Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கதையல்ல நிஜம் - எச்சரிக்கை ! 14

அதிரைநிருபர் | August 14, 2010 | , , ,

கடந்த 09.08.10 அன்று விஜய் தொலைக்காட்சியில் " கதையல்ல நிஜம்" நிகழ்ச்சியில் ஒரு இளம்  முஸ்லீம் பெண் சம்பந்தமான உண்மை செய்தி ஒளிப்பரபானது.                           சகோதரர் தஸ்தகீர் இந்த நிகழ்ச்சி பற்றி நமக்கு தெரியப்படுத்தினார். நாமும் அந்த நிகழ்ச்சி கானொளியை பார்த்தோம், அதிர்ந்து போனோம். இங்கு அந்த இளம் பெண்ணின் எதிர்காலம் கருதி பெயர் வெளியிடவில்லை.

தான் தாயும், தந்தையும், தந்தையின் நண்பனும் தன்னை எவ்வளவு எல்லாம் கொடுமை படுத்தினார்கள் என்று அந்த சகோதரரி அவ்வளவு தைரியமாக ஒரு தொலைக்காட்சியில் சொல்லுகிறதை நாம் நிச்சயம் பாராட்டியாகவேண்டும்.

பள்ளியில் படித்துவரும் அந்த சகோதரி தற்போது முஸ்லீமாக மாறி தன் முஸ்லீம் பாட்டியிடம் வளர்ந்து வருகிறார்.

நாம் அறிந்தவரை அந்த சகோதரரியின் தாயார் முஸ்லீமாக இருந்து மாற்று மதத்தவரை மணந்து அந்த மதத்துக்கு மாறிவிட்டார்,  உண்மை நிலவரம் இதுவரை விரிவாக தெரியவில்லை.

இந்த மாணவ சகோதரியை அவரின் தாயாரும், தந்தையும் அவர்களின் குடும்ப நண்பர் (புரம்போக்கு, காமவெறி அயோக்கியன் "ஆறுச்சாமி" என்ற) ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தி பல கொடுமைகளை செய்துள்ளனர், குறிப்பாக பாலியல் கொடுமைகள், ஒட்டு துணியில்லாமல் வயதுக்கு வந்த அந்த பெண்ணை வீட்டில் பூட்டி அடைத்துள்ளனர் அந்த மூவரும். இந்த பெண் தன்னால் பெருக்க முடியாமல் தான் தன் பாட்டியிடம் தன் கஷ்டத்தை சொல்லியிருக்கிறார். முஸ்லீமான இவரின் பாட்டியின் முயற்சியால் இந்த மாணவ சகோதரி முஸ்லீமாக மாறியுள்ளது. தான் பெற்ற பிள்ளையை இஸ்லாத்தை விட்டு போன வேதனையும் அவமானத்தையும் தாங்கிக்கொண்டு தன் பெண்ணின் மகளை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து பாதுக்காத்துவரும் இந்த பாட்டி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறோம்.

இந்த செய்தியுள்ள "கதையல்ல நிஜம்" உள்ள சுட்டியில் சென்று பாருங்கள்


இந்த சகோதரி முஸ்லீமானதாலோ என்னவோ இது பற்றி இன்னும் உண்மை தகவல்கள் இது வரை எந்த தமிழ் பத்திரிக்கைகளிலும் வரவில்லை.

முஸ்லீமான அந்த பெண்ணுக்கு, பாட்டிக்கு தற்போதைய தேவை பாதுகாப்பு. காவல்துறை உதவியுடன் அவர்களுக்கு பாதுபாப்பு கிடைக்க தமிழகத்தில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் முன்வரவேண்டும் என்பது தான் எம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஒரு இஸ்லாமிய தாய் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காததால் வந்த வினை இதேல்லாம்.

பிள்ளைகள் வளர்ப்பு பற்றிய எச்சரிக்கை!

இந்த கேடுகெட்ட காலகட்டத்தில் நம் பிள்ளைகளை மிக கவணமாக மார்க்கப் பற்றுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

கடிணமான கண்டிப்பு செய்வதால் நம் பிள்ளைகள் பருவநிலை அடைந்த பிறகு நம்  பேச்சையும், நம்மையும் அவர்கள் மதிக்காமல் தூக்கி எறிந்து விட்டு மாற்று மதத்தவர்களுடன் செல்லும் நிலமை உருவாகிவிடுகிறது.

நம் பிள்ளைகளை பாசம் காட்டி வளர்க்க வேண்டும், நம் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கு பிள்ளைகளாக வளர்ப்பத்தெடுப்பதில் தான் ஒவ்வொருவரும் பெற்றோர் என்ற நிலைக்கு தகுதியானவர்கள் ஆகிறோம்.இது தான் பெற்றோர்களுடைய திறமையும், கடமையும்.
குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.

குழந்தைகள் நன்மக்களாவதும், கெட்டவர்களாக உருவெடுப்பதும் ஏன் என்று நம் உள்நெஞ்சம் கேட்கும் கேள்விற்கு பதில்தான் என்ன? மரபியல் பிரச்சினையா? மோசமான குடும்பச் சூழலா? டி.வி, கேபில் போன்ற நச்சு ஊடகங்களா? பளுவான பாடதிட்டங்களும், தரம் குறைந்த கல்விச் சூழலுமா? நண்பர்கள் வட்டம் சரியில்லையா? நாகரீகம்(?) ஓங்கிய நகர வாழ்க்கைத் தரம் காரணமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையைச் சொல்வார்கள் ஆனால் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அவர் இறைவனுக்குப் பயந்து இறையச்சம் மிகுந்த மனிதநேயம் பொருந்திய சமூகப் பணியாளராக பெற்றோர்களை பேணுபவராக சமுதாயத் காவலராக, பிறர்நலம் நாடுபவராக, வரவேண்டுமென்றால் அதற்கு முதற்காரணம் பெற்றோர்கள்தான். அவர்களின் வளர்ப்பு முறையில்தான் அந்தக் குழந்தை, அந்த மாணவன், அந்த இளைஞன் புடம்போட்டு வார்க்கப்படுகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)

எனவே குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. எனவே குழந்தையை வளர்ப்பதில் மார்க்கம் கூறும் நல்லுபதேசங்கள், தெளிவான வழிமுறைகள், வரையரைகளைப் பற்றி அறிந்து நம் பிள்ளைகளை நல்ல ஸாலிஹான வருங்கால சந்ததியினராக வளர்க்க முயற்சி செய்யவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்.

அன்புடன் தாஜுதீன்

14 Responses So Far:

Ashraf said...

நல்ல சமுதாய உணர்வக்கு வாழ்த்துக்கள்.
அஷ்ரப்

££Plus££ said...

when i saw this video really ,im so crying,and scared

Unknown said...

"வரவு எட்டணா; செலவு பத்தணா" என்பதை மாற்றி. "செலவு எட்டணா; வரவு பத்தணா" என்று கருத்துக் கொண்டு, 'முர்த்தத்து' ஆகிப் போனவளுக்குப் பகரமாக, கற்போடும் கண்ணியத்தோடும் 'உம்மத்'தில் ஒருத்தியாகத் தாயகம் வந்து சேர்ந்துள்ள இளஞ்சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்!

crown said...

அஸ்ஸலாமு அலைகும்.செய்தியை சமுதாய நோக்குடன் வெளியிட்டதற்கு பாராட்டுகிறேன்.அந்த நிகழ்சியை பார்த்தபின் இன்னும் அந்த தாக்கம்,துக்கம் என் நெஞ்சிலிருந்து நீங்க வில்லை.இதயமெல்லாம் சொல்ல முடியாத வேதனையின் வலி.சமுதாய அமைப்புகள் உடன் நல்லதொரு நடவடிக்கை எடுக்குமா? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை இங்கு பகிர்ந்து கொண்டால் நல்லதாக அமையும் அல்லவா?

crown said...

அல்லாவின் பொருத்தம் வேண்டி நல் இதயங்கள் யாராவது அந்த பெண்ணை தன் பிள்ளைக்கு திருமண ஒப்பந்தம் செய்ய முன் வருவார்களா?இல்லை யென்றால் எந்த இளைஞனாவது முன் வருவார்களா?சமுதாயாமே என்ன செய்ய போகிறது????????????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இயக்கங்களின் பெயரில்லா நம் சமுதாய அமைப்புகள் (நானறிந்த) மூன்றுக்கும் தகவலும் அவர்களில் சிலருடன் தொடர்பும் கொண்டேன் இன்ஷா அல்லாஹ் இவர்கள் எவருடைய முயற்சி வெற்றியடைந்தாலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...

crown said...

இயக்கங்களின் பெயரில்லா நம் சமுதாய அமைப்புகள் (நானறிந்த) மூன்றுக்கும் தகவலும் அவர்களில் சிலருடன் தொடர்பும் கொண்டேன் இன்ஷா அல்லாஹ் இவர்கள் எவருடைய முயற்சி வெற்றியடைந்தாலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைகும் .கடமையை செய்த உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து நற்கூலி உண்டாவதாக ஆமீன் .(I Proud of My brother(YOU))

அப்துல்மாலிக் said...

குழந்தை வளர்ப்பின் அவசியம் உணர்த்திய விதம் அருமை. நிச்சயம் அந்த சகோதரிக்கு நல்ல எதிர்க்காலம் கிடைக்கும்

Unknown said...

என் பெயர் சபியா .....செண்பகம் இல்லை என தெளிவாக உள்ள அந்த சகோதரியின் நல் வாழ்வுக்கு எல்லாம் வல்ல இறைவன் நிம்மதியையும் நல்ல எதிர்காலத்தையும் அளிப்பானாக ...ஆமீன்

தன் மகள் மூலம் இழந்ததை பேத்தியின் மூலமாக இந்த இயலாத வயதில் மீட்டி எடுத்த இந்த பாட்டியின் செயல் ..
நம் வேரின் ஆழம் .அல்ஹம்துலில்லாஹ் .

abu ibrahim
அஸ்ஸலாமுஅலைகும் .கடமையை செய்த உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து நற்கூலி உண்டாவதாக ஆமீன் .

Ashraf said...

ஒரு தகவல் இந்த மங்கை ஒரு சமுதாய அமைப்பின் உதவி உடன் தான் விஜய் TV யில் தன் அம்மாவின் கொடுற என்னைங்கலை தோல் உரிது இருக்கிறாள் என்ற தவல் எனக்கு கிடைத்து இருக்கிறது. சமுதாய என்னம் கொன்ட நல் உள்ளங்கலுக்கு நான் இதை தெறியப்படுத்துக்கிரைன்.

அஷ்ரப்

அதிரைநிருபர் said...

அனைத்து சகோதரர்களின் வருகைக்கும், ஆதங்கத்திற்கும் மிக்க நன்றி.

சகோதரர் அஸ்ரப் அவர்களின் தகவலின் படி பாதிக்கப்பட்ட அந்த சகோதரி சபியா பாதுகாப்புடன் இருப்பதாக அறிய முடிகிறது.

நல்ல தகவல் தந்த சகோதரர் அதிரை அஸ்ரப் அவர்களுக்கு அதிரைநிருபர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தற்போது கிடைத்த தகவலின்படி, சகோதரி சபியாவும், அவர் பாட்டியும் நம் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் கோவை கிளை சகோதரர்களின் பாதுக்காப்பில் உள்ளார்கள். என்னதான் கருத்து வேறுபாடுகளுடன் நிறைய இயக்கங்கள் இருந்தாலும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு என்று வரும்போது எந்த அமைப்பாவது முன்னின்று வருகிறது என்பது நிச்சயம் நம் அனைவருக்கும் ஆறுதல். அல்லாஹ் போதுமானவன்.

நம் சமுதாயத்தில் ஒற்றுமை நிரந்தரமாக உருவாக படைத்தவனிடம் இந்த புனித ரமழான் மாதத்தில் பிராத்திப்போம்.

crown said...

தற்போது கிடைத்த தகவலின்படி, சகோதரி சபியாவும், அவர் பாட்டியும் நம் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் கோவை கிளை சகோதரர்களின் பாதுக்காப்பில் உள்ளார்கள். என்னதான் கருத்து வேறுபாடுகளுடன் நிறைய இயக்கங்கள் இருந்தாலும், முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு என்று வரும்போது எந்த அமைப்பாவது முன்னின்று வருகிறது என்பது நிச்சயம் நம் அனைவருக்கும் ஆறுதல். அல்லாஹ் போதுமானவன்.

நம் சமுதாயத்தில் ஒற்றுமை நிரந்தரமாக உருவாக படைத்தவனிடம் இந்த புனித ரமழான் மாதத்தில் பிராத்திப்போம்.
-----------------------------------------------
அல்ஹம்துலிலாஹ்.அல்ஹம்துலிலாஹ்,அல்ஹம்துலிலாஹ்,அல்ஹம்துலிலாஹ்......

Unknown said...

all of our islamic organization should come forwards with unity to save our sisters from these enemies . all of our contradictories shall be kept away and work as a team to rectify all threats towards our community people. unity is stregnth

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு