சரித்திரத்தில், ஹஜரத் உமர் (ரலி) அவர்களுடைய காலத்தில் தொடங்கி பின்னர் சகிப்புத்தன்மை மற்றும் இரக்ககுணம் கொண்ட அன்பின் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் காலத்தில் தொடர்ந்து அதன்பின் உஸ்மானிய துருக்கிய சாம்ராஜ்யத்தில் பல்வேறு அரசர்கள் மாறி மாறி வந்தாலும் மனிதாபிமானமும் மத சகிப்புத்தன்மையும் அன்பும் அரவணைப்பும்தான் ஜெருசலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் அன்போடு வழங்கப்பட்டது. யூதர்களின் நயவஞ்சகங்கள் வெளிப்படுத்தப்படும்போது கூட மன்னிப்பே அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. புனித மண்ணை ஆண்ட முஸ்லிம் மன்னர்களும் இனியவர்களாக இஸ்லாத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்துச் சென்றதே அதற்குக் காரணம்.
இறுதித் தூதரையே ஒரு யூதன் பகிரங்கமாக பொய்யாக்கி தண்ணி ஒரு தூதர் என்று வாணவேடிக்கை நடத்தியபோது கூட அவனுக்கு வேண்டியதை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பே தீர்ப்பாகத் தரப்பட்டது. அவன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவினான்.
நாட்டை விட்டு வெளியேற நினைத்தவர்களுக்கு பாதுகாப்புடன் வெளியேற வசதி செய்து தரப்பட்டது.
இன்னொரு நாட்டில் அல்லல் பட்ட யூதர்களை காப்பாற்றிக் கொண்டுவர கப்பல் கூட அனுப்பி வைக்கப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்களின் கல்லறையை உடைத்து எலும்பைக் கொண்டு வந்து தோரணம் கட்டுவேன் என்று கூறிய கொடியவன் ஒருவனுக்கு அரசவையில் வைத்து அவனது தலையை சீவிய சம்பவம் தவிர முஸ்லிம்கள் ஆண்ட பாலஸ்தீனத்தில் யூதர்கள் மீதோ , கிருத்துவர்கள் மீதோ பெரிய அளவில் அடக்குமுறைகளோ அட்டூழியங்களோ நடத்தப்படவில்லை. அத்துமீறல்கள் நிகழ்ந்தபோதும் கூட படுகொலைகளோ பாரதூரமான செயல்களோ மேற்கொள்ளப்படாமல் அன்பால் திருத்தும் ஆட்சிகளே நடந்தன என்பவைதான் வரலாறு தரும் சான்றுகள்.
ஆனால், பாலஸ்தீனத்தை பிரிட்டன் கைப்பற்றியதும், ‘ இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்பதுபோலவும் காய்ந்த மாடு கம்பில் விழுந்ததைப் போலவும் , பிரிட்டனும் யூதர்களும் பாலஸ்தீனத்தையும் முஸ்லிம்களையும் மேய ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் 1919 – ஆம் ஆண்டு, வெர்சயில்ஸ் உடன்படிக்கையின்படி League of Nations என்ற ஒரு சர்வதேச கட்டப்பஞ்சாயத்து அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஒருதலைப் பட்சமாக, பாலஸ்தீனத்தின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் பிரிட்டனைச் சார்ந்தது என்று உலகுக்கு அறிவித்தது. அத்துடன் பாலஸ்தீனத்துக்காக ஒரு தூதரை – ஹெர்பர்ட் சாமுவேல் என்ற ஒருவரையும் அனுப்பி வைத்தது. இவர் வேறு யாருமல்ல பால்போர் பிரகடத்தை வடிவமைத்தவரே இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி, பாலஸ்தீனத்தை சுற்றி ஒரு சதிவலையை நன்றாகப் பின்னத் தொடங்கின ஏகாதிபத்தியங்கள்.
இவ்வாறு இஸ்ரேல் என்ற தனிநாட்டை அமைக்குமுன்பு பாலஸ் தீனத்தைப் பங்கு போட அவர்கள் தீர்மானித்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் வெறும் பனிரெண்டு சதவீதத்தினர்தான். மற்றவர்கள் முஸ்லிம்கள். பெரும்பான்மையாக மட்டுமல்ல பாரம்பரியமாக அந்த மண்ணிலேயே வாழும் முஸ்லிம்களை ஒரு அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி ஓடிய சிறுபான்மை இனம் ஆள வழிவகுத்தன அன்றைய வல்லரசுகள். ஆனால் வல்லோன் வகுத்தவழி என்று ஒன்று இருக்கிறது. அதை இந்தத் தொடரின் நிறைவில் நாம் குறிப்பிடுவோம். இன்ஷா அல்லாஹ்.
இப்படி ஒரு பக்கம் யூதர்களுக்கு இனிப்பான ஐஸ் கிரீம் தரப்பட்டுக் கொண்டு இருந்தாலும் உலகில் பல பாகங்களில் யூதர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படுவது நின்றபாடில்லை.
காரணம், முதலைக் கண்ணீரின் மொத்த வியாபாரிகள்; அடுத்துக் கெடுத்தலின் அதிபர்கள்; துரோகத்தின் துணைவர்கள்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் உலக முகவர்கள்; தோல் இருக்க சுளை முழுங்கிகள்; யூதர்கள் என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ ஜெர்மனியின் எழுச்சியாக அன்று உருவாகி இருந்த அல்டாப் ஹிட்லர் உணர்ந்தார்.
யூத மீன்களைப் பிடித்து சுட்டுத்தின்பதற்கு ஹிட்லர்தான் முதன்முதலில் குளக் குத்தகை எடுத்திருந்தார் என்று எண்ணுவது சரியான கருத்தல்ல. காரணம், யூதர்கள் இவ்விதம் மொத்த சரக்காக கண்டெயினர் கணக்கில் காலம்காலமாகக் கொல்லப்படுவது உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் படிப்பவர்களுக்கு முதல் முறையாகத் தோன்றாது.
ஏற்கனவே யூதர்கள் செய்த துரோகங்களுக்காக இறைவன் இவர்களுக்கு விடுத்த எச்சரிக்கைகள் பைபிளிலும் திருமறை குர் ஆனிலும் நிரம்ப இருக்கின்றன. சிலவற்றை முன்னரே குறிப்பிட்டு இருக்கிறோம். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இறைவனின் எச்சரிக்கை அவ்வப்போது யூதர்களுக்குப் பலநாடுகளும் வழங்கிய மரணப்பரிசுகளின் மூலம் விளங்கும்.
ஆகவே, யூதர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவது என்பது ஹிட்லர் தொடங்கி வைத்தது அல்ல; அவர் தொடர்ந்ததுதான் வந்தார். ஆனால் செய்வதை தீவிரமாகவும் வித்தியாசமாகவும் செய்தார். ஆனால் அதற்கு முன்பே நவீன காலத்தில் ரஷ்யாவில் யூதர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொன்று பிணங்களை சாலைகளில் அனாதைகளாகப் போட்ட நிகழ்வுகளை கடந்த அத்தியாயங்களில் படித்தோம்; அதற்கும் முன்பாக சிலுவைப் போர்வீரர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முப்பதாயிரம் யூதர்களை குடும்பத்துடன் கொன்ற செய்திகளையும் நாம் படித்தோம்; அதே கால கட்டத்தில், ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் பல ஆயிரம் பேர்களாக கப்பலில் ஏற்றப்பட்டு நடுக்கடலில் உயிருடன் கொட்டப்பட்டார்கள் என்பதையும் (அத்தியாயம் 13–ல்) படித்தோம். இன்றைக்கு யூதர்களுக்கு ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் யூதர்களை ஓட ஓட விரட்டியவர்கள் மட்டுமல்ல விரட்டி விரட்டி கொன்றவர்கள்தான் என்பதுதான் வரலாற்று உண்மை.
இவை மட்டுமா? இவைகளுக்கு முன்பே, இஸ்லாம் வளரத் தொடங்கிய காலத்திலும் இடையூறு இல்லாமல் ஏகத்துவம் என்ற இறைவனின் தத்துவம் உலக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டுமென்றால் துரோகத்திலேயே பிறந்து வளர்ந்து தழைத்த யூதப் புதர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கட்டாயம், இறைவனின் அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது கூட கடமையானது.
இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் பனூ குறைளாப் போர் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாகும். ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு , அகழ்ப் போரில் சிந்திய இரத்தக் கரைகள் காயும் முன்பு அவசரமாக நடத்தப் பட்டது அந்தப் போர். அகழ்ப் போர் ஏற்படக் காரணமே யூதர்கள் செய்த சதிதான். மதீனத்து யூதர்கள், குறைஷிகளையும் மதீனத்தின் கத்பான் கிளையினரையும் தேடிப்போய், பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு எதிராக ஆயுதங்களும் இன்னபிற உதவிகளும் தருவதாகக் கூறி தூண்டிவிட்டனர். இதன் காரணமாகவே, புதிதாக ஒரு போரை அரங்கேற்றும் தைரியம் குறைஷிகளுக்கு ஏற்பட்டு படை திரட்டி மதினா நோக்கி வந்தனர். யூதர்களின் இந்தக் குற்றத்துக்காக, அவர்களின் தலையில் தட்டிவைப்பதற்காக நடத்தப்பட்டதே பனூ குறைளாப் போர். ஆனால் தலைகள் தட்டி மட்டும் வைக்கப்படவில்லை வெட்டியும் அடுக்கப்பட்டது.
பனூகுரைளாப் போர், வல்ல இறைவனின் தூதருக்கு முன் பொல்லா யூதர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மண்டி இட்டதாகவே முடிவுற்றது. அது மட்டுமல்ல கைது செய்யப்பட்ட யூதர்களை மதினாவின் கடைத்தெருவில் ஒரு பெரும் அகழி வெட்டப்பட்டு , அந்த அகழியில் வைத்து ஒவ்வொரு ஆண் யூதர்களின் தலையும் வெட்டப்பட்டது. இவ்விதம் வெட்டப்பட்டவர்கள் ஏறக்குறைய 700 யூதர்கள் என்றும் யூதப் பெண்களும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர் ஸபியூர் ரஹ்மான் முபாரக்பூரி ( ரஹ்) அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல்மக்தூம் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. (பக்கம் 386).
அடுத்து, ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு , கைபர் போர் என்பதும் பெருமானார் ( ஸல்) அவர்கள் யூதர்களுடன் நேரடியாக முன்னின்று நடத்திய போர்தான். இந்தப் போரிலும் யூதர்கள் பெற்றது தோல்விதான். தங்களுடைய எட்டு கோட்டைகளையும் அனைத்து செல்வங்களையும் இழந்ததும், தங்களுடைய நிலங்களின் பாதி விளைச்சலை பெருமானார் ( ஸல்) அவர்களுடைய பொது நிதிக்குத் தர சம்மதித்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதும் ஏறக்குறைய நூறு யூதர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டதும் இந்தப் போரின் விளைவுகள்.
ஆகவே மூக்குடைபடுவதும் முதுகெலும்பு உடைக்கப்படுவதும் முச்சந்திகளில் வைத்து முனகக் கூட விடாமல் மூன்றாக முறித்துப் போடப்படுவதும் யூதர்களின் வரலாற்றில் புதிதல்ல. தூசியைத் தட்டி விடுவதுபோல் இத்தகைய தண்டனைகளைத் தட்டி விட்டு விட்டு ‘இன்னும் கெட்டுப் போகிறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய்?’ என்று கேட்பதுதான் யூதர்களின் இயல்பு என்பதை உலகம் அன்று தொட்டு இன்றுவரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் உயிர்ப் பலி கொடுப்பது என்பது யூதர்களுக்கு உடுப்பி ஓட்டலில் மசாலா தோசை சாப்பிடுவது போலத்தான். வரலாற்றின் வழி நெடுக இஸ்ரேல் உருவாகும்வரை பொய்நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானடி ! பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தவன் பள்ளத்தை தேடி நடந்தானடி! என்பவைதான் நாம் காணும் காட்சிகள்.
உலகத்தையே உலுக்கிய ஹிட்லர் அரங்கேற்றிய யூதர்களுக்கெதிரான படுகொலைகள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும் முன்பே ஆரம்பித்துவிட்டது. இந்தப் படுகொலைகள் பாலஸ்தீனம் என்கிற பூந்தோட்டத்தை இஸ்ரேல் என்கிற வந்தேறிகளுக்கு உலக வல்லரசுகள் தாரை வார்க்கவும் யூதர்களின் மேல் ஒருவித அனுதாபத்தையும் பெற்றுத்தர, வலுவான காரணமாக ஆகிவிட்டது.
ஹிட்லரின் இந்த யூத அழித்தொழிப்பு அஜெண்டா 1933 ஆம் ஆண்டே ஹிட்லரின் நாஜிகளால் தொடங்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் படையில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றிக் கொண்டே ஜெர்மனிக்கு எதிராக போர் நடத்திய பிரிட்டனுக்காக ‘உள்ளடி உளவு வேலை’ பார்த்து ஒவ்வொரு நடவடிக்கைகளையும் போட்டுக் கொடுத்த அந்த ஒரு காரணமே யூதர்களைத் தேடித்தேடி அழிப்பதற்கு ஹிட்லரின் நாஜிகளுக்குப் போதுமானதாக இருந்தது.
இருந்தாலும் தாங்கள் ஆரியர்கள் என்கிற இனச்செருக்கும் ஜெர்மானியர்களுக்கு யூதர்களின் மீதான வெறுப்புச் செடிக்கு உரம் போட்டது. தங்களுடைய ஆரிய இனம்தான் உலகில் உள்ள இனங்களிலேயே உயர்ந்தது என்று கருதிய நாஜிக்கள், பிற இனங்களை, குறிப்பாக தங்களை உயர்ந்த இனமாகத் தண்டோராப் போட்டு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த யூத இனத்தைக் கடுமையாக வெறுத்தனர். ஜெர்மனே யூதர்களால் அசுத்தப்பட்டிருக்கிறது என்று நாஜிக்கள் நம்பினார்கள். இந்த வெறுப்பின் உச்சம்தான் இன அழிப்பு.
ஆரியர்கள் உலகில் உயர்ந்தவர்கள் என்பது நாம் வாழும் நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நிலவி வந்திருக்கிறது என்பதை நாம் சொந்தக் கதையாகவும் சோகக் கதையாகவும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
ஏப்ரல் 1, 1933-ல்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கப்பட்டன. யூதர்களின் ஜெர்மானியக் குடியுரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து யூதர்கள் மீது நாஜிக்களாலும் ஜெர்மானியப் பொதுமக்களாலும் யூதர்கள் அகப்பட்ட இடங்களிலெல்லாம் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து , 1938-ல் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரியாவிலும், நாஜிக்கள் கிளை அலுவலகம் திறந்து யூதர்கள் மீதான ‘இன அழிப்’பை அங்கும் தொடங்கினார்கள். யூதர்களின் வியாபார நிறுவனங்கள், வீடுகள், சொத்துக்கள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே சூறையாடப்பட்டன; தீயிடப்பட்டன. யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இத்தகைய வன்முறைகளின் அரிச்சுவடியில் யூத இன அழித்தொழிப்பை (Holocaust ) ஹிட்லரின் நாஜிப்படைகள் வரைமுறை இன்றி ஆரம்பித்தன. அழித்தொழிப்பு மட்டும் ஆரம்பமாகவில்லை 1939 – ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமானது.
அவைகளை விவரிக்க தனியாக ஒரு அத்தியாயம் வேண்டும் . தருவீர்களா?
இன்ஷா அல்லாஹ்.
இபுராஹிம் அன்சாரி