நிலா நிலா - ஓடிவா
நில்லாமல் - ஓடிவா !
மலை மீது - ஏறிவா
மல்லிகைப் பூ - கொண்டுவா !
- நினைவில் இருக்கும் சிறு வயதுப் பாடல்
நிலவு, நிலா என்று கவிதைகளிலும் கதைகளிலும் கதாநாயகியாக சித்தரிக்கப்படும் சந்திரன், இதுதான் பூமிக்கு மிக அருகாமையில் (சுமார் 4,06,899 கிலோ மீட்டர் தூரம்) இருப்பதால் நாம் தினமும் சர்வ சாதாரணமாக கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றாகத் தெரிகிறது. பூமியை நான்காகப் பிரித்து மூன்று பங்கை நாம் (மனைகளாக) வைத்துகொண்டால் பாக்கி என்னவோ அதுதான் நிலவின் சுற்றளவு , அதாவது சுமார் 10,927 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதுதான் அந்த நிலா. அட! நமதூர் நிலங்களை வாங்கி விற்கும் ப்ரோக்கர்களை அங்கு அனுப்பினால் கிடைக்கின்ற இடங்களை அங்கு சிறு சிறு பாகங்களாக, சந்தும் பொந்துமாக, சாக்கடை ஓடக்கூட வழிவைக்காமல் துண்டு துண்டாக மனை போட்டுவிடுவார்கள்!.
நிலவை உற்று நோக்கினால் வட்டவடிவப் பகுதிக்கு நடுவே சிறு சிறு துகல்கள் போல் மங்கலாகக் கருப்பாக தெரியும் அது நிலவில் உள்ள மலைப் பகுதிகள். அந்த மலைப் பகுதி சூரிய வெளிச்சத்தை அதிகமாகப் பிரதிபலிக்காததால் நமக்குக் கருமை நிரமாகத் தெரிகின்றது நமது பூமியில் உள்ள மலைச் சிகரங்களில் மிக உயரமானது இமயமலையில் உள்ள everest சிகரம்.அதன் உயரம் 8,848 மீட்டர் (1955 ஆம் ஆண்டு இந்தியாவால் அளக்கப்பட்டது) ஆனால் நிலவில் உள்ள லைப்ரிட்ஸ் என்னும் மலை கிட்டத்தட்ட 10,600 மீட்டராகும். நிலவில் 120 டெசிபலை (நம் காதுகள் இந்த சப்தத்தில் செவிடாகிவிடும்) சப்தம் போட்டாலும் வெளியோ கேட்காது (நமதூர் குற்றால குளியல் பர்ட்டிகளின் சப்தமெல்லாம் அங்கு எடுபடாது) காரணம் சப்தத்தை கடத்த அங்கு அசைந்தாடும் காற்று இல்லை.
சூரிய ஒளி நிலவில் பட்டு அது பூமிக்கு வந்து சேர 1.3 வினாடிகள் ஆகிறது அதே சூரிய ஒளி சூரியனில் இருந்து நேரடியாக பூமிக்கு வர பல நிமிடங்கள் ஆகும் காரணம் சூரியன் தூரத்தில் இருப்பதால் வெளிச்சம் வந்து சேர தாமதம் ஆகும். சூரியன் அதே நிலவு இருக்கும் தூரத்தில் இருந்தால் (பூமி) நமலேல்லாம் கரிக்கட்டைதான் (அந்தோ கபாப் தான் போங்கள்)!. நிலவிலும் பூமியில் இருப்பது போல் எரிமலைகள் உள்ளன அதில் ஒலிம்பஸ் மான்ஸ் என்ற எரிமலை 3 கிலோ மீட்டர் உயரமும் 600 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.
நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்களும் 7 மணி நேரமும் 43 நிமிடங்களும் 11. 47 வினாடிகளும் ஆகும். நிலவின் இழுவிசை பூமின் இழுவிசையில் ஆறில் ஒரு பங்குதான். நாம் நிலவில் நின்று கொண்டு துள்ளிக் குதித்தால் அப்படியே ஸ்லோ மோஷனில் மேலும் கீழும் மிதந்து வருவோம்! நிலவு பூமியை மணிக்கு 3,700 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றது. சாதாரணமாக பயணிகள் விமானம் அதிகபட்சமாக 1000 கிலோ மீட்டர் வேகத்திற்குள் தான் பறக்கும்.
சில நேரங்களில் வானில் மேகமூட்டம் காணப்படுவதால் பிறையைக் காண்பதில் சிரமம் ஏற்படும் இது போன்ற நேரங்களில் நாம் சிறுவயதில் யோசிப்போமே நமது விமானப்படை விமானங்கள் மூலம் மேக மூட்டத்தை விளக்கிச் சென்று மறைந்திருக்கும் பிறையைப் பார்க்க ஏற்பாடுகள் செய்தால் நோன்பு வைப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உள்ள பெரும் குழப்பங்கள் தடுக்கப்படலாம் அல்லவா என்று ? ஆனால் நமது நாட்டு விமானப்படை மிக்20 மற்றும் மிராஜ் 2000 ரக அதி நவீன போர் விமானங்களைத் துரு பிடித்துத் தூக்கி போடுவார்களே தவிர இதுபோன்ற காரியங்களுக்குப் பயன் படுத்தவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். அது நம் சிறுவயது கனவுதான்.
சவுதியில் இருந்து நம்மைத் தாண்டி (இந்தியாவை) இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவில் எல்லாம் சவுதியில் நோன்பு என்றால் அங்கும் நோன்பு, சவுதியில் பெருநாள் என்றால் அங்கும் பெருநாள் கொண்டாடி விடுகின்றனர். அங்கு எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், நாம் மட்டும் (இந்தியாவில்) இரண்டு பெருநாள் மூன்று பெருநாள் என்று ஆளுக்கு ஒரு இயக்கப் பெருநாள் கொண்டாடி நம் ஒற்றுமையை உருக்குலைத்துக் கொள்கின்றோம்.
இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அனைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் ஒற்றைச் சொல்லை எட்டிப் பிடிப்போமா ?
மெய்யாலுமே இது ஒரு மீள்பதிவுதானுங்க !
Sஹமீத்
9 Responses So Far:
சகோ சாகுல் ஹமீது அவர்களுக்கு,
இன்றும் எனக்கு ஒரு சந்தேகம். அதாவது நிலவில் ஆம்ஸ்ட்ராங் , ஆல்ட்ரின் என்ற இருவர் முதலில் கால் பதித்து சாதனை செய்தனர் என்று கேள்விப்பட்டு உலகமே வியந்ததே. அது அன்று வியப்பாக தெரிந்தது. ஆனால் இன்றைய செய்தியில் அது ஒரு போலித்தனமான செய்தி அது உண்மையல்ல என்று கேள்விப்பட்டேன்.
அதாவது ஆம்ஸ்ட்ராங் , ஆல்ட்ரின் இருவரும் நிலவில் நட்டு வைக்கும் அமெரிக்காவின் தேசிய கொடி காற்றில்லாத நிலவில் எப்படி அசைந்து
ஆடுகின்றது ? இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கின்றது என்று சொல்லி நிலவில் கால் வைத்த சம்பவம் பொய் என்று சொல்கின்றார்களே
அது உண்மையா ?
எனக்கு அதை கொஞ்சம் விளக்கவும்.
அபு ஆசிப்.
பேசாமேநிலவில்வீடுகட்டிகுடிபோய்விட்டால் நோன்புபெருநாள் பிறைபாக்கும்சண்டைஅங்கேஇருக்காது!
இப்பவேநிலவில்நிலங்களைசல்லிசாகவாங்கி போட்டுவிட்டால்அப்புறம் கொள்ளைலாபத்துக்கு வித்துகோடீஸ்வரன்ஆகலாம்.
சீக்கிரமாஒருD.O./V.O.வை புடிச்சு எல்லா நெலத்தையும் நம்மபேருக்கேபட்டாபோட்டுகிட்டா கிறாக்கிவரும் போது சொன்னவெலைகிடைக்கும்
ஹமீது,
ரொம்ப ட்டெக்னிக்கலா நிலாவைப் பற்றிச் சொன்னீர்கள். அருமை.
நான் கொஞ்சம் பொயட்டிக்கலா சொல்லவா?
நிலவினுள் நின் நினைவுகள்:
திரைகட லோடிய
திரவியம் தேடிய
வகைவழி வந்தவர்
வளைகுடா வாசிகள்
தரைவழித் தேடல்
தரவில்லை திருப்தி
ஒருவழிப் பாதையில்
பெருவெளிப் பறந்து
உளவலிச் சுமந்து
ஊர்வழி நோக்குவர்
பாலையில்
மணல்வெளி எங்கும்
மனவலியோடு
உலவுவர் எனினும்
நிலவொளியில் நனைய
புல்வெளியில் சற்று
மல்லாந்த பார்வையில்
நிலா பார்ப்பதில்
நிம்மதி யுறுவர்
விடி விளக்கை ஏற்றிவைத்து
இரவு வந்துவிட்டிருக்கும்
இவர்
உறவும்
ஊரில் தனித்துவிட்டிருக்கும்
ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவைப்
பலர்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
அதனுள் பயணித்து
அவளையேப் பார்த்துக்கொண்டிருப்பர்
வாணளவு வாழ்க்கையும்
சமமாக - மன
வாட்டமும் இருப்பினும்
நிலாப் பார்ப்பதில்
நிம்மதி யுண்டு
நிலா உலாவ,
வீதிகளில்
நிலவொளி உளவு பார்க்க
களவிக்கு உகந்ததெனக் காதலரும்
அமாவாசை நிலவை
களவுக்குத் தகுந்ததெனக் கள்வரும்
காண்பர்
மேகப் பின்னணியில்
நிலவைப்
பெண்ணெனக் காண்பவர்
மூன்றாம் பிறையை
நெற்றியெனப் பார்த்தால்
முதற் பிறையை
வகிடு எனக் கொள்வர்
அமாவாசையும் அழகுதான்
பெண்
திரும்பி நடப்பதாய்ச் சொல்வர்.
பெள்ரணமிகளைப் பற்றிப்
பிரச்னை ஏதுமில்லை
அமாவாசைகளில்
நிலவிருந்த இடத்தில்
என்ன இருக்கும் என
விஞ்ஞானம் கலக்காத கணிப்பில்
நிலவு விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
அவளையே வைத்துப் பார்ப்பர்.
சன்னலுக்குப் பின்னாலும்
பேரூந்திலும் வகுப்பறையிலும்
நிலவு பார்ப்பரெனினும்
பாட்டியின் பின்னாலிருந்து
எட்டிப்பார்க்கும் நிலா
அழகின் உச்சம் என்பர்
தேய்ந்தோ வளர்ந்தோ
தினமும் மாறும் நிலவை
பிழையறப் பார்ப்பவர்
பிறையெனப் பார்ப்பர்
பிறரோ
உட்புற வளைவை
ஒட்டிய வயிறெனக் கொண்டு
நிலவு ஏழை யென்றும்
வெளிப்புற வளைவை
முட்டியத் தொப்பை யென்று
நிலவு கொழுத்தது என்றும் காண்பர்
பார்ப்பவர் புத்திக்கேற்ப
வசப்படும் நிலவு,
வாய்க்கும்போதெல்லாம்
நிலாப் பார்த்தல்
அனிச்சையானவர்க்கே
அகிம்சை பிடிக்கும்
அழுத்தும் இம்சைகளுக்கிடையே
நிலாப் பார்த்தலும்
நினைவுகளை
நிலவுக்குள் பார்த்தலும்
வளைகுடா வாசிகளுக்கு மட்டும்
வசப்பட்ட வாழ்க்கை!
அஸ்ஸலாமு அலைகும்,
பிறை விசயதில் தெளிவுபெற இந்த சுட்டியை சொடுக்கவும்;
http://mooncalendar.in/
சாவன்னா காக்கா...அருமையான தகவல்கள் நிலவைப்பற்றி.....இன்னொரு செய்தி.....நிலவின் வெளிச்சம் சூரியனிடம் கடன் வாங்கி சேமித்து பின் ஒளிர்வதுதான் இதனை அறிவியல் கொஞ்ச வருடங்களுக்கு முன்தான்.கண்டுப்பிடித்தார்கள் ஆனால்..இதனை வல்ல நாயன் தன் திருமுறையில் சூசகமாக சொல்லி இருக்கின்றான் ஒளிக்கான இரண்டு விதமான வார்த்தைகளை சொல்லி....அல்லாஹூ அக்பர்
//ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவைப்
பலர்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
அதனுள் பயணித்து
அவளையேப் பார்த்துக்கொண்டிருப்பர்//
கவிதை முழுவதும் காதலால் நிரம்பி இருந்தாலும் இந்த வரிகள் என்னை சூண்டி இழுக்கின்றது....அனுபவித்ததால் இருக்குமோ....சூப்பர் வரிகள் காக்கா..என்னை மிகவும் கவர்ந்த வரிகள்....
Post a Comment