துளி உலகம்!


இதோ
கூப்பிடு தூரத்தில் கோடை

குடிநீர்க் குழாய்களில்
காற்று வீசும் காலம்
சமீபத்துவிட்டது

வாரி வழங்கிய
மாரியின் நீரைச்
சேமித்து வைக்காமல்
பூமிக்குப் புகட்டி விட்டோம்

சுட்டெரிக்கப் போகும்
சூரியக் கதிர்களின்
வீரிய வெப்பம்
எஞ்சிய நீர்நிலைகளில்
நீருரிஞ்சி
நில வெடிப்புகளில் நிலைக்கும்

உணவு உருட்டிச் சேமித்த
எறும்புகள்கூட
நீர்த்துளியுருட்டத் துவங்கிவிட்டன.

'தண்ணி' போதையில்
திளைக்கும் கூட்டம்
தண்ணீர்த் தேவையில்
தகிக்கப் போகிறது

தண்ணீர் அரசியல்
சூடு பிடிக்க
ஊடகங்களுக்குத் தாகம் அடங்கும்

உதாசீனம் செய்யப்பட்ட
உபரி நீரோ
உப்புக் கரிக்கிறது
கடலில்!

கடல்

ஓடும்போதும்
கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த தண்ணீர்
ஒரே இடத்தில்
ஓய்ந்து
படுத்துக் கிடந்ததால்
உப்பு கூடி
உடல் பெருத்துக்
கடலானது.

எழுப்ப வேண்டாம்
எழுந்தால்
ஆழிப் பேரலையாய்
அழித்து விடும் உலகை!

ஆழ்கடல் முதல்
அலை ஆடையுடுத்தி
ஆடி அசைந்து வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கண்டவர் கால்களில் விழும்
‘கலிமா’ சொல்லாதப் பெண்டிரைப்போல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

15 கருத்துகள்

Iqbal M. Salih சொன்னது…

"கண்டவர் கால்களில் விழும்
கலிமா சொல்லாதப் பெண்டிரைப்போல்!"

என்று 'ஏகத்துவத்தை' எழுத்தில்
எத்திவைத்ததன் பொருட்டு- நீ
எல்லா வளமும் இனிதே பெறுவாயாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

வரப்போகும் காலம் பற்றிய
பொருள் மிகு கவிதை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//உதாசீனம் செய்யப்பட்ட
உபரி நீரோ
உப்புக் கரிக்கிறது
கடலில்!//

கடல் பற்றி தொடரும் அடுத்த கவிதையோ.....

எங்கள் கவிதைக் கடல் (கவிக் காக்கா) அலையோசை 'ஸோ க்யூட் !'

sheikdawoodmohamedfarook சொன்னது…

ஊறுகாயேதொட்டுநாக்கில்தடவினால்தண்ணீர் சுறந்தது. இனிஅதுகூடஅற்றுப்போகுமோ?

sabeer.abushahruk சொன்னது…

இக்பால், எம் ஹெச் ஜே, அபு இபு, ஃபாரூக் மாமா,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

Ebrahim Ansari சொன்னது…

கடலை " முந்நீர் மடு " என்று மனோன்மணியம் சொல்கிறது.

மழைநீர், ஆற்று நீர், கடல் நீர் ஆகிய மூன்று வகை நீர் உறவாடுவதால் அப்பெயர் என்று விளக்கம் தருகிறார்கள்.

கடலோரக் கவிஞர் தம்பி சபீர் அவர்கள் கடலைப்பற்றி எழுத சொல்லியா கொடுக்க வேண்டும்?

பாராட்டுக்கள்.

தாமதத்துக்கு வருந்துகிறேன். சில ஷைத்தான்களுடன் சென்னைக்கு சட்டமன்றம் காணச் சென்று இருந்தேன். விபரம் சனிக் கிழமை பதிவில். இன்ஷா அல்லாஹ்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.துளியைப்பற்றிய பெரும் கவிதை வெள்ளம்!!!!

crown சொன்னது…

இதோ
கூப்பிடு தூரத்தில் கோடை
-----------------------------------------------------------
கூப்பிடாமலே தொன்டை வரண்டு போகும் தவிப்பில்தான் நம் நிலமை வரண்ட நிலம்போல் தாகத்துடன் காத்து இருக்கு!கடலைப்போடுவதிலேயே சட்டசபை ,கெட்ட சபையாகிவிட்டது.கடல் நீரைகுடினீராக்கும் திட்டமெல்லாம் தள்ளாடி நொன்டி அடிக்கிறது.

crown சொன்னது…

உணவு உருட்டிச் சேமித்த
எறும்புகள்கூட
நீர்த்துளியுருட்டத் துவங்கிவிட்டன.
----------------------------------------------------------------------------
எதார்த்ததின் சூட்டை குளிர் வார்தையில் சொல்லும் கவிதை! ஆனாலும் எறும்பூரும் நிலையில்தான் எல்லா ஊர் மக்களும் எறும்புபோல் வரிசையாய் காலி குடத்துடன் , காலி குடலுடன் காத்திருக்கின்றனர்! ஆனாலும் குழாயில் காத்துதான் வருது!உயிர் காற்றை வாங்கும் அளவிற்க்கு

crown சொன்னது…

தண்ணீர் அரசியல்
சூடு பிடிக்க
ஊடகங்களுக்குத் தாகம் அடங்கும்
-------------------------------------------------------------
ஆனால் நம் ஆவி அல்லாவா பறக்க போகிறது!!!!!!!!

crown சொன்னது…

உதாசீனம் செய்யப்பட்ட
உபரி நீரோ
உப்புக் கரிக்கிறது
கடலில்!
--------------------------------------------
நினைத்தாலே உணவுகூட செறிக்க மாட்டேங்குது!

crown சொன்னது…

ஓடும்போதும்
கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த தண்ணீர்
ஒரே இடத்தில்
ஓய்ந்து
படுத்துக் கிடந்ததால்
உப்பு கூடி
உடல் பெருத்துக்
கடலானது.
---------------------------------------------
இனிக்கும் கவிமழையில் உப்பு கரைந்து கானாமல் போய் இனிப்பு இங்கே அதிகம் இப்படி இன்ப மழை அடிக்கடி பெய்தால் கடலின் உடலுக்கு சர்க்கரை நோய் வந்து உடல் இளைத்தாலும் இளைக்கலாம் கடல்!

crown சொன்னது…

ஆழ்கடல் முதல்
அலை ஆடையுடுத்தி
ஆடி அசைந்து வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கண்டவர் கால்களில் விழும்
‘கலிமா’ சொல்லாதப் பெண்டிரைப்போல்!
-----------------------------------------------------------------------
மண்டையில் களிமண் உள்ளவர்களை பற்றிய நல்ல உவமை ''காலத்தின் அவசியத்தையும் ,அவலத்தையும் ,ஈமானை சீர்தூக்கி பார்க்க வேண்டியதையும் சொல்லும் இந்த துளி! நாளை நன்மை தேடித்தரும் பெரும் வெள்ளமாய் மாறி ஊரெங்கிலும் ஈடேற்ற பாதையை நோக்கி அலை,அலையாய் வீதியெங்கும் மனித தலை தெரிய அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.உள்ளத்தின் ஆழத்தின் தாகம் கவிஞருடையது வாழ்துக்கள்!!!!!!!!

sabeer.abushahruk சொன்னது…

//சில ஷைத்தான்களுடன் சென்னைக்கு சட்டமன்றம் காணச் சென்று இருந்தேன். விபரம் சனிக் கிழமை பதிவில். இன்ஷா அல்லாஹ். //

காக்கா,

என்ன படம் காட்டினார்கள்?

கேப்டனின் அடிதடி ஆக்க்ஷன் படமா ஓபிஎஸ்ஸின் கண்ணீர் பொங்கும் சோகப்படமா?

அறிய காத்திருக்கிறோம்.

க்ரவ்ன்,

//---------------------------------
இனிக்கும் கவிமழையில் உப்பு கரைந்து கானாமல் போய் இனிப்பு இங்கே அதிகம் இப்படி இன்ப மழை அடிக்கடி பெய்தால் கடலின் உடலுக்கு சர்க்கரை நோய் வந்து உடல் இளைத்தாலும் இளைக்கலாம் கடல்!//

அழகு!
அழகோ அழகு!

அதிரை.மெய்சா சொன்னது…

காலமுமம் பருவமும் இயற்கையும் கவிவரிகளில் கனீரென ஒலிக்குது மாறுவோர் திருந்துவோர் உலகினில் மலிந்து கொண்டே போகிறது. நேரமும் வாழ்கையும் நொடியிலும் குறைவாய் நம்மைவிட்டுப் போகுது நேரான நம் பயணம் நேர்மையாய் சென்றிட நெஞ்சம் ஏங்கி நிற்குது