Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு 10

அதிரைநிருபர் | August 22, 2010 | , , ,

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான                         நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்ப‌ உட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாக‌ ஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையான‌ வேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்கள். ( அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை செய்தியை காணுங்கள்) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ந‌ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

--மு.செ.மு. நெய்னா முஹம்மது.

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.///

நோம்பு திறப்பதற்கு முன்னர் வரும் தலைவலியைப் பற்றி ஒன்னுமே சொல்ல வில்லையே MSM(n), இங்கே தானே கோபம் கோபமா வருது, தலைவலி உடைக்கும் நேரத்தில் யாராவது ஆறுதலாக பேசினாலோ அல்லது கேட்டலோ ஏதோ தலையில் ஓங்கி அடிப்பதுபோல் கோபம் வருகிறதே ஏன் ?

அப்துல்மாலிக் said...

ஆக்கப்பூர்வமான கட்டுரை நெய்னா

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை

Shameed said...

நெய்னாவின் கட்டுரை அருமை

Shameed said...

அபுஇபுறாஹிம் says
நோம்பு திறப்பதற்கு முன்னர் வரும் தலைவலியைப் பற்றி ஒன்னுமே சொல்ல வில்லையே
நமக்கு மட்டும் தான் நோன்பில் தலைவலி என்று நினைத்து இருந்தேன் நீங்களும் தலைவலி கேஸ் தானா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட நீங்கவேற சாஹுல் எப்போதைக்காவது தலவலிக்கிறமாதிற இருக்கிறத (தல)வலி(ய)க்க வைக்கிறதே தனிக் கலைதான்... :)) போங்க.. இது ரவுண்டு கட்டி மாத்தி மாத்தி வரும் (இதுதான் சீஸன்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நமக்கு மட்டும் தான் நோன்பில் தலைவலி என்று நினைத்து இருந்தேன் நீங்களும் தலைவலி கேஸ் தானா?//

அந்த லிஸ்ல நம்மைளையும் சேர்த்துக்குங்க சாஹுல் காக்கா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை//

சரியாக நினைவூட்டினீர்கள் சகோதரர் நெய்னா முகம்மது.

மேற் சொன்ன செய்தியை வைத்து அன்றாடம் காணும் போது, நல்ல சக்தி இருந்தும் பலர் அல்லாஹ் நம் மீது கடமையாக்கியவைகளை நிறைவேற்றாதது நமக்கு கவலையளிக்கிறது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் விளவு நம் பலர் உள்ளத்தை பாழடைய செய்வதோடு அல்லாமல், உடல் நலத்தையும் பலமாக பாதிக்கிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை இன்று நாம் காணலாம். அதில் ஒன்று தான் இந்த மாதிரி ரசாயன கலவை எனர்ஜி டிரிக்ஸ்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே, உள்ளத் துய்மையையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவது பற்றி நம் நபி ( ஸல்) அவர்கள் போதித்ததை இன்றும் என்றும் நாம் பின் பற்றினாலே போதும்.

Shameed said...

தாஜுதீன் says
//நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை//

சரியாக நினைவூட்டினீர்கள் சகோதரர் நெய்னா முகம்மது.

நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு