Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாங்க மலையேறலாம் - தொடர் - 2 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2011 | , , ,

மாடு முறைத்தது, காதுகளை விடைத்தது, கெத்துடன் பார்த்தது, மூக்கின்  வழியாக புஷ் புஷ் என்று மூசு விட்டது,  ஜல்லிக்கட்டுப் பிடிக்குத் தயாராவதுபோல் வலது காலை பூமியில் இரண்டு மூன்று முறைக் கீறியது, அப்படியே எங்களை நோக்கிப் பத்து கால் பாய்ச்சலில் ஓடி வந்தது. நான் தலையை சிலிர்த்துக் கொண்டேன்.  மாடு அங்கேயேதான் நின்றது.  ஆனால், “ஷென்பகமே ஷென்பகமே” என்று யாரோ பாடினால் எப்படி கவனிக்குமோ அப்படி அதன் கவணத்தை ஏதோ கவர்ந்திருக்க வேண்டும்.  இதழ்களில் (?) புன்னகைத் தவழ எங்களைப் பார்த்தது. பிறகு, மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை ரோட்டை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கி நின்று எங்களை மீண்டும் பார்த்துக் கொண்டே நின்றது அப்போது நான் கேமராவை எடுத்து ஒரு கிளிக் அடித்தேன் (விடுவோமா?) இருட்டும் நேரமாக இருந்ததால் மாட்டின் கண்கள் மட்டும் பளிச்சென கேமராவில் சிக்கியது அப்போது வண்டியில் இருந்த நண்பர்.


"ஏண்டா உனக்கு ஃபோட்டோ எடுக்க நேரங்காலமே தெரியாதா? உசுரை கைல பிடிச்சிக்கிட்டு இருக்கின்றோம் நீ கேமராவை கைல பிடிச்சிக்கிறே" என்று சொல்லி வாய் மூடுவதற்குள் வண்டி வேகம் எடுத்து கடல் மட்டத்தை நோக்கி சீறி பாய்ந்தது. 


ஒரு வழியாக பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம் அங்கு ஒரு ரூம் (சூட்) எடுத்து (யோசிக்கவல்ல!!!) இரவு உணவை முடித்து விட்டு பகலில் அடித்த அரட்டைக்கெல்லாம் சேர்த்து இரவில் அடித்தோம் குறட்டையாக ! 


நல்ல அசந்த தூக்கம் குறட்டைகளின் கொட்டம் சற்று தணிந்திருந்தன அந்த நேரத்தில் யாரோ தலைமாட்டில் நிற்பதுபோல் ஒரு உள்ளுணர்வு மனதுக்குள் தோன்றியது தூக்க கலக்கத்தில் லேசா முழித்துப்பார்த்தேன் தலைமாட்டில் ஒரு உருவம் நின்றுகொண்டு இருந்தது.

"யாரது"

என்று கேட்டும் பதில் இல்லை பயம் ஒருபக்கம் இருட்டு ஒருபக்கம் பயம் காட்டியது திரும்பவும்..

"யாரது"

என்று மீண்டும் அலட்டினேன் அப்போதும் பதில் இல்லை ஆளும் நகரவில்லை ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து லைட்டை போட்டு பார்த்தால் நண்பர் சுபுஹு தொழுது கொண்டிருந்தார்.


பிறகு உறக்கத்திலிருந்த நாங்களும் எழுந்து தொழுது விட்டு பொள்ளாச்சியை விட்டு புறப்பட்டோம் இந்த பொள்ளாச்சி மண்ணுக்கும் அதிரைப்பட்டினத்து மண்ணுக்கும் ஒரு வியாபார தொடர்பு உள்ளது என்ன வென்றால் நமதூரைப்போல் இங்கும் எங்கு பார்த்தாலும் உயர்ந்த தென்னை மரங்கள் அதிகம் இங்கு தேங்காய் உற்பத்தி குறைந்தால் நமதூரில் தேங்காய் விலை கூடும் இங்கு தேங்காய் உற்பத்தி கூடினால் நமதூரில் தேங்காய் விலை வீழ்ச்சி அடையும். இப்படி ஒரு ரகசிய லிங்க் நமதூருக்கும் பொள்ளாச்சிக்கும் நீண்ட நாட்களாக உண்டு.

நண்பரின் விருப்பத்திற்கு இணங்க, போகும் வழியில் கிராமத்து இட்லி கடையை கண்டதும் தானாக கார் அதன் அருகே ஒதுங்கியது,  இட்லி சூடாக வாழை இலையில் பரிமாறப்பட்டது தேங்காய்ச் சட்டினியும் மிளாகாய்s சட்டினியும் சாம்பாரும் கூட சேர்ந்து இட்லியை கணக்கு வழக்கு இல்லாமல் அள்ளிக்கொண்டு போனது நண்பரிடம் டேபிளில் கோடு போட்டு வைச்சுக்கச் சொன்னா அவரும் சேர்ந்து கட்டிக் கொண்டிருந்தார் அதனால் எத்தனை இட்லி வைத்தோம் என்று கடைக்கார பெண்மணியும் குழம்பிப் போய்விட்டார் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று சாப்பிட்ட எங்களுக்கும் தெரியவில்லை கடைசியில் ஒருவாறாக கணக்குப் போட்டு அதற்கு மேலாகவும் கொஞ்சம்  பணத்தைக் கொடுத்துவிட்டு நாக்கில் உராய்ப்பின் உமிழ் நீர் அடங்குவதற்குள் ஆழியார் அணையை வந்தடைந்தோம்.

நுழைவாயிலில் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு அணைக்குக் கீழ் உள்ள பூங்காவைக் கடந்துச் செல்லுகையில் பூங்கா வழியாக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் சலசல வென்றும் மீன்குஞ்சுகள் பலபல வென்றும் ஓடியது கவிக் காக்காவின் இரட்டை கிளவியை நினைவு படுத்தியது அங்கு வந்திருந்த பெரும்பாலோனோர் கிராமத்து ஜனங்களாகவே இருந்தனர் இவர்கள்தான் நீரையும் மண்ணையும் நேசிப்பவர்களாக இருப்பார்களோ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு அணைக்கட்டின் மேலே ஏறினோம்


அணையின் மேல் நின்று பார்த்தால் சுற்றிலும் தென்னை மரங்கள் குளிர் காற்றின் தாலாட்டில் தலை அசைத்துகொண்டு இருந்தன அணையை ஒட்டிய  மலைகளும் மலைமீது மோதும் மேகங்களும் மோதிய மேகங்கள் சிதறி அங்கும் இங்கும் காற்றில் மிதக்கும் அந்த காட்சியைப் பார்க்கும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தியது பரவசத்தில் ஆழ்த்தியக் காட்சிகளைச்  சுட்டுக்கொண்டு (ஃபோட்டோ) அணையை விட்டு வெளியே வந்தாலும் அணையின் காட்சிகள் மனதில் அணையாது அப்படியே இருந்தன.


அணையை ஒட்டிய மலைகளை ஏறிக் கடந்தால் வால்பாறை வரும் இந்த வால் பாறை தமிழ் நாட்டின் சிரபுஞ்சி என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்துகொண்டே இருக்கும் அன்று வெள்ளிகிழமை என்பதால் ஜூம்மா தொழுகையை வால் பாறையில் தொழலாம் என்ற நோக்கில் கார் வால்பாறையை நோக்கி மலை ஏறத் தொடங்கியது இந்த மலையும் இரண்டாவது கியர் மூன்றாவது கியருக்குத்தான் அதிக வேலை வைத்தது மலை ஏறிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை அப்படி ஒரு பேய் மழை மலை மீது பெய்துகொண்டு இருந்தது இந்த மழையில் மலை மீது வண்டி ஓட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவு செய்து கொஞ்சம் விசாலமான ரோட்டில் காரை நிறுத்தி கார் உள்ளேயே சூழ்நிலை  கைதியாக இருந்தோம் மழைவிடுவதாகத் தெரியவில்லை இப்படி மாட்டிக் கொண்டேமே என்ற பதற்றத்திலிருக்கும் போது யாருமே எதிர்பாராதவிதமாக அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.

மலையேற்றம் தொடரும்...

- Sஹமீது


18 Responses So Far:

Yasir said...

நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சீ....திடீரென ஒரு ஷாக் கொடுத்தும் தொடரும்ண்டு போட்டுட்டீங்களே......இன்னொவோல நீங்க போனிங்கன அட்டீலீஸ் நாங்க ஒரு டொயட்டா கேம்ரேயிலயாவது தொடர்ந்து வருவோம்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மலையில் கார் இரண்டாவது கியரில் போனாலும்.ஹமீது காக்காவின் தொடர் கதை டாப் கியரில் சீறி பாய்கின்றன கண் கொள்ள காட்சிகளுடன் வாழ்த்துக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தங்களின் தமிழ்நடையே தனிநடைதான். பசுமைப்பயணம் தொடரட்டும்.

sabeer.abushahruk said...

கலக்கலாப் போய்ட்டிருக்கு ஹமீது.

ஹை! நூராமதெல்லாம் நடிச்சிருக்காப்ல?

ZAKIR HUSSAIN said...

ராடான் பிக்ஸர்சிலெ கூப்பிடறாங்க உங்களை....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு கையை பாலத்தின் பக்கச் சுவற்றில் வைத்திருக்கிறவங்கதான் டைரக்டரா ?

மலையேற்றம் !வரிக்கு சரியான எற்றம் ! குளு குளுன்னு இருக்கே !

என்னதான் நிகழ்ந்தது மழை பெய்த பொழுது ? பின்னூடத்திலே சொல்லிடுங்களேன் !!! :)

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//என்னதான் நிகழ்ந்தது மழை பெய்த பொழுது ? பின்னூடத்திலே சொல்லிடுங்களேன் !!! :) //

குசு குசுன்னு குசும்பா பார்ட்3லே சொல்லிருவோம்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
கலக்கலாப் போய்ட்டிருக்கு ஹமீது.

//ஹை! நூராமதெல்லாம் நடிச்சிருக்காப்ல?//


அவர் தானுங்கோ ஹாரன் பார்டி

Shameed said...

Yasir சொன்னது…
//நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சீ....திடீரென ஒரு ஷாக் கொடுத்தும் தொடரும்ண்டு போட்டுட்டீங்களே......இன்னொவோல நீங்க போனிங்கன அட்டீலீஸ் நாங்க ஒரு டொயட்டா கேம்ரேயிலயாவது தொடர்ந்து வருவோம்...//

அம்மாடி கேம்மிரியா பெட்ரோல் போட்டு மாளாது வாப்பா!!

அப்போ இன்னோவா டிசெல் போட்டா மாளுமான்னு கேட்க கூடாது

sabeer.abushahruk said...

// பேய் மழை//
கிரவுன் / கவியன்பன் / அபு இபுறாகீம்,


பேய் மழை
பெய்ததாம்

பொய் மழைகூட
பொழிவதில்லை இங்கு

பேய் மழை
கருப்பா வெளுப்பா

மழை பார்த்து
மலைத்ததோ
மலை?

Yasir said...

//// பேய் மழை//
கிரவுன் / கவியன்பன் / அபு இபுறாகீம்// என்ன ஒராஞ்சியம் கவிக்காக்கா...அப்ப இது எங்களுக்கெல்லாம் இல்லையா ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///பேய் மழை
பெய்ததாம்

பொய் மழைகூட
பொழிவதில்லை இங்கு

பேய் மழை
கருப்பா வெளுப்பா

மழை பார்த்து
மலைத்ததோ
மலை?///

இங்கே எல்லாமே
payமழை தானே - கவிக் காக்கா !

இங்கே "தாய்" தவிர்த்து எல்லாமே கிடைக்குமே வாடகைக்கு !

பேய் மழை காலூன்றாமல் ஓடிடுமாமே ?

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் எழுத்து நடை அழகு எங்களையெல்லாம் ஓடிவர செய்கிறது.

அப்துல்மாலிக் said...

படம் பார்க்க கண்களுக்கே குளிர்ச்சியா இருக்கே, அப்போ நேரில் போனால் சொல்லவே மனசு குதூகளிக்குது, தாங்களின் அனுபவத்தோடு நானும் பயணித்த திருப்தி...

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//ராடான் பிக்ஸர்சிலெ கூப்பிடறாங்க உங்களை//

நாம சாதரண கார்டன்லே பிக்ஸர் எடுக்குற ஆளு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இத்தொடரில் பேய், காட்டுமாடுகள் பார்த்தாச்சு.
அடுத்த தொடரில் யானை, குரங்கு, பாம்புகள் அணிவகுக்குமோ!
எப்போ அந்த ஊர்வலம்?

Mohamed Rafeek Taj said...

//இப்படி மாட்டிக் கொண்டேமே என்ற பதற்றத்திலிருக்கும் போது யாருமே எதிர்பாராதவிதமாக அப்படி ஒரு நிகழ்வு நடந்தது.//

விடாது கருப்பு அதுபோல் எதாவது பார்துவிட்டிர்களா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

புகைபடங்களையும் எழுத்து நடையையும் ரசித்துக்கொண்டே மலை ஏறுனதே தெரியலை காக்கா..

எழுத்துநடையால் சகோதரர் MSM நெய்னா முஹம்மது இலவசமா ஊருக்கு அழைத்துச்செல்லுவார், நீங்களும் உங்கள் எழுத்து நடையால் இலவசமா சூப்பர் சுற்றுலாவுக்கு எங்கள் எல்லோரையும் இரண்டு முறை அழைத்துச் சென்றுள்ளீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு