Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தினசரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2014 | , ,

(*)அச்சுத் தாயின்
முதற் குழந்தை
இந்தச் செய்தித்தாள்.

(*) ஒரு கையில் தேநீர்,
மறு கையில் செய்தி..
இரண்டுமே சுடச் சுட
இருப்பது தான்
அதிகாலை ஆனந்தம்.

(*) ஒரே நாளில்
உயர்விழந்துப் போகும்
இவை
நிரந்தரமின்மையின்
நிதர்சனம்.

(*)செய்தித்தாள்களுக்குப் பின்னால்
இருக்கும் உழைப்பாளர்களின்
எண்ணிக்கை,
செய்திகளிலிருக்கும்
எழுத்துக்களின் எண்ணிக்கையை
ஒருவேளை
ஒத்திருக்கக் கூடும்.

(*) பேருந்து, ரயில்களில்
இரவல் வாங்கப்படும்
பத்திரிகைகள்
'செய்திகள் எல்லோருக்கும்
பொதுவானவை' என்பதை
சூசகமாய்ச் சொல்லும்.

(*) செய்திகளுக்கு
மட்டுமானதல்ல
இந்தச்
செய்தித்தாள்கள்.

இன்றைய செய்தித்தாள்கள்
இனி நாளை முதல்..

(*) ஓர் ஏழை மாணவனின்
புத்தக உறையாக..

தெருவோர தேநீர்க்கடையில்
வடையிலிருந்து
எண்ணெய் அகற்றும்
வடியாக..

முன்பதிவில்லா
புகைவண்டிப் பெட்டிகளில்
விரித்து அமரும்
பாயாக..

சில்லரை மளிகையில்
சர்க்கரை மடிக்கும்
சுருளாக..

(*) இன்னும் பலவாக..
இரண்டாம் முறையாய்
பயன் தந்து
மரித்து மக்கிப்
போகும்.

அதிரை என்.ஷஃபாத்
12-01-2013

5 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.குழந்தை பிறந்த செய்தி அச்சு வெல்லம் போல் இனிக்கும் இங்கே செய்தி தாள் பிறந்த செய்தி அச்சில் வார்த்த செய்தியானாலும் அச்சு வெல்லம் போல் இனிக்கிறது!

crown said...

(*) ஒரு கையில் தேநீர்,
மறு கையில் செய்தி..
இரண்டுமே சுடச் சுட
இருப்பது தான்
அதிகாலை ஆனந்தம்
------------------------------------------------------------------
இது சில்லெனவரும் ஆனந்தம்!ஒரு பரவசம்!இந்த செய்தித்தாள் நம்மை கைதி போல் கட்டி போடும்!

crown said...

(*) இன்னும் பலவாக..
இரண்டாம் முறையாய்
பயன் தந்து
மரித்து மக்கிப்
போகும்.
------------------------------------------------------------------
அட !தம்பி தரும் இந்த செய்தியும் நல்லாத்தான் இருக்கு!இதுபோல் பிற பொருள்களும் இருந்தால்(ள்),எளிதில் மக்கி போனால் அதன் பயனும் ,பெயரும் மங்கி போகாது!செய்திக்கும் உண்டோ அடைக்கும் தா(ள்)ழ்!!!!!

sheikdawoodmohamedfarook said...

ஜெர்மனியில்ஹுட்டன்பெர்க்கண்டுபிடித்தஅச்சுஇயந்திரமும்சீனாகாரன்கண்டுபிடித்தகாகிதமும்இல்லைஎன்றால்ஒருகையில்தேநீர்கோப்பையும்மறுகையில்பனைஓலைசுவடியிலும்இன்றையசெய்திகள்படிப்போம். பழையசுவடிகள் எல்லாம் கறையான் பூச்சிக்கே பிரியாணி .அப்போதும்ரயிலிலும்பஸ்சிலும்ஓஸிசுவடிபடிப்போர்இருப்பார்கள்.

Unknown said...

Kaalam kadandha kaagidhathai kaayalaan kadayil pottu kaasu paarpadhai vittuviteerae.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு