Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனதில் தோன்றியது! 13

அதிரைநிருபர் | August 09, 2010 | , , ,

உலகில் மக்கள் தொகை பெருக்கத்தால் மனிதன் அவன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக                            காடுகளில் மரங்களை வெட்டி மற்றும் தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள், மனிதன் வாழ லாயக்கற்ற இடம் என்று சொல்லப்படும் பாலைவன நிலங்களில் கூட‌ தான் வசிக்க வசிப்பிடம் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கட்டி வருகின்றான். அதனால் புவி வெப்பமடைதல், தட்பவெட்ப நிலை மாற்றம், பூகம்பம், சுனாமி, கடல் கொந்தளிப்பு, சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச்சீற்றங்களுக்கும், அதன் பேரழிவிற்கும் ஆளாகின்றான்.

அவனைச்சொல்லி குற்றமில்லை. காரணம் உலகம் இறைவனால் படைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அது அதன் பரப்பளவில் அப்படியே தான் இருக்கின்றது. மனிதனின் இனப்பெருக்கம் மற்றும் அவன் தேவைக்கு தகுந்தாற்போல் காலத்திற்கேற்ப அது விரிந்து/பரந்து கொடுப்பதில்லை. அதனால் மனிதன் அவன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ப நகரங்கள், புற நகரங்கள், கிராமப்புறங்கள் பிறகு அதையும் தாண்டி விவசாய நிலங்களில் கூட தன் வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றான்.

எங்கெங்கோ செல்வானேன்? நம்ம ஊரைப்பாருங்களேன். ஒரு காலத்தில் நம்ம ஊர் எல்லைகளாக தெற்குப்பகுதியில் கடல்கரைத்தெருவும், மேற்குப்பகுதியில் மேலத்தெருவும், கிழக்குப்பகுதியில் பழஞ்செட்டித்தெருவும், வடக்குப்பகுதியில் வண்டிப்பேட்டையுமாக நாம் கூற முடியும். ஆனால் இன்றோ ஒரு நேரத்தில் தென்னந்தோப்பு வாங்க கூட தயங்கிய இடங்களில் கூட நம் மக்களின் குடியிருப்பு வந்து விட்டது. காரணம் இதற்கு பல கூறப்பட்டாலும் வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தாலும் இரண்டு, மூன்றாக‌ இருந்தாலும் வரக்கூடிய‌ மணமகனோ அல்லது அவன் பெற்றோர்களின் கட்டாயத்தால் அல்லது மார்க்கம் தாண்டிய போராட்ட குணத்தால் தனித்தனி வீடுகள் பெண் வீட்டாரிடம் வேண்டப்படுவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.

எவ்வளவு பரந்த இடத்தை அவ்வீடு பெற்றிருந்தாலும், வீட்டில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தாலும் அந்த வீட்டை அவ்வீட்டில் திருமணம் முடிக்க இருக்கும் (பெயருக்கு மணமகள் பெயரில்) தன் மகனுக்கே சொந்தமாக்க மணமகனைப்பெற்ற பெற்றோர்கள் சிறிதும் தயங்குவதும் இல்லை அதில் எவ்வித கருணையும் காட்டுவதும் இல்லை.

இதில் யார், யாரெல்லாம் விதிவிலக்கு பெற்றவர்கள், பெறாதவர்கள் என இங்கு பட்டியலிட இயலவில்லை. அதன் அவசியமும் இங்கு வரவில்லை. இது விசயத்தில் யார், யாரெல்லாம் எப்படி நடந்து கொண்டோம்? நடந்து கொண்டிருக்கிறோம்? எப்படியெல்லாம் நடக்கப்போகிறோம்? என்பதை நம்மைப்படைத்த வல்ல ரப்புல் ஆலமீன் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றான்.

இங்கு சொல்ல வந்த விசயம் என்னவெனில், அரபு நாடுகளிலும் வெள்ளைக்கார மேற்கத்திய நாடுகளில் நம் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லாத்துயரை அடைந்து (அயல் நாட்டில் வேலை பார்ப்பவர் எல்லாம் சொகுசான வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் அல்லர்.) தன் ஆசாபாசங்களையெல்லாம் துறந்து, விலைமதிக்க முடியா வாலிபத்தை இஷ்டமின்றி செலவழித்து தன் மகளுக்காக, சகோதரிகளுக்காக அவர்களின் எதிர்கால நலன்களுக்காகவும் குறிப்பாக அவர்களுக்கு வீடு வாசல் கட்டிக்கொடுப்பதற்காக எத்தனை, எத்தனை நம் ஆண் மக்கள் தன் வாழ்க்கையை தியாகம் செய்து அதில் பல பேர் தான் அயாராத உழைப்பில் கட்டப்பட்ட வீட்டை வந்து பார்க்க முடியாமலேயே இவ்வுலகை விட்டு சென்றவர்களும் பலருண்டு.

தேவையில்லாமல் பல லட்சங்கள் செலவழித்து ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களில் மனைகளை வாங்கி வீடுகள் கட்டிச்செல்வதை விட தான் இருக்கும் வீட்டிலேயே ஒரு பகுதியில் அல்லது மாடியில் கீழ் தளத்தில் இருக்கும் அதே செட்டப்பில் (அமைப்பில்) வீடுகள் கட்டி அதை இரண்டு, மூன்று பிள்ளைகள் பரஸ்பர ஒற்றுமையின் அடிப்படையில் பிரித்துக்கொண்டால் தேவையில்லாமல் ஊரின் எல்லை எங்கோ சென்று கொண்டிருப்பதை தடுக்க முடியும் மற்றும் நிலம் வாங்க கொட்டப்படும் பல லட்சங்கள் மிச்சப்படும். அதிலேயே வீட்டின் மாடியிலோ அல்லது கொல்லைப்புறத்திலோ மற்றொரு பிள்ளைக்கு வீடு கட்டி கொடுக்க முடியும். அதனால் பல சொளகரியங்களும், அவசர நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியும், பாதுகாப்பும் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் என்பதே குறிப்பாக இங்கு சொல்ல வந்த கருத்து.

சென்னை போன்ற பெரு நகரங்களில்லெல்லாம் மக்கள் ஒரு குடியிருப்பில் மேல் தளம், நடு தளம், கீழ் தளம் என பிரிந்து வாழவில்லையா? இதனால் பல பிரச்சினைகள் வரும் என்று கருதினால் வீட்டுக்கு வீடு தனித்தனியே மின் கட்டண மீட்டர், குடிநீர், ஆழ்குழாய்க்கிணறு, தனித்தனி கதவு எண் மற்றும் குடும்ப அட்டை போன்றவைகள் பல அவசியங்களை கருத்தில் கொண்டுவைத்துக்கொள்ள முடியுமே.

சென்னை போன்ற பெருநகரங்களில் குருவி கூடு போன்ற‌ வீடுக‌ளில் குடும்ப‌ங்க‌ள் வாழ‌வில்லையா? ஊரில் ம‌ட்டும் பெண் வீட்டாரை வ‌த‌க்கி வேண்டா வெறுப்பாக‌ த‌னி வீடு கேட்டு அட‌ம் பிடிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌?

எது எப்ப‌டியோ? பெண்ணுக்கு வீடு கொடுப்பதில் கார‌ண‌, காரிய‌ங்க‌ள் ஆயிரம் சொல்ல‌ப்ப‌ட்டாலும், அத‌ற்கு நியாய‌ம் க‌ற்பிக்க எவரேனும் முய‌ற்சித்தாலும் அது நிச்ச‌ய‌ம் ந‌ம் மார்க்க‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டாத‌ விச‌ய‌ம் என்ப‌து ம‌ட்டும் ந‌ம் எல்லோருக்கும் ந‌ன்கு விள‌ங்கும்.

உதாரணத்திற்கு மாடி வீட்டைக்கொண்டு இரண்டு பெண் பிள்ளைகளோ அல்லது ஆண் பிள்ளைகள் மட்டுமோ உள்ள வீட்டில் கீழ் (வீடு) தளம் ஒரு பிள்ளைக்கும், மேல்(மாடி வீடு) தளம் மற்றொரு பிள்ளைக்கும் என பரஸ்பரம் நம் உன்னத மார்க்கத்தை முன் வைத்து ஒற்றுமை அடிப்படையில் எழுதிக்கொடுத்தால் அநாவசியமாக பல லட்சங்கள் செலவாகுவதையும், நம் ஆண் மக்களின் விலைமதிப்பற்ற வாழ்நாட்கள் அயல்நாடுகளில் இலட்சியமின்றி வீண், விரயமாகுவதையும் நிச்சயம் தடுக்க/கட்டுப்படுத்த முடியும்.

நம் ஆண் மக்களில் எத்தனையோ பேர் தன் மகளுக்காக, சகோதரிக்காக ஊரில் வீடு கட்டிக்கொடுப்பதற்காக அயல்நாடுகளில் கடினமான வேலைகளுக்கிடையே (கடின வேலை என்பது கடும் குளிரிலும், வெயிலிலும் பொதி சுமக்கும் வேலையோ அல்லது மண் வெட்டும் வேலை மட்டும் தான் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது அலுவலகத்திலும் பணிச்சுமையாலும்,

ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அழுத்த‌த்தாலும், தொந்த‌ர‌வுக‌ளாலும் குளிர்சாத‌ன‌ அறைக‌ளில் இருந்தால் கூட அது ந‌ம்மை துர‌த்தும்.)

த‌ன் ஆசாபாச‌ங்க‌ளையும், இள‌மைக்கால‌த்தையும் இடித்து த‌ரை ம‌ட்ட‌மாக்கி ஊரில் இல்ல‌ங்க‌ளை எழுப்புகின்றான். சில‌ ச‌ம‌ய‌ம் அதைக்காண‌ இய‌லாத‌வ‌னாய் இறைவ‌ன‌டியும் போய்ச்சேருகின்றான். இதை எல்லாம் ச‌ற்ற‌ல்ல‌ நிறைய‌வே சிந்திக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.

குறிப்பாக‌ பெண் வீட்டாரிட‌ம் அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும். காரண‌ம் அவர்கள் அட‌ம் பிடித்து த‌ன் ம‌க‌னுக்கு பெண் வீட்டாரிடமிருந்து விருப்பமின்றி எழுதிய‌ வாங்கிய‌ வீட்டில் த‌ன் ம‌க‌ன் வாழ்ந்து அவ‌னுக்கு பிற்கால‌த்தில் பிற‌க்கும் பெண் பிள்ளைகளுக்காக‌ அவ‌ன் அல்லோல‌ப்ப‌ட‌ நேரிடும் என்ற உண்மையான தொலைநோக்கு பார்வையை அவ‌ர்க‌ள் ஒரு போதும் தொலைத்து விட‌ வேண்டாம் அது யாராக‌ இருந்தாலும் ச‌ரியே.

ஆர‌ம்ப‌ கால‌த்திலிருந்து சின்ன‌, சின்ன‌ மார்க்க‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாம் இது போன்ற‌ பெரிய‌(வ‌ர‌த‌ட்சணை)ச‌மாச்சார‌ங்க‌ளில் பல மார்க்க அறிஞர்களைப்பெற்றிருந்தும் கோட்டை விட்ட‌து ஏனோ?

அல்ஹ‌ம்துலில்லாஹ் இன்றைய‌ கால‌ங்க‌ளில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் போதிய‌ மார்க்க‌ விள‌க்க‌ம் பெற்று பெண் வீட்டாரை க‌ச‌க்கிப்பிழிய‌ விரும்புவ‌தில்லை. அவ‌ர்க‌ள் த‌ன் உழைப்பில் த‌ன் ம‌னைவி, பிள்ளைக‌ளைக்காப்பாற்ற தம்மால் இய‌ன்ற‌ள‌வு முய‌ல்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளை ம‌ற்றும் இல‌ட்சிய‌ங்க‌ளை வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீன் த‌டையின்றி நிறைவேற்றித்த‌ர‌ வேண்டும் என்று இங்கு நாமெல்லாம் து'ஆச்செய்வோமாக‌...

நிச்சயமாக நம் இன்றைய கால இளைஞர்களுக்கு இது போன்ற தவறான நடைமுறை ஒடுக்க‌ ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அது அனைவராலும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கொடுக்க வேண்டிய தொந்தரவுகளை கொடுத்து முடித்தப்பின் பெண் வீட்டார்கள் அவர்கள் பிள்ளைக்கு தானாகவே முன் வந்து தான் வீட்டை எழுதிக்கொடுத்தார்கள். நாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் கொடுக்க வில்லை என்ற மாயத்தோற்றத்தை தகர்த்தெறிய வேண்டும்.

இது போன்ற தவறுகள் என் வீட்டிலோ அல்லது இதை படிக்கும் உங்கள் வீட்டில் மட்டும் நடந்தவையல்ல. பரவலாக நம்மூரில் எல்லா வீடுகளிலும் நடந்த, நடந்து கொண்டிருப்பவை தான்.

இது விசயத்தில் என் மனதில் பட்டதை இங்கு உங்கள் பார்வைக்காக கொட்டி தீர்த்து விட்டேன். இதில் ஏதேனும் தவறுகள், சரி செய்யப்பட வேண்டிய கருத்துக்கள் இருக்கலாம். இது சம்மந்தமாக‌ நீங்கள் உங்களின் மேலான‌ கருத்துக்களையும், நல்ல, சிறப்பான‌ உபதேசங்களையும் நம் எல்லோரின் பார்வைக்கும் பின்னூட்டமாக வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்தவனாய் இக்கட்டுரையை முடித்துக்கொள்கின்றேன்.

வரக்கூடிய சங்கை மிகு ரமளானை நாம் சிறப்புடன் வரவேற்று அதன் பரக்கத்தாலும், ரஹ்மத்தாலும், மஹ்பிரத்தாலும் நம் எல்லோரின் ஈருலக தேவைகளையும், ஹலாலான லட்சியங்களையும் நிறைவேற்றித்தர எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனிடம் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றேன். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நிச்சயமாக நம் இன்றைய கால இளைஞர்களுக்கு இது போன்ற தவறான நடைமுறை ஒடுக்க‌ ஒரு புரட்சி வெடிக்க வேண்டும்.//

மவுனப் புரட்சி நடக்கத்தான் செய்கிறது, விழித்துக் கொண்ட இளைஞர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

அதுசரி அடுக்குமாடிகளாக கட்டிவிட்டதைக் கண்டுவிட்டால் மூத்தப் பொண்னுக்கு முழுவீட்டையுமல்லவா எழுதிக் கேட்கிறார்கள் அதற்குமேல் கொக்கு பறந்தாலும் அதையும் மகனுக்கு ஆக்கிப் போடச் சொல்றவஙக ஒருவேளை விமானம் பறந்தாலும் அதையும் கேட்பவர்கள் இருக்கிறார்களே MSM(n) !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஆதங்கத்தை உங்கள் பாணியில் விளாசி தள்ளிட்டீங்க சகோதரர் நெய்னா, வாழ்த்துக்கள்..

//இது போன்ற தவறுகள் என் வீட்டிலோ அல்லது இதை படிக்கும் உங்கள் வீட்டில் மட்டும் நடந்தவையல்ல. பரவலாக நம்மூரில் எல்லா வீடுகளிலும் நடந்த, நடந்து கொண்டிருப்பவை தான்//

உண்மை, சரியாக சொன்னீர்கள், எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

போலித்தனமான அனாச்சாரங்களும், அடுத்தவர்களின் பார்வைக்காக வாழ்வதும், பொடுபோக்குத்தனமான வீண்விரையங்களும், பழைய குப்பை சம்பிரதாங்களும் இவைகள் போன்ற மற்ற மார்க்கத்தில் இல்லாத செயல்களால் உண்டான அளவுக்கு அதிக பேராசை கொண்ட சம்பாத்திய எதிர்ப்பார்ப்பு நம் மக்களிடம் என்று குறைகிறதோ அன்று தான் நாம் நிறைய சமூக முன்னேற்றத்தை காண முடியும்.

இது மவுனப் புரட்சியால் மட்டும் சத்தியம் என்றால் நிச்சயம் அந்த மவுனப் புரட்சியை ஒவ்வொருவரும் சபதம் எடுத்து தங்களின் வீடுகளில் செய்தாலே போதும். அல்லாஹ் போதுமானவன்.

Shameed said...

சின்ன‌ மார்க்க‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாம் இது போன்ற‌ பெரிய‌(வ‌ர‌த‌ட்சணை)ச‌மாச்சார‌ங்க‌ளில் பல மார்க்க அறிஞர்களைப்பெற்றிருந்தும் கோட்டை விட்ட‌து ஏனோ?

இங்கு(இம்மை ) கோட்டையை பிடிபதற்கு தான் இங்கு கோட்டையை பிடித்துவிட்டு அங்கு (மறுமை) கோட்டை விடத்தான்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தன் சகோதரிகளுக்காக எத்தனையோ சகோதரர்களையும், தன் மகள்களுக்காக எத்தனையோ தகப்பன்மார்களையும் அன்றாடம் அவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

பெண்ணுக்கு வீடு என்ற ஒரு தொற்றுநோய் என்று இல்லாமல் போகுமோ? எப்போது சகோதரன்மார்களுக்கும் தகப்பன்மார்களுக்கும் விடிவுகாலம் பிறக்குமோ?

நம்மிடம் இருக்கும் தெளிவான மார்க்க கட்டளைகள் தான் இதற்கு பதில்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பல சொளகரியங்களும், அவசர நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியும், பாதுகாப்பும் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் என்பதே குறிப்பாக இங்கு சொல்ல வந்த கருத்து.//

முக்கியமான இந்த விசையத்தை பல பேர் உணர்வதில்லை.

அப்துல்மாலிக் said...

தனக்கென ஒரு சிறு வீடு கட்டுவதற்கே முழிப்பிதுங்கிப்போய் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்துதான்... 3 முதல் 4 பெண்குழந்தைகள் உள்ள பெற்றோரை நினைத்துப்பார்த்தால்????

பெண்ணிற்கு வீடு கொடுப்பதை அடியோடு நிறுத்தப்படவேண்டும், சிறு வயது முதலே என் எதிர்ப்பை பதிந்திருக்கிறேன்.இது நடந்தால் அதிரையில் நிலத்தின் மதிப்பும் குறையும். எல்லோருக்கும் சொந்த வீடு என்ற கனவு நினைவாகும்.

காலம் தாழ்ந்த பதிவு என்றாலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இது பொருந்தும். வாழ்த்துக்கள் நெய்னா

Shameed said...

உம்மை போன்றோரின் எழுத்து எம்மை போன்றோரை சிந்திக்க வைக்கிறது

Ashraf said...

இப்படியும் மனதில் நினைத்தாயே மேலும் உங்கள் சிந்னைகலை எதிற்பாற்கும் உங்கள் நண்பன்.

அஷ்ரப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சரி MSM(n) இப்போ என்னா ரேட்டுல இருக்கு சீர்பணம் ? நாங்க வரதட்சனையெல்லா வாங்கோமாட்டோம் அது ஹராமாச்சு... சீர் பணம் மட்டும் பகுதி பகுதியாதான் வாங்குவோம்...(அதிரை ஆண்மகனைப் பெற்ற தாயின் வாக்குமூலம்)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உள்ளூர் பெண் குமர்களை கரை சேர்க்க அயல் தேசத்தில் கரை ஒதுங்கிய அப்பாவி அதிரை ஆண் மகன். இவ்வ‌ள‌வு சொல்லாத்துய‌ரை அடைந்து வீடு க‌ட்டி, கும‌ர்க‌ளை க‌ரை சேர்த்த‌ பின் "எந்த‌ ஊரு வ‌ந்து பாரு" என்ற‌ ஏள‌னப்போக்கும், அவ‌ ம‌ரியாதையும் பெற்ற‌ பிள்ளைகள் (அ) சகோதரிகளிட‌மிருந்தே அவ‌னுக்கு கால‌ப்போக்கில் வ‌ந்த‌டைகிற‌து.

என‌வே ம‌றுல‌க‌த்தின் தீராத‌ இன்ப‌த்தை அடைய‌ ஆண் ம‌க்க‌ளைப்பெற்ற‌ பெற்றோர்க‌ளும், அவ‌ர்க‌ளுட‌ன் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளும் பெண் வீட்டாரை வாட்டி, வ‌த‌க்கி, வ‌றுத்தெடுப்ப‌தை உட‌னே நிறுத்துக்கொள்ள‌ வேண்டும். இது தொட‌ருமாயின் நாளை மறுமையில் இன்று வ‌றுத்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வ‌றுத்தெடுப்பார்க‌ள்....எச்ச‌ரிக்கை.. உல‌கில் கொம்புள்ள‌ ஒரு ஆடு, கொம்பில்லாத‌ ம‌ற்றொரு ஆட்டை தேவையின்றி முட்டித்த‌ள்ளினால் நாளை ம‌றுமையில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கொம்பில்லாத‌ அந்த‌ ஆட்டிற்கு கொம்புக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு அது த‌ன்னை உல‌கில் முட்டிய‌ ஆட்டை அங்கு முட்டித்த‌ள்ளும் என்று நாம் ஹ‌தீஸை மேற்கோள்காட்டி பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌க்கேட்டிருக்கிறோம். என‌வே உலகில் அநியாய‌மாக‌ ப‌ழி வாங்கிய‌வ‌ர்க‌ள் ம‌றுமையில் ப‌ழி வாங்க‌ப்ப‌டுவார்க‌ள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நைனாவின் பேனாவிலிருந்து இதுபோல் வரும் கருத்து நம் சமூதாயதில் புரையோடு போய் விட்ட சாபங்களையும்,பாவங்களையும் (கு)சுட்டிகாட்டுவதாகவும் அதற்கான தீர்வு சொல்லவும் முயல்வதை நாம் மனதார பாரட்ட கடமை பட்டுள்ளோம்.அவருக்கு அல்லாஹ் எல்லா நல் பாக்கியங்களையும் தந்தருள்வானாக.
வரண் என்றாலே சில சவரன்களில்தான் பேச்சு ஆரம்பித்து சீர்(கெட்ட) அப்படி, இப்படி பெண்வீட்டாரை பிழிந்தெடுக்கும் நடைமுறை சாபமா அல்லது திட்டமிட்ட சதியா? சிந்திப்போம்,
இறைவழி பேணுவோம்.எல்லாரையும் அல்லாஹ் நேர்வழிபடுத்துவானாக ஆமின்.

abdul said...

”சென்னை போன்ற பெரு நகரங்களில்லெல்லாம் மக்கள் ஒரு குடியிருப்பில் மேல் தளம், நடு தளம், கீழ் தளம் என பிரிந்து வாழவில்லையா? இதனால் பல பிரச்சினைகள் வரும் என்று கருதினால் வீட்டுக்கு வீடு தனித்தனியே மின் கட்டண மீட்டர், குடிநீர், ஆழ்குழாய்க்கிணறு, தனித்தனி கதவு எண் மற்றும் குடும்ப அட்டை போன்றவைகள் பல அவசியங்களை கருத்தில் கொண்டுவைத்துக்கொள்ள முடியுமே.”
இதில் கவனிக்க வேண்டிய பிரட்சனை கழிவு நீர் வெளியேற்றுவதற்க்கு பாதாள சாக்கடை வசதி நம்முடைய ஊரில் இல்லாமல் இருப்பதுதான், அடுக்குமாடி குடியுருப்புகள் அமைக்க சாக்கடை வசதி அவசியம், நம்முடைய ஊரில் இந்த வசதி
செய்து விட்டால்...! கொசு தொல்லை முதல் பிள்ளை களுக்கு காய்ச்சல் என்று டாக்டர்களிடம் டோக்கன் எடுக்கும் சிரமம், 10 லட்சம் சிலவு செய்து ஊர் கடைசில் நிலம் வாங்கி வீடு கட்டும் நிலமை மாறலாம்.
அப்துல் கலாம்

Meerashah Rafia said...

சாச்சா பின்னிட்டீங்க...
ஆகையால் நான் பின்னூட்டம் இடுகிறேன்.

உங்களுடைய கட்டுரைகளை எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து ஊர்ல உள்ள எல்லார் வீட்டு வாசல்லயும் கல்யாண பத்திரிக்கை போடுற மாதிரி போடலாம்னு தோணுது.
(குத்வால குடுத்தா அந்த விஷயம் பொம்பளைங்கள எப்டி சேரும்!?..எப்டி நம்ம ஐடியா ?)

உண்மைய சொல்லபோனால் ஏற்கனவே உங்களின் ஒரு கட்டுரைகளை நான் பிரிண்ட் செய்து என் குடும்பத்தில் அனைவரிடமும் கொடுத்திருகிறேன்.

மேலும் எதிர்பார்த்த வண்ணம்
மூ.சா.மூ. மீரஷாஹ் ராபியா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு