Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பத்ரு களம் - நினைவு கூறுவோம். 9

அதிரைநிருபர் | August 26, 2010 | , , ,

ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு யுத்தம்.
                                                                                                                                       
பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம்  ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள்  எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 என்றும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...

மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.


பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)

03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)

04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)

05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)

06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)

07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)

08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)

09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)

10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)

11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)

12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)

13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)

14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

பதிருப் போர் பற்றிய பயான் கோட்டுப் பாருங்கள், கண்ணிர் வராதவருக்கும் வந்துவிடும்.

பகுதி 1 http://www.islamkalvi.com/media/iyub41/audio1.mp3






பகுதி 2 http://www.islamkalvi.com/media/iyub41/audio2.mp3



நன்றி-இஸ்லாம் கல்வி

போர் நடந்த அந்த இடங்களின் படங்களை கீழே பாருங்கள்

On 17th Ramadan Year 2nd of Hejra, Prophet Mohammad (PBUH) came to BADER from MADINA With around 300 of his Followers from the way shows in picture (Red Arrow).


Prophet Mohammed (PBUH) Camp with his Army in this Area and The Hill in the Picture is Called (Odoat Al Dunea)
Right Arrow Shows (Al Odoat Al Dunea) and on versant of it Muslims Camp, Middle Arrow Shows the way which ABO SOFEAN Convoy pass all the way through and Left Arrow Shows Malaeka mountain  (where JEBREAL and MEKAEAL sent By ALLAH with 1000 Of Malaeka to help Muslims Army against Unbelievers.)


This is where Muslims Army moved to where BADER WELL was at the back of them

A different picture angle of (Al Odoat Al Dunea) and Malaeka Mountain and the new camp area where Muslims moved to.



The Arrow shows the place of the Followers Graves

BADER THE OLD TOWN

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான பத்ரு தற்காப்பு யுத்ததையும், பத்ரு யுத்தப் போராளிகளை நாம் நினைவு கூர்ந்து நம்முடைய தக்வாவை அதிகரிக்க முயற்சி செய்யலாமே.... அல்லாஹ் போதுமானவன்.

ஆக்கம்: அதிரைநிருபர் குழு

நன்றி: சுவனத்தென்றல், சகோ.இஸ்மத் வலைப்பூ

9 Responses So Far:

Shameed said...

பத்ரு களம் படத்துடன் விபரம் அருமை

ஆக்கம் யார் என்று சொல்லவில்லையே?

அதிரைநிருபர் said...

ஆக்கம் யார் என்பதை பதிந்துவிட்டோம், நன்றி சகோதரர் ஷாஹுல்

Shameed said...

நீங்களாதான் இருக்கும் என்பது எனக்கு தெரியும் எனக்கு தெரிந்தது எல்லோருக்கும் தெரியனும் அல்லவா !!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புகைப்படத்தில் பார்க்கும் போது நம் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு கரடு முரடான பாதைகளுடைய மலைப் பகுதிகளை வலுவில்லாத 313 ஸஹாப்பாக்களை வைத்து வலுவான 1000 பேர் கொண்ட எதிரிகளை எதிர் கொண்டார்கள் நினைக்கும் போது உள்ளம் நடுங்குகிறது. அல்லாஹு அக்பர்.

இவ்வுலகில் நாம் படும் கஷ்டமேல்லாம் என்ன கஷ்டமா... அல்லாஹு அக்பர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்று நாம் முஸ்லீம்களாக இவ்வுலகில் வாழ்வதற்காக அன்று பத்ருப் போரில் வீரமரணம் அடைந்த 14 ஷஹீத்களின் பெயர்கள் நம் எத்தனை பேருக்கு தெரியும்?

இப்பதிவை பார்த்தாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம். நம் பிள்ளைகளுக்கும் எடுத்துச்சொல்வோம். இன்ஷா அல்லாஹ்

Ashraf said...

உரைய வைக்கும் வரலாற்றூ பதிவு.

அதிரை அஷ்ரப்

Shameed said...

நண்மையான வரலாற்று பதிவு

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நிச்சயமாக வெறும் சொற்ப நொண்டிக்குதிரைகளையும், கூர் உடைந்த வாட்களையும் வைத்திருந்த 313 சஹாபாக்களுக்கு அவர்களைவிட மும்மடங்கிற்கு மேல் அதிகமுள்ள படைபலத்துடன் இருந்த‌ காஃபிர்களை பத்ர் யுத்தத்தில் இறைவன் மலக்குகள் மூலம் நேரடியாக போர்க்களத்தில் உதவிபுரிந்தான். அதன் மூலம் மிகப்பெரிய வெற்றியையும் முஸ்லிம்களுக்கு ஈட்டித்தந்தான். அல்லாஹூ அக்பர்....மனிதன் தன் கற்பனைக்கு கூட எண்ணிப்பார்க்க முடியாததை எல்லாம் செய்து காட்டுபவனே வல்ல இறைவனாவான்.

அமைதியாக பாலைவனப்பரப்பில் எழுந்து நிற்கும் பத்ர் போர்க்களத்தின் மலைக்குன்றுகளும் அதை சுற்றி காணப்படும் பேரீத்தமர தோட்டங்களும் இன்றும் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். பல முறை யான்புவிலிருந்து மதீனா செல்லும் பொழுது பிரசித்தி பெற்ற 'பத்ர்' சிற்றூரை கடந்து சென்றிருக்கின்றேன். உள்ளே சென்று போர்க்களத்தை காண இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. குர்'ஆனில் வல்ல இறைவன் பத்ர் போர்க்களத்தைப்பற்றிக்கூறும் பொழுது 'வலிமையற்ற அந்த சொற்ப சஹாபாக்களுக்கு போர்க்களத்தில் சண்டையிட "நாமே உதவினோம்" என்று அல்லாஹ் குறிப்பிடுவதை நினைக்கும்பொழுதெல்லாம் நம் உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது. ஆம்...இறைவனே நேரடியாக (மலக்குகள் மூலம்) உதவிடும் பொழுது உலக சக்திகள் அவனுக்கு எதிராக என்ன செய்து விட முடியும்? யா அல்லாஹ்! அக்காலத்து சஹாபாக்களுக்கு நீ நேரடியாக உதவியது போல் பல சொல்லாத்துயரை, இன்னல்களை இவ்வுலகில் முஸ்லிமாக இருப்பதால் அணுதினம் சந்தித்து வரும் எல்லா முஸ்லிமான வயோதிக, நடுத்தர, வாலிப, சிறுவர், சிறுமியர் யாவரையும் உன் கிருபையாலும் சக்தியாலும் இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால் காத்தருள்வாயாக...ஆமீன்....யாரப்பல் ஆலமீன்...

அப்துல்மாலிக் said...

நல்ல நினைவுக்கூறல்.. பகிர்வுக்கு நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு