Youth !
I am
at the phase of life
where
I'll be asked, "How did I spend my youth?”
To live in the phase
where
we travel to seek knowledge!
To live in the phase
where
we wanted to reap and sow ideas
just to create changes
to benefit people around us
so that
it will please Allah !
To never give up
against injustice!
To go for 'jihad'
to protect our 'Ummah'!
To never feel ashamed
to admit or
to apologize!
To live humbly
To comfort fellow soul!
To be united!
To speak the truth!
To strive hard
to work hard and
to please our parents!
Verily
especially for our mothers
as
heaven goes unreachable
for those
who ignore mother!
As for us women
never to be drawn
into false perception or
to exploited.
Truly
islam honours us!.
To follow
our prophet's way of life!
To lower our gaze
and increase our modesty!
To never fall
into ugly characteristics
like anger
backbite
conspire or to
hypocrisies!
Yes
we strive hard as we live
in that part of phase of life
where
we will be asked
"How did you spend your youth?"
on
the Day of Judgment!!!
Shahnaz Sabeer Ahmed
MBBS III year
|
இளமை!
வாழ்க்கையின் இத்தளத்தை
எட்டியிருக்கும் நான்
‘என் இளமை கழிந்தது எங்ஙனம்’
என வினவப்படுவேன்!
இத்தளத்தில்தான்
வாழ்க்கை
அறிவின் தேடலில் பயணிக்கிறது!
மானுட நன்மைக்கான
மாற்றங்கள் உருவாக்கிட
வாழ்க்கையின் இந்நிலையில்
உதிக்கும் எண்ணங்களை
இறைப் பொருத்தம் நாடியே
மக்களிடம்
விதைப்பதை விரும்பினோம்!
அநீதிக்கு எதிராக
போராடுவதிலும்
நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கப்
போரிடுவதிலும் என்றுமே
சமரசம் கொள்ளாதிருக்க
தவறுகள் செய்திருப்பின்
உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதற்கு
வெட்கப்படாதிருக்க
கண்ணியமாக வாழ
சக மனித சுபிட்சத்திற்காக
ஒருமித்திருக்க
உண்மையை மட்டும் உரைக்க
பெற்றோர் திருப்தியுற
கடினமாகப் போராட
கஷ்டப்பட்டு உழைக்க
அன்னையைப் புறக்கணிப்போருக்கு
சொர்க்கம்
எட்டா கனியாகுமாதலால்
அம்மாவிடம் அபரித
அன்பு கொள்ள
தவறான கண்ணோட்டத்தில்
மூழ்கியோ - நம் பெண்கள்
முடிந்தோ போய்விடாதிருக்க
சத்தியமாக
இஸ்லாம்
நம்மை கெளரவப்படுத்துகிறது!
நம் கண்மணி ரசூலின்(ஸல்)
வழியைப் பின்பற்றி
நம் பார்வைகளைத் தாழ்த்தி
பணிவை உயர்த்தி
கோபம்
புறம்
சதி
துரோகம்
என
சுயம் கெட்டுப் போகாமலிருக்க
ஆம்
வாழ்க்கையின் இத்தருணங்களில்
நாம்
கடினமாகப் போராட வேண்டியுள்ளது
தீர்ப்பு நாளில்
கண்டிப்பாகக் கேட்கப்படுவோம்:
‘இளமை கழிந்தது எங்ஙனம்’
என்று!
தமிழில்: சபீர் அஹ்மத் அபுஷாஹ்ருக்
(Thanks: M.Thajudeen)
|
23 Responses So Far:
கவிக்கு மகளானதோ இந்த குயில் !
இளமை எங்கனம் !?
அருமை !
அ.நி.:
அருமையான புகைப்பட இணைப்பிற்கும் இதைப் பிரசுரித்தமைக்கும் நன்றி.
(ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்)
Assalamu Alaikkum
Youth is wildly energetic
Responsible reflection
Inspiring and inducing lines
to discipline and channeling
the powerful youth !!!
Jazakallaah khair sister and brother Mr. Abu Shahnaz
B.Ahamed Ameen from Dubai.
மருத்துவக் கல்வி பயின்றினும்
மனத்தினில் ஆழமாய்
நீ வித்திட்ட கவிச்செடிகள்
உன்மன(ண)ம் போல
மாறாது மறவாது மலர்ந்து
கவிபூக்களாய்ப்
பூக்கத் தொடங்கி விட்டன
புண்ணியவான் நீயன்றோ
புகழ்சேர்க்க உன்வாரிசும்
தானன்றோ
கண்ணியமாய் வளர்த்திட்ட
உம்மகளும் இனி
கலமிறங்கிக் கலக்கட்டும்
காலத்திற்க் கேற்ப
நல்ல பல
கவிச் சொற்கள்
படைக்கட்டும்
Strong questions
Bold answers
Our umma needs
Like this sister
To lead a life
With purpose one
Jasakkallah Khair sister and Abu sister
First Youth,
well growth
with Good deed and good thinking
keep it up Both Always then GOD gives success and healthy&wealthy .may ALLAH bless You!
To live in the phase
where
we wanted to reap and sow ideas
just to create changes
to benefit people around us
so that
it will please Allah !
------------------------------------------
Absolutely True !!!!!!!!!!!!!!!
Verily
especially for our mothers
as
heaven goes unreachable
for those
who ignore mother!
------------------------------------
Weather any situation if ignore Mother We never go there (heaven)
Yes
we strive hard as we live
in that part of phase of life
where
we will be asked
"How did you spend your youth?"
on
the Day of Judgment!!!
-------------------------------------------
Yes judgment day our all past movement will be ask by ALLAH that judgment day ALLAH give every one treatment that heaven or hell
-----------------------
Dr sister also given us some treatment we be patient to be correct all bad things also given us good advice like medicine if not follow our life be serious condition so make submission all for ALLAH.
மானுட நன்மைக்கான
மாற்றங்கள் உருவாக்கிட
வாழ்க்கையின் இந்நிலையில்
உதிக்கும் எண்ணங்களை
இறைப் பொருத்தம் நாடியே
மக்களிடம்
விதைப்பதை விரும்பினோம்!
---------------------------------------------------------
இந்த தப்லிக் வேலையை பப்ளிக்காக ,ரிபப்ளிக்காக செய்ய எல்லாரும் முன் வரணும் அதுவே நன்மை ஏவி தீமையைத்தடுப்பது!
அன்னையைப் புறக்கணிப்போருக்கு
சொர்க்கம்
எட்டா கனியாகுமாதலால்
அம்மாவிடம் அபரித
அன்பு கொள்ள
---------------------------------------------------------------------------
கனி(வான)யான அம்மாவை கவனியாது போனால் ஏனி வைத்தாலும் எட்டாத கனியாகும் சுவர்கம்!இனியாவது திருந்தி பெற்றோரை கண்ணியப்படுத்தி புண்ணியம் சேர்ப்போம்!
//கண்டிப்பாககேட்கப்படுவோம்இளமைகழிந்ததுஎங்ஙனம்?//பரிச்சைநாள்இதுதான்என்றுகுறிக்கபடாததால்அது எப்போதும்வரும்; எங்கேயும்வரும்; எல்லோருக்கும்வரும்; இதில்ஏழை, பணக்காரன்,மேலோன் கீழோன், வேலிகணக்கில் நிலம் வைத்திருப்பவன், வீட்டுக்குவேலியடைக்க வழியற்றவன் 'என்றபாகுபாடு இன்றி எல்லோர்க்கும்வரும்.கேள்வித்தாள் வருமுன்பதில்கள் கைவசம்இருகட்டும்.
மருத்துவப்படிப்பில் ஃபாரன்சிக், ஃபார்மக்கோலஜியில் ஷனாஸ் மார்க் மனதுக்கு நிறைவைத்தந்தது. காரணம் அவ்வளவு உயர்வான மதிப்பெண்கள் கடுமையான உழைப்பு இருந்து பதில் எழுதுவதில் ஒரு "தீர்க்கமான" முடிவுடன் எழுத வேண்டும் .
நாம் ஸ்கூலில் படிக்கும்போது அசோகர் நட்ட மரத்தை தான் அக்பரும் நட்டார் என்று சர்வே எண் முதற்கொண்டு தவராமல் பட்டா போட்டு கொடுத்து விடுவோம் [ ஏதோ எழுதியிருக்கான்லெனு மார்க் போட்டுடுவாங்க ]
இந்த சமாச்சாரங்கள் மருத்துவ படிப்பில் நஹி. தெரிந்தால் எழுத வேண்டும் ...தெரியாமல் கதைவிட்டால் எடுத்த மார்க்கில் மைனஸ் செய்து விடுவார்கள். [ எபோலாவை தபேலானு டயாக்னஸ் செய்தால் பேசன்ட்டுக்கு சங்கு பாஸ் !! ]
எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து இப்படி வாழ்க்கை
பற்றிய விசயங்களிலும் இவ்வளவு தெளிவாக இந்த வயதில் எழுதியிருப்பது Simply Amazing...
India is going to have one more good doctor with caring attitude.
comments of the WEEK :)
//**//
நாம் ஸ்கூலில் படிக்கும்போது அசோகர் நட்ட மரத்தை தான் அக்பரும் நட்டார் என்று சர்வே எண் முதற்கொண்டு தவராமல் பட்டா போட்டு கொடுத்து விடுவோம் [ ஏதோ எழுதியிருக்கான்லெனு மார்க் போட்டுடுவாங்க ]
இந்த சமாச்சாரங்கள் மருத்துவ படிப்பில் நஹி. தெரிந்தால் எழுத வேண்டும் ...தெரியாமல் கதைவிட்டால் எடுத்த மார்க்கில் மைனஸ் செய்து விடுவார்கள். [ எபோலாவை தபேலானு டயாக்னஸ் செய்தால் பேசன்ட்டுக்கு சங்கு பாஸ் !! ]
//***//
Dear brother B. Ahamed Ameen,
Assalamu alaikum varah...
Thanks for reading this posting. My daughter did not write this as an article or poem. She just wrote this to me like her usual sharing of her thoughts. She does it from time to time.
She always shares with me whenever she feels like writing upon getting inspired of something or a reaction to certain happenings onto her or around her.
I just pick some strong pieces of such thoughts and format them in a readable manner.
I feel as a blessed father whenever I happen to read her thoughts over social and religious elements.
I request your dhuA for her.
Your comment on her is so encouraging.
Thanks a lot.
மெய்சா,
நீ வாய் திறந்தாலே
வசன கவி வழிகிறது
எழுத்தில்
உன்
உள் மனத்தின் அன்பை
வெளிப்படுத்தியிருக்கிறாய்
உன்
மனம் போலவே
அழகாயிருக்கிறது
உன் வாழ்த்தும்!
நன்றி நண்பா!
Dear brother ibnAbdur Razaq,
Thanks for your comment.
It is very important for every individual to create questions and seek answers for the same. Youth in particular, if start looking for answers the world will benefit out of them.
sabeer.abushahruk சொன்னது…
//அ.நி.:
அருமையான புகைப்பட இணைப்பிற்கும் இதைப் பிரசுரித்தமைக்கும் நன்றி.
(ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்)//
அருமையான புகை படம்
அருமையான கவிதை
அருமையான மொழி பெயர்ப்பு
க்ரவ்ன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ம(க்)களைப் பெற்ற மகராசர் உம் -நற்
சொற்களைப் பெற பெருமகிழ்ச்சி!
மகளுக்கான தங்கள் துஆவுக்கும் மிக்க நன்றி!
இளமையை ஏனோதானோ என்று கடந்துவிட்ட பல மூத்தவர்களுக்கு காலம் கடந்தபின்னரே ஆற்றாமையால் "படித்திருக்கலாமே" என்றோ "உழைத்திருக்கலாமே" என்றோ கேள்விகள் பிறக்கின்றன.
இளமையிலேயே அதுவும் மாணவப் பருவத்திலேயே தன்னை அறிய கேள்விகள் கேட்டுக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியை அல்லாஹ் தருவான்.
க்ரவுன் ட்டச்:
//இந்த
தப்லிக் வேலையை
பப்ளிக்காக -
ரிபப்ளிக்காக செய்ய...//
//கேள்வித்தாள் வருமுன்
பதில்கள்
கைவசம் இருகட்டும் //
ஃபாரூக் மாமா,
ஆம், நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் கொண்டு அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையே எல்லா கேள்விகளுக்கும் பதில். இந்தப் பதில்கள் கைவசம் இருக்க வேண்டி அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மேற்சொன்ன நல்லெண்ண, நற்செயல்களை அனிச்சையாக நேற்கொள்ள பழகி விட வேண்டியதுதான்.
நன்றி!
ஜாகிர்,
ஷஹ்னாஸின் படிப்பு சம்பந்தமான எல்லாவற்றையும் உன்னிடம் அப்டேட் செய்து கொண்டிருந்தாலும் அதன் ஆன்மீக மற்றும் சமூக ஈடுபாடு எனக்கே பலமுறை வியப்பாகவே இருக்கும்.
அதன் lateral thoughts ஒரு ஆச்சர்யமான விஷயம். அந்தக் கல்லூரியில் பல மறைமுகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் புர்கா அணிந்தே வகுப்புகளுக்குச் செல்வது மார்க்கத்தின்மீதான பிடிப்பை உணர்த்தும்.
நீ சொல்வதுபோல் மருத்துவப் படிப்பில் OP அடிக்க முடியாது என்பது உண்மைதான். எனக்குத் தெரிந்த ஒரு வணிகத்துறை பேராசிரியர் சொன்னார், "என்ன எழுதியிருக்கான் என்று படித்தெல்லாம் மார்க் போட்டால் ஒருநாளைக்கு 5 பேப்பர்தான் திருத்த முடியும். எத்தனை அதிக பக்கங்களை எழுதியிருக்கானோ அத்தனை அதிக மார்க் போட்டுடுவோம்" என்றார்.
எப்போதும் உன் துஆவை வேண்டியவனாக...!
ஹமீது,
சுருக்கமான உங்கள் பாராட்டிற்கு நன்றி!
நிறைவாக,
எல்லாவிதத்திலும் எனக்கு உதவியாக இருந்துவரும் அபுஇபுறாகீமுக்கும் அதிரை நிருபருக்கும் நன்றி.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் பாளிப்பானாகவும், ஆமீன்!
Post a Comment