Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாங்க மலையேறலாம் - தொடர் - 3 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2011 | , , ,



சிறிது தூரம் சென்றதும் மலைக்குள் மலைத்து நிற்கும்படியாக உயர்ந்த அதே நேரத்தில் உறுதியான ஒரு சுவர் பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொல்லி மிரட்டியது அதுதான் வால் பாறை டேம் (போட்டோ டேம்)அண்ணார்ந்து பார்த்தால் கழுத்து வலி வந்து விடும் அப்படி ஒரு உயரம். மழை பெய்து பெய்து அந்த கம்பீரமான சுவர் பாசிபிடித்து வழுவழு என்று இருந்தது. அங்கிருந்து கொட்டும் நீர் ஓடுவதற்காக ஒரு குட்டி பாலம் (போட்டோ பாலம்) சென்னை மெரீனா நேப்பியர் பாலத்தை நான்காக பிரித்து அதில் ஒரு பார்ட் இங்கு வைக்கப்பட்டதுபோல் இருந்தது ஆனால் அந்த நேப்பியர் பாலத்தின் துர்நாற்றம் இங்கு இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் முழுக்க படு சுத்தமாக இருந்தது மேலும் அது சுத்தமாக இருக்க இன்னுமொரு காரணம் தினமும் பத்து அல்லது பதினைந்து முறை மழையில் குளித்துவிடுவதுதான்.



ஈரமான மலை ரோட்டில் டயர் வழுக்கிக்கொண்டு வால்பாறை டவுன் வந்துசேரவும் ஜும்மா தொழுகை நேரம் நெருங்கியது அங்கு வந்து, "பள்ளிவாசல் எங்கு உள்ளது” என்று கேட்டு விசாரித்து வந்தால் பள்ளிவாசலுக்கு அருகிலே மார்க்கெட்டும் இருந்தது (நம்ம ஆளுங்க ஒரு செட்டப்பத்தான் தங்கி இருப்பாங்களோ? மார்க்கெட் பக்கத்திலேயே) ஒழுச் செய்வதற்கு அகலில் கைவைத்த உடன் ஐஸை தொட்டதுபோல் ஒரு குளுமை. தொழுகை ஆரம்பிக்கும் முன்பே மீண்டும் மழை தொடங்கியது,பள்ளிவாசலும் பள்ளிக்கு தொழ வந்தவர்களும் மிக எளிமையாகவே இருந்தனர் ஆனால் அங்கு தொழுகை நேரங்களைக் காட்டக் கூடிய போர்டு டிஜிட்டலில் மிக கம்பீரமாகத் தொழுகை நேரத்தை காட்டிக்கொண்டு இருந்தது.

தொழுகை முடிந்தும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது பள்ளி வாசலுக்கு வெளியே ஒரு கபுரும் அதன் மேல் போர்த்தப்பட்ட பச்சை துனியும் மல்லிகைப்பூ வாசமுமாக இருந்தது அந்த கபுர்.  ஜூம்மா முடிந்து வரும் ஒருசிலர் அந்த மழையையும் பொருட்படுத்தாது பத்தியும் மல்லிகை பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் (கபுரை) கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்… 


இதற்கிடையே நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று நம்ம ஆளுங்க கடை எங்கு உள்ளது போன்ற விவரங்களை ஸ்மெல் செய்து கையுடன் ஒரு ஆளையும் அழைத்து கொண்டு வந்தார் நண்பர். 


ஹோட்டல் இடத்தை காட்டுவதற்கு வந்த அவர் ஒரு ஹோட்டலை காண்பித்து “இதுதான் இங்கு உள்ளதிலே நல்ல ஹோட்டல்” என்று சொல்லி ஒரு ஹோட்டலை காண்பித்தார் அங்கு உள்ளே சென்றதும்.


“இருக்கி இருக்கி" என்று மலையாளத்தில் இருக்கையில் அமரச் சொன்னார்.  


சாப்பிட அமர்ந்ததும் உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும் இடம் தமிழ் நாடாக இருந்தாலும் சாப்பாட்டில் மலையாள வாடைதான் இருந்தது. பாம்பு திங்கும் ஊருக்கு வந்தால் நடுத் துண்டு நமக்குத்தான் என்பது போல் ஆளாளுக்கு ஆத்துக் கெண்டையை அடித்து பிடித்து சாப்பிட்டு முடித்து விட்டு அங்கு சில சீன்களை பார்த்து விட்டு (தேயிலை தோட்ட போட்டோ) ஆலப்புழை நோக்கி பயணப்பட்டோம்.


தமிழ்நாடு பார்டர் காட்டு இலாகா சோதனைச் சாவடி அங்கு கெடுபிடி ஜாஸ்தியாக இருந்தது. 


"இந்த வழியாக ஆலப்புழை போகவேண்டாம். நீங்கள் ஆழியார் அணை போய் அங்கிருந்து போய்விடுங்கள். அதுதான் பாதுகாப்பானது" என்று தடுத்துவிட்டனர். 


நண்பர்களுக்கு வந்த நோக்கமே கெட்டுப்போய் விட்டதே என்று ஒரே டென்சன் அனைவரையும் அமைதிப் படுத்திவிட்டு நாகர் கோவிலில் உள்ள (காட்டு இலாகாவில் ஹை போஸ்ட்டில் உள்ளார்) ஒரு நண்பரை போனில் அழைத்து விவரம் சொன்னேன். அவர் சோதனைச் சாவடி விவரம் அனைத்தையும் கேட்டு விட்டு “பத்து நிமிடத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வண்டிக்குள் போய் உட்கார்ந்து இருங்கள். குளிரும் மழையுமாக இருக்கும்”  என்று சொன்னார் அதன் படி வண்டியில் வந்து அமர்ந்து இருந்தோம் 

அடுத்த சில நிமிசத்தில் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு ஆள் வந்து அழைத்தார். அங்கு போய் அதிகாரியை பார்த்ததும் அந்த அதிகாரி சொன்னார்.


"நாகர் கோயில் டிப்பார்ட் மெண்ட்டில் இருந்து உங்களை இந்த வழியாக போக அனுமதிக்கும்படி தகவல் வந்துள்ளது" என்று சொல்லி அனுமதி கொடுத்தார்.


நண்பருக்கு குதுகலம் தாங்க முடியவில்லை. காட்டு இலாகா அதிகாரிகள் வண்டியை ஒரு சோதனை செய்தனர் அதனூடே..


“வண்டி கண்டிசனா” என்று கேட்டார். 


நாம் “ஆம் வண்டி கண்டிசன் தான்” என்று சொல்லி முடிப்பதற்குள்...


“டீசல் நிறைய உள்ளதா?” என்று கேட்டு விட்டு “இனி கேரளாவில்தான் டிசல் கிடைக்கும்” என்றார். 


நாம் முன் கூட்டியே டேங்ஃபுல் செய்துகொண்டு வந்தது நல்லதாக போய்விட்டது மேலும் அந்த அதிகாரி கூறினார் 


"ரோடு சுமாராகத்தான் இருக்கும் போக்குவரத்து எதுவும் இருக்காது மெதுவா போங்க ஆனா சீக்கிரமா கேரளா பாரஸ்ட் ‘செக் பாய்ன்ட்டை தாண்டிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது எங்களுக்கும் நல்லது” என்று அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்தார்  

புறப்பட்ட அரை மணி நேரத்தில் கேரளா பார்டர் வந்தது. அங்கிருந்த செக் போஸ்ட்டில்...


"எத்தனை ஆள்காரு" என்று கேட்டார் 


"ஐந்துபேர் (ஒருகாரு)"  என்று சொன்னதும் 


அடுத்த கேள்வி “வண்டிண்ட அகத்து எத்தர பிளாஸ்டிக் பாட்டில் உண்டு”  


நாம், “எட்டு அன்னம் உண்டு” 


"ஈ எட்டு பாட்டிலும் லாஸ்ட் செக் போஸ்டில் கானிக்கனும் பாட்டில்களை பொரத்தூ கலையாம் பாடில்ல" என்று சொல்லி ஒருகடிதம் கொடுத்து பாட்டில் எட்டு உள்ளது என்று எழுதி கொடுத்தார்.

சிறு சிறு பிளாஸ்டிக் பைகளை எல்லாம் வாங்கி அங்கு உள்ள ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டார்கள் இதல்லாம் எதற்கு என்றால் அங்கு  வருவோரும் போவோரும் பொறுப்பு இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிட்டு போவதை மிருகங்கள் தின்று விட்டு "மரித்து" விடுகின்றனவாம் அதனால் தான் இத்தனை கெடுபிடி அங்கு போகும் வழி நெடுக கரடு முரடு ரோடுதான் ஆங்காங்கே மேகம் வந்து சூழ்ந்து வண்டிக்கும் நமக்கும் அடிக்கடி ரெஸ்ட் கிடைத்தது குளிரில் பயணம் செய்வதால் நண்பர்களுக்கு பசி தலை தூக்கியது யதார்த்தமாக நூர் லாஜ் அல்வாவும் நானாகத்தான் கேக்கும் நான் எடுத்து வந்தது அங்கு பதார்த்தமா பங்கு போட்டு நடு காட்டில் திங்கப்பட்டது.

ஒரு வழியாக காட்டு வழி பயணத்தை முடித்து விட்டு நாட்டுக்குள் போகும்போது அந்த கடைசி செக் போஸ்டில் பிளாஸ்டிக் பாட்டில்களை காட்டிய பின் நாட்டுக்குள் (கேரளா) போக அனுமதி கொடுத்தார்கள் அங்கு இருந்து ஆலப்புழா சென்றடைய இரவு பதினோருமணி ஆகிவிட்டது .இந்த  ஆலப்புழா அழகிய பெயர் இதை ஆங்கிலத்தில் ஆழப்பி என்று அசிங்கமா விளிகின்றார்கள்!


அடுத்தநாள் காலை ஒரு ஹோட்டலில் புகுந்து குலா புட்டை புட்டு புட்டு தின்று விட்டு பேக் வாட்டர் போட்டிங் போய் சுற்றி பார்த்து விட்டு அதன் உள்ளேயே (போட்டோஸ்) உள்ளே ஒரு ஹோட்டலில் அநியாய விலை கொடுத்து சாப்பிட்டோம் இங்கு கிராமத்து வீடுகளைப்போல் படகுகள் கட்டி நாள் வாடகைக்கு கொடுகின்றார்கள் படகுகளில் ஏசி ரூம் மற்றும் சாதா ரூம்  உண்டு அதற்கு ஏற்ப வாடகை அங்கு பிடிக்கும் மீன்களை உடனே பொரித்தும் சுட்டும் சுவையாக பரிமாறுகின்றார்கள் மீனின் விலை யானை விலையாக உள்ளது இங்கு பல நாட்டு டூரிஸ்ட் வந்து குவிவதால் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் நன்றாக பிழைப்பு நடத்துகின்றன.




எனக்கு தெரிந்து முத்துபேட்டை அருகே உள்ள லகூன்னை கொஞ்சம் சீர் செய்து படகு இல்லங்கள் அமைத்தால் பல வெளிநாட்டு டூரிஸ்ட் வந்து போக ஆரம்பிப்பார்கள் சுற்றி உள்ள ஊர்களுக்கு(நம் ஊருக்கும்தான்) நல்ல ஒரு தொழிலாக அமையும் இங்கு உள்ள மீன்களின் சுவையோ தனிதான் உதாரணமாக இந்த ஊர் கொடுவா மீன் இதை சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கும் இந்த மீன்களை வெளிநாட்டினர் சுவை அறிந்தால் முத்துப்பேட்டை லகூனுக்கு வந்து குவிந்து விடுவார்கள் லகுனை சுற்றி பார்த்ததில் கிட்டத்தட்ட ஆலப்புழை போலவே உள்ளது ஆனால் இது யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே உள்ளது இந்த ரகசியத்தை வெளியிட்டு ஊரையும் அத்தனை சுற்றி உள்ள ஊரையும் நல்ல ஒரு டுரிஸ்ட் நகரமாக ஆக்கலாம். 

மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கி பயணம் ஆனோம் புறப்பட்ட சற்று நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது... 

தொடரும்...
- Sஹமீத்

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மலையேற்றம் தொடரட்டும் என்று சொல்லிவிட்டு சென்றால் மட்டும் நன்றாகவா இருக்கும் !

முதல் புகைப்படம் அற்புதமான கவிதை !

நிஜமான நிழற்படம் ஓவியமாக காட்சி தருவது அழகோ அழகு !

மழையில் நனையும் கார் !

கலக்கல் !

வரைகலையால் வசப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல புகைப்படமெடுக்க துடிக்கும் அத்தனை கண்களுக்கும் விருந்தே....

sabeer.abushahruk said...

கட்டுரையின் இடையிடையே கவிதைகள்... நல்ல லே அவுட். நான் புகைப்படங்களைச் சொன்னேன்.

sabeer.abushahruk said...

கண்ணாடியைச்
சற்றே இறக்கி
கை கொடுத்தேனும்
காப்பாற்றி யிருக்கலாம்
குளிரில் நடுங்கும்
அந்தக்
குட்டை மரங்களுக்கு

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//கட்டுரையின் இடையிடையே கவிதைகள்... நல்ல லே அவுட். நான் புகைப்படங்களைச் சொன்னேன்//


இப்புடி சொல்லி சொல்லியோ என்னை NIKON COOL PIX P 500 வாங்க வச்சிடீங்க!


இனி வரும் புகைப்படங்கள் 12.1 megapixelலில் வரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணாடியைச்
சற்றே இறக்கி
கை கொடுத்தேனும்
காப்பாற்றி யிருக்கலாம்
குளிரில் நடுங்கும்
அந்தக்
குட்டை மரங்களுக்கு

நன்றி : கவிக் காக்கா

சாரலின் சலசலப்பு
சாம்ராஜ்மே வென்ற - களைப்பு !
நனையும் கிளைகள்
துணையுடன் நனையும்
வரைபடம் நம்முன்னே !

Unknown said...

அழகான எபிசொட் !!!!!!
முதல் படம் அவ்வுளவு அழகு !
ஒரு மாடர்ன் art போல ஒரு குட்டி கவிதை !!!
இயற்கை அழகை ரசிப்பவர்களுக்கு முதல் படம் ஒரு அமுதம் :)

Unknown said...

காரின் பாகங்களை மறைத்து விட்டு பார்த்தால்

முதல் படம் நிஜமான ஒரு மாடர்ன் ஆர்ட் !!!!!!!!!

சூப்பர் காக்கா!!

போட்டோ எடுத்தவரின் ரசனைக்கு salute :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மலையாள வாசனையுடன் சிறப்பான தமிழ்நடை,

வக்கனையுடன் பசுமை சூப்பர்,

நீங்க எந்த ரகம்
( //பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்//
என்பதை தெளிவாக்கிவிட்டீர்கள்,

காத்திருக்கிறோம் குமரியை...

ZAKIR HUSSAIN said...

To Tuan Haji Shahul,



இங்கிருந்து உங்களுக்கு ஒரு கட்டளை....அடுத்த முறை ஊர் வரும்போது எல்லோரும் இந்த இடத்துக்கு போக நீங்கள் ஆர்கனைஸ் செய்து விடவும். உங்களுக்கு டெபுடி ஆக சபீரை நியமைக்கிறேன்...சபீர் இப்போதே தேதியெல்லாம் குறிப்பிட்டு விடு...நானும் ரெடியாகனும்ல..

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
( //பூவும் வாங்கி வந்து சாத்திவிட்டு போகின்றார்கள். ஒரு சிலரோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை அந்த லிஸ்டில் நாமும்//
என்பதை தெளிவாக்கிவிட்டீர்கள்,

எந்த விஷயமாக இருந்தாலும் தெளிவாக்கிரனும் "வழவழப்பும்" "வளர்ப்பும்" கூடாது என்பது நம் கொள்கை

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
//காத்திருக்கிறோம் குமரியை...//
கன்னியாகுமரியில் யாரும் காணதா ஒரு இடம் அடுத்த தொடரில் காணலாம்

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//இங்கிருந்து உங்களுக்கு ஒரு கட்டளை....அடுத்த முறை ஊர் வரும்போது எல்லோரும் இந்த இடத்துக்கு போக நீங்கள் ஆர்கனைஸ் செய்து விடவும். உங்களுக்கு டெபுடி ஆக சபீரை நியமைக்கிறேன்...//

ஊர் சுற்றுவது நமக்கு கரும்பு தின்பது போல் அதற்க்கு கட்டளை எதற்கு கை காட்டினால் போதும்.அதுவும் டெபுடி ஆக சபீர் கரும்பு திங்க கூலிவேரா!

டூர் போகும்போது அந்த "மூன்று டோர்" அம்பாஸிடர் பற்றி மட்டும் நீங்கள் மூச் விடக்க கூடாது என்பது என் அன்பான கட்டளை

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹமீது காக்காவின் தெவிட்டாத தொடர் அருமை

// “இருக்கி இருக்கி" என்று மலையாளத்தில் இருக்கையில் அமரச் சொன்னார். //

கடைக்காரர் சொன்ன இரண்டு இருக்கிக்கு.இரண்டு அருத்தமுள்ளது .

1.இருக்கையில் அமரச்சொன்ன இருக்கி ஓன்று .

2. சாப்பாட்டை வயிற்றில் இருக்கி கட்ட சொன்ன அருத்தம் ஓன்று .

நீங்க இரண்டாவது இருக்கியை எப்படி பயன் படுத்தினியே?

Yasir said...

மனதை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்...மைண்டை உருகச்செய்யும் அழகிய எழுத்து நடை....காருக்குள் யானும் இருந்தது போன்ற உணர்வு..கிரேட் ரைட்டிங் ஸ்கில் காக்கா....வாழ்துக்கள்....

Yasir said...

//இங்கிருந்து உங்களுக்கு ஒரு கட்டளை....அடுத்த முறை ஊர் வரும்போது எல்லோரும் இந்த இடத்துக்கு போக நீங்கள் ஆர்கனைஸ் செய்து விடவும். உங்களுக்கு டெபுடி ஆக சபீரை நியமைக்கிறேன்...சபீர் இப்போதே தேதியெல்லாம் குறிப்பிட்டு விடு...நானும் ரெடியாகனும்ல..// keep me also in your list...i don't want to miss this great opportunity

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

// 2. சாப்பாட்டை வயிற்றில் இருக்கி கட்ட சொன்ன அருத்தம் ஓன்று //

முதலாவது ஓகே இரண்டாவது வயிற்றில் இறுக்கி கட்ட ஆசைதான் ஆனால் கார் சீட் பெல்ட் வயிற்ரை இறுக்கி கட்டி விடுமே என்ற பயத்தில் இறுக்கி கட்ட வில்லை!

Shameed said...

Yasir சொன்னது…
//keep me also in your list...i don't want to miss this great opportunity //

உங்களுக்கு ஒரு இருக்கை ஜன்னல் ஓரமா போட்டாச்சு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

@-நேரத்தில் Can I have one seat (if BD / FS)... !

போட்டி வேட்பாளராக அல்ல... ஃபோட்டோ எடுப்பவருக்கு போட்டியாக !

பிரச்சார வேனெல்லாம் வேண்டாம்... பிரஸ்ஸாக போயிட்டு வரலாம் !

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//ஃபோட்டோ எடுப்பவருக்கு போட்டியாக !//


இதுலே தான் நம்ம திறமைய காட்டி வந்தோம் அதிலும் போட்டியா !!


சரிசரி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம் ரைட் சைடு உள்ள ஸீன்களை நான் போட்டோ எடுத்துக்கிறேன் லெப்ட் சைடு உள்ள ஸீன்களை நீங்க போட்டோ எடுத்துகோங்கோ பிறகு இரண்டையும் ஒன்று சேர்த்து பனோரமாவில் காட்டிடுவோம்!

அப்துல்மாலிக் said...

பயணக்கட்டுரை அருமை.. தொட்ருக்கு காத்திருக்கேன்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

இந்த பதிவை தட்டியவுடன் சூடா இருக்கும் கணினி கூட coolஆகிவிடும் போல இருக்குது.

அனைத்து புகைப்படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு காக்கா.

மிக்க நன்றி...

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//இந்த பதிவை தட்டியவுடன் சூடா இருக்கும் கணினி கூட coolஆகிவிடும் போல இருக்குது//

nikon cool pix கேமரா கொண்டு எடுத்ததால் கூலா இருக்குதோ !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். லேனா தமிழ்வாணன் வழக்கம் போல் இந்த அத்தியாயமும் நல்லா எழுதியிருக்கார். மன்னிக்கவும். சகோதரர் சாகுல்( )எழுதில் கைவழுவி( நழுவி)பெயர் தவறாக அடித்தாலும் மனதின் அடிஆழத்தில் தேர்ந்த எழுத்தரின் அனுபவத்தை படித்த நியாபகத்தில் இவ்வாறெல்லாம் எழுத தோன்றியது அல்ஹம்துலிலாஹ். இது எழுத்தரின் உள்ளே ஊறி இருந்த ஆற்றலை வடிகாலாக அதிரை நிருபர் அமைத்து தந்தது சாதனை. அல்லாஹுக்கே எல்லா புகழும். நல்ல எழுத்து நடை கம்பீரமாய் மலைபோல் எழுந்து நிற்பதும் வார்தைகள் அருவி போல் வந்து விழுவதும்,சிலேடை(சேடை) மலையாள வாடையுடன் கோடை தனிக்கும் குளிர் தமிழும் மழைச் சாரல் போல் போகும் இடமெல்லாம் என்மேல் தூவியது போல் நல்ல ரசனை தூறல்!. நிசத்தை மிஞ்சும் நிழல் படம். அத்துனையும் சொல்லும் இயற்கை பாடம்.
வாழ்த்துக்கள்.

hassaan said...

Assalamu alaikum brothers can anyone tell me from where tour starts also the complete way and schedule,i went many place but it attracts me very much well planned and organized tour

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு