நீ அதிசயம் மட்டுமல்ல ...
நீ ஆச்சரியமான ஆசான் ....
உன் பாகுபாடில்லதே அணுகுமுறை யால்
நீ போகும் ,நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....
நீ பார்க்காதே பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....
சுத்த தங்கமாக நீ வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..
நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...
உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...
உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம் ......எப்படி சொல்வேன் ?...
நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!
ஆனால்..........?
நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....
உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....
உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......
சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....
--அப்துல் ரஹ்மான்
-----harmys-----
25 Responses So Far:
(கவிதைத்)தாகம் தீர வாயத்துல தண்ணிர் வார்த்தது.... அருமையான கவிதை, இன்னும் கவிதையால பின்னூட்டமிட ஃக்யூல இருக்க்காங்க ! :) நடுத் தெருப்பக்கம் இந்த தண்ணீர் ஓடினால்ல் இப்போதான் பள்ளம் தோண்டி வச்சுருக்காங்கன்னு ஒரு வலியுடன் கவிதை வந்தது அந்தப் பள்ளமும் நிரம்பும்தானே.... :)
கல்அணையில் நேற்று நீர் திறந்த செய்தி கேட்டு இன்று அதிரை நிருபரை திறந்தால் இங்கும் நீர் வந்து பாய்கிறது .
கல் அணையிலிருந்து தண்ணியொல்லாம் வருதா? ஆச்சரியமா இருக்கே?
கண்டிப்பா எங்க தெருவுக்கும் வரும் அங்கேதான் கால்வாய் தோண்டியிருக்கோமே !!!!
:)))
அமீரகத்துலே உள்ள மஸாஃபி என்ற ஏரியாவுலே இன்னிக்கு மழை பெய்ததாமே...?
//மஸாஃபி என்ற ஏரியாவுலே இன்னிக்கு மழை பெய்ததாமே...?//
இத பாட்டில்லே நிரப்பி வித்துடுவாங்க(ளே) !
அபுஇபுறாஹிம் says
கண்டிப்பா எங்க தெருவுக்கும் வரும் அங்கேதான் கால்வாய் தோண்டியிருக்கோமே !!!!
கல் அணையில் இருந்து கால் வாய்கு தண்ணீர் வராது முழு வாய் இருந்தால் தான் தண்ணீர் வரும்
1/4வாய்(க்குத்)தான் தண்ணீர் வருமான்னு கேட்டு வச்சேன், இந்த தண்ணீரின் வருகையால் காவி(மண்) கரைஞ்சு தார் பூசிட்டாங்கன்னா நல்லா இருக்கும்.
இது போன்ற 'உரைவீச்சில்' (கவிதையன்று) எனக்கு உடன்பாடில்லை. என்றாலும், பலரால் இரசித்துப் படிக்கும் நிலையில் உள்ளதால், பிழையின்றிப் புனைந்திருந்தால், படிக்க நெருடலில்லாமல் இருக்குமே.
மாமா தங்களுக்கு கவிதை தண்ணீ(ர்) (பிழை)பட்டபாடு, இங்கே காவி மண்ணும், புகையும் கலந்துச்சா அதான் அப்துல் ரஹ்மான் தண்ணீரை ஊத்தினது ரசிக்கும்படி இருந்தது நிஜமே !
//இது போன்ற 'உரைவீச்சில்' (கவிதையன்று) எனக்கு உடன்பாடில்லை. என்றாலும்.....[By அதிரை அஹ்மது says ]
ஏன் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதில்லை?
இது போன்ற 'உரைவீச்சில்' (கவிதையன்று) எனக்கு உடன்பாடில்லை. என்றாலும்.--------------------------
அஸ்ஸலாமு அலைகும்.சாச்சா எனக்கும் தோன்றியது இதே கேள்விதான்,மரபுக்கவிதைதான் கவிதையா? நானும் ஒருகாலத்தில் அவ்வாறு நினைத்ததுண்டு அதற்காக உழைத்ததுண்டு.பின் அதன் மேல் தாக்கம் குறைந்து ஆக்கம் தவிர்த்தேன்(கிட்டதட்ட மறந்து விட்டேன்)இப்பொழுது புதுக்கவிதை என்று கிறுக்கிகொண்டிருக்கிறேன்)அனாலும் தமிலிங்கிலீஸ் தவிர்து எழுதுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். என்னா அப்துல் ரஹ்மான், எப்போவுலேர்ந்து கவிஞனா ஆகுனியெ? சொல்லவே இல்லெ? ஆஹட்டும்..ஆஹட்டும்...
நம் சிறு பிராயத்தில் மழைக்காலம் வந்தாலே ஒரு இனம் புரியாத கொண்டாட்டம் குடி கொள்ளும் எல்லோரின் உள்ளத்தில். ஓட்டு வீட்டில் மழை நீர் சொட்டினாலும், மின்சாரம் இல்லாமல் இருண்டு போயிருந்தாலும் உள்ளத்தில் நாமெல்லாம் அன்று வெள்ளை மாளிகையில் அல்லவா வீற்றிருந்தோம்....
அன்றோ காரணம் புரியவில்லை. நம் காரியங்கள் நடந்தேறின. இன்றோ காரணம் புரிகின்றது. ஆனால் காரியங்கள் எளிதில் நடப்பதில்லை.
மழைக்காலங்களில் தெருவில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை மண் வெட்டி கொண்டு தடுத்து குளங்களுக்கு பாய்ச்சி அது நிரம்பி வருவது கண்டு குதூகலம் கண்டோம். அதில் கும்மாளம் அடித்தோம். இன்றோ நாதியற்று தீண்டத்தகாததாய் ஆகிப்போனது நாமெல்லாம் ஒட்டி உறவாடிய அக்குளங்களெல்லாம்.
தெருவில் ஓடும் நீரில் மீன்களும் பிடித்தோம் அதை வைத்து என்ன செய்வதென்று அறியாதவர்களாய்...
ஒரு கரையிலிருந்து நீந்தி மறு கரை சேர்ந்தால் பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்துக்கே சுலபமாய் சென்றடைந்தது போல் பூரிப்படைந்தோம். ஆனந்தம் கண்டோம். வேட்டியில் கட்டிய முட்டை அவிழ்ந்தால் ஆபத்தை அடைந்தோம்.
குளத்தில் மூழ்கி தரையிலிருந்து மண் எடுத்து வந்தால் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்தது போல் பலரிடம் கூறி சந்தோசமடைந்தோம்.
நீர் கலிஃபோர்னியாவில் இருந்தாலும் "கல்கோனா" தின்ற நினைவுகளை எளிதில் மறக்க முடியுமா என்ன?
குளத்தில் நாம் போட்ட கூச்சல், அட்டகாசத்தை அடக்க நம் பெரியவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வில்லை கூண்டில் வைத்த டவல், வேட்டியை எடுத்து குளத்தில் வீசுவர் கருணையின்றி. துணி ஈரத்துடன் வீடு சென்றால் அங்கு உம்மாவின் கவனிப்பே தனி தான். அதை விரும்பாதவர்களாய் குளக்கரையில் அது காயும் வரை காற்று வாங்கி சென்றோம் காசு செலவில்லாமல்.
குளத்தில் மூழ்கி மண் எடுத்து அதை எவன் தலையிலோ அள்ளி வீசி பிறகு எங்கோ மூழ்கி எழும்பி நல்லவன் போல் கரை சேர்ந்து பாவனை செய்ததை எந்த பயலும் மறக்கமாட்டான்...
குளத்தில் வீட்டின் கழிவு நீருடன், தூய மழை நீரும் கலந்து வந்து பாய்ந்தாலும் எம்மைப்பொறுத்தவரை அது ஆனந்தக்கடல் நீர் தான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் அன்று. கண் சிவக்க குளித்து பின் முதுகு சிவக்க வாங்கிய அடிகள் எத்தனை, எத்தனை பேர். (யார், யார் அடி வாங்குனியலுவொலோ கையைத்தூக்குங்கள்)
அருவிகளில் நீர் வரத்து நின்று போகலாம். மழையின்றி குளங்கள் வற்றிப்போகலாம். ஆனால் என்றும் நம் உள்ள அருவியில் ஒரு போதும் நீர் வற்றுவதும் இல்லை. மழைச்சாரல் நின்று போவதும் இல்லை. அது ஒரு வற்றாத ஜீவ நதியாய் என்றும் ஒவ்வொருவரின் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம் பழைய/பால்ய கால நினைவுகளை நினைக்கயிலே.
வஸ்ஸலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
//பலரால் இரசித்துப் படிக்கும் நிலையில் உள்ளதால், பிழையின்றிப் புனைந்திருந்தால், படிக்க நெருடலில்லாமல் இருக்குமே.//
நன்றி.. உண்மை ..
//நீர் கலிஃபோர்னியாவில் இருந்தாலும் "கல்கோனா" தின்ற நினைவுகளை எளிதில் மறக்க முடியுமா என்ன?//
நிச்சயமாக .....நீயாவது வருடம் ஒருமுறையேனும் ஊர் செல்கிறாய் .....எங்கள் நிலைமை ?...
சிறு வயதில் நானும் தஸ்தகீரும் நிறைய கவிதைகளை பற்றி விவாதிப்போம் ..தஸ்தகிர் செர்மன்வாடி நினைவில் உள்ளதா?
தண்ணீரை ஊத்தினது ரசிக்கும்படி இருந்தது நிஜமே !
thanks abuibrahim
அருமையான படங்களுடன் மிகவும் அருமையான கவிதை
உங்களுக்கெல்லாம் ஒரு பழ/கிழ மொழி சொல்லட்டா....
ஓடோடும் சங்கிலி, உருண்டோடும் சங்கிலி, பள்ளத்தைக்கண்டால் பாய்ந்தோடும் சங்கிலி அது என்னா? தெரியலெயா...? அதாங்கெ தண்ணீ.....
இறைவன் இலவசமாய் இப்பூலோகத்திற்கு தண்ணீரைக்கொடுத்தான். ஆனால் மனிதனோ அதை காசுக்காக கண்ணீராக்கினான்.
தண்ணீரைப்பற்றி பேசினால் அண்டை மாநிலங்களெல்லாம் சண்டை மாநிலங்களாக மாறிப்போகுது.
அது வீணாக கடலிலேக்கலந்தாலும் பரவாயில்லை. ஒரு போதும் அண்டை மாநில மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற (பொறம்)போக்கே நிலவுகிறது.
ஆயிரம் அணைகள் கோடிகள் பல கொட்டி கட்டப்பட்டாலும் கல் மனம் கொண்ட கயவர்களின் உள் மனதில் கட்டப்பட்ட அணைகள் தகர்த்தெறியப்படாதவரை மக்களுக்கோ, அரசுக்கோ எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை.
யாராவது சொல்லுங்க ! நமதூரில் (குடி/குளி)தாண்ணீர் வீட்டுப் பயண்பாட்டிற்கான தட்டுப்பாடு(கள்) உண்டா ? குளங்கள் வரண்டது ஒருபக்கமிருக்கட்டும்.
"ஏன் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதில்லை?" - சகோ. ஜாகிர் ஹுசைன்.
கவிதைமேல் உள்ள வெறுப்பால் வந்த கேள்வி இதுவென்று நினைக்கிறேன். அப்படியில்லை சகோதரரே! நான் மரபுக் கவிஞன் என்பதைத் தமிழ் முஸ்லிம் எழுத்துலகம் நன்கறியும். அவ்வாறிருக்க, நான் ஒரு புதுக்கவிதையைப் பாராட்டுவதை என்னையொத்த மரபுக் கவிஞர்கள் விரும்பாமலும் இருக்கக் கூடும். ஆகவேதான், அந்தக் குறிப்பு. இக்கவிதையின் கருப்பொருளை நான் ரசித்தேன். அதனால்தான், 'பலரால் ரசித்துப் படிக்கும் நிலையில் உள்ளதால்' எனக் குறிப்பிட்டேன். இதிலென்ன 'அங்கீகரிப்பு' இல்லை? 'புதுக் கவிதை' என்ற பெயரில் வருபவை, உண்மையில் கவிதைகள் அல்ல என்பதை ஒரு scholarly discussion வைத்து அலச வேண்டும். அது தேவையா?
இது கவிதையல்ல (நிலலாடும்) நிஜம்
மருமகனின் கவிதைக்கு (உரைவீச்சுக்கு)அழகு சேர்க்கும் மாமனாரின் வியக்கியானம் (பாரட்டு) மிக அருமை
வாழ்த்துக்கள் தம்பி அப்துல் ரஹ்மான். எழுதுங்கள் வாசிக்க., இல்லை சிந்திக்க !
சிறு வயதில் நானும் தஸ்தகீரும் நிறைய கவிதைகளை பற்றி விவாதிப்போம் ..தஸ்தகிர் செர்மன்வாடி நினைவில் உள்ளதா?
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் ரஹ்மான் சேர்மன் வாடி யும் நம்மைச்சார்ந்த மண் தானே?மறக்க முடியுமா?
மரபு கவிதை படிக்க த்தெரிந்த அளவிற்கு படைக்க புலமை வேண்டும் இளமையில் அந்த தாக்கம் இருந்தது பிறகு நிலைமை மாறி விட்டது,தலைமுறையும் புதுக்கவிதை தான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அதுவே பிடித்தும் போனது.(மரபு கவிதைக்கு ஈடு புதுக்கவிதையல்ல என்பதும் என் திண்னமான எண்ணம்)
நாம் நடந்து வந்த பாதையும்,பயணமும் எளிதில் மறக்க நமெக்கென்ன ஸ்பெஷல் அம்னீசியாவா(அல்லது நாம் என்ன அத்வானியா)?
//நாம் நடந்து வந்த பாதையும்,பயணமும் எளிதில் மறக்க நமெக்கென்ன ஸ்பெஷல் அம்னீசியாவா(அல்லது நாம் என்ன அத்வானியா)?//
பார்த்தியா வந்த வழியில முல் இல்லைன்னு சொல்லிட்டு ஒரு (முல்)குத்தல் வச்சிருக்கியே ! :))
To Bro:அதிரை அஹ்மது
///கவிதைமேல் உள்ள வெறுப்பால் வந்த கேள்வி இதுவென்று நினைக்கிறேன்///
கவிதை மீது எப்போதும் எனக்கு வெறுப்பு இல்லை
/// அதனால்தான், 'பலரால் ரசித்துப் படிக்கும் நிலையில் உள்ளதால்' எனக் குறிப்பிட்டேன். இதிலென்ன 'அங்கீகரிப்பு' இல்லை? 'புதுக் கவிதை' என்ற பெயரில் வருபவை, உண்மையில் கவிதைகள் அல்ல என்பதை ஒரு scholarly discussion வைத்து அலச வேண்டும். அது தேவையா?///
"'புதுக் கவிதை' என்ற பெயரில் வருபவை, உண்மையில் கவிதைகள் அல்ல "
என்று நீங்கள் எழுதியிருப்பது உங்கள் கருத்துதானா அல்லது பொதுவான பேச்சா> இந்த கருத்தை நீங்கள் ஆதரித்தால் நான் எழுதிய வாசகமும் சரிதான்.
வாசகம்="ஏன் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதில்லை?"
Thanx for your reply
ZAKIR HUSSAIN
bro ஜாஹிர் நான் ஒரு கவிதை சொல்றேன் பாருங்க :-
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
சீரான மூச்சு
தெளிவான பேச்சு
சலனமில்லா சிந்தனை
இவைகள் என்னிடம்
இப்படினுன்னு ஒரு வாரப்பத்திரிக்கை என்னைப் பற்றி சிறுகுறுப்பு கேட்டாங்களேன்னு எழுதி அனுப்பினேன் ஆனா அதுக்கு அவங்க தந்த பதில் இப்படிதான்:-
எல்லாம் சரிதான்
உங்களைப் பற்றிதான் கேட்டோம் ஒரு கற்பனை கதாநாயகனைப் பற்றியல்ல.
உங்கள் முன்னுரை கவிதையாக இருக்குன்னு சொல்லிட்டாங்க !
இது கவிதையா / இல்லையா !?
-நட்புடன்-:)
Post a Comment