Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எதில் கஞ்சத்தனம்..! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2014 | , , ,

நம்மில் சிலர் எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்பதின் மின்னலே இதை எழுதத் தோன்றியது.

கந்தையானாலும் கசக்கி கட்டு - இந்த பழமொழியின் அர்த்தம் - கிழிஞ்சி போய் கடாச வேண்டிய துணியானாலும் , படித்துறையில் 501 பார் சோப் போட்டு துணி துவைப்பவனிடம் ஓசி வாங்கி துவைச்சு போட்டுக்கோ!! [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே...! அவன் அதை போட்டுக் கொண்டு 'கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஆஸ்காருக்கு அடித்தளம் போட்டுடுவான்] இனிமேல் பழமொழி எழுதும்போது ' பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.

ஆக ஆரம்பத்திலேயே சுபிட்சமான எந்த பழமொழியையும் படித்து கொடுக்காததால் இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் நாய்க்கு கூட கண் தெரியவில்லை, பூனைக்கு ஹார்ட்டில் ஓட்டை என்று புலம்பும் சமுதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.

இதில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்து வாழும் வாழ்க்கை இருக்கிறதே, சிலரை பார்க்கும் போது அவர்களுக்கு ' மெமரி சிப்" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.

நம் ஊர் பகுதியை சார்ந்தவர் இறந்து போன செய்தி கேட்டு போய் பார்க்க போயிருந்தேன் [இது 10 வருடத்துக்கு முன் நடந்தது]. அவர் படுத்து கிடந்த இடம் அட்டைபெட்டியை மடக்கி பாய்போல் உபயோகப் படுத்தியிருந்தார், கவலைப்பட்டேன். பிறகு கேள்விப்பட்டேன் ஊரில் பெரிய வீடு எல்லாம் இருக்கிறதாம். மற்றவர்கள் வாழ ஏன் இப்படி கஞ்சத்தனம் ?

ஒரு மனுசன் எத்தனை வருசம்தான் மத்தவங்களுக்காக வாழ்வது???..

சுகாதார விசயத்துக்கு முதலில் வருவோம். சிலருக்கு ஊரில் நல்ல வீடு இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.

ஆனால் இவன் பல்லைப் பார்த்தால் ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.

டூத் பிரஸ் வாங்குவதிலும் தன் பல்லுக்கு எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை. எது சீப் என்பதில் தான் கவனம். யாராவது புதிதாக வாங்கி கொடுத்தால் தனக்கு தேவை 'Hard’ என்று தெரிந்தும் “soft” பிரஸ்ஸை வைத்து பல வருடம் குப்பை கொட்ட நினைப்பது.

இந்த பட்ஜெட் ஏர்லைன் வந்ததில் நிறைய பேர் மிச்சப்படுத்துகிறேன் என்று கூட வருபவர்களை அடிமைகள் போல் நடக்க விடுகிறார்கள்.

சமீபத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அவர் எடுத்த டிக்கட்டுக்கு [ஏர் ஆசியா] அது சென்னைக்குத்தான் போகும். ஏன் நீங்கள் திருச்சிக்கு எடுக்க கூடாது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.

அதற்கு அந்த ஆள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே, கருட புராணத்தில் உள்ள அந்த கூபம், அக்னி குண்டம் போன்ற தண்டனைகள் ரொம்ப ரொம்ப "லைட்' என்பேன். இதில் என்ன ஹைலைட் தெரியுமா?. அவருக்கும் அவர் மனைவிக்கும் 35 வயதுக்குள் இருக்கும். இருவரும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சென்னையில் இறங்கி, ஆட்டோ எடுத்து , சிங்கபெருமாள் கோயில் அருகில் பஸ் ஏறி லொங்கு லொங்குனு ராமநாதபுரம் போய் சேர குறைந்தது 10 மணி நேரம் ஆகலாம் [அதுவும் இரவு நேரம்]. இதில் அவர் மிச்சப்படுத்துவது எவ்வளவு தெரியுமா வெறும் 1700 ரூபாய்தான். பெண்களை கூட அழைத்து செல்லும் கணவான்களே.இது மிச்சமா செலவா உங்களுடைய அலுப்பு, அசெளகரியம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே. ஏன் உங்களுக்கு அந்த கணக்கு மட்டும் தெரியாமல் போனது.

இதில் அந்த ஆள் எடுத்த டிக்கட்டில் 'ச்'சாப்பாடும் சேர்த்து.. 'ச்'சாப்பாடும் சேர்த்து என்று ..அந்த சாப்பாட்டுக்கு 'ச்" போட்டு ரொம்ப கேவலப் படுத்திவிட்டார்.

கோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]

இன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில "திருவாளியத்தன்" வேலை எல்லாம் செய்வார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆள், நல்ல வசதியான மனுசன் , சென்னையிலும், அவரது ஊர் பகுதியிலும் பல கோடி சொத்து வைத்திருப்பவர், ஆனால் அவரது செருப்பு அவரது கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி குறைந்திருக்கும். ஆனால் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை மாதிரியும் , தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் வானத்தை பொத்துக்கொண்டு லாபமாய் கொட்டுகிறது என சொல்லிக் காண்பிப்பதில் வல்லவர். சமயங்களில் நான் நினைப்பது உண்டு, தனக்கு இருப்பதோ இரண்டு கால்கள்,இதைச் சரியாக பாதுகாக்க காரணம் சொல்லும் இவர் இவ்வளவு சொத்தையும் பாதுகாப்பாரா??

வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.

எப்போது நமக்காக வாழப்போகிறோம்!

இன்னும் சில குடும்பத்து பெண்கள் திருமண விருந்துகளில் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்து போகிறேன் என்று நடந்து கொள்வது மிகவும் வருந்தக்கூடிய விசயம். அவர்கள் வீட்டின் ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது வருந்தாமல் என்னதான் செய்வது.

கூட்ட நெரிசலில் இப்படி சாப்பாட்டுக்கு பேயாக அலைவதை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் இவர்களின் நடத்தை கஞ்சத்தனத்தின் டாப் 10 வரிசையில் முதலிடம் பெறும்.

சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். இங்கு சிலர் தான் போட்டிருக்கும் ட்ராக் சூட் / முழு அங்கி ஜிப்பா [இஸ்லாத்தை கடை பிடிக்கிறேன் என்று டிராமா வேறு] சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.

இந்த குரூப்தான் பல்விளக்கும் பிரஸ் பன்றி முடியில் செய்ததது என்று கொஞ்ச நாள் லந்து கொடுத்த குரூப். இப்போது அப்படி ஆதாரம் இல்லை என்றவுடன் கப்சிப்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும். எனக்கு தெரிந்த ஒருவர் [சொந்தக்கார பெண்மணி] டீ குடியேன் என்று சொல்வதிலேயே அவருடைய சோம்பேரித்தனம் / “இவன் டீ வேணாம்னு சொல்லனும்” எனும் எண்ணம் எல்லாம் பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் பங்குவிலை ஒடும் டிஜிட்டல் டிஸ்ப்லே மாதிரி நம் கண்முன்னே தெரியும். பிறகென்ன பரவாயில்லை இப்போதுதான் டீ குடித்தேன் என்று சொல்லி விடுவதுதான்.

இந்த ஆக்கத்தின் மூலம் என் வேண்டுகோளை நமதூர்க் காரர்களுக்கு வைக்கிறேன்.

கல்யாணத்துக்கு செய்யும் செலவில் நம் கண்முன்னே கையேந்தி யாசகம் கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள். அயர்ன் கலையாத சட்டையுடன் , உயர்தர சென்ட் போட்டு வருபவர்கள் கொஞ்சம் பொறுமை கடை பிடிக்கட்டும். 1986-ல் என் கல்யாணம் நடைபெற்ற போது எங்கள் பூர்வீக வீட்டை இடித்து புதிதாக கட்டிக் கொண்டிருந்தோம் , கான்க்ரீட் போட்டு சிமென்ட் பூசாமல் அப்போது இருந்த வீட்டில் காலை 11.30 மணிக்கே சாப்பாட்டுகாக காத்திருந்த யாசகம் கேட்கும் அந்த ஆட்களனைவருக்கும் அந்த வீட்டில் பந்தி பரிமாறப்பட்டு உணவளிக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.

கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ்]

ZAKIR HUSSAIN

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//நம்ஊர்பகுதியைசார்ந்தவர்இறந்துபோனசெய்திகேள்விப்பட்டு.....// அந்தநபர்உயுருடன்இருக்கும்போதுஅங்கேஒருமுறை நானும்போனேன். படுக்கும் இடத்தில் குப்பையில்கொட்டும் பழைய துணிமணிகள் பழுத்துப் போன கைலிகளை எல்லாம்ஒன்று சேர்த்து ஒருஒடஞ்ச கள்ளி பெட்டி பலகை மேல்சேர்த்து கட்டிஇருந்தது. அதுமீதிருந்தஎண்ணைபசையைவைத்துஅது'தலையணை'யாகவேஇருக்கவேண்டுமெனயூகித்துக்கொண்டேன். . ஆனாலும்தெரியாததுபோல்''இதுஎன்ன?''என்றுகேட்டேன்''தெரியாலையா? இதுதான் தலையணை!'' என்றார் .''ஏன்?கடைகளில் நல்ல நல்ல தலையணைகள் விற்க்கிறதே! வாங்கிபோட்டுபடுக்ககூடாதா?" என்றேன் . ''பொலைக்க வந்த இடத்திலே இதெல்லாம்போட்டுபடுத்தால் நமக்குகட்டுபடியாகுமா காக்கா?'' என்றார். அவருடையமாதவருவாய்என்னதெரியுமா?குறைந்தபட்சம்7000Ringgit .இந்திய ரூபாய்க்குஒருலட்சரூவா! ஊரில்பிர்மாண்டவீடு பல கோடி ரூவா மதிப்புள்ள தென்னந்தோப்பு. ..அதில் ஒருஇளநி கூட வெட்டி மனதாரகுடித்திருப்பார்களா? என்பது சந்தேகமே! இப்படியெல்லாம்சம்பாதித்தும்அவர்பேரில்ஒருஜான்இடம்கூடஊரில் இல்லை.ஊரீல்நரிக்குறவன்வாழ்கிற வாழ்க்கைகூட ஒரு சபுராளி வாழவில்லை. மிளகுவர்த்திகூடஎவனோ ஒருவன்வைத்த தீயில் கரைகிறது. ஆனால்சபுராளியோ தனக்குத்தானேவைத்த தீயில் மெழுகாய்கரைகிறான். ஆகமொத்தம் நாறவாயான் தேடி நல்ல வாயான் திங்கிறான்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கஞ்சத்தனத்தை விவரிக்கும் கச்சிதமான வார்த்தைகள்.இவற்றை அவர்கள் ஓசியிலாவது படிக்கட்டும.

sheikdawoodmohamedfarook said...

என்பேரனுக்குபெயர்வைக்கும்விருந்தில்,விருந்துபரிமாறிவிருந்தினர்பாதிசப்பிட்டுகொண்டிடிருக்கும்போதுமூன்றுபேர்வந்தார்கள்.அவர்கள்பச்சைதலைப்பாகட்டிஇருந்தார்கள்.மூன்றுபேர்களின்உடம்பும்புஷ்டியாகவேஇருந்தது.''நாங்கள்ஏர்வாடியிலிருந்துவருகிறோம்.நேராகநாகூர்போகிறோம்.எங்களுக்கு பசிக்கிறது .உங்கசோறுதாங்கள்!' 'என்றார்கள். தருகிறேன்கொஞ்சம்பொறுங்கள்.விருந்துபாதிநடந்துகொண்டிருக்கிறது. உள்ளேஇடமில்லை.அவர்கள்சாப்பிட்டுமுடிந்ததும்நீங்கள்சாப்பிடலாம் ''என்றேன்.அவர்களுக்கோபொறுமைஇல்லை.''வீட்டுக்குயுள்ளேபோகும்கதவுஓரம்வைத்துகொடுங்கள்.சாப்பிடுகிறோம்''என்றார்கள்.''உள்ளேஇருந்து வெளிவரும்பாதையில்நீங்கள்உக்காந்துசாப்பிட்டால்சாப்பிட்டு முடித்தவர்கள் எப்படி வெளியே வருவார்கள். கொஞ்சம்பொறுங்கள் .சோறுநிறைய இருக்கிறது .இடம் இல்லாததால் ரெம்பபேர்பொறுத்து இருக்கிறார்கள். நீங்களும் பொறுமையுடன் இருங்கள்'' என்றேன். நேரமானால்பஸ்போய்விடுமே!நாங்கள்எப்படிநாகூர்போவது?''என்றார்கள்.என்பக்கத்தில்நின்றஒருமுரட்டுஆஸாமி''டேய்!ஒளுங்கநிண்டுசாப்பிடுறதா இருந்தாசாப்புடு!இல்லேண்டாஎடத்தேகாலிபண்ணு.அதுக்குமேலேஎடக்குமொடக்குபண்ணிக்கிட்டுஇருந்தாமூஞ்சிபேந்துபோயிடும்''என்றார்.அப்படியேஅமைதியாகிவிட்டார்கள். பிறகுஅவர்கள்திருப்திபடும்வரைசாப்பிட்டார்கள்.சாப்பிட்டபின்''பாவா! நாங்கள்போய்வருகிறோம்''என்றார்கள்.''போய்வாருங்கள்!''என்றேன்.அதையேதிரும்பதிரும்பசொன்னார்கள்.நானும்சொன்னதையேசொன்னேன். அவரில்ஒருவர்''பாவாக்குநாமஎன்னசொல்றோம்ன்டுவெளங்கலே. வெளங்கும்படியாசொல்லு''என்றார்.''எங்ககையிலேகாணிக்கையஆளுக்குரூவாநூறோஎறநூறோதந்தாநாகூர்நாதக்களிடம்உங்கள்ஹக்கில்துவாசெய்வோம்''என்றார்கள்.''பணம்இல்லை!கொடுத்தபிரியாணிசோத்துக்குமட்டும் துவாசெய்யுங்கள்.இதற்க்குமேல்நின்றால்வேறுமாதிரிநடக்கும்''என்றேன்போய்விட்டார்கள். சிலநேரங்களில்சிலமனிதர்களிடம்கனிவோடுநடந்தால்நம்மைமுட்டாள்'' என்றுதப்புகணக்குபோட்டுவிடுவார்கள்.

sabeer.abushahruk said...

சிரிக்கச் சிரிக்கச் சொன்னாலும் எங்கோ லேசா வலிக்கிறதுடா, தனக்கென எதையுமே செய்துகொள்ளாமல் குடும்பத்திற்கென்று வாழ்ந்து முடிந்த சபுராளிகள் வாழ்வை எண்ணி.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். மருத்துவராக்கா பழய பதிவானாலும் இன்னும் புதிதாய் இருப்பது உங்கள் எழுத்தின் சிறப்பு மறுபக்கம் இன்னும் புதிதாய் தெரிய நம்மவர்கள் இன்னும் அப்படியே இருப்பதும்!உங்கள் எழுத்தை இளமையாகவே வைத்திருக்க நம்மவர்களுக்கு நன்றி சொல்லிடுங்க!

ZAKIR HUSSAIN said...

நான் எழுதியது பழைய விசயம் புதிதாக தோன்ற அப்படியே மெயின்டைன் செய்யும் என் மக்கள் தான் இதில் என்ன சந்தேகம் கிரவுன். இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கு.

*கார்ட்டூன் படத்தில் வரும் சண்டைக்கு பயப்படும் ஆள்

*"இத கேளேன்" நு கவிதை படித்து சாவடிக்கும் ஒரு டிரைவர்.

*மொள்ள மாறி / முடிச்சு அவிக்கி இவனுகளை மகான் கள் என்று கொண்டாடும் பிஸ்னஸ்மேன்

*எனக்கு சரியான மரியாதை செய்யலெ என்று 6 மாத குழந்தையிடமே கோபித்து கொள்ளும் 'சுய மரியாதை"க்காரர்.

பெரிய லிஸ்ட்டே இருக்கு கிரவுன்....எழுதுவோம் வருங்காலத்தில்..

அன்பு மிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு.....நான் பார்த்த ஆட்களையே நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. என்ன ..கொஞ்சம் அதிக நாள் இவர்களுடைய லொல்லை பார்த்திருப்பீர்கள்.

சபீர்...நீ சொன்ன விசயத்தை நானும் உணர்ந்தேன். போன வாரம் பினாங்கு போய் வந்தேன். நமது ஊர் ஆட்கள் இருந்த இடம் எல்லாத்திலும் ஒருவர் கூட இப்போது இல்லை. வரலாறே மாறிப்போனதுபோல் உணர்ந்தேன்.

LMS...commentable comment.

ZAKIR HUSSAIN said...

Wa alaikkum salam Brother Crown

Ahamed irshad said...

>> வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான் <<

பஸ்ஸு பின்னாடி எழுதி வைக்க வேண்டிய சொல் ஜாஹிர் காக்கா.. கஞ்சத்தனம் பற்றிய இந்த கட்டுரையில் முக்கிய விஷயம் இதை நான் மறக்க மாட்டேன் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்..

Ahamed irshad said...

அதிரை நிருபரில் நெருப்பு நரி [ நல்லா வெச்சிருக்கான் பேரு ;) ] உலாவியிலேர்ந்து கமெண்ட் இட்டால் போக மறுக்கிறது.. க்ரோம் என்றால் பிரச்சனை இல்லை.. இது யார் கோளாறு என்று 2015 முடிவிலாவது தெரிஞ்சு கொண்டுடனும்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு