Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்றும் இனிக்கும் ந‌ம் ப‌ழைய‌ ர‌ம‌ளான் மாத‌ நினைவுக‌ளிலிருந்து....‏ 3

அதிரைநிருபர் | August 30, 2010 | , , ,

'வல்லாணாலையிலெ யாங்கம்மா இதெல்லாம்' என்று (மாப்பிள்ளை) சம்மந்தி வீட்டுக்காரர்கள் சம்பிரதாயத்திற்கு வாய்விட்டு சொல்லி வண்டி நிறைய                                                             விருப்பத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் நாசூக்காக‌ (இதே பாணியில் தானே சீர், சீராட்டுக்களையும், முழு வீட்டையும் பெண்வீட்டினரிடமிருந்து கேட்டு வாங்கினீர்கள் என்பது வேறு சமாச்சாரம்) வாங்கும் வாடா, சம்சாவுடன் வரும் கஞ்சி தான் அவ்வப்பொழுது இருவீட்டாருக்கு இடையில் கட்டப்பட்டுள்ள உறவுப்பாலத்தில் ஏற்படும் உரசல், விரிசல்களை கொத்தனார் யாருமின்றி சரிசெய்யும் சிமிண்ட் கலவை போன்றதாகும்.

மரியாதை இல்லாத 'வாடா'வாக இருந்தாலும் அதற்கும் மரியாதை கிடைக்கும் அவ்வேளையில்.

உள்ளூர் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ரமளானின் ஒரு மாதகாலம் ஊழலின்றி இனிதே அரங்கேறும். இவ்விளையாட்டுப்போட்டிகளுக்கு ஸ்பான்சர் யாருமில்லை. கோப்பைகளும் இல்லை. ஆனந்தமே அனைவரின் எதிர்பார்ப்பு.

புதுக்க‌விஞ‌ன் யாரேனும் இப்ப‌டி எழுதினாலும் எழுத‌லாம் "த‌னி ம‌னித‌னுக்கு க‌ஞ்சி கிடைக்க‌வில்லையெனில் இவ்வுல‌கினை ச‌பித்திடுவோம்" என்று. கார‌ண‌ம் ர‌ம‌ளானில் நோன்புக்க‌ஞ்சிக்கு அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப்ப‌டும்.

உண்மையில் நோன்பு திற‌ந்த‌தும் பெரும்பான்மையான‌ வீட்டில் இஞ்சை கொஞ்ச‌ம் த‌ட்டிப்போட்டு காய்ச்சி த‌ர‌ப்ப‌டும் 'தேத்த‌ண்ணி' த‌ரும் சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் இன்றைய‌ கால‌ உற்சாக‌ குளிர்பாங்க‌ள் த‌ந்திடுமோ?

வீட்டின் கொடியில் வெயிலில் உலருவதற்காக தொங்கிக்கொண்டிருக்கும் துணிகள் போல் 'கபாப்' க‌டையில் இரும்புக்க‌ம்பிக‌ளுக்கிடையே உஜாலா போடாம‌ல் வெறும் ம‌சாலா மட்டும் போட‌ப்ப‌ட்ட‌ க‌றித்துண்டுக‌ள் தொங்கிக்கொண்டிருக்கும். அதை நினைக்கும் பொழுதே பாக்கெட்டில் காசில்லாம‌ல் வாயில் எச்சில் ஊறும்.

அன்று ஓடி, ஆடி விளையாடிய‌ எத்த‌னையோ வ‌ய‌திற்கு மூத்த‌வ‌ர்க‌ள், இளைய‌வ‌ர்க‌ள் இன்று அட‌ங்கிப்போய் விட்டார்க‌ள். ஆம் ம‌ண்ண‌றையில் அமைதியாய் ம‌றைந்து போய் விட்டார்க‌ள்.

காக்கையின் எச்ச‌ம் போல் காண‌ப்ப‌டும் மடமட புது வேட்டியின் ச‌ரிவ‌ர‌ கிழிக்க‌ப்ப‌டாத‌ லேபில். அதை ப‌ட‌ப‌ட‌ உள்ள‌த்துட‌ன் ச‌ட‌ச‌ட‌ ப‌த்து ரூபாய் புது நோட்டு ச‌ட்டைப்பைக்குள் ப‌துங்கி இருக்கும்.

இன்று அர‌பு நாடுக‌ளிலிருந்து விடுமுறையில் பெருநாளை குடும்ப‌த்துட‌ன் கொண்டாடிட எப்படியும் ஊர் செல்ல‌ திட்ட‌மிட்டிருப்ப‌வ‌ர்க‌ள் இணைய‌ த‌ள‌ங்க‌ள் மூல‌மாக‌வோ அல்ல‌து விமான‌ப்ப‌ய‌ண‌ச்சீட்டு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜென்ட்க‌ள் மூல‌மாக‌வோ த‌ன் ப‌ய‌ண‌த்தை முன் ப‌திவு செய்ய‌ ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன் செய‌ல்ப‌டுவ‌ர். இந்த‌ ப‌ர‌ப‌ர‌ப்பை அன்றே நாங்க‌ள் பெருநாளைக்கு நாள் வாட‌கைக்கு சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற‌ 'ப‌ரிதா' ம‌ற்றும் 'வின்ன‌ர்' சைக்கிள் க‌டைக‌ளில் காட்டி இருக்கிறோம்.

பெருநாள் இரவு சைக்கிளில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ட்டுக்கோட்டை சென்று வ‌ந்தால் ஏதோ பாருல‌கை சுற்றி வ‌ந்த‌து போல் எண்ணிப்பெருமித‌ம் கொள்வோம்.

உள்ளூர் தையல்கடைகளில் இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செல்ல‌ விசா வ‌ழ‌ங்கும் அய‌ல்நாட்டுத்தூத‌ர‌க‌ங்க‌ளில் காத்துக்கிட‌க்கும் ம‌க்க‌ள் போல் காத்துக்கிட‌ந்தோம்.

கால‌ங்க‌ள் ப‌ல‌ ஓடி விட்டாலும் ந‌ம் நினைவுகள் இன்றும் க‌யிறால் செய்ய‌ப்ப‌ட்ட அதே ர‌யில் வ‌ண்டியில் ஏறி ராஹ‌த்தாக‌ சுற்றி வருகிற‌து இராப்ப‌க‌லைத்தாண்டி. (நென‌ப்பு தான் பொழ‌ப்பெக்கெடுத்துச்சாண்டு யாரும் சொல்ல‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்).

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொட‌ரும் இறைவ‌ன் வாய்ப்ப‌ளித்தால்.

--மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

3 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கிழிக்க‌ப்ப‌டாத‌ லேபில்....ச‌ட‌ச‌ட‌ ப‌த்து ரூபாய் புது நோட்டு.... சைக்கிள் க‌டைக‌ளில் முன் ப‌திவு.... க‌யிறால் செய்ய‌ப்ப‌ட்ட அதே ர‌யில் வ‌ண்டி... தையல்கடைகளில் காத்துக்கிட‌க்கும் ம‌க்க‌ள்.... இஞ்சி தேத்த‌ண்ணி'... மரியாதை இல்லாத 'வாடா'.... இரும்புக்க‌ம்பி 'கபாப்'....

non stop நினைவுகள்.

யம்மாடியோ இதேல்லாம் சகோதரர் நெய்னாவினால் மட்டும் தான் முடியும்.

உங்களின் தனிதிறமையையும், நினைவாற்றலையும் ஒவ்வொரு தடவை உங்கள் ஆக்கத்தை படிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அல்லாஹ் போதுமானவன்.

Shameed said...

வாடா, சம்சாவுடன் வரும் கஞ்சி தான் அவ்வப்பொழுது இருவீட்டாருக்கு இடையில் கட்டப்பட்டுள்ள உறவுப்பாலத்தில் ஏற்படும் உரசல், விரிசல்களை கொத்தனார் யாருமின்றி சரிசெய்யும் சிமிண்ட் கலவை போன்றதாகும்.

"த‌னி ம‌னித‌னுக்கு க‌ஞ்சி கிடைக்க‌வில்லையெனில் இவ்வுல‌கினை ச‌பித்திடுவோம்" என்று. கார‌ண‌ம் ர‌ம‌ளானில் நோன்புக்க‌ஞ்சிக்கு அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப்ப‌டும்

உஜாலா போடாம‌ல் வெறும் ம‌சாலா மட்டும் போட‌ப்ப‌ட்ட‌ க‌றித்துண்டுக‌ள் தொங்கிக்கொண்டிருக்கும்

பெருநாளைக்கு நாள் வாட‌கைக்கு சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற‌ 'ப‌ரிதா' ம‌ற்றும் 'வின்ன‌ர்' சைக்கிள் க‌டைக‌ளில் காட்டி இருக்கிறோம்.

உள்ளூர் தையல்கடைகளில் இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செல்ல‌ விசா வ‌ழ‌ங்கும் அய‌ல்நாட்டுத்தூத‌ர‌க‌ங்க‌ளில் காத்துக்கிட‌க்கும் ம‌க்க‌ள் போல் காத்துக்கிட‌ந்தோம்

கால‌ங்க‌ள் ப‌ல‌ ஓடி விட்டாலும் ந‌ம் நினைவுகள் இன்றும் க‌யிறால் செய்ய‌ப்ப‌ட்ட அதே ர‌யில் வ‌ண்டியில் ஏறி ராஹ‌த்தாக‌ சுற்றி வருகிற‌து இராப்ப‌க‌லைத்தாண்டி

சகோ ; இதுபோன்ற வார்த்தைகளை உள்ளத்தின் ஆல் மணத்தில் இருந்து எந்த ஆல்துளை மோட்டாரை கொண்டு வெளி கொண்டு வருகின்றீர்களோ !!!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு