Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழமையின் வழமை எங்கே? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 03, 2014 | , , , ,

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினாலே" என்று ஒரு கவிஞன் குறிப்பிட்டான்.

உலகம் வளரும்போது புதிய மாற்றங்கள் உருவாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு குறிப்பும் உண்டு.

சில நாடுகள் தங்களின் அடிப்படை கலாச்சார, பண்பாடுகளை மட்டும் எந்த காலத்திலும் இழந்துவிடவில்லை. பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் காளைச் சண்டை, சுவிஸ் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழா ஆகியவற்றோடு, நமது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், பெரம்பலூர் மீன்பிடி திருவிழாவும், உலகம் தனது பண்பாட்டின் சாயலை முற்றிலுமாக இழந்துவிடவில்லை என்பதை பறைசாற்றுகின்றன.

ஆனாலும் கலாச்சாரம், பண்பாடு, பண்டைய நடைமுறைகளில் பலவற்றை வரலாற்று சிறப்புடைய அதிரைப்பட்டினம் இழந்து நிற்பதை வேதனையோடு குறிப்பிடவே வேண்டும்.

முக்கியமாக கலரிகளில் பாலும் சோறு மறைந்துவிட்டது. அதன் இடத்தை வடநாட்டு பிர்னி ஸ்ட்ராங்கா  ஆக்கிரமித்து சமீபகாலமாக பன்-ஸ்வீட் கலரிகளில் அரசால்கிறது. நமக்கெல்லாம் ஒரு ஆறுதல் கத்தரிக்காய் பச்சடியும்  உருளைக்கிழங்கும் இன்னும்  அமுலில் இருக்கிறது, உருளைக்கிழங்கில் அந்தக் கொழுப்பும் கிட்னியும்  கலந்து கிடக்கிறது என்பதே. ஒரு சந்தோஷமான செய்திதானே !

அந்தக் காலத்தில் விலைக்காரத் தெருவில் கிராமத்து தின்பண்டங்களை - குறிப்பாக சுட்ட பனங்காயும் சக்கரவள்ளி கிழங்கு, பொட்டி கிழங்கு இன்னும் பல சமாச்சாரங்களைக் காணோம். அதை விற்றவர்களையும்  காணோம் . அதற்கு பதிலாக மாசா,  செவன்-அப், பெப்சி, மவுண்டன்-டூ பாட்டில்கள் / டின்கள் சனல்களில் தூக்கு போட்டு தொங்குகின்றது    

நமது உம்மா, பெரியம்மாமார்களின் காதுகளில் அலுக்கத்து என்று ஒரு வகை நகை பவுன்  வளையங்களாக வரிசையாக குத்தி அழகுபடுத்தி இருப்பார்கள். இப்போது அவைகளைக் காணோம். பதிலாக எல்லா  வயதினரும் கிளிக்கூண்டு ஜிமிக்கி போட்டு இருக்கிறார்கள்.

சில வீடுகளின் கொள்ளை புறத்தில் இருக்கும் கிணறுகளைக் காணோம்   அதற்கு பதிலாக வாட்டர் டேங்குகள் முளைத்துள்ளன.

பத்தாயம் மற்றும் நெல் கொட்டி வைக்கும் குதிர்கள் இவைகளை  காணோம்  அரிசி எல்லாம் பிளாஸ்டிக் பக்கட்டில் குடிபுகுந்து விட்டன.

மாவு அரைக்கும் குடைக்கல் மற்றும் அம்மிகளைக் காணோம் ஆனால் நாம் எல்லோரும் குடைக் கல்லை நினைவு படுத்துவது போல் உடலால் பெருத்து உள்ளோம் அடுப்பங்கரையில் நிரந்தரமாக மிக்ஸியும் கிரைண்டரும்  இடம் பிடித்துக்கொண்டன 

வீட்டு கொல்லைப்புறத்தில் இருக்கும் கழனிப்பானையைக் காணோம் அது  போன இடம் தெரியவில்லை..

உம்மம்மாவும் வாப்புச்சாவும் வைத்திருக்கும் விசிறியைக் காணோம்  தலைக்கு மேல் ஃபேன்  தொங்காத வீடு  இல்லை இப்போ. 

மணலைக் குவித்து அதில் நீர் தெளித்து வீட்டு கூடத்தின் மூலையில் இருக்கும் புகை போட்ட அந்த மண்குடங்களைக் காணோம். அது போய்  இப்போது குளிர் சாதனப் பெட்டியின் கிர்ர் என்ற சப்தம்தான் வருகின்றது (இந்த சப்தம் கூடுமா கூடாதான்னு பெரலிய கெளப்பிராதிய வாப்பாமாரா) 

மாவு இடிக்கும் உரலையும் காணோம் அதன் கூட இருக்கும் உலக்கையையும் காணோம்     (அதில் உட்கார வைத்துதானே நமக்கெல்லாம் சுன்னத் செய்தார்கள் ) 

கோழிப்பொட்டியும் காணோம் அதை பிடிக்கவரும் கீரிப்பிள்ளையையும் காணோம். கோழிக் கழுத்தை பிடித்த கள்ளன்கள் நகைக் கழுத்தில் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்.

தெருவில் சிறு வதில் ஓட்டிய சைக்கிள் டயர் வண்டியையும் காணோம் நொங்கு வண்டியும் காணோம்.

மண் பானையில் ஈ மொய்க்கும் பதனியையும் காணோம் மோர் பானையையும் காணோம்.

வீட்டின் கொல்லைப்புறத்தில் அடைத்திருக்கும் வேலியில் முளைத்திருக்கும் முள்ளு முருங்கை மரத்தையும்   காணோம் அதன் கூடவே முளைத்துவரும்  வாவை மரத்தையும் காணோம்.

இதையும் சேர்த்துச் சொல்லவில்லை என்றால் MSM கோவிச்சுக்குவார் அதனால் மேற்சொன்னவைகளோடு சேர்ந்து அந்த கம்பன் ரயிலையும் காணோம்.

இப்படி பல பலசுகளையும் காணோம் என்று தேட காரணம் நம்ம MSM  நெய்னா வை ஊரில் நேரில் சந்தித்ததே காரணம்

இன்னும் பல காணாமல் போனவைகளைப் பற்றிய பின்னூட்டங்களை எதிர் பார்த்தவனாக.

இப்படியாக என் நினைவுக்குத் தெரிந்த வரை பட்டியலிட்டுள்ளேன். மேலும் பலரிடம் இதைவிட அதிகமாக காணாமல் போன சரக்குகள் நினைவலையில் பதிந்து கிடக்கும் அவைகளை அறியத் தாருங்களேன் இன்ஷா அல்லாஹ்.

Sஹமீத்

16 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

Assalamu alaikkum.

Hameed kaka neenga vitta palaya thoniyil yeri merkku karaiyil irunthu kilakku kilakku karaikku payanam vantha pothu m.s.m yentra medu thattiyathal.idaiyil irangi vitten neengal vittathai avar poorthi seithu vidalam yenkira thairiyaththil. Mukkiyama kaaichal kuruviyai mattum maranthuttiya kaka.

Unknown said...

இப்போது குளிர் சாதனப் பெட்டியின் கிர்ர் என்ற சப்தம்தான் வருகின்றது (இந்த சப்தம் கூடுமா கூடாதான்னு பெரலிய கெளப்பிராதிய வாப்பாமாரா) .... ஹாஹாஹாஹாஹா

sabeer.abushahruk said...

ஹமீது,

நல்லா அசை போட்டிருக்கிறீர்களே காணாமல் போன கஸ்டம்ஸ் கட்டட இடத்திலிருந்தா யோசிச்சிய? அந்த பாதாம் மரம்!!!

கப்பட சாய்வோ இருக்காஹலா?

ஆமீனல்லாஹ் ஊர்வலம்?

பப்பாளிக்கா போட்டு செய்யும் நார்த்தங்கா ஊறுகா?

Shameed said...

//பப்பாளிக்கா போட்டு செய்யும் நார்த்தங்கா ஊறுகா?//

நார்த்தங்க ஊறுகா எல்லாத்தையும் உங்க மச்சான் சம்பந்தி இர்பானி காகாவே சாப்புட்டு முடிச்சுபுட்டக

sheikdawoodmohamedfarook said...

பல்லுப்போனபாட்டிமார்கள்பாக்குவெத்தலைஇடிச்சபாக்குஓரலைகாணோம்/பாக்குவெட்டி-வெத்தலை பெட்டிகாணோம் .மோர்கடையும் மோர்மோத்தைகாணோம்/ ஆனச்சட்டியேபூனைஉருட்டாமல்இருக்கஅதை கையிறுமேலேகட்டிதொங்கவிட்டஉறியைகாணோம்/மாட்டுக்குதவுடு கழணிகலக்கிவச்சகுருதாளியைகாணோம்/வயலில் வெளஞ்ச நெல் பூச்சிபுடிக்காமே வேப்பலைபோட்டு கொட்டி வச்ச பத்தாயத்தை காணோம்/ கடைதெருவில்மீன்வாங்குறஓமளைகாணோம்/கல்யாணம்சுன்னத்துக்கு ''லாஹிலாஹாஇல்லஹுவில்இன்பம்கொள்னபுசே''என்றுபாட்டுபாடிதாபுசுஅடிச்சபச்சைகலர்சட்டைபோட்டஜமாலியாபைத்துசபாவைகாணோம்.

Shameed said...

//Mukkiyama kaaichal kuruviyai mattum maranthuttiya kaka.//

வலைக்கும் முஸ்ஸலாம்

ஆமா மறந்தே போயிட்டேன் அது உசிரோட இருந்தால் அதன் கலர் அழகு பொறித்து சாப்பிட்டால் அதன் தலையின் ருசி அழகு

sheikdawoodmohamedfarook said...

கல்யாணத்துக்கும்சுன்னதுக்கும்கலரிவைக்கஆடுஅறுக்த லெவ்ஊட்டுதம்பியைகாணோம்.பெத்தமவனைஒரலில்வைத்துசுன்னது பண்ணஓரளையும்காணோம்நாசுவனையும்காணோம். கல்யாணஊர்கோலம்போனtop-lessகாரை காணோம். ''நேராதநேத்திகடன்இல்லே!படுக்காதபள்ளியாசல்இல்லே!கல்யாணம் முடிஞ்சுபதினைந்துவருசத்துக்குபொறவுபெத்தஒரேஒரு அவூர்வ தம்பிக்கு குதிரைமேலேஏத்திஊர்கோலம்விடஆவனத்து குதுரே காணோம். ஏழுவீடுகட்டிஎதிரியேஅடிச்சுவெளயாண்டசாயக்காரதெருசூப்புசிக்கந்தரின் சிலம்பவிளையாட்டைகாணோம்.கல்யாணஊர்வலத்தில்காந்தவெளக்கு தூக்குனகொரத்தியையும்காணோம்!காந்தவெளக்கையும்காணோம்.

sheikdawoodmohamedfarook said...

''கும்மியடிபெண்ணேகும்மியடி! நல்லாகுனிஞ்சு-குனிஞ்சுகும்மியடி! கோமாளபொண்ணுக்குமாப்புளேவாராண்டு குனிஞ்சு-குனிஞ்சுகும்மியடி!'' என்றகும்மிஅடிக்கும்விளையாடேல்லாம்காணாமல்போச்சு! காந்தியார்நூல்நூத்த தக்ளியும் ராட்டையும் காணாமல்போச்சு. His Master voice 'கோணகிராப்' பெட்டி காணாமல்போச்சு. ஜவ்வுமிட்டாயில்கடியாரம்செய்துகையில்விட்டமிட்டாய்காரணை காணோம்.

sheikdawoodmohamedfarook said...

தையிர்யுறைக்கும்குடுவைகுடுவைகளைஇப்போகாணோம்/சுதந்திரத்துக்குமுன் சென்னையில்தண்டவாளம்போட்டுஓடியTramவண்டியைகாணோம். நூறுமுரசுகளின்மீதுபெண்களைநடனமாடவிட்டு''சந்திரலேகா''என்ற சினிமாபடம்தயாரித்தஜெமினிஸ்டுடியோவைஇன்றுகாணோம். குபேரகுசேலா/,பக்தகாளிதாஸ்/.m.s.சுப்லட்சுமிநடித்தமீரா/பக்தகபீர்தாஸ்/ராஜமுக்தி/சௌசௌ/அரிச்சந்திரா/சகுந்தலை போன்ற அறுவை +புராணப்படங்களையே தந்து கொண்டிருந்த தமிழ் திரைப்பட உலகில் ''நாம்இருவர்'' என்ற சமூக படத்தை தந்தA.V.மெய்யப்பசெட்டியாரின்A.V.Mஸ்டுடியோ காணாமல் போய்விட்டது. அதுபோல்சேலம்மாடர்ன்தியேட்டர்காணவே காணோம் .நோன்புகாலங்களில்சகுஹுருக்குஎழுப்பிவிடதாபுசுதட்டியும் கதவைதட்டியும்வந்தபக்கிர்சாமார்களைகாணோம்.அதுமட்டுமா? மையத்தைஅடக்கம்செய்ய'மம்மட்டி'யைதோளில்தூக்கிவந்த பக்கிர்சாக்களையும்காணோவேகாணோமே!?

sheikdawoodmohamedfarook said...

நோன்புகாலங்களில்நோம்புபுடிச்சநாக்குக்குருசிதந்தநாங்குலு மீனுஇந்தகடல்விட்டுவேறுஎந்தகடல்போனதோ?தெரியலையே! கடல்கரைதெருவெலக்கா தெருவில் கூத்தாயி வித்த கொட்டி கிலங்கு/ பொன்னம்மாவித்தசீத்தாபாலம்/அஞ்சலைவித்தஎலந்தப்பலம்/நாகாயிவித்தநாவபலம்/வேலம்மாவித்தவிளாம்பலம் எல்லாத்தையும் நினைக்க-நினைக்க நாவில் நீர்ஊறுது! நாவில் மட்டுமா நீர்ஊறுது? கண்ணிலும்அதுவேஊறியது! இவையெல்லாம்எந்ததிசைநோக்கிபயணம்போனது? தெரியலையே!

sheikdawoodmohamedfarook said...

ஒடுகத்துபுதன்கிழமைஎன்றுஒருநாள்வரும் அன்று கொளக்கட்டைசுட்டு கொண்டு கடல்கரைக்கு பெண்கள் போவார்கள்.அங்கேபாத்தியா ஓதிகொலக்கட்டை பவுருவார்கள். அன்றுகடல்கரை கடல் கரையாகவே இருந்தது .வெள்ளை மணலும்வெண்நுரைபொங்கியஅலையும்கரைக்குவந்து-வந்துமுத்தமிட்டுசென்றது.கரைமீதுகடலுக்குஇருந்தபாசம் கடலைவிட பெரியது .புனிதமானது. மேலை நாட்டுக்காரன் ராலுருசிகண்டதும்கடல்கரை யின் அழகு துயிலுரியப்பட்டது .இருந்தவைகளில்இருந்தும்இல்லாமல் போனது கடல்கரையின் அழகும் காற்று தரும் ஆனந்தமும். அதோடு பாசிப்யறு போட்ட கொலக்கட்டையும்.தான்.... ஒடுக்கத்துபுதன்கொலக்கடைதான் வாய்க்கு கிடைக்காமல் போச்சுஎன்றால்ஆசராவுக்குசின்னத்தைக்காலுக்கும் பெரியதைக்காலுக்கும்நேத்திகடனுக்குசுட்டுகொடுத்த கொலக்கட்டைக்கும்யாரோStay orderவாங்கி அது தலையிலும் 'கை'வைத்துவிட்டார்கள். ஓஸிகொலக்கடைதிங்கஇன்னொருசான்ஸும்இருந்தது. அதுயாரேனும்தலைபிள்ளைபெற்றால்ஹாஜாஒலிசாயுவோபள்ளி வாசல்தலைமாட்டுக்குபிள்ளையேதூக்கிட்டுபோய்வாப்புச்சிமடியில்வைத்துமுடிஇறக்குவார்கள்.அப்பொழுதுவருபவர்களுக்குகொலக்கட்டை பவுருவார்கள். வாப்புச்சிபுள்ளையின்கைகள்இரண்டிலும்பவுன்காப்புபோட்டுமகனோட புள்ளையேதூக்கிகண்ணத்துலே'மொச்சு-மொச்சு'ன்னு மோந்து குவா! மகன்புள்ளேமேலேயுள்ளபாசத்திலேமோந்தபோது அவ வெத்தலை பாக்குஎச்சிஎல்லாம்புள்ளேகண்ணத்துலேஒட்டிக்கொள்ளும். இப்பொழுதுஉரலில்உக்காந்துகொடிக்கவுத்தைபுடிச்சு கத்துறதும்சுடுதண்ணி மரைக்காரிடம்வெத்தலைஓதிதிண்டால்புள்ளைபொறந்துடும்என்றும் ஆளுக்குஆளுசொன்னதைகேட்டுஅவரிடம்வெத்தலைகொடுத்தால்ஓதிஊதி' 'ஹா....ஹா'என்றுஅடிதொண்டையில்தேங்கிநின்றசளியையெல்லாம் வெத்தலையில்துப்பிமடித்துகொடுப்பார்.வெத்தலைஉள்ளேபோனதும் மரைக்கார்காறிதுப்பியஎச்சியில்உள்ள lubrication உதவியால்வைற்று பிள்ளைவழுக்கென்றுவெளியேவந்துவிடும்.அந்தக்காலம்அப்படி! இப்பெல்லாம்நேராகபட்டுக்கோட்டை-தஞ்சாவூர் போய் புள்ளையைபெத்துகிட்டுவரும்புதியவழிகண்டுபிடிததன் விளைவாக கொலக்கட்டைசுட்டுமுடிஇறக்கும்பழக்கமும் நின்னுபோச்சு!.இந்தஅற்பகொலக்கட்டைக்குதான்எத்தனைகண்டம்? பாவம்!இப்போநம்மைவிட்டுபோனதில்கோலக்கட்டையும்ஒன்றென கொண்டு சபுர்செய்துகொள்வோம்!

navabar said...

காக்கா டென்சன் ஆஹாதீங்க.

Muhammad abubacker ( LMS ) said...

Assalamu alaikkum.
Janab. Md farook kaka. Kaanchi pona vettrilaiyai mentru araiththu thuppittya vettrilai vadaiyinal innum Hameed kaka varavillai polum.

ZAKIR HUSSAIN said...

father & son ...made this article more lovely and lively .

Yasir said...

மனிதாபிமானத்தை காணோம் ,மக்களெல்லாம் அன்புடன் கூடிப்பேசி பறிமாறிக்கொள்ளும் நேசத்தை காணோம்...காக்கா இது ஒரு கலக்கல் ஆக்கம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு