Loneliness !
Some fear loneliness
but it is
in the loneliness
where
we analyse ourselves
A sudden hit realisation
about reality,
about people around you,
the answer
to reason of our existence
Surely
mankind is ever forgetting
It is better
to seclude ourselves
than fear loneliness,
rather creating delusion
that this is the life .
Does the word "loneliness" exist
for those
who believe in Allah ?!
How wonderfull it feels
to feel the everlasting
love for Him!
And never
to depart away from Him!
The feeling
you have everyday
where you anticipate
the day you return to Him ?!
To be able
to be close to Him
The feeling
that you are among
those
who are loved by Him ?!
Yes,
The thought of
having the reward
as going to heaven
is really pleasing,
but the thought of
returning back
to Him
is even more pleasing !
Makes you
want to strive hard
in this world
to please Him.
We all belong to Him
and
we all return back to Him
is
the
undeniable sweet truth !!!
Shahnaz Sabeer Ahmed
MBBS III year
|
தனிமை !
தனிமையை
அஞ்சுவர் சிலர்
ஆனால்
சுய சோதனைக்கும்
தன்மையை அறியவும்
தகுநிலை தனிமையே
நம்
இருப்பின் தாத்பரியத்தையும்;
சக மானுடத்தையும்;
சட்டென நமைத் தாக்கும்
எதார்த்தங்களின் நிதரிசனத்தையும்
உணர உகந்தது தனிமையே!
தனிமையை அஞ்சுவதைவிட
நாமே
வலியத் தனித்திருப்பது சிறந்தது.
அந்நிலை
'தனிமைதான் வாழ்க்கை'
என்கிற
மாயையிலிருந்து மீட்டெடுக்கும்...
முள்ளை
முள்ளால் எடுப்பதுபோல!
திண்ணமாக
மனிதகுலம் எப்போதுமே
மறதியின் பிடியில்
அல்லாஹ்வின்மீது
நம்பிக்கை கொண்டோர்க்கு
தனிமை என்றொரு
இருப்பு இருக்கிறதா என்ன?
அவன்மீது மிகைக்கும்
அழியா அன்பை உணர்வதுவும்;
அவனைவிட்டு என்றுமே நீங்காதிருப்பதுவும்
எத்துணை அருமையானது!
அவனை மீண்டடையும்
நாளை எதிர்பார்த்திருப்பதும்;
அவனை நெருங்கிச் செல்வதும்;
அவனால் நேசிக்கப்படுவோரில்
ஒருவராக இருப்பதை
உணர்வதும்...
எத்துணை உன்னதமானது!
இன்னும்,
நல்லெண்ணங்களுக்கான
கூலியாகக் கிடைக்கும்
சுவர்க்கத்தைப் பற்றிய நினைவு
ஆனந்தமானது
அதைவிட
அவனையே மீண்டடையப்போகிறோம்
என்கிற நினைவு
அதீத ஆனந்தமானது
அந்த நினைவு மட்டுமே
அவனின்
பொருத்தம் நாடி நடக்கக்
கடினமாகப் போராட வைக்கும்
நாம் யாவரும்
அவனுடையவர்கள்;
அவனையே
மீண்டடைவோம்
என்பதுவே
மறுக்க முடியாத
இனிமையான உண்மை!
தமிழில்: சபீர் அஹ்மத் அபுஷாஹ்ருக்
|
24 Responses So Far:
இரண்டு மொழிகளில் வடிக்கப்பட்ட இரட்டைக் குழல் துப்பாக்கி குண்டுகள் துளைப்பதோ மனதை- சிந்தனையை.
வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது என்பதன் நிருபணம்,
//but the thought of
returning back
to Him
is even more pleasing !//
நான் எழுதினால் இதை இப்படி எழுதுவேன்
மரணம் என்பதை நினைத்தால்
மகிழ்சசி வராது
புறப்பட்ட இடத்துக்கே
போகிறோம் என்று எண்ணினால்
என்றும் இன்பமே!
ஆரம்பமுதல்இறுதிவரை[இக்கவிதைகூறும்கருத்துக்கள்] Undeniable tasty truth.
அ.நி.,
புகைப்படத் தெரிவு
திகைப்படைய வைக்கிறது
தனி மனி தனின்
தனி மையைச் சொல்ல
தனி நதி படம்
மாமலைகளுக்கிடையே
மதி மயக்குகிறது
நதி இயக்கம் - படைத்தவனின்
விதி!
// We all belong to Him
and
we all return back to Him
is
the
undeniable sweet truth !!!//
ஆம் !
// நாம் யாவரும்
அவனுடையவர்கள்;
அவனையே
மீண்டடைவோம்
என்பதுவே
மறுக்க முடியாத
இனிமையான உண்மை!//
அத்தனையும் உண்மை....
கவிக் காக்கா,
குறுஞ்செய்தியானாலும், சுருங்கிய உரையாடலானும் அப்படியே கவிதையாக வடிப்பதில் சிற்பிதான் நீங்கள்...
நம்ம சிற்பியின் கையில் கல்லும் கரையும், களிமண்ணும் இறுகும் ! உவமையாக (உருவங்களாக அல்ல)
நட்பின் வாரிசுக்கு உதித்த நயமான சிந்தனை தனிமை.
ஒட்டுமொத்த
இவ்வுலக வாழ்மனிதர்களும்
ஒருநாள் மரணித்து
திட்டுத்திட்டாய்ப் பிரிந்து
திசைமாறித் தனிமையில்
உறங்கப் போவது உறுதி
அதற்க்கான தைரியத்தைத்
தாம் பெற
இவ்வுலக வாழ்க்கையை
அற்த்தமாக்கி வாழ்வோம்
நல்லமல்கள் எனும்
தைரியத்தை துணைக்கு
கூட்டிச் செல்வோம்
அப்போதுதான்
தனிமை இனிமையாகத்
தெரியும்.
மருத்துவம் படிக்கும் போது அதிரை நிருபரில் கவிதை எழுதும் Shahnaz Sabeer Ahmed மருத்துவம் படித்து முடித்ததும் அதிரை நிருபரில் மருத்துவ கேள்வி பதில் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும்!.தனி(மெய்)மை!அருமை! இது ஒருவகை சோதனைக்கூடம் என்னும் திறமை!பெண்மைக்குள்ளும் ஒருதீர்க்கமான சிந்தனைக்கு அல்ஹம்துலில்லாஹ்!அல்லாஹ் போதுமானவன்!தந்தை எவ்வழி!தானும் அவ்வழி!வாழியவே(On the way in life)!
தனிமையை
அஞ்சுவர் சிலர்
----------------------------------------------
" நாலு" சுவருக்குள் தனித்திருக்க சிலர் "அஞ்சு"வர் தான்!யாராவது ஒருவராவது கூட இருப்பின் ஆறு""வர்(ஆறுதல் அடைவர்)! அந்த இருவரும் ,ஒருவருக்கு,மற்ற(ஒரு)வர் துணைவர்!
ஆனால்
சுய சோதனைக்கும்
தன்மையை அறியவும்
தகுநிலை தனிமையே
நம்
இருப்பின் தாத்பரியத்தையும்;
சக மானுடத்தையும்;
சட்டென நமைத் தாக்கும்
எதார்த்தங்களின் நிதரிசனத்தையும்
உணர உகந்தது தனிமையே!
----------------------------------------------------
மாஷா அல்லாஹ் சரியான சிந்தனை! ஆம் நம்மை நாமே எடை போட,ஒரு கருவியாக்கி சுய பரிசோதனை செய்ய போதனை செய்யும் தனிமையே! நம் எந்த திசையில் செல்லவென திசை காட்டும் காட்டியே தனிமை!அல்ஹம்துலில்லாஹ் இளமைக்குள்ளும் முதிர்ந்த புலமை!இது வலிமை!
திண்ணமாக
மனிதகுலம் எப்போதுமே
மறதியின் பிடியில்
------------------------------------------------
இதை நினைவு படுத்திக்கொண்டே இருப்பதுதான் எத்தி வைப்பது என்பது!
அல்லாஹ்வின்மீது
நம்பிக்கை கொண்டோர்க்கு
தனிமை என்றொரு
இருப்பு இருக்கிறதா என்ன?
-----------------------------------------------------
ஆம் தனிமையில் பொருமை அல்லாஹ் கொடுத்த வாக்குறுதிதான்! அல்லாஹ் என்றும் நம் கூட இருப்பதால் நாம் என்றும் தனிமை இல்லைதான் ஆனால் தனித்து இருக்கிறோம் மற்ற(கெட்ட)வர்களிடமிருந்து கூடி வாழும் காலமெல்லாம்!
அவன்மீது மிகைக்கும்
அழியா அன்பை உணர்வதுவும்;
அவனைவிட்டு என்றுமே நீங்காதிருப்பதுவும்
எத்துணை அருமையானது!
அவனை மீண்டடையும்
நாளை எதிர்பார்த்திருப்பதும்;
அவனை நெருங்கிச் செல்வதும்;
அவனால் நேசிக்கப்படுவோரில்
ஒருவராக இருப்பதை
உணர்வதும்...
எத்துணை உன்னதமானது!
----------------------------------------------
இத்தகைய சிந்தனையும் ,எண்ணமும் நம் இதயத்தை சுத்தபடுத்தி நல்லவைகளை மட்டுமே நிரம்ப செய்யும். சில சமயம் சில அழுக்கு நம் இதயத்தில் இருந்தாலும் இச்சிந்தனை அதை சுத்தகரிக்கும் ஆலையாக மாறிவிடும் !
Assalamu Alaikkum
Very good reminder for being alone for knowing oneself.
Prayer the salaa is relieving from worldly matters behind to bring the realization of relation between us and the Creator almighty.
Seclusion is simply gaining strength. Origin of Wisdom !!!
Sister's spiritual dimension would make her unique in the professional community. InshaAllah.
Jazakkallah kbairan for Shahnaz and AbuShahnaz
B. Ahamed Ameen from Dubai.
நாம் யாவரும்
அவனுடையவர்கள்;
அவனையே
மீண்டடைவோம்
-----------------------------------------
அன்று! நாம் உடலால் தனித்து மரணித்தாலும்,தனிமையில் இருக்க மாட்டோம். நம் ஈமான் நம்முடனே வரும்!பின்பு மீண்டெடுக்கும் போது நாம் எல்லாருடனும் மீண்டெடுக்கப்படுவோம்!ஆனாலும் ஒவ்வொருவரின் தனித்துவமே அங்கே பரிசீலிக்கப்படும்! நல்ல சிந்தைனை மிக்க கவிதை !அல்லாஹ் நல்ல எல்லா வளங்களும் தந்தருள்வானாக ஆமீன்!
இதுபோன்ற விசயங்களை எழுதவே ஒருவிதமான ஆழ்ந்த அறிவு தேவை.
மெளனம் சொல்லும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கும் தன்மை உணர்ந்தவர்கள் இதை சரியாக புரிந்துகொள்ள முடியும். [ மைன்ட் புலம்பும் வார்த்தைகள் அல்ல ]
ஆழ்மனதின் அஸ்ட்ரல் தன்மைகள் சிலருக்கு எப்போதும் தடை இல்லாத இன்டர்னெட் மாதிரி கிடைக்கும். [ பேட்டா லெவல் எல்லாம் "பேட்டா - குழந்தை ' லெவல் ]
இதைப்பற்றியெல்லாம் எனக்கு எழுத ஆசை.
படிக்கும் வாசகர்களுக்கு என்னால் புரிய வைக்க முடியுமா என்பதில் எனக்கே சந்தேகம்.
ஷனாஸ்..& சபீர்...உங்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள்...காரணம் , எந்த விதமான க்வான்டம் பிசிக்ஸ் / ஆழ்நிலைதியானம் / இன்னர் ஜேர்னி / போன்ற எந்த பயிற்சியும் இல்லாமல் உங்களுக்கு சிக்னல் சரியாக கிடைப்பதற்கு.
இதைப்பற்றி நமது பகுதியை சார்ந்தவர்களுக்கு ஆர்வம் வர சில வருடங்கள் பிடிக்கலாம். இதில் துரதிஸ்டம் என்னெவென்றால் இது போன்ற சப்ஜக்ட்டின் பிறப்பிடமே மகான்கள் / ஞானிகள் பிறந்த இடங்கள் தான். அது இந்தியா முழுவதும் இருக்கிறது.
இந்த அறிவின் ஆபத்து - சிலருக்கு இல்லுஸ்யன் ஏற்படலாம்....தனக்கு வாழ்க்கை வசப்பட்ட மாதிரி தோன்றும். நடக்கப்போவது முன் கூட்டிய தெரிந்த மாதிரி ஒரு ப்ரம்மை ஏற்படும் [ நான் அப்பவே நெனச்சேன்...எனக்கு ஒரு உணர்வு இருந்துச்சி..இப்படியெல்லாம் டயலாக் வரும்.. ஆஸ்ரமம் திறப்பதற்கு கூட ஒரு ப்ளான் போட்டுடுவாங்க--- [கவனிக்க: அரவிந்தர் ஆஸ்ரமம் மேட்டர் ]
...சரி இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது .....
எனக்கு உடனே டெலிபோன் பன்னுங்க...." வேலையப்பாரு அப்பு....பொறக்கிறுக்கு வந்த மாதிரி பொலம்பாதே"...னு நான் சத்தம் போடுரேன்..உடனே நார்மல் ஆயிடுவாங்க...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா,
//மரணம் என்பதை நினைத்தால்
மகிழ்சசி வராது
புறப்பட்ட இடத்துக்கே
போகிறோம் என்று எண்ணினால்
என்றும் இன்பமே! //
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
இலக்கு ஒன்றுதான்; பயணப்படும் பாதைகள்தான் வேறு! கொள்கை ஒன்று; காணும் கோணங்கள் வேறு! எண்ணம் ஒன்று; எழுதும் பாணி வேறு!
கருத்திட்டு உற்சாகமூட்டிய தங்களுக்கும் ஃபாரூக் மாமா அவர்களுக்கும் நன்றி.
//திசைமாறித் தனிமையில்
உறங்கப் போவது உறுதி//
அன்பிற்குரிய மெய்சா,
உண்மை. எந்த அன்னையின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பதும் எந்த மண்ணின் மடியில் புதைக்கப்பட வேண்டும் என்பதும் பயணப்படும் திசைக்கொப்பவே அமையும் என்பதும் விதி.
உன் தொடர் ஆதரவிற்கு நன்றி!
அபு இபு,
//களிமண்ணும் இறுகும் !
உவமையாக
(உருவங்களாக அல்ல) //
உங்கள் ரசனைக்குத் தீணி போடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்ட்டமே, நன்றி!
//அதிரை நிருபரில் மருத்துவ கேள்வி பதில் தொடங்க வேண்டும்//
ஹமீது,
அதென்ன வேண்டுகோள்?
செய்யென்று நீங்கள் சொன்னால் செய்ய மாட்டோமா?
இன்ஷா அல்லாஹ், ஹமீது!
க்ரவுன்,
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//----------------------------------------------
" நாலு" சுவருக்குள் தனித்திருக்க சிலர் "அஞ்சு"வர் தான்!யாராவது ஒருவராவது கூட இருப்பின் ஆறு""வர்(ஆறுதல் அடைவர்)! அந்த இருவரும் ,ஒருவருக்கு,மற்ற(ஒரு)வர் துணைவர்!//
எண்களைக் கொண்டு எண்ணங்களைச் சொல்லும் உங்களின் கருத்துகளை என்னென்று பாராட்டுவது! உங்கள் கருத்துகலை வரவைக்க வேண்டியேனும் எழுதத்தூண்டுகிறது உங்ககள் தமிழ்.
நன்றி.
Dear brother B.Ahamed Ameen,
Wa alaikkumussalaam varah...
//
Seclusion is simply gaining strength. Origin of Wisdom !!//
True! I think it is somewhat related to "isthighbar"
Thanks for your comment.
ஜாகிர்,
//மெளனம் சொல்லும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கும் தன்மை உணர்ந்தவர்கள் இதை சரியாக புரிந்துகொள்ள முடியும். //
இந்தப் பேச்சை சரியாக எடுத்துரைத்தால் ஞானி என்பார்கள்; சற்று எக்குத்தப்பாக சொல்லிக்காட்டினால் பிராந்தன் (பைத்தியம்) என்பார்கள். எனவே, கம்பி மேல் நடப்பதுபோல்தான்.
இருப்பினும் சொல்லாமல் தவித்து அவதியுறுவதைவிட சொல்லிவிடுவதில் மனசு லேசாகும்.
//இதைப்பற்றியெல்லாம் எனக்கு எழுத ஆசை. //
அதைச் செய் முதலில்.
நிறைவாக,
இந்த எண்ணங்களைப் பதிந்து அதிரை நிருபர் வாசகர்களுடன் பகிர உதவிய அதிரை நிருபருக்கும் வாசித்த சகோதர சகோதரிகளுக்கும் நன்றி சொல்வதோடு இன்னொன்றையும் சொல்லி நிறைவு செய்கிறேன்:
படைத்தவன்மீது
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!
வஸ்ஸலாம்.
Post a Comment