ஒரு காலத்தில் வறட்சியான கடும் கோடை காலத்தில் புனித ரமளான் நோன்பு வரும்.
அப்பொழுது பள்ளிக்கூடங்களெல்லாம் தன் முழு ஆண்டு விடுமுறையை விட்டிருக்கும். அதனால் அச்சமயம் சிறுவர்களாக இருந்த நம் நெஞ்சத்தில் சந்தோசம் குடி கொள்ளும்.
தலை நோன்பு. மஹ்ரிப் நேரம் நெருங்கும். பிறையைப்பார்க்காமல் விட மாட்டோம். அதை பிடித்து வராமல் விட மாட்டோம் என உறுதி மொழி எடுத்தவர்கள் போல் சிறுவர் பட்டாளம் தெருக்களில் உலா வரும். பிறையைக்கண்ட செய்தி கிடைத்தால் தெருதோறும் 'பிறையைக்கண்டாச்சு. பிறையைக்கண்டாச்சு' என கூப்பாடு போடும் சாப்பாடு இல்லாமல்.
தெளிவான வானம் தென்பட்டாலும். நாம் பார்க்க முடியாமல் போன அப்பிறையை அந்த கொழும்பு ரேடியோ எப்படியும் பார்த்தே தீரும். அதன் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எண்ணி நோன்பு ஆரம்பமாகும் நம் ஊரில்.
தராவீஹ் தொழுகை இருபது ரக்காத்துகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்க இருப்பதை எண்ணி கால் வலிப்பது போல் கட்டப்பட்ட சைத்தானைத்தாண்டி உள்ளம் ஒரு மாயயை ஏற்படுத்தினாலும் அதற்குப்பின் ஆரம்பமாகும் இரவை பகலாக்கும் அவ்விளையாட்டுக்களை எண்ணி மனம் ஆறுதல் பெறும். ஆறுதலுக்கு மேல் ஏழுதல், எட்டுதல் இருந்தாலும் அதையும் நிச்சயம் பெற்றிருக்கும் அச்சமயம்.
பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச இஞ்சி, பூண்டு உரித்துக்கொடுத்தாலே பெரும் பாக்கியம் பெற்றவர்களாக கருதப்பட்டோம் அன்று.
பள்ளிவாசல் 'நஹரா'க்களெல்லாம் பகல் நேரத்தில் சூரியக்குளியல் எடுக்கும். நேரம் வரும் சமயம் இடிமுழக்கமென தன் சப்தத்தை ஊருக்கு பறைசாற்றும். பூக்கமளெயால் சீவப்பட்ட கம்புகள் பள்ளி சாபின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருவூல சாவி போல்.
இரவு நேர விளையாட்டு வீரர்கள் வீரத்துடன் விளையாட தேவையான ஊட்டச்சத்துக்களை தற்காலிகமாய் தோன்றிய ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்வீட்டா, கல்கண்டு பால், கடல்பாசி, கவாப் கடைகள் வழங்கும்.
கவாப் கடையில் இரும்பு கம்பியில் சொறுகப்பட்ட மசாலாக்கலந்த இறைச்சியுடன் எம் ஆசையும், ஏக்கமும் சேர்த்தே சொறுகப்பட்டிருக்கும். அதை வாங்கி ஆவலுடன் சாப்பிடுவது என்னவோ ஒரு சுன்னத்தான செயல் போல் நடந்தேறும்.
எதாவது ஒரு பள்ளியிலிருந்து திருக்குர்'ஆனின் வசனம் ஒலிபெருக்கி மூலம் காற்றில் கரைந்து வந்து நம்மை தாலாட்டும் ரமளான் முழுவதும். இரவுத்தொழுகைக்குப்பின் பள்ளிகளில் ஹிஜ்பு ஓதப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்ட நார்சா மிச்சர், காராசேவை நம் வீட்டு அப்பா கொண்டு வந்து கொடுத்ததை நினைக்கும் பொழுது வருடங்கள் பல ஓடிப்போயிருந்தாலும் இன்றும் அந்த மிச்சரின் மொரு,மொருப்பு குறையவில்லை (சவுத்துப்போகாமல் இருக்கின்றது).
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நம் குடும்ப,தெருவைச்சார்ந்த வயதிற்கு மூத்தவர்கள் மினு,மினு சட்டை அணிந்து, புது செருப்பு, புது தொப்பி அணிந்து ஆடையில் நறுமணம் பூசி பள்ளிக்குச்செல்வார்கள். அவர்களைப்பார்த்து அன்று விளங்காமல் ஆசைப்பட்டோம்.(வெளிநாட்டு மோகம் என்ற ஆப்பை அன்று நமக்கு நாமே அடித்துக்கொண்டோம் அதை இன்றும் பிடுங்க முடியாதவர்களாய்)
தலை நோன்பு பிடித்து செய்வதறியாதிருந்த நம்மை சீவி, சிங்காரித்து, தலையில் ஊதா தொப்பி அணிந்து, புது சட்டை போட்டு, புது வேட்டியுடன் மாலை நேரத்தில் தெருவில் உலா வந்து பாக்கெட்டுகளை நிரப்பினோம். அதில் பரவசமும் கண்டோம்.
நோன்பு மாலை நேர குளங்களெல்லாம் காமென்வெல்த் விளையாட்டரங்கு போல் காட்சியளிக்கும் (ஊழல்கள் செய்ய வாய்ப்பின்றி). குளித்து கண்களெல்லாம் சிவந்து போகும். நாம் பிடித்த நோன்புகளில் எத்தனை நோன்புகள் செக்கடிகுளத்திலும், செடியன் குளத்திலும், கடல்கரை குளத்திலும் திறந்தோமோ? அல்லாஹ்வே அறிவான்.
குளிர்சாதனப்பெட்டிகளெல்லாம் (ஐஸ் பெட்டி) எல்லோர் வீட்டிலும் இல்லாத காலம் அது. பல்லிளித்து வாங்கிய ஐஸ் கட்டிகளும், பன்னீர் கலந்த இளநீரும், டேங்கில் கலந்த சர்பத்தும் நம் தேகத்தை குளிரூட்டும் மின்சாரமின்றி மின்'தடையைத்தாண்டி.
நல்ல நாளு, பெரிய நாளு பார்த்து தண்டிக்கப்பட்ட/துண்டிக்கப்பட்ட மின்சாரம். நம் வீட்டு பெரியவர்களின் கோபம் கலந்த சாபத்தை கூடை நிறைய பெரும். நல்ல நாளு, பெரிய நாளுக்கும் மின்சாரவாரியத்திற்கும் ஏதேனும் கள்ளத்தொடர்பு இருக்குமோ? கலிச்சல்லபோகுமோ?
முட்டை விளக்கும், அரிக்களாம்பும் நம் வீட்டுப்பெண்மணிகளுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் போல் அன்றாடம் உதவி செய்யும். வீட்டு பிரோ சாவியை மறந்தாலும் மண்ணெண்ணெய் இருக்குமிடம் ஒரு போதும் மறக்கமாட்டார்.
ஒரு நேரத்தில் வீட்டில், குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் வந்து குரல்வளைகளை நெறித்தாலும் கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டு கொடுத்து கடைசி வரை தொடர்புகள் துண்டிக்கப்படாமல் இறுதி வரை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ சிறு,சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் குழந்தைகளைப் பெற்றிருந்தும் பரஸ்பரம் ஒற்றுமையில்லாமல் யாரோ,எவரோ என்று (தலாக் மூலம்)இணைய வாய்ப்பின்றி பிரிந்து விடுகின்றனர். பிறகு கணவன் தன் துணையை தேடிக்கொள்கின்றான். மனைவியும் குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தனக்குரிய துணையுடன் இணைகிறாள். இரண்டிற்கும் நடுவே பிறந்த குழந்தைகள் தாயுடன் இருந்தாலும் காலப்போக்கில் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகிவிடுகின்றது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான முடிவன்று. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ் சங்கை மிகு புனித ரமளானின் பொருட்டு நம் அனைவருக்கும் நற்கிருபைகளை வாரி வழங்குவானாகவும்.. என அவனிடம் இறைஞ்சிக்கேட்டவானாய் இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
18 Responses So Far:
MSM(n) சொல்லவந்த விஷயம் இதுதான் //" ஒரு நேரத்தில் வீட்டில், குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் வந்து குரல்வளைகளை நெறித்தாலும் கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டு கொடுத்து கடைசி வரை தொடர்புகள் துண்டிக்கப்படாமல் இறுதி வரை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். " //
சொல்லியவிதமோ அருமை !
//முட்டை விளக்கும், அரிக்களாம்பும் நம் வீட்டுப்பெண்மணிகளுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் போல் அன்றாடம் உதவி செய்யும். வீட்டு பிரோ சாவியை மறந்தாலும் மண்ணெண்ணெய் இருக்குமிடம் ஒரு போதும் மறக்கமாட்டார்.//
அன்பு சகோதரர் நெய்னா.. உங்களின் நினைவுத்திறனை எண்ணி பாராட்டுகிறேன்.
நம்ம ஜெனரேசனில் பழைய நினைவுகளை அளசி ஆராய்ந்து நம்மை ஒரு 20 - 30 வருடத்திற்கு அழைத்து செல்வதில் உங்களுக்கு நிகரான ஆளை இதுவரை நான் கண்டதில்லை. மாஷா அல்லாஹ்.
தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை. வாழ்த்துக்கள்.
கொத்து பரோட்டா , வாடா, வாட் சமோசா தலக்கறி போட்ட நோன்புக் கஞ்சி இதெல்லாம் கானோமே !!!
நெய்னா இவ்வளவு குதூகலத்த கெலப்பிவிட்டுப்புட்டு கடைசிலே வெச்சே பாரு ஒரு பன்ச்.. கசப்பான உண்மை. புரிந்துணர்தல்/விட்டுக்கொடுத்தல் அவசியம், நிச்ச்யம குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறிதான். இதன்மூலம் நமக்குபின் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் வாய்ப்பும் மங்களாகவே இருக்கும். நல்ல பகிர்வு
koothanalluran says
12/08/10 2:43 PM
கொத்து பரோட்டா , வாடா, வாட் சமோசா தலக்கறி போட்ட நோன்புக் கஞ்சி இதெல்லாம் கானோமே !!!
நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க :))
நூர்லாட்ஜ் கடை வாட் சமோசா இன்னும் ஊரில் கிடைக்குதா? என்னா கிராக்கி ஒரு நேரத்தில....
To
Bro மு.செ.மு. நெய்னா முஹம்மது.
பழைய நினைவுகளின் வடிகால் உங்கள் எழுத்தில் தெரிகிறது.இலவசமாக ஊருக்கு போன எண்ணம்....ஹ்ம்...நிறைய பேருக்கு காசு இல்லாத போது ஆசை இருந்தது..காசு வந்த போது பொறுப்புகள் சுமையானது.
நினைவுகளை எழுத்தில் கொண்டு வரும் லாவகம் உங்களிடம் இருக்கிறது நெய்னா காக்கா. அருமையான கட்டுரை.அதிரை(யின்)மணம் இனி நல்லாவே மணக்கும்.
உம்மாமாருங்க பெரும்பாலும் பெத்த புள்ளைங்கள வாப்பாகிட்டே ஒரே கொற கொறைய சொல்லி சொல்லி வெறுப்பேத்துவாங்களே அதை வாப்பாமாறு குறையா எடுத்துக்குவாங்களா ? இல்லே அதை வஞ்சகப் புகழ்ச்சி அனியா(ன்னு) சொல்லுங்க(மா) MSM(n) / க்ரவ்ன் / மற்றும் அ.நி. வாசிப்பங்களே
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம்
விட்டு கொடுத்து கடைசி வரை தொடர்புகள் துண்டிக்கப்படாமல் இறுதி வரை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது தொடர்புகள் அதிகம் கிடையாது உள்ளதை கொண்டு நல்லது நடந்தது .
இபோது தொடர்புகள் அதிகம் ஒன்னுவிட்டா ஒன்னு ரெடியா இருக்குது (மொபைல் போன் தொடர்ப்பை சொன்னேன் )
உள்ளத்தில் உள்ளதை அன்று கை(கள்)பேசியிருந்தால் சச்சரவு அதிகமாகியிருந்திருக்கும் ஆனா இப்போ கைப்பேசியிருப்பதனால் விரிசல் சீக்கிரமே வந்துவிடுகிறது... - அன்று விட்டுக் கொடுத்தா திருப்பிக் கிடைக்கும் பரிவு, இன்று விட்டுக் கொடுத்தா இன்னும் (கேட்கப் படும்) கொடுத்தாதான் என்னாவென்று...
இந்த கட்டுரையை படித்துவிட்டு வேலைக்கு போனா அங்க...ஒடுதே...ஓடுதே ..நினைவுகள் 'அந்த நாள் நியாபகம் வந்ததே...
சகோ. தாஜூத்தீன் சொல்வது போல் சகோ. சாஹூல் 'குடுத்துவச்ச ஆளு'ண்டு சொல்றியெ...அப்போ 'வாங்கிவச்ச ஆளு' யாரு? ஒரு சமயம் நம்ம க்ரவுன் தஸ்தகீராக இருக்குமோ? என்னா ஆளே கண்மாசியாக் காணோம். என்னா தலெ நோன்புலெ புடிச்ச கெரக்கம் இன்னும் நிக்கலையா? வெரசனெ வாங்கெங்கெ செக்கடி கொளத்துக்கு குளிக்க போகனும்...பாத்து ஓவரா சத்தங்கித்தம் போட்டியெ கரையிலெ (மாடாக்குளி) வச்சிருக்கிற நம்ம வேட்டியெ பூராவும் பெரிசுஹெ அள்ளி தண்ணியிலெ வீசிடப்போவுதுவோ......இதமான குளிர்காற்றில் போடப்பட்ட உறை பனியாய் மேனியில் உறைந்த ஹமாம் சோப்பின் நறுமணம் இன்றும் மனதில் வீசுகிறது...உங்களுக்கும் அப்படித்தானே? 'பார்லா' அப்பாவிடம் குடும்ப பெயர் சொல்லி கூடிதலாக நோன்புக்கஞ்சி வாங்கிய நினைவுகள் இன்று ஏனோ வந்து அன்புத்தொல்லை செய்து செல்கின்றதோ?
அல்லாஹ் இப்புனித ரமளானின் பொருட்டு நமக்கெல்லாம் நீண்ட ஆயுசையும், நெறப்பமான செல்வத்தையும், சரீர சொஹத்தையும் தந்தருள நாமெல்லாம் ஒருவருக்கொருவர் து'ஆச்செய்வோமாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இரவுத்தொழுகைக்குப்பின் பள்ளிகளில் ஹிஜ்பு ஓதப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்ட நார்சா மிச்சர், காராசேவை நம் வீட்டு அப்பா கொண்டு வந்து கொடுத்ததை நினைக்கும் பொழுது வருடங்கள் பல ஓடிப்போயிருந்தாலும் இன்றும் அந்த மிச்சரின் மொரு,மொருப்பு குறையவில்லை (சவுத்துப்போகாமல் இருக்கின்றது).
--------------------------------
Assalamualikum. becoz we are from south india thats why(சவுத்துப்போகாமல் இருக்கின்றது).
-------------------------------
வெளிநாட்டு மோகம் என்ற ஆப்பை அன்று நமக்கு நாமே அடித்துக்கொண்டோம் அதை இன்றும் பிடுங்க முடியாதவர்களாய்.
--------------------------------------------------
சபாஷ் சரியா சொன்னிங்க நைனா.
ஒரு நேரத்தில் வீட்டில், குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் வந்து குரல்வளைகளை நெறித்தாலும் கணவன்,மனைவி .......................
--------------------------------------------------
அன்று என்றோவரும் தபாலுக்கு காத்திருக்கும் காத்திருப்பும் ,எதிர்பார்பும் காதலை அன்பை நீடித்தது.இன்றொ கணினி கடிதம் ஒருவித சலிப்பை உண்டாக்கிவிட்டது.அன்றோ வாப்பாவிடம் இருந்து வரும் டிரங்காலுக்கா போஸ்ட் ஆபிசிலும்,தெருவில் கோடிவீட்டு வாசலிலும் மணிக்கனக்காய் காத்திருந்து நம் பாசம் வளர்த்தது.இன்றோ இன்டெர் நெட் கேமிராவில் பார்பதால் உயிரற்ற உரையாடல்கள்.அன்று வாப்பா டேப்பில் பேசி அனுப்பிய பேச்சை கேட்கவும் வாப்பாவுடன் இருப்பவர்கள் கொண்டு வரும் பார்சலுக்கும் காத்திருந்து பதில் கடிதம் போடுகையில், பதில் பேச்சு பதிவு செய்து அனுப்புகையில் இருந்த நெருக்கம் எல்லாம் விஞ்ஞான உலகில் விபரீதமாய் போய் விஞ்ஞான வளர்சியே பாசத்துக்கெதிரான விசம் தூவி விட்டதோ? என்று வரும் அந்த வசந்த காலம் நம் அடுத்த தலைமுறைக்கு?சகோ. நைனாவின் எழுதிற்கு மீண்டும் ஒரு ஷொட்டு.அத்தனையும் லட்டு,புட்டு,புட்டுவைத்திட்டீர் பண்டீதரே!
//becoz we are from south india thats why(சவுத்துப்போகாமல் இருக்கின்றது).// oooh now we all out of SOUTH(INDIA) : Cool crown !
இனிய நம்(பழைய) ரமலானை புதிப்பித்ததற்கு நன்றி !!
சாச்சா,உங்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வித்தியாசம் இருந்தும், எனக்கும் என் தஹப்பனாருக்கும் இருபத்தைன்பது வயது வித்தியாசம் இருந்தும்கூட இந்த பழைய நினைவுகள் 'இது என் காலகட்டத்தை சார்ந்தது' என்று நம் மனம் மார்தட்டிக்கொள்கிறது, மூன்று தலைமுறை வித்தியாசம் இருந்துங்கூட.
இந்த நிலை ஏன் இன்றில்லை என்று சிந்திக்க வைக்கிறது.. என்னதான் நம்ம ஊர் காரர்கள் 'US-United States' இல் இருந்தாலும் நாம் 'US-Uzhavar Sandhai'ல தான வசிக்கிறோம் ..
பதில் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் சீதேவி மார்களா .
அப்படியே கிளித்தட்டு, ஏத்தம் விடறது, கேரம் போர்டு, பத்ர் படை(அழகிய கழவாணி படை)ல 'கழிச்சல்ல போவானுங்க' என்ற சாபத்துக்கு ஆளாவதை பற்றியெல்லாம் எழுதினால் நல்ல இருக்கும்னு நபுசு கேக்குது .
வியப்பூட்டும் சிந்தனையில்
மீராஷா ரபியா
ஜெத்தாவிலிருந்து..
Post a Comment