Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குருவியும் குஞ்சுகளும் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 07, 2014 | , , , ,

அங்கேபார்  மரத்தின்  மேலே
  அழகான  குருவிக்  கூட்டை
இங்கேபார்   குருவி  ரெண்டும்
  இறங்கிவந்து  நிற்கும்  வீடு.

குஞ்சுகளின்  கத்தல்  கேட்டுக்
  கூடிவந்து  சேர்ந்த  நாட்டம்
நெஞ்சுதனில்  பரிவைக்  கொண்ட
  நேர்த்தியான  இன்பக்  கூட்டம்.

என்னவேண்டும்  என்று  கேட்டே
  ஏங்கிநின்றார்  குருவிப்  பெற்றோர்
தின்னவேண்டும்  என்று  கேட்டுத்
  தேம்பியழும்  குஞ்சைப்  பெற்றார்

தாமதிக்க  நேரம்  இன்றித்
  தாவிமிக  அன்பு  கொண்டே
மாமரத்துப்  பொந்தி  னுள்ளே
  மண்புழுக்கள்  கூட்டம்  கண்டே

சொண்டிடுக்கில்  கொண்டு  வந்து
  சோறுபோல  ஊட்டி  விட்டே
உண்டுநிற்கும்  குஞ்சு  மக்கள்
  ஊக்கமதைக்  கண்டு  விட்டுப்

பல்லுயிர்க்கும்  உணவ ளித்துப்
  பாதுகாக்கும்  இறையை  நின்றே
சொல்லரிய  புகழைப்  பாடிச்
  சோலையிலே  பறந்த  தன்றே!

அதிரை அஹ்மது

7 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

Masha allah

pinchukalukkettra. Kunchup paattu .

Nam naattup kalvi paadangkal kaavi mayamaakum iv velaiyil ithu pontra paadalkalai kalvi tthuraikku parinthuraiththal pinchukalin ullangal manitha neyaththal makilchiyil sirakadikkum.

இப்னு அப்துல் ரஜாக் said...

/பல்லுயிர்க்கும் உணவ ளித்துப்
பாதுகாக்கும் இறையை நின்றே
சொல்லரிய புகழைப் பாடிச்
சோலையிலே பறந்த தன்றே!/
மாஷா அல்லாஹ் அருமை
குழந்தைப் பாட்டில் ஏக இறைவனை நினைத்துப் போற்றும் பாங்கு அருமை

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் சரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

மற்றுமொரு அழகான பாட்டு. குஞ்சுகளோடு குருவி கொஞ்ச, அவற்றோடு உங்கள் கவிதை கொஞ்சுகிறது.

ஒரு காலத்தில் அணில் மாமா, அம்புலி மாமா, முயல், கோகுலம் போன்ற சஞ்சிகைகளைக் காசு கொடுத்து வாங்கினால்தான் இதுபோல் பாப்பா பாடல்கள் வாசிக்கக் கிடைக்கும். தற்போது தங்கள் தயவால் இலவசமாககவே கிடைக்கின்றது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

காக்காவுடன் ஒரு சிறுவிளையாடல்:

சபீர்: காக்கா, உங்கள் பாட்டில் பிழையுள்ளது

காக்கா: என் பாட்டில் குற்றமா? கூறடா கூறிப்பார்.

சபீர்: குஞ்சுகளுக்கான உணவாகத் தாங்கள் குறிப்பிடுவது யாது?

காக்கா: மண்புழுக்களடா அற்பப்புழுவே

(அ.நி.: புலவர்கள் சாந்தமாக உறையாடவும். மீறினால் மட்டுறுத்தப்படும்)

சபீர்: (அ.நி., பொத்திக்கிட்டு கவனியும்) காக்கா, மண்புழுக்கள் எங்கு வசிக்கும்?

காக்கா: மர மண்டை. மண் புழுக்கள் மாட மாளிகையிலும் கூட கோபுரத்திலேயுமா வசிக்கும்? மண்ணில்தானடா வசிக்கும்.

சபீர்: உறுதியாக?

காக்கா: இறுதியாகவும் சொல்கிறேன். மண்ணில்தான் வசிக்கும்

சபீர்: உயிரியில் பாடத்தின்மீது சத்தியமாக?

காக்கா: விலங்கியல் பாடத்தின்மீதும் சத்தியமாக

சபீர்: இந்த நிலைபாட்டில் மாற்றமில்லையே?

காக்கா: இதுக்குமேலே பில்டப் பண்ணே நெற்றிக்கண்ணை திறந்து விடுவேன். என்ன குற்றம் கண்டாய்? சொல்லிலா பொருளிலா?

சபீர்: உங்ககள் சொற்களில் குற்றம் காண இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். பொருளில்தான் குற்றம் உள்ளது.

காக்கா: போரடிக்காமல் என்ன குற்றம் என்று சொல்லித்தொலை. (அ.நி., சோடா ப்ளீஸ்)

சபீர்: மண் புழுக்கள் மண்ணில்தான் வாழும் என்கிற universal truth இருக்க, தாங்கள் தங்களின் கீழ்க்கண்ட விருத்தத்தில் மண்புழுக்கள் மரப்பொந்தில் இருப்பதாகச் சொல்வது குற்றம் அல்லவா?

//மாமரத்து பொந்தி னுள்ளே
மண்புழுக்கள் கூட்டம் கண்டே//

காக்கா: இத்கெல்லாம் ஒரு குற்றமாடா?

சபீர்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

திரை

Unknown said...

ஹி ஹி ஹி .....
அதுவா? அது from previous stock.

இதில் கவிதைப் பிழையில்லை; கருத்துப் பிழை.
தோப்புக் கரணம் போடுகின்றேன். தப்புத் தப்புத் தப்பு.....

sabeer.abushahruk said...

காக்கா, இதோ என் ஹோம் வொர்க்:

கோழியும் குஞ்சுகளும் !

மாமழைக்குப் பிறகு வானம்
மதியநேரம் வெயில் வெளுக்க
மண்புழுக்கள் கொத்த வேண்டி
மதியுடனே கோழித் தாயும்

குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு
கும்மாளமாய் வெளியே வந்து
குட்டியான விரல் நகத்தால்
குதறியது நனைந்த மண்ணை

வண்ணவண்ண குஞ்சு யாவும்
வயிறார உண்ண உண்ண
வாஞ்சையோடு தாய்க் கோழி
வயிற்றினிலே பாலை வார்க்க

பசியாறப் பொறுத் திடாத
பருந்தொன்றின் நிழல் கண்டு
பயந்துபோன குஞ்சு யாவும்
படபடவென சிதறி ஓட

பதறிப்போன கோழி யும்தான்
பாதுகாப்பாய்க் குஞ்சு களை
பம்பரமாய்ச் சுற்றி வந்து
பராமறித்துக் கொண்ட துவே

எதிர்த்துநின்ற வீரம் கண்டு
ஏமாந்த பருந்து வும்தான்
எட்டிப்போய் மறைந்த துவே
ஏகனவன் கருணை அஃதே!

Unknown said...

ஊம்.......... மரபு இன்னும் வெகு தொலைவில் இருக்கின்றது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு