Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாங்க மலையேறலாம் ! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2011 | , , ,

அதிரைப்பட்டினத்திலிருந்து காலை ஆறு மணிக்கு புறப்பட்ட இன்னோவா கார் தஞ்சாவூருக்குச் சற்றே முன்பாக காலை பசியாறிட அங்கே கண்ணில் பட்ட ரோட்டோரக் கடையில் அந்தக் கார் நின்றது. அங்கு ஆளுக்கு நான்கு (பேச்சுக்குத்தான் நான்கு) இட்லியை புட்டு குடலுக்குள் வீசி விட்டு அடுத்து புட்டுகள் கிடைத்திடும் கேரளாவை நோக்கி (வேகமாக) சீறிப் பாய்ந்தது கார். தஞ்சாவூர் ரிங் ரோட்டை அடைந்ததும் வேகம் எடுத்து போய்கொண்டிருந்தபோது, “என்னப்பா நீ சவுதி துபாய்லே கார் ஓட்டுற மாதிரி ஹாரன் அடிக்காமே கார் ஓட்டுறே. இந்தியாவுலே கார் ஒட்டுரமாதிரி ஹாரன் அடித்து ஒட்டுப்பா” என்று நண்பரும் டிரைவிங் டிப்ஸ் (!??) இடையிடையே கொடுத்தார் நமக்கு.


திருச்சி வழியாக திண்டுக்கல் தாண்டி டாப் சிலிப் என்னும் மலை உச்சிக்கு போகும் வழியில் காட்டு இலாகாவின் சோதனைச் சாவடி எதிர்பட்டது.

அங்கே "எங்கு போகின்றீர்கள்?" என்ற அசட்டுத்தனமான கேள்விக்கு 

சீரியசாக "மலைக்குத்தான்" என்ற நம் பதிலை கேட்டதும்

"வண்டி எங்கிருந்து வருது?" என்ற அடுத்த கேள்விக்கு (வண்டி ஜப்பான் டெக்நாலஜி ஆனால் தயாரிப்பு இந்தியாதான் என்று மனதில் நினைத்துக்கொண்டு)  

"அதிராம் பட்டினம்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில்

"தலைக்கு பத்து வீதம் ஐந்து பேருக்கு அம்பது ரூபா கொடுங்க" என்று ஒரு அழகான கணக்கைச் சொன்னார் காலில் ஷூ இல்லாத அந்த 'காட்டு' இலாக்கா அதிகாரி.


சோதனைச் சாவடியை தாண்டியதும் மலை ஏற்றம் தொடங்கியது கார் இரண்டாவது மூன்றாவது கியரை தாண்ட முடியவில்லை அப்படி ஒரு மலை ஏற்றம் கண்ணுக்கு குளிர்சியாக பசுமையான காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது. கண்ணுக்கு வந்த குளிர்ச்சி உடலுக்கும் வரட்டுமே என்று கார் ஏசியை அனைத்து விட்டு விண்டோ கிளாசை இறக்கியதும் இயற்கையான ஏசி மூக்கு வழியாக புகுந்து குடல் வரை வந்து கும்மாளம் அடித்தது வைற்றுக்குள்.

மலை ரோட்டின் அள்ளித் தெளித்த ஹேர் பின்(களின்) வளைவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு கார் முன்னுக்கு போய் ஒருவழியாக டாப் ஸ்லிப்பை அடைந்தது அங்கும் எங்கு பார்த்தாலும் இயற்கை பச்சை சாயம் பூசி பசுமை மரங்களின் கிளைகளும் பச்சை நிறத்தில் பாசி படர்ந்திருந்தது. 


உள்ளூர குடலுக்கு புகுந்த குளிர் போட்ட கும்மாளத்தில் பசி பல்ஸை எகிற வைத்தது அங்கே ஏதேனும் சாப்பிட கடைகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உற்றுப் பார்க்கும் முன்னே அட அருகிலேயே இருப்பதை பார்த்து விட்டதும் அதனைப் பார்த்த அடுத்த வினாடியே அந்த இடத்தில் ஆஜர் அங்கு சுட்டிருந்த பலம் பூரிகளை சூட்டோடு சூடாக உள்ளே தள்ளியும் சூடே தெரியவில்லை அத்தனை குளிர்.  அங்கு நிறைந்திருந்த கருங்குரங்குகள் கிளைக்கு கிளை தாவி அப்பப்போ நம்மை பார்த்தது அந்த பார்வை “உன்னால் முடியுமா" என்று கேட்பதுபோல் இருந்தது. 


அங்கிருந்த முக்கியமான இடங்களை எல்லாம் சுட்டுக் கொண்டு (அதாங்க ஃபோட்டோ கிராஃபியாமே) திரும்பவும் டீ கடை வந்து சுடச் சுட டீ யை 'சர்பத்' குடிப்பதுபோல் குடித்துவிட்டு மலை இறங்க எத்தனித்தபோது ஒரு காட்டு இலாகா அதிகாரி ஒரு செக் வைத்தார்.

"ஆறுமணி பஸ் போகும் அதான் பின்னால் போங்கள் தனியாக போனால் காட்டு மாடு வழிமறிக்கும்" என்று ஒரு பிட்டை தூக்கி போட்டார் இந்த தகவலை கேட்டதும் இருந்த குளிர் போய் குளிர் ஜுரம் வந்து வந்திடும் சூழல் உருவானது.


ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பஸ் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்பாக நாம் சென்று விடுவோம் என்ற குருட்டு தைரியத்தில் புறப்பட்டு விட்டோம் சரியாக நடு வழி வந்ததும் (அதுவும் நடுவிலே) நடுபாதையில் காட்டு மாடும் அதன் அழகான குழந்தையும் ரோட்டை (அடைத்துக் கொண்டு) மறைத்து கொண்டு நின்றது.

காட்டு மாடு நின்றதை பார்த்ததும் அநிச்சை செயலாக என் கால் பிரேக்கை அழுத்தியது இன்னொவாவும் அப்படியே நின்றது நடுரோட்டில் காட்டு மாட்டுக்கும் எங்களுக்கும் இடைவெளி சுமார் பதினைந்து அடிதான் அந்த குளிரிலும் அனைவருக்கும் வியர்த்து விட்டது வண்டியை திருப்பும் அளவுக்கு  ரோடு வசதியும் இல்லை. 


மாடு எங்களை உற்றுப் பார்க்க மாட்டை நாங்கள் பாசமாக பார்க்க அருகிலிருந்த நண்பர் 

"ஹாரன் அடிப்பா மாடு ஒதுங்கிடும்" என்றதும் 

மற்றவர் "டேய் இது நாட்டு மாடு அல்ல ஒதுங்கிப் போறதுக்கு காட்டு மாடுடா உனக்கு வண்டியைப் பற்றி தெரிந்ததெல்லாம் ஹாரனைப் பற்றி மட்டும்தான் வேறு எதுவும் தெரியாது கொஞ்சம் சும்மா இருடா" என்று கடிந்ததும் நண்பர் கப்சிப் ஆகிவிட்டார்.

மாடு எங்களை உற்றுப் பார்க்க மாட்டை நாங்கள் பாசமாக பார்க்க...  மாட்டின் அளவும் அதன் பார்வையும் அத்தனைக் குளிரிலும் உள்ளே எங்களுக்கு வேர்த்தது. சட்டென்று எங்கள்மேல் பாய்ந்து ஒரு முட்டு முட்டினாலே காரின் கண்ணாடி உடைந்து உள்ளே இருக்கும் எங்களுக்கும் ஜல்லிக்கட்டுத் தெரியாததால் எலும்பு முறிவு ஏற்படலாம் என்று ஏதேதோ எண்ணி பயந்து நடுங்க, அடுத்து மாடு செய்ததை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்...

தொடரும் 

அசத்தல் காக்கா ஜாகிர் மட்டும்தான் தொடரும் போடுவாரா நாங்களும் போடுவோம்ல !!!

- Sஹமீது


 ||| தொடர் - 1 ||| தொடர் - 2 ||| தொடர் - 3 |||

40 Responses So Far:

Mohamed Rafeek Taj said...

//"ஹாரன் அடிப்பா மாடு ஒதுங்கிடும்" என்றதும் //
இந்தமாதிரி ஆளுங்களை விட்டுட்டு அடுத்ததடவை இராமராஜனை உடன் அழைத்துசெல்லுங்கள் ....காட்டு மாடாக இருந்தாலும் காது இருக்குமுல.... சென்பகமே பாடி மாட்டை சைடு வாங்கிடுவாரு

***
புகை படத்துடன் லைவ் எழுத்துக்கள்

புது அனுபவம் ....வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அங்கே "எங்கு போகின்றீர்கள்?" என்ற அசட்டுத்தனமான கேள்விக்கு

சீரியசாக "மலைக்குத்தான்" என்ற நம் பதிலை கேட்டதும்

"வண்டி எங்கிருந்து வருது?" என்ற அடுத்த கேள்விக்கு (வண்டி ஜப்பான் டெக்நாலஜி ஆனால் தயாரிப்பு இந்தியாதான் என்று மனதில் நினைத்துக்கொண்டு)

"அதிராம் பட்டினம்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில்

"தலைக்கு பத்து வீதம் ஐந்து பேருக்கு அம்பது ரூபா கொடுங்க" என்று ஒரு அழகான கணக்கைச் சொன்னார் காலில் ஷூ இல்லாத அந்த 'காட்டு' இலாக்கா அதிகாரி.//

எழுத்து நடைபயில இந்த பசுமை நிறைனத மலையேறனுமா ?

அருமை !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தமிழின் சிறப்புக்கு தங்களின் சீரிய வார்த்தைக் கோர்வைகளே சாட்சி.

2-வது காட்டு இலாக்கா அதிகாரிக்கு கையில் கொடுக்காததால் அந்தாளின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும் காட்டுமாடுகள் வழிமறித்தது.

அடுத்து பயத்தால் மாடுகள் மீது பாசம் காட்டிய உங்களை அது என்னா செஞ்சுச்சு.
மறதியும் அவசியமான ஒன்னு மனிதனுக்கு,ஆக சீக்கிரம் சொல்ல வாங்க!

ZAKIR HUSSAIN said...

படங்களை யாரும் சுட்டுடலாம் என நினைத்து அதிரை நிருபர் லோகோ போட்டிருப்பதை சின்னதாக போட்டிருக்களாம்.

சாகுல்.......... 2 வது போட்டோ ஆன்கிள் எப்படி வைத்தீர்கள். ஒரு கவிதை மாதிரி இருக்கு.

சில படங்கள் ஏதோ மலேசியாவில் உள்ள இடங்கள் மாதிரி இருக்கிறது. 4 வருடத்துக்கு முன் முஹம்மத் அலி & சபீர் கூட்டுத்தயாரிப்பில் என்னை [ எனக்காக மட்டும் தான் ] ஒரு டூர் அழைத்து சென்றார்கள். ஊத்து எஸ்டேட் , மாஞ்சோலை , அப்பர் & லோயர் டேம் எரியா , மணிமுத்தாறு ,[ அம்பா சமுத்திரம் , ஆழ்வார்குறிச்சி ,குற்றாலம் ] இப்படி எல்லா இடங்களும் N.A.S அண்னனும் , நாசர் சாரும் வழி நெடுக அரட்டையில் அது ஒரு Life time Memory.இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை ஊர் போகும்போது இப்படி ஒரு டூர் போகலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா மற்றும் எல்லோரும் நலமா?

இந்த இலவச சுற்றுலா பயணம் நேரலை மனநிம்மதி தரும்படியாக உள்ளது.

நன்றி காக்கா.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

எத்தனை ரம்மியம்
பித்தனாய் நம்மையும்
பிரள வைக்கும் ஏகாந்தம்

இப்படி யொரு
பச்சைப் பசேலென்ற
குளிர் கூரை
என்
வீட்டுக்கும் வாய்க்குமா?
சூரியச் சுடரதனை
வடிகட்டித் தருமா?

பேனோடும் வகிடுபோன்ற
மானோடும் சாலையில்
நானோட வேண்டும்
குப்பையில்லா சாலை யோடி
தொப்பைக் கரைக்க வேண்டும்


புகைப்படம் எடுத்தவர்
பெண்ணாக இருந்ந்தால்
இந்த
ரசனைக்கு மயங்கி
லவ் லெட்டெர் ஒன்று
தனி அஞ்சல் செய்யலாம்.

என் செய்வேன்
தலையும் தாடையும்
நரைத்துப் போனதொரு
ஆணாகிப் போனாரே!!!

ஆயினும், இந்தப் பதிவில் இரண்டு பிழைகள் உள்ளன:

ஒன்று: வயதானவர்களும் புழங்கும் இத்தளத்தில், மாடு என்ன செய்தது என்ற சஸ்பென்ஸ் வைத்து ப்ரெஷ்ஷர் ஏத்தறது.

ரெண்டு: இந்த டூருக்கு என்னையயும் கூட்டிட்டுப் போகாதது.

கலக்கல் Sஹமீது.

Yasir said...

வாவ்..என்ன சொல்வது...இது இனிமையான எழுத்துநடையா ? படிப்பவர்களை தன் பின்னாலே இழுத்து செல்லும் அன்னநடையா....”பளிச்”படங்களுடன் ஒரு பக்கவான ஆக்கம்.....ரொம்ப அருமை...

Yasir said...

புகைப்படம் எடுத்தவர்
//பெண்ணாக இருந்ந்தால்
இந்த
ரசனைக்கு மயங்கி
லவ் லெட்டெர் ஒன்று
தனி அஞ்சல் செய்யலா// காக்கா- ஈசல் போல உங்கள் “பேச்சிலர்” வாழ்க்கை கொஞ்ச நாள்தான்...அதுக்குல்ல இந்த நினைப்பா ?

Yasir said...

//எத்தனை ரம்மியம்
பித்தனாய் நம்மையும்
பிரள வைக்கும் ஏகாந்தம்// ரசித்தேன்....

Yasir said...

சாவன்னா காக்கா...முத்துப்பேட்டை லகூனுக்கு என்னை கூட்டி போவாத பாவம் உங்களை சும்மா விடாது

ஜாகிர் ஹீசைன் said...

இனிமையான எழுத்து நடை, அழகான புகைப்படம். வாழ்த்துக்கள்!

"இட்லியை புட்டு குடலுக்குள் வீசி விட்டு "

இட்லியை புட்டு வாயுக்குல்தான் போடுவார்கள் நீங்கள் எல்லோறும் எப்படி குடலுக்குள்?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்! பசுமை நிறைந்த புகைப்படங்கள் மனதிற்கு மகிழ்வைத் தருகிறது.

வல்ல அல்லாஹ்வின் படைப்பில் பசுமை நிறைந்தவைகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது.

எழுத்திலும் முதிர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.

படமும், எழுத்தும் அருமை! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!


தொடர் என்றால் மலையை புரட்டும் வேலை என்று தயங்கிக்கொண்டே இருந்தேன்.

தொடர் ஆசிரியர்கள் சகோதரர்கள் ஜாகிர், ஹமீது இருவரும் களத்திற்கு வந்து விட்டீர்கள். இன்னும் நிறைய பேர் தொடர் எழுதுபவர்கள் வர வேண்டும்.

அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Yasir said...

//அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது//// உங்கள் தொடர் மனித(மனங்)மலைகளை கரைக்ககூடியது...அல்லாஹ்வுக்காக நீங்கள் தொடரவேண்டும்..

அப்துல்மாலிக் said...

கூடவே நானும் சென்ற உணர்வு, நேரம் கிடைத்தால் நானும் போகனும், இன்ஷா அல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அலாவுதீன்.S. காக்கா சொன்னது…

அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.///

காக்கா, இதென்ன புதுப் பழக்கமா இருக்கு ! எங்கே உங்களின் தெஒடர் "சகோதரியே" ! :)

உங்களை விட்டால் தானே ! ஓய்வெடுக்க ! தேடிகிட்டுல இருக்கோம் !

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது

//சாகுல்.......... 2 வது போட்டோ ஆன்கிள் எப்படி வைத்தீர்கள். ஒரு கவிதை மாதிரி இருக்கு//

பக்கத்தில் ஒரு சிறிய புள் மலை அதன் மீது ஏறி நின்று எடுத்ததுதான் அந்த 2 வது போட்டோ

Shameed said...

Mohamed Rafeek சொன்னது…

//இராமராஜனை உடன் அழைத்துசெல்லுங்கள் ....காட்டு மாடாக இருந்தாலும் காது இருக்குமுல.... சென்பகமே பாடி மாட்டை சைடு வாங்கிடுவாரு//

மாட்டை சைடு வாங்கியவர் மக்களை சைடு வாங்க முடியவில்லை!

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…

//அடுத்து பயத்தால் மாடுகள் மீது பாசம் காட்டிய உங்களை அது என்னா செஞ்சுச்சு.
மறதியும் அவசியமான ஒன்னு மனிதனுக்கு,ஆக சீக்கிரம் சொல்ல வாங்க! //

கொஞ்சம் பொறுமையா இருங்க இதில் ஏதும் காட்டு இலாக்க அதிகாரிக்கு சதி இருக்கான்னு வெரிபை பண்ணிக்கிறேன்

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

தாஜுதீன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஹமீத் காக்கா மற்றும் எல்லோரும் நலமா?//


//இந்த இலவச சுற்றுலா பயணம் நேரலை மனநிம்மதி தரும்படியாக உள்ளது//.



வலைக்கும் முஸ்ஸலாம்


எல்லோரும் நலமே
மன நிம்மதி மனதுக்கும் உடம்புக்கும் ரொம்ப முக்கியம் அதை இது தந்தது என்றால் மகிழ்ச்சியோ

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//புகைப்படம் எடுத்தவர்
பெண்ணாக இருந்ந்தால்
இந்த
ரசனைக்கு மயங்கி
லவ் லெட்டெர் ஒன்று
தனி அஞ்சல் செய்யலாம்//

ஆக நான் பெண்ணாக
பிறந்திருத்தால்
மச்சான் என்று
அழைக்க நேர்ந்திருக்குமோ !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஒன்று: வயதானவர்களும் புழங்கும் இத்தளத்தில், மாடு என்ன செய்தது என்ற சஸ்பென்ஸ் வைத்து ப்ரெஷ்ஷர் ஏத்தறது.//

ப்ரெஷ்ஷரை கொடுத்து விட்டு நீங்கள் பிரஷ்ஸா இருப்பதுபோல் தெரிகின்றது!

//ரெண்டு: இந்த டூருக்கு என்னையயும் கூட்டிட்டுப் போகாதது.//

இன்ஷா அல்லாஹ் மறுமுறை ஊர் போகும் போது மறு டூர் போட்டு கட்டுரையும் கவிதையுமா அசத்திடிவோம்

Shameed said...

Yasir சொன்னது…

/சாவன்னா காக்கா...முத்துப்பேட்டை லகூனுக்கு என்னை கூட்டி போவாத பாவம் உங்களை சும்மா விடாது //

வருத்தப்படவேண்டாம் இத்தொடரில் உங்களை அங்கும் அழைத்து செல்வேன்


ஜாகிர் ஹீசைன் சொன்னது…

//இட்லியை புட்டு வாயுக்குல்தான் போடுவார்கள் நீங்கள் எல்லோறும் எப்படி குடலுக்குள்? //

வாங்க ஜாகிர் ஹுசைன் நீங்க எந்த ஜாகிர் என்று எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளக்கமா யாருன்னு சொல்லுங்களேன்

வாய்குல்லோ போடும் இட்லி நேரடியாக குடல்லுக்குதானே போகும் என்று நான் நேரடியாக குடலை கூறிவிட்டேன்!

அலாவுதீன்.S. சொன்னது…

//தொடர் ஆசிரியர்கள் சகோதரர்கள் ஜாகிர், ஹமீது இருவரும் களத்திற்கு வந்து விட்டீர்கள். இன்னும் நிறைய பேர் தொடர் எழுதுபவர்கள் வர வேண்டும்.

அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்கலாம் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது//

நாங்கள் எழுதுவதெல்லாம் இம்மையை பற்றி மட்டுமே நீங்கள் எழுதுவது இம்மைக்கும் மறுமைக்கும் உங்கள் எழுத்து துணை நிற்கும் ஆகையால் தொடர்ந்து எழுதுங்கள் ( நேரம் கிடைக்கும்போதெல்லாம் )


அப்துல்மாலிக் சொன்னது…

//கூடவே நானும் சென்ற உணர்வு, நேரம் கிடைத்தால் நானும் போகனும், இன்ஷா அல்லாஹ்//

வாங்க எல்லோருமா சேர்ந்து ஒரு டூர் போட்டுறலாம்

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் : யாசிர், அபுஇபுறாஹீம் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சிறது காலம் ஓய்வு என்றது
உடலிற்கும் மனதிற்கும்தான்!

வல்ல அல்லாஹ் நாடியவரை
எழுத்திற்கு ஓய்வு கிடையாது!
இன்ஷாஅல்லாஹ்!

Ahamed irshad said...

சூப்ப‌ர் ப‌ட‌ங்க‌ள் ர‌ம்மிய‌மான‌ தொகுப்பு..அருமை சாகுல் காக்கா..தொட‌ருங்க‌ள்..சுவ‌ராஸ்ய‌ம்

KALAM SHAICK ABDUL KADER said...

எது அழகு
எனக்குள்ளே குழப்பம்
காந்தமாய்க் கவரும்
“காமிராவின்” கவிதைகளை
கண்முன்னேக் காட்டிய
சாஹூல் ஹமீது உடையதா?

சாந்தமாய்ச் சந்த சுகம்
தந்த கவிவேந்தர்
சபீர் புனைந்த கவிதைகளா?

”நிலவில் குளிர்ச்சியா
நிலவில் ஆடியதால்
நீரோடைக் குளிர்ச்சியா”
என்ற என் கவி வரிகளை
நினைவு படுத்தும் இப்புதிர்

ZAKIR HUSSAIN said...

/”நிலவில் குளிர்ச்சியா
நிலவில் ஆடியதால்
நீரோடைக் குளிர்ச்சியா”///

To Brother Kalam


இதுவே ஒரு Nikon DSLRல் எடுத்த ஒரு போட்டோ மாதிரிதான் இருக்கிறது.

Meerashah Rafia said...

மிக அருமை.. தற்சயம் ஊரில் இருந்துக்கொண்டே டூர் போன அனுபவம்.

இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்..
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகலாம்னு ஊருக்கு வந்தா, இதுபோல என்னையும் ஒரு பதிவு போட தோனவைக்கிரீன்களே!!

மு.செ.மு.மீரஷாஹ் ரஃபியா

Shameed said...

meerashah சொன்னது…
//மிக அருமை.. தற்சயம் ஊரில் இருந்துக்கொண்டே டூர் போன அனுபவம்.

இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்..
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகலாம்னு ஊருக்கு வந்தா, இதுபோல என்னையும் ஒரு பதிவு போட தோனவைக்கிரீன்களே!!//


போடுங்க போடுங்க இத இததான் எல்லோரும் எதிர்பார்த்துள்ளோம்

KALAM SHAICK ABDUL KADER said...

”நிலவில் குளிர்ச்சியா
நிலவில் ஆடியதால்
நீரோடைக் குளிர்ச்சியா”///

அன்புத் தம்பி ஜாஹிர் ஹுஸைன்,

jazakkallah khairan


இதுபோன்ற வரிகள் என் வலைப்பூத் தோட்டம் : http://www.kalaamkathir.blogspot.com/ சென்று காண்க; தங்களின் கருத்துரை இடுக. இவ்வண்ணம் புதுக் கவிதை நதியிலும் நீராடினேன்; மரபுக்கடலிலும் நீந்தி இருக்கின்றேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.விஞ்ஞானி அவர்கள் காமிரா கவிஞராகவும் இருப்பதால் இப்படியும் எடுக்க முடியுமா என மலைப்பாக இல்லை. ஆனாலும் திகைப்பாக தித்திப்பாக இருக்கு.பயணம் போனதை சொல்லி காட்டும்விதம் நக்கிர கோபால் வீரப்பனிடம் தூது சென்றது போல இருக்கு. நிறைய சுவாரசியம் இருப்பதுபோல் அவசியம் படிக்க வைக்கும் வசியமும் எழுத்தில் இருப்பதால் அப்படியே நம்மை கட்டி(காட்டில்)போட்டது போல இருக்கு.பசுமையும் , மலையின் கருமை கலந்த நீலமும் எக்காலத்துக்கும் மலைத்து பார்க்கவைக்கும் மாயாஜால கேமிராவித்தை.இவர் படம் பிடிக்கிறார் என்றால் குரங்கு வேசமும் போடலாம்போல தோன்றுவதை சொல்லாமல் இருக்க முடியல.(அப்படி போடமலேயே அப்படித்தான் இருக்கு ந்னு யாரவது கமெண்ட் அடிக்காம இருந்தா சரி)

Haja Shareef said...

கட்டுரை ரொம்ப அருமை. விருவிருப்பான நடை. ஹமீது நிறைய பயண கட்டுரைகள் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன் / ஹாஜா சரிப், Singapore

Yasir said...

//அவசியம் படிக்க வைக்கும் வசியமும் // கிரவுன் எப்படி இப்படியெல்லாம் !!!!

ZAKIR HUSSAIN said...

//அவசியம் படிக்க வைக்கும் வசியமும் // கிரவுன் எப்படி இப்படியெல்லாம் !!!!

இதுவெல்லாம் கிரவுனுக்கு ஜுஜுபி....அவரிடம் பேசும்போதே இதுபோல் ஒரு 10 வார்த்தையாவது வந்து விழும்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//அவசியம் படிக்க வைக்கும் வசியமும் // கிரவுன் எப்படி இப்படியெல்லாம் !!!!

இதுவெல்லாம் கிரவுனுக்கு ஜுஜுபி....அவரிடம் பேசும்போதே இதுபோல் ஒரு 10 வார்த்தையாவது வந்து விழும்.
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் அன்பினால் திக்குமுக்காடி போனாலும்.தர்ம சங்கடத்தில் மாட்டி கொள்கிறேன். அல்லாஹுக்கே எல்லாப்புகழும். நான் மிக,மிகச்சாதரண வாயடி . என்னால் என் முன்னோடிகளை சிறிதும் வெல்ல முடியாதவன் நான். அவர்கள் யாவரும் சொல்லின் வேந்தர்கள்.என்னின் வேர்கள்(roots).அவர்கள் வேறு நான் வேறு அல்ல என்றாலும் அவர்களின் Route செல்லகூட முடியாத முடவன் நான்.

Shameed said...

crown சொன்னது…

''வாயடி''

வாயாடி என்றால் பெண்ணை குறிக்கும் என நினைக்கின்றேன்
'வாயாடன்" என்று சொல்லலாமா? கவிகாகா

MS said...

அல்லாஹ்வின் திருப்பெயாரால்...

கேமராவின் வெளிப்பாடு கண்ணுக்கு குளிர்ச்சி...

எழுதியவரின் எழுத்து திறன் கட்டுரைக்கு பலம்...

இடையில் வரும் சிறு எழுத்து விளையாட்டு கட்டுரையை முடிக்காமல் நகர முடியவில்லை...

எழுதுங்கள் பொய் சொல்லும் ஏடுகளை பின்தள்ள....

crown said...

Shameed சொன்னது…
crown சொன்னது…

''வாயடி''

வாயாடி என்றால் பெண்ணை குறிக்கும் என நினைக்கின்றேன்
'வாயாடன்" என்று சொல்லலாமா? கவிகாகா
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிகாக்காவிடம் கேட்டிருக்கீங்க. ரசிக(ன்)தம்பி கருத்து சொல்லலாமா? அந்த தகுதி எனக்குள் வந்துவிட்டதா? அறியாவிட்டாலும். ஒரு சிறு பதிவு. வாயாடி என்பது தொழில் பெயரல்ல காரணபெயர்( நண்பர்கள் சொல்வது நல்ல அறுவை "டா")ஆனால் வாய் ஆடி (ஆட்டி)பேசுவதால் இதில் பால் இனம் இல்லை. கூத்தாடும் ஆணும் , பெண்ணும் கூத்தாடியே! வேட்டையாடும் ஆணும் , பெண்ணும் வேடனே.வேடனுக்கு பெண்பால் இல்லை வேடி யென்று,மாடன் ஆண்பால் ஆனாலும் பெண்பால் இல்லை மாடி யென்று. இவைகள் சில தொழில் பெயர், சில காரண பெயர், சில அழைக்கும் விளித்தல் எனும் தொகுதி பெயர்.ஆனால் வாயாடன் என்னும் சொல் ஆணுக்கு உண்டு. எனக்கு மகிழ்சி என் கருத்தையும் படித்து இது சரியா , தவறா என கலந்துரையாடுவது. நன்றி சகோ. சாகுல்.

Shameed said...

crown சொன்னது
//பால் இனம் இல்லை. கூத்தாடும் ஆணும் , பெண்ணும் கூத்தாடியே! வேட்டையாடும் ஆணும் , பெண்ணும் வேடனே.வேடனுக்கு பெண்பால் இல்லை வேடி யென்று,மாடன் ஆண்பால் ஆனாலும் பெண்பால் இல்லை மாடி யென்று. இவைகள் சில தொழில் பெயர், சில காரண பெயர், சில அழைக்கும் விளித்தல் எனும் தொகுதி பெயர்.ஆனால் வாயாடன் என்னும் சொல் ஆணுக்கு உண்டு. எனக்கு மகிழ்சி என் கருத்தையும் படித்து//



ஆகா இத்தனை பால் கலா !அருமையான விளக்கம்

இங்கு சவுதி வந்து தெரிந்துகொண்டது சுகருக்கு ஒட்டகபால் நல்லது என்று

Shameed said...

MS சொன்னது…


அல்லாஹ்வின் திருப்பெயாரால்...

//கேமராவின் வெளிப்பாடு கண்ணுக்கு குளிர்ச்சி...

எழுதியவரின் எழுத்து திறன் கட்டுரைக்கு பலம்...

இடையில் வரும் சிறு எழுத்து விளையாட்டு கட்டுரையை முடிக்காமல் நகர முடியவில்லை...

எழுதுங்கள் பொய் சொல்லும் ஏடுகளை பின்தள்ள.... //


வாங்க M.S. முதல் முறைய வந்து அழகா கருத்து சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு