Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

லண்டனுக்கும் வரும் நம் மாணவர்களுக்கு எச்சரிக்கை ! 9

தாஜுதீன் (THAJUDEEN ) | August 13, 2010 | , ,

நான் லண்டனில் இருக்கும் அதிரையை சார்ந்தவன், லண்டனில் நீண்ட காலம் வசித்து வருகிறேன்..
                                                                                           
சரி விசயத்துக்கு வாரேன்.. நம் சகோதர்கள் அதிரையிலிருந்து பெரும்பாலனோர் மாணவர்களாக வருகிறார்கள் .. வாருங்கள் மகிழ்ச்சித்தான்..ஆனால் இங்கே அதிகமாக பெரும்பாலும் ஹாரமான வேலைகள் (jobs) தான் அதிகமாக இருக்கின்றது...மதுபானம் விற்கும் கடைகலே அதிகம், இப்போது இங்கிலாந்தில் மட்டும் .. சுமார் 5000 மதுபான கடைகலும், பப்களும் உள்ளது..

மாஷா அல்லாஹ்… நம் சகோதரர்கள் அந்த பணியை அவமதிக்கிரார்கள். ஆனால் அந்த வேலையை விட்டால் வேறு பணிகள் எடுப்பது ரொம்ப கடினம். ஆகையினால் நம் படிக்க வந்த மாணவர்கள் PART TIME வேலைக்கு போவது இல்லை.இந்த குளிர் நாட்டில் வெளியே வேலை தேடி போக கூட முடியாமல் பாவம் பெறிதும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். படிக்கவும் போவது இல்லை, ஒன்று படிக்கனும் இல்லை என்றால் வேலைக்கு போகனும் அதை விட்டு விட்டு வீட்ல உட்கார்ந்து கொண்டு காலத்தை ஓட்டுகின்றனர். காரணம் இந்த குளிர் காலத்தில் ஹலால் வேலை கிடைப்பது கடினம் என்று சொல்லி சொல்லியே நாட்களை வீனாக்கி கொண்டு இருக்கிறனர். பணத்தை செலவழித்து அனுப்பிய பெற்றோர்கள் பாவம்.

சிலருக்கு ஊரிலிருந்து பணம் வருகிறது.. தங்குவதற்கும், சாப்பாடிற்க்கும். சகோதர்களே சற்று சிந்தித்து பாருங்கள் ..இதற்காக வா நாம் இங்கு வந்திருக்கிறீர்கள்.

சரி நம்ம நோக்கம் என்ன சம்பாதிக்கனும்...ஆனா சில மாணவர்கள் ஊரிலிருந்து வரும் போது என்ன நினைத்துக்கொண்டு வருகிறார்கள் என்றால். பெரிய பெரிய அலுவலகங்களில் வேலைகள் பார்க்கலாம் என்று. அதுதான் தவறு இந்த நாட்டில் வட நாட்டவர் மட்டும் தான் அந்த பணியை தக்க வைத்துக்கொண்டு உள்ளனர்.

இங்கு வருவதற்கு முன்பே எதாவது தொழில்களை கற்றுக்கொண்டு வாருங்கள். இல்லாட்டி ஹோட்டலில் இங்கு ரொட்டி போடுவதற்கு, இறச்சிகடை ஆடு வெட்டுவதற்கு மட்டுமே இங்கு நம் மக்களுக்கு வேலைகள் அதிகம் இருக்கிறது.

ஊரில் இருக்கும் சிலர் சொல்றாங்க, இங்க சூப்பர் மார்கெட்லே வேலை பார்க்கலாமே என்று, பார்க்கலாம் ஆனால் இங்க சூப்பர் மார்கெட்டில் தான் மதுபானம் அதிகம் விற்கப்படுகிறது. அது மட்டும் அல்ல இங்கு பெரும்பாலும் இலங்கையவர்களே சூப்பர் மார்கெட் வைத்துள்ளனர், அவர்கள் அப்பாவி நம் மாணவர்களை ஏமாற்றுவதில் ‘கில்லாடிகள்’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் புதிதாக பணியில் சேர்பவர்களை 2 வாரமோ அல்லது 3 வாரமோ ‘ட்ரைனிங்’..(Training) என்ற பெயரில் வேலை வாங்குவார்கள், நாம் நல்லதான் வேலை பார்ப்போம். இதுலே டார்ச்சர் ஜாஸ்தி ஆனால் அந்த (training) முடியும் நாளில் உங்களிடம் அவன் சொல்வது ஒன்றே ஒன்றுதான் .”வேகம் பத்தாது” என்று சொல்லி வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடுவான். நமக்கு வருமே கோபம் சண்டை போட்டுவிட்டு வேலையை விட்டு விடுவோம். அவன் புத்திசாலி இலவசமாக கடும் குளிரில் அப்பாவிகளை வேலை வாங்கிகொண்டு அவன் அடுத்து வருபவனிடம் இதே செட்டைகளை ஆரம்பித்திடுவான். இப்படித்தான் லண்டன் நிலமை போய் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் ஒரு சிறுவன் வயது 18 மாணவனாக வந்து இருக்கிறான். நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவன். அந்த சிறுவனுக்கு 1 மாதம் டிரைனிங்காம். அவனுக்கு இப்போது கடுமையான ஜுரமாம் 25 நாட்கள் மட்டுமே வேலை பார்த்து இருக்கிறான் அவன் கையிலோ பணம் இல்லை. அந்த இலங்கை கடை முதலாலியோ பணம் கொடுக்கவில்லை சாப்பாடு மற்றும் வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் இருந்தான் அந்த சிறுவன். ஏன் இதை சொல்கிறேனென்றால்..ஏதாவது உறுப்படியான தொழில்களை கற்றுக்கொண்டு வாருங்கள். அப்படி வந்தால் இங்கிலாந்தில் எங்கும் பிழைத்துக்கொள்ளலாம்.

மற்றும் ஒரு முக்கியச்செய்தி, இங்கு கருப்பு இனத்தவர்கள் அட்டகாசம் அதிகம். பணம்,மொபைல் போனை திருடுவார்கள். சமீபத்தில் நம் ஊரை சார்ந்த ஒருவர் வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டு இருக்கும் போது இரவில் இரு கருப்பர்கள் அவரிடம் ஐ-போனை திருட முயன்று இருக்கிறார்கள். அதை கொடுக்க மறுத்ததால் அவரை ஓட ஓட விரட்டி அவர் வீட்டுக்கதவை திறக்கும் சமயத்தில் சராமாறியாக தாக்கி இருக்கிறார்கள். அவரை தாக்கியதில் படும் காயம் அடைந்து (emergency) மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அழிக்க பட்டது.

ஆகவே மிகவும் எச்சரிக்கை, வந்தோமா, படிச்சோமா, பிழைச்சோமாண்டு இருங்க…

ADIRAI AZEES

9 Responses So Far:

Shameed said...

அங்குமா கருபர்கல் தொல்லை !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அனுபவம் பேசியது நல்ல விழிப்புனர்வு(க்குரிய) கட்டுரை, நாமதாங்க உஷாரா இருந்துக்கிடனும் லண்டன் என்ன சந்திர மண்டலத்திலகூட அப்படித்தானுங்கோ !

mohamedali jinnah said...

அங்கு மட்டுமா ஹாரமான வேலைகள் (jobs) உலகமெல்லாம் உண்டு .துபாய் விட லண்டன் எவ்வளவோ மேல்.
இஸ்லாம் அதிகமாக பேனப்படுவதனை பர்மின்ஹாம் சென்று பாருங்கள் .உலகில் இஸ்லாமிக் வலைத்தளம் அங்குதான் அதிகம்.

££Plus££ said...

ஆனால் பர்மின்ஹாமில் பாகிஸ்தான் நாட்டு காரர்கலே அதிகம்..சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி கொண்டு இருக்கிறார்கள்..அல்லாஹ் அவர்களை அந்த பாவச்செயலிருந்து காப்பாற்றுவானாக..ஆமின்

அதிரைநிருபர் said...

கட்டுரையில் சொல்ல வந்த விசயம், கல்வி பயில வரும் மாணவர்கள் பற்றியது மட்டுமே. இலண்டன் பற்றியோ, துபாய் பற்றியோ அல்ல.

கட்டுரையாளர் நல்ல தொழில்கள் கற்றுவந்தால் இலண்டலின் பிழைத்துக்கொள்ளலாம், ஒரு தொழிலும் தெரியாமல் இங்கு வந்து அவஸ்தை படுகிறார்கள் நம் மாணவர்கள் என்ற கவலையில் எழுதியிருக்கார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

நல்ல எச்சரிக்கை தந்த கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.

நல்ல படிப்புகள் நம்ம நாட்டில் கொட்டிக்கிடக்குதே.

crown said...

Assalamualikum.plz visit adiraipost.blogspot.com

crown said...

Assalamualikum.plz visit adiraipost.blogspot.com
காரணம் கதையல்ல நிஜம் என்ற செய்தியினை அறியவும்.

Eniya Thisaigkal - Tamil Monthly said...

சரியானபடி திட்டமிட்டுத் தொழில் அறிந்து வருதல் வேண்டுமென்ற கட்டுரையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது. எப்படியாவது வந்துவிட்டால் போதும், எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்று
வந்து வம்பில் மாட்டிக்கொள்ளல் கூடாதென்ற
ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளமை உணரத்தக்கது..
prof_semumu@yahoo.com

Shameed said...

எந்த வெளிநாடு போறதா இருந்தாலும் கை தொழில் பயின்று செல்வது சாலச்சிறந்தது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு