Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2014 | , ,

பாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி
பார்ப்பனப் புத்தகம்
பகவத் கீதையை
தேசிய நூலாக்கு.
மூன்று சதவிகித
ஆரியக் கொள்கைகளை
எண்பது சதவிகித
இந்துக் கொள்கையென
புரட்டுக் கணக்குப் போடு.

தேசியக் கொடியை விட்டுவைக்காதே
பட்டை சாயலில்
மட்டும் போதாது
அசோகச் சக்கரத்தை
அகற்றி விட்டு
நடுவிலொரு
நாமத்தைப் போட்டு
நாட்டின் மதிப்பைக் கூட்டு.

தேசியப் பறவையின்
இறக்கையில்
வேல் ஒன்றைக் குத்தி
வல்லரசு இந்தியா என
வாய்ப் பந்தல் போடு.

தனிப் பெரும்பானமை திமிரோடு
தயிர்சாதத்தை
தேசிய உணவாக்கி
குருதிச் சூட்டைக்
குறைக்க வைத்து
அடிமைத்தனத்தை அதிகரி.

உள்ளத்தில் அழுக்கான
கருக்களை அழிக்காமல்
தெருக்களைச் சுத்தம் செய்ய
பொதுசனத்திடம்
கொடு ஒரு துடைப்பம்;
பாரத் ரத்னா 
பட்டுக்குஞ்சத்தைக்
கட்சிக்காரனுக்குக் கட்டு.

ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.

தேசத்தந்தையைப்
படுகொலை செய்தவனை
தேசபக்தனாக அறிவிப்புச் செய்.

காந்தியைக் கொன்றவனுக்குக்
கோவில் கட்ட வேண்டுமன்றோ?
மற்றுமொரு மசூதிக்குள்
கோட்ஸே சிலையை வை.

மேல்சபையிலும் கீழ்சபையிலும்
உன்னாட்களே நிரம்பி வழிய
ஓட்டெடுப்பு என்றொரு
கண்துடைப்பு செய்து
ஒப்புதல் ஒப்பேற்றி
கரசேவைகளை
தேசத் தொண்டாக
சட்டத்திருத்தம் செய்.

'இந்து என்பதொரு மதமல்ல
இந்துத்துவா மதக்கொள்கையல்ல'
வாய்ஜாலம் செய்
'வீடு திரும்புதல்'
என்ற பித்தலாட்டத்தில்
நாடு முழுவதும்
கூட்டம் கூட்டமாக
மதமாற்றம் செய்.

மாற்றி எடுத்த கையோடு
சாதிச்சான்றிதழ் ஒன்று
சரிகட்டி - உன்
சீழ்ப்பிடித்த
சித்தாந்தத்தைக் கொண்டு
செருப்பால் அடி.

சர்வசகல நேரமும்
ஏதாவது ஒரு ரூபத்தில்
எல்லா ஊடகங்களிலும்
விவாதங்கள் நடத்து.

மாறுபட்ட வேடங்களில்
உன்னாட்களையே நடிக்கவிட்டு
கேளிக்கைகளில் மயங்கும்
கோமாளி மக்களை
கதாகாலாட்சேபம் செய்தே
கட்டுக்குள் வை.

கங்கையைத் தூய்மையாக்க
கோடிகளை ஒதுக்கு
கணக்குவழக்கு கேட்டால்
கேடிகளால் அடக்கு.
காசு ஒதுக்கியும்
பேசி மயக்கியும்
கைப்பற்றிய பதவி...

மக்கள் சுனாமி ஒன்று
மறுமலர்ச்சி காணும்வரை
கானலை நீர் எனப் பசப்பு;
வளர்ச்சிப்பாதையில்
மேற்கொண்டு அறிவிப்புகள் செய்,
இன்னும் உண்டு
ஏராள நாட்கள்
உன் ஆட்சி அதிகாரத்தில்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

17 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

ஊடக பயங்கரவாதம்!

இலங்கையில் சென்று தமிழ்ப் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் அமைதிப்படை!

மணிப்பூரிலும் , காஷ்மீரிலும் கற்பழிப்பவனுக்கு பெயர் பாதுகாப்பு படை!

வீரப்பன் வேட்டை என்று பழங்குடி பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் அதிரடிப்படை!

ரயிலில் குடித்து விட்டு சக பெண் பயணியை கற்பழிப்பவனுக்கு பெயர் ராணுவ படை !

காவல் நிலையத்திற் வரும் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் காவல் படை!

ஆனால் இந்திய நர்ஸ்கள் 42 பேரை கை விரல் கூட படாமல் அனுப்பி வைத்தவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்!

கற்பழிப்பு வழக்கில் நீதி தேடி வந்த பெண்ணை நீதிமன்றத்தில் வைத்து கற்பழிப்பவனுக்கு பெயர் நீதிபதி!

ஆன்மீகம் தேடி ஆசிரமம் வரும் பெண்களை கற்பழிப்பவனுக்கு பெயர் சாமியார்!

அபயம் தேடிவந்த அனாதை குழந்தைகளிடம் பாலியல் வக்கிரத்தை காட்டுபவன் பாதிரியார்!

கல்வி கற்க வரும் பிள்ளைகளிடம் கலவி நடத்தியவன் ஆசிரியர்!

சக நிருபருக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் ஊடகவியலாளர்கள்!

ஆனால் இராக்கின் போராளிகள் திருமணத்தின் மூலம் இல்லறத்தை அடைய நினைத்தால் அதற்கு பெயர் செகஸ் ஜிஹாத்!

ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கேட்டு போராடினால் போராட்டக் காரர்கள்!

உக்ரைனில் போராடினால் கிளர்ச்சியாளர்கள் !

இலங்கையில் போராடினால் விடுதலைப்புலிகள்!

சீனாவிடம் இருந்து விடுதலை கேட்டு போராடினால் ஹாங்காங் மக்கள் சுயாட்சி போராட்டம்!

ஆனால் தன் மண்ணை ஆக்கிரமித்து இருக்கும் அமெரிக்காவை எதிர்த்து ஆப்கானிலும் ஈராக்கிலும் போராடினால் தீவிரவாதிகள்!

காஷ்மீரில் சுயாட்சி கோரி போராடினால் பிரிவினைவாதிகள்!

இப்படி முஸ்லீம்கள் என்றால் மாறுபடும் ஊடக நிலைப்பாட்டுடன் செயல்படும் ஊடகத் தீவிரவாதத்தை எதிர்த்து முதலில் போராட வேண்டும்!

- நெல்லை ஏர்வாடியில் நேற்றைய தீவிரவாதம் குறித்த உரையில் இருந்து. ...

-செங்கிஸ் கான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுத்தம் செய்ய வந்தாராம்...
எல்லாமே
'அ'சுத்தமாகவே செய்கிறார் !


//ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.//

மதச்சார்பின்மை அரசு !

Yasir said...

எங்களின் கவலைகள் உங்கள் கவிதையின் மூலம் பிரதிபலிக்கப்படு இருக்கின்றன்....அமைதியாக இருக்கும் தேன் கூட்டை கலைக்க முயலும் மோடி மஸ்தான் களின் வேஷம் கலைக்கப்பட்டு ஓடும் காலம் விரைவில் வரும்....கல்வியில் கை வைத்தால் வளரும் தலைமுறையை வரலாறு தெரியாதவர்களாக வளர்த்துவிடலாம் என்று எண்ணும் அரசின் எண்ணத்தில் மண்ணைபோட நாம் அனைவரும் ஒன்று கூடி ஒன்றுமையாக போராட தயாராகவேண்டும்.....காலம் கடந்து கொண்டு இருக்கின்றது

ZAKIR HUSSAIN said...

இந்தியாவில் நடக்கும் விசயங்களை செய்திகளாக காட்டும் சேனல்கள் அனைத்திலும் ஒரு விதமான டென்சன் விசயங்களே இப்போதைய அரசு செய்வதாக தோன்றுகிறது. [ கோட்சேவுக்கு சிலை / பகவத் கீதை தேசிய நூல் ]

இவை முன்னேறும் அரசுக்கு நல்லதல்ல.

sheikdawoodmohamedfarook said...

தேசியக்கொடியில்சக்கரத்தைநீக்கிவிட்டுத்ரீசூலம்வரும்.கரன்சிநோட்டுகளில்காந்திபடம்இருக்காதுஅங்கேகோட்சேயின்படம்சிரித்துக்கொண்டிருக்கும்.நம்மில்ஒற்றுமைஇல்லை.பலகட்சிகளாகபிரிந்துகிடக்கிறோம்.அதையும்விடஉலகஅளவவில்இஸ்லாமியர்களுக்குஊடகபலம்மிகக்குறைவே.நமதுகுரலைஉலகமக்கள்காதுகளுக்கும்கவனத்திற்கும்கொண்டுசெல்லநமக்குவழியில்லை.நம்மில்ஒற்றுமைஇல்லை.நம்மைபற்றிமட்டுமேநாம்சிந்திக்கிறோமேதவிரஒட்டுமொத்தசமுதாயம்பற்றியஅக்கறை.சிந்தனைநம்மிடம்மருந்துக்குகூடகிடையாது.இந்தபலவீனங்களேநம்மைஅழிக்கநாம்நம்எதிரிகளுக்குகொடுத்தஆயுதம்.

அதிரை.மெய்சா said...

உன் வரிகளில் மிளிரும் தாக்கம்
புலிகளாய் சீறத் துடிக்கும்

தேசத் தந்தைக்கு துரோகம்
வேஷத் தந்தைக்கு வணக்கம்

ஜனநாயக நாட்டில் சாதீயம்
பிணவாடை நாடெங்கும் துர்நாற்றம்

உன்கையில் மடிந்தவர்கள் ஏராளம்
ஊர்தூற்றும் நடவடிக்கையும் தாராளம்

மனிதாபி மானங்களும் மலிவாகும்
மானிடர்கள் சாபங்கள் மெய்யாகும்

ஏகமெங்கும் ஆளும் இறை எங்கள்பக்கம்
எல்லாமும் இறையோனை சங்கமிக்கும்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இதயத்தின் வலியை பிரதி பலிக்கும் விதமாக கவிதை அமைந்திருக்கிறது!

crown said...

பாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி
பார்ப்பனப் புத்தகம்
பகவத் கீதையை
தேசிய நூலாக்கு.
மூன்று சதவிகித
ஆரியக் கொள்கைகளை
எண்பது சதவிகித
இந்துக் கொள்கையென
புரட்டுக் கணக்குப் போடு.
-----------------------------------------------------------------
இந்த ஆரிய கொள்கை நம் மதத்தை , நம் மனத்தை கீறிய கொடு(அ)வாள்!பொய் புரட்டு சொல்லி மனதை புரட்டவும் வரலாற்றை புரட்டவும் முயற்சிக்கும் இந்த மாயை வெகுனாள் நீடிக்காது!

crown said...

தேசியக் கொடியை விட்டுவைக்காதே
பட்டை சாயலில்
மட்டும் போதாது
அசோகச் சக்கரத்தை
அகற்றி விட்டு
நடுவிலொரு
நாமத்தைப் போட்டு
நாட்டின் மதிப்பைக் கூட்டு.
--------------------------------------------------
அவன் எந்த நா(கரு)மத்த போட்டாலும் ஈமான் கொண்ட நாமதை( நாமத்தை) ஏற்கமாட்டோம்!ஆமீன்!

crown said...

தேசியப் பறவையின்
இறக்கையில்
வேல் ஒன்றைக் குத்தி
வல்லரசு இந்தியா என
வாய்ப் பந்தல் போடு.
------------------------------------------------------------
எப்படியும் வெல்ல முடியாது! அல்லாஹ் பாதுகாப்பான்!

crown said...

தனிப் பெரும்பானமை திமிரோடு
தயிர்சாதத்தை
தேசிய உணவாக்கி
குருதிச் சூட்டைக்
குறைக்க வைத்து
அடிமைத்தனத்தை அதிகரி
-------------------------------------------------------
தயிர் சாதத்தை தேசிய உணவாக்கினாலும்!எந்த சாதகம் செய்தாலும் பார்ப்பான் பல்லவி இங்கே எடுபடாது!இப்ப சாதகமாய் தெரிவது நாளை பாதகம் ஆகும் அவனுக்கே!ஆமீன்.

crown said...

உள்ளத்தில் அழுக்கான
கருக்களை அழிக்காமல்
தெருக்களைச் சுத்தம் செய்ய
பொதுசனத்திடம்
கொடு ஒரு துடைப்பம்;
பாரத் ரத்னா
பட்டுக்குஞ்சத்தைக்
கட்சிக்காரனுக்குக் கட்டு.
-----------------------------------------------------
கங்கையும் இங்கே அழுக்குதான் அதையும் மறைத்து சுத்தம் செய்கிறேன் என பிதற்றல் எந்த பொய்கையில் நீராடினாலும் அசுத்த மனம் உள்ளவன் நிலை ஒரு நாள் இழி நிலைதான் வந்து சேரும்! அன்று இந்த சேரோடு சேரும் சகதியும் வந்து சேரும்!

crown said...

ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.
---------------------------------------------------------
உனக்கு வா(ய்த்த)ச்ச பேயை நீ எங்கே வேனும் நாளும் வை!காலம் கூடி வரும் அப்ப உன்னை பேய் விரட்டு விரட்டுவோம்!

crown said...மக்கள் சுனாமி ஒன்று
மறுமலர்ச்சி காணும்வரை
கானலை நீர் எனப் பசப்பு;
வளர்ச்சிப்பாதையில்
மேற்கொண்டு அறிவிப்புகள் செய்,
இன்னும் உண்டு
ஏராள நாட்கள்
உன் ஆட்சி அதிகாரத்தில்
------------------------------------------------------------
எம் மக்களிடம் ஒற்றுமை கானலை(கானவில்லை)என்பதற்காய் கானலை நீர் நீர் என்று நம்பு! ஒருனால் சுனாமி எழும் இன்சாஅல்லாஹ் ஒற்றுமை ஓங்கும் அதுவரை கொடியவன் கையில் ஆட்சி அதிகாரம் எம் வர்கத்துக்கு ஒன்றும் புதிதல்ல!பழகிய பழய சமுதாயம்தான் எங்களுடையது! கவிஞரே ஆற்றாமையிலும் உணர்வை ஊற்றாமல் இருந்து விடக்கூடாது எனும் உங்கள் உணர்வுக்கு அல்லாஹ் கூலிதருவானாக!ஆமீன் . வரும் காலமாவது நமக்குள் ஒற்றுமை வாய்க்கட்டும்,அன்றுதான் இந்த காவிகள் நம் முன்னே கூனி குறுகி கை கட்டும்!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவை வாசித்த சகோக்களுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

(க்ரவுனுக்கு ப்ரத்யேக நன்றி)

Ebrahim Ansari said...

Sorry for delayed reporting. Excellent. A new Viswaroopam by Thambi Sabeer

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuSharukh

Thaளர்ச்சிப்பாதையில் மோடி அரசு! could be suitable title here.

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு