அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

 அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

'நபி(ஸல்) அவர்கள் சபையில் இருந்து எழுந்திட விரும்பினால் இறுதியாக ''சுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஹ்ஃபிருக்க வஅதூபு இலய்க'' என்று கூறுவார்கள். அப்போது ஒருவர் ''இறைத்தூதர் அவர்களே! முடிந்து விட்ட ஒரு காரியத்தில் இதுவரை நீங்கள் கூறாத ஒன்றைக் கூறுகிறீர்களே!  என்று கேட்டார். சபையில் ஏற்பட்ட (தவறான)வைகளுக்கு இது பரிகாரமாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

துஆவின் பொருள்:

இறைவனே! உன்னை தூய்மையாக்குகிறேன். உனக்கே புகழ் அனைத்தும், உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என சாட்சி கூறுகிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். (அறிவிப்பவர்: அபூ பர்ஸா (ரலி) அவர்கள் (அபூதாவூது)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 833)

'அல்லாஹ்வை நினைவு கூறாதவர்களாக ஒரு கூட்டம், சபையை விட்டும் எழுந்தால், அவர்கள் செத்தக் கழுதையின் அருகில் இருந்து கைசேதத்துடன் எழுந்தவர்கள் போலல்லாமல் வேறில்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 835)

''நபித்துவத்தில் சுபச் செய்திக் கூறுபவற்றைத் தவிர வேறு மீதம் இல்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சுபச் செய்தி கூறுபவை என்றால் என்ன?'' என்று நபித் தோழர்கள் கேட்டார்கள். ''நல்ல கனவு'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 838)

''உங்களில் ஒருவர் தான் விரும்பும் கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும். இதற்காக அவர் அல்லாஹ்வைப் புகழட்டும்! அதை (மற்றவர்களிடம்) கூறட்டும்! (மற்றொரு அறிவிப்பில், தான் விரும்புவரிடம் மட்டுமே தவிர வேறு எவரிடமும் கூறக்கூடாது என்றுள்ளது) ''தான் வெறுக்கக் கூடிய நல்லது அல்லாத (கனவைக்) கண்டால், அது ஷைத்தானிடமிருந்துள்ளதாகும். எனவே அதன் தீமையை விட்டும் பாதுகாப்புத்தேடட்டும். எவரிடமும் அதைக் கூற வேண்டாம். நிச்சயமாக அது அவருக்கு இடைஞ்சல் தந்து விடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 841)

'நல்ல கனவு (மற்றொரு அறிவிப்பில், அழகிய கனவு) அல்லாஹ்விடமிருந்து ஏற்படுவதாகும். தீய கனவுகள் ஷைத்தானிடமிருந்து வந்தவவையாகும். தான் வெறுக்கும் ஒன்றை கனவில் கண்டால், தன் இடதுபுறம் மூன்றுமுறை துப்பட்டும்! ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடட்டும்! அக்கனவு அவருக்கு இடைஞ்சலைத் தராது''   என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 842)

'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்ததது எது?'' என்று கேட்டார். (பசித்தவனுக்கு) நீ உணவளித்தல், அறிந்தவர், அறியாதவர் என, அனைவருக்கும் நீ ஸலாம் கூறுதல்' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 845)

''அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைத்தபோது, (அவரிடம்) ''நீர் சென்று அங்கே உட்கார்ந்திருக்கின்ற வானவர்களிடம் ஸலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும் வாழ்த்துக்களை நீர் கேட்பீராக! நிச்சயமாக அது, உமக்குரிய வாழ்த்துக்களாகும். உம் வாரிசுகளுக்குரிய வாழத்துக்களாகும்'' என்று அல்லாஹ் கூறினான். ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு அருள் கிடைக்கட்டுமாக)'' என ஆதம் (அலை) (வானவர்களிடம்) கூறினார். உடனே அவர்கள், 'அஸ்ஸலாமு அலைக்க, வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார்கள். (பதிலில்) அவர்கள் ''வரஹ்மதுல்லாஹ்''  என்பதை அதிகப்படுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 846)

''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை கட்டளையிட்டார்கள். அவை, 1) நோயாளியை நலம் விசாரித்தல் 2) ஜனாஸாவைப் பின் தொடர்தல் 3) தும்மியவருக்கு பதில் கூறுதல் 4) பலவீனருக்கு உதவி செய்தல் 5) பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல் 6) ஸலாம் கூறுதலை பரப்புதல் 7) சத்தியம் செய்தவருக்கு நிறைவேற்ற உதவுதல். என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஉமாரா (என்ற) பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (புகாரி (ரியாளுஸ்ஸாலிஹீன்: 847)

'நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக  ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ, அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 848)

'மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். 'ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூயூசுஃப் என்ற அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)

''வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கும், நடப்பவர், உட்கார்ந்திருப்பவருக்கும், சிறு கூட்டம், பெரும் கூட்டத்தினருக்கும் ஸலாம் கூற வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 857)

''இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)'' என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள் .  (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 858)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி! 

அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?

திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?  

அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள். 

மலைகள் உதிர்க்கப்பட்ட  கம்பளி போல் ஆகும்.

யாருடைய  (நன்மை) எடைகள் கனமாக  இருக்கின்றனவோ

அவர் திருப்தியான வாழ்க்கையில்  இருப்பார். 

யாருடைய (நன்மை) எடைகள் இலேசாக உள்ளனவோ

அவர் தங்குமிடம் ஹாவியாவாகும். 

ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? 

அதுவே சுட்டெரிக்கும் நெருப்பாகும். 

(அல்குர்ஆன் – அல் காரிஆ - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி -101: 1- 11)

''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

 அலாவுதீன் S.

13 கருத்துகள்

Unknown சொன்னது…

அரு மருந்து தொடரட்டும்.

அபு ஆசிப்.

adiraimansoor சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

நாம் கானும் சில நல்ல கனவுகள் இறைவன் புறத்திலிருந்து வந்தாலும் சில கனவுகள் வரும் நாம் இரவிலோ அல்லது படுப்பதற்கு பல மணி நேரம் முன்பாகவோ நினைத்தவைகலும் நம் கணவில் கலப்பதுண்டு அதன் நிலைபாடு ஒன்றுமில்லாமல்தான் இருக்கும் இருந்தாலும் வேறு ஏதாவது அதைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்

இன்னும் சில சமையம் பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை நம் கனவில் கலந்து தச்சன் மரம் அறுப்பதுபோன்ற கனவுகலெல்லாம் எனக்கு வந்ததுண்டு இதன் நிலபாடுகளும் ஒன்றும் இருக்காது இருந்தாலும் கேட்டுவைக்கின்றேன்

இதில் இருதியில் உள்ள அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வார்த்தைகளை படிக்கும்போதே குடல் நடுங்குகின்றது

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

'நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கட்டளையாகிய
நோயாளியை நலம் விசாரித்தல்
ஜனாஸாவைப் பின் தொடர்தல்
தும்மியவருக்கு பதில் கூறுதல்
பலவீனருக்கு உதவி செய்தல்
பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல்
ஸலாம் கூறுதலை பரப்புதல்
சத்தியம் செய்தவருக்கு நிறைவேற்ற உதவுதல்.
போன்ற விசயங்களையும் பின்பற்றி நடப்போமாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஒவ்வொரு வாரமும் பதிக்கப்படும் பாடத்தில் குறிப்பெடுப்பதில்... MHJன் ஸ்டைல் ரொம்பவே எனக்கு பிடித்திருக்கு !

அதுதான் மிகச் சரியானதும் !

கற்றதை கடமையுடன் காப்பதும் போற்றுவதும் அதன் படி நடப்பதும் நற்பண்புகளே !

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து... ஞாபகமூட்டல் மட்டுமல்ல, அன்றே செய் நன்றே செய் என்ற உந்துதலைச் சொடுக்கும் தொடர்.

adiraimansoor சொன்னது…

இந்த கருத்து ஆசிரியரால் நீக்கப்பட்டது அந்த வார்ததையை அதிரை நிருபர் எடிடர் மாற்றியமைப்பது நல்லது. காரணம் நாங்கள் ஏதோ தவறாக எழுதி அதை நீக்கம் செய்ததுபோல் உள்ளது

அப்படி யாரவது எழுதினால் அதற்கு மட்டும் இந்த வார்த்தை பொறுந்தும்

அதிரைஎக்ஸ்பிரசில் தமிழ் எடிடர் இல்லாததினால் அங்கு இடவேண்டிய பின்னூட்டத்திற்கு அதிரை அதிர நிருபரில் தமிழ் டைப் செய்து அதிரை எக்ஸ்பிரசில் போய் பேஸ்ட் பன்னுவதை மறந்துவிட்டு இந்த தளத்திலேயே வெளியிடு என்பதை தவறுதலாக அழுத்திவிடுகின்றேன்.
அதை நீக்கம் செய்தாலும்

இது ஆசிரியரால் நீக்கப்பட்டது என்ற வார்த்தைதான் வருகின்றது அதி மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்

sabeer.abushahruk சொன்னது…

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.

Ebrahim Ansari சொன்னது…

முஸ்லிம்களுக்கு வெள்ளிக் கிழமை சிறப்பானதாக பின்பற்றப் படுகிறது. வேறு தினங்களில் கூட பஜ்ர் தொழுகையை தவறவிடுபவர்கள் கூட இன்றைய பஜ்ரை விடமாட்டார்கள். வீட்டில் உணவும் ஸ்பெஷலாக இருக்கும். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போய்வருவார்கள். கடைகள் விடுமுறை. பள்ளி கல்லூரி விடுமுறை.

ஜூம்- ஆ உடைய தினம். பலரும் தூய்மையான ஆடையணிந்து வாசனை பூசி இப்படி பல சிறப்புகளுக்குரிய தினம்.

இத்தகைய சிறப்புகளுக்கு இன்னும் சிறப்பு சேர்ப்பது இந்தத் தொடர்.

ஜசாக் அல்லாஹ் சகோதரர் அலாவுதீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

ஜஸாக்கல்லாஹ் ஹைரா காக்கா

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Yasir சொன்னது…

ஜஸாக்கல்லாஹ் ஹைரா காக்கா

அலாவுதீன்.S. சொன்னது…

சகோதரர்கள் : தாஜீதீன், யாசிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)