Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வன்மையாக கண்டிக்கிறோம் ! - பாக்கிஸ்தான் பள்ளிக் கூடத்தில் தாக்குதல்... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2014 | , , ,


பாக்கிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது காட்டுமிராண்டிகள் நிகழ்த்திய கொடுரமான தாக்குதலால் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிக்கூட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவம் உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ! இந்த கொடுரச் செயலைச் செய்த எவராயினும் எவ்வித பாராபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம்...!

வன்முறையற்ற மானிதம் போற்றும் நன்மக்கள் இந்த இழப்பிலிருக்கும் மக்களுக்காக பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !

    அதிரைநிருபர் பதிப்பகம்   

மேலும்...

அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்: -

இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை!

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.

கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)

அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)

இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: -

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)

குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்: -

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)

நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!

(மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது.

4 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அப்பாவிபள்ளிபாலகர்கள்மீதுசெய்தஇந்தகொடூரதாக்குதல் இஸ்லாதிற்க்குஎதிரானவர்களுக்குகிடைத்தஆயுதமாகமாறும்.

aa said...

நரகின் நாய்கள் என்று அல்லாஹ்வின் தூதரால் வருணிக்கப்பட்ட கவாரிஜ்களின் கோழைத்தனமான தாக்குதல் இது. அப்பாவிகள் மீது நடத்தப்படும் இது போன்ற கொடூரங்கள் மிக வன்மையாக கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டியவை.

இது போன்ற தாக்குதல்கள் நடத்தும் அனைத்து இயக்கங்களும், (ஐ.எஸ், அல் காயிதா, தாலிபான்) இவை அனைத்திற்கும் கொள்கை ரீதியில் தாய் இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற வழிகெட்ட இயக்கமும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட வேண்டும். சையத் குதுப், ஹஸனுல் பன்னா, மௌதூதி, பின்லேடன் போன்ற கவாரிஜிய வழிகேடர்களை முஸ்லிம் சமுதாயம் அடையாளம் கண்டு அவர்களின் வழிகெட்ட சிந்தனைகளிலிருந்து அல்லாஹ் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் பாதுகாக்க பிரார்திக்கிறேன்.

சகோதரர்களே, ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவது பச்சை வழிகேடு; ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடுங்கோலர்களாக இருந்தாலும் சரியே. இதுதான் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅவின் அகீதா. இந்த நேரிய கொள்கயிலிருந்து, ஸஹாபாக்களின் இந்த அழகிய வழிமுறையிலிருந்து தடம்மாறி சென்றவர்கள் வழிகேடர்களே.

யா அல்லாஹ்! எங்களையும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் ஆட்சியாளர்களையும் நேர்வழியின் மீது அதிகப்படுத்துவாயாக. எங்களின் ஆட்சியாளர்களுக்காக பின்னிரவில் எழுந்து உன்னிடம் பிரார்த்தனை செய்யும் மக்களில் எங்களை ஆக்குவாயாக. ஆட்சியாளர்களின் குறைகளை மக்களின் மத்தியில் மேடை போட்டு பேசும் அறிவிலிகளாகவும், அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா தெரியாத மடையர்களாகவும், ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி பூமியில் இரத்தம் ஓட்டி குழப்பம் செய்யும் கூட்டத்தில் எங்களை ஆக்கிவிடாதே.

தலைத்தனையன் said...
This comment has been removed by the author.
aa said...

தாய் பறவையை விட்டு குஞ்சுகளை தேவையின்றி பிரிப்பதைக் கூட (அது விளையாட்டிற்காக, பொழுதுபோக்கிற்காக இருந்தாலும் சரியே) தடுத்துள்ள இஸ்லாமிய மார்க்கத்தில், ஒன்றுமறியா முஸ்லிமான விடலைச் சிறுவர்களை கொன்று குவிப்பதை வருணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இத்தகைய பயங்கரவாதிகள் கொழுந்துவிட்டெரியும் நரகத்தின் இழிவான நாய்களே.

கொலையுண்ட சிறுவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் அவர்களின் பிழை பொறுத்து அவர்கள் மீது ரஹ்மத் செய்யட்டும். பச்சிளம் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், நிரப்பமான நற்கூலிகளையும் வழங்குவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு