Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யார் இவன்?....... 12

அதிரைநிருபர் | August 08, 2010 | , ,














 


வானம் தெளிவாக தெரியும்
நீரோடையில் முகம் பார்க்க
அதனூடே கண்ணாடி யை
நிறுவ எத்தனிக்கும் ...இந்த எத்தன் யார்?

பளிங்கு மாளிகையில்
பளிச்சிடும் மின் விளக்குகளின்
மத்தியில் அற்பமாக எரியும்
மெழுகுவர்த்தி ....இந்த மெழுகன் யார் ?

புல்வெளி போர்வை போர்த்திருக்கும்
கோல்ப் மைதானத்தில் கால்பந்து
விளையாட ஆசைபடும் .....இந்த பேராசைக்காரன் யார் ?

திராட்சையைப் பறிக்க
கொடியன எண்ணி
வேப்பமரத்தில் ஏறி
ஏமாறும் ..............இந்த ஏமாளி யார் ?

சிப்பிக்குள் முத்தெடுக்க
கடலென நம்பி
மாடியிலுள்ள
தண்ணீர் தொட்டியில் தேடித்தேடி
களைத்த........இந்த அசந்தவன் யார் ?

தோட்டத்தை செழிக்க
வைக்க கடல் நீரை
பாய்ச்சிய.......இந்த உறைந்துபோனவன் யார் ?

மழை நீரை ப் பார்க்க
குடையை தலைகீழ ப்
பிடித்து குடைக்குள் மழை
விட்ட .................இந்த தொடர்பில்லாதவன் யார் ?

சுற்றத்தையும்
நட்பையும்
அளவாவிட
பணம் கொடுக்கும் .... இந்த பாக்கியமற்றவன் யார் ?

தாமரை இலை தண்ணீராக
தடுமாறும் .....இந்த ஒட்டாதவன் யார் ?

மின்னிடும் நட்சத்திரங்கள் சூழாத ,
மேகங்கள் தழுவாத ,
அன்னியமாக உலா
வரும் வெற்று நிலா .....இந்த அந்நி(லா)யன் யார் ?

யார்தான் இவன் ?......................

----அப்துல் ரஹ்மான் ---
                 harmys

12 Responses So Far:

crown said...

“அஸ்ஸலாமு அலைக்கும் .
1)வானம் தெளிவாக தெரியும்
நீரோடையில் முகம் பார்க்க
அதனூடே கண்ணாடி யை
நிறுவ எத்தனிக்கும் ...இந்த எத்தன் யார்?
----------------------
ஓவியன்?(இயற்கை ரசிகன்).
2.பளிங்கு மாளிகையில்
பளிச்சிடும் மின் விளக்குகளின்
மத்தியில் அற்பமாக எரியும்
மெழுகுவர்த்தி ....இந்த மெழுகன் யார் ?
--------------------------------------
வீட்டு சமையற்காரன்?(மொத்தத்தில் பணக்காரனிடம் கைதியாகிப்போன பணி பெண் ????).
3.புல்வெளி போர்வை போர்த்திருக்கும்
கோல்ப் மைதானத்தில் கால்பந்து
விளையாட ஆசைபடும் .....இந்த பேராசைக்காரன் யார் ?
-----------------------------------------------
அந்த மைதானத்தின் காவல்லாளியோ அவன் குழந்தை(கள்)யோ?????

crown said...

4.திராட்சையைப் பறிக்க
கொடியன எண்ணி
வேப்பமரத்தில் ஏறி
ஏமாறும் ..............இந்த ஏமாளி யார் ?
--------------------------------------------
சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்தவனா?
5.சிப்பிக்குள் முத்தெடுக்க
கடலென நம்பி
மாடியிலுள்ள
தண்ணீர் தொட்டியில் தேடித்தேடி
களைத்த........இந்த அசந்தவன் யார் ?
---------------------------------------
விபச்சாரத்தை நாடும் பெண்மோகம் கொண்டவன்????

crown said...

6.தோட்டத்தை செழிக்க
வைக்க கடல் நீரை
பாய்ச்சிய.......இந்த உறைந்துபோனவன் யார் ?
---------------------------------------------
அரசியல் செல்வாக்குப்பெற்ற படிப்பறிவற்ற பணக்கார பண்ணைகளா?/ நில மிரசுதார்களா?
7.மழை நீரை ப் பார்க்க
குடையை தலைகீழ ப்
பிடித்து குடைக்குள் மழை
விட்ட .................இந்த தொடர்பில்லாதவன் யார் ?
------------------------------------------------
காதல் கிறுக்கன்?????
8.சுற்றத்தையும்
நட்பையும்
அளவாவிட
பணம் கொடுக்கும் .... இந்த பாக்கியமற்றவன் யார் ?
------------------------------------------------
சுய நலவாதி????
9.தாமரை இலை தண்ணீராக
தடுமாறும் .....இந்த ஒட்டாதவன் யார் ?
--------------------------------------
சவலப்பிள்ளை?
அல்லது சித்தியிடம் வளரும் பிள்ளை???)
10.மின்னிடும் நட்சத்திரங்கள் சூழாத ,
மேகங்கள் தழுவாத ,
அன்னியமாக உலா
வரும் வெற்று நிலா .....இந்த அந்நி(லா)யன் யார் ?
----------------------------------------
மலடி என்று இந்த சமூகத்தால் தூற்றப்படும் பரிதாபத்துக்குறிய பெண்??? அல்லது வாரிசு இல்லா செல்வந்தன்????
அப்துற்றஹ்மான் தமக்குத்தான் தெரியும் இவர்கள் யாரென்று?ஆனால் எனக்குதோன்றிய(வர்கள்)வைகள் இதுவெல்லாம் உன்னைப்போல் சிந்திக்கும் திறன் எனக்கில்லாமல் போகலாம் நான் சொன்னவர்கள் சரியா???தவறா?? தொடரட்டும் தம்முடைய வித்தியாச மான சிந்தனைகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒன்னுமே புரியல... நானே பெஞ்சுமே ஏறி நின்னுடுறேன்(பா)

crown said...

என் பதில்கள் வினாக்களாய் அமைந்தது இன்னும் சரியா தவறா தெரியவில்லை.
விடைத்தருவார் யாரோ?முதலில் முந்தப்போவது சகோ. நைனா வா? நைனா தம்பி காக்காவா?? சகோ.சாகுலா இல்லை யார் ,யார்?????

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என் கணிப்போ அவன் எல்லாம் அவனே தான். சொந்தங்களை ஊரில் தொலைத்து பாசத்தை எங்கோ தேடுபவன். வாலிபத்தை இஷ்டமின்றி தனியே செலவழித்து ஊருக்கு நோய்நொடியை வாங்கி வரும் அப்பாவி வியாபாரி. ஊரில் ஃபீஸ்போன பல்பாக பேசப்பட்டவன் எங்கோ பிரகாசமாய் காட்சியளிப்பவன். தொலைபேசியில் தொலைந்து போன‌ சொந்தங்களை தேடுபவன். கணிப்பொறியில் பாசம் பொழிந்து முத்தமிடுபவன். கண்ணில் கண்ணீர் வராமல் தனியே அழுகப்பழகியவன். பணங்காசு ஊருக்கனுப்பி அதில் பரவசம் கண்டவன். விடுமுறை என்னும் விடியலுக்காக தினம், தினம் காத்திருப்பவன். பாசக்கார மனைவி, பிள்ளைகளை தன் போலி வேசத்தில் மூடி மறைப்பவன். எங்கோ சென்றவன் எப்பொழுது வீடு திரும்புவான் என்று அவனுக்கே தெரியாதவன். தன் குடும்பத்தேவையே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என எழுதப்படாத வரிகளை இதயத்தில் சுமந்தவன். பாவம் அயல்நாட்டு அகதியாகத்தான் அவன் இருக்க‌ முடியும். ச‌கோ. அப்துல் ர‌ஹ்மானின் மேற்க‌ண்ட‌ எல்லா விடுக‌தைக்கும் அவ‌னே ப‌திலாக‌ இருக்கின்றான். கார‌ண‌ம் அவ‌னிட‌ம் ச‌கோ. சொல்லிய‌ எல்லா த‌ன்மைக‌ளும், குண‌ங்க‌ளும் பொதிந்து கிட‌க்கின்ற‌ன‌வே? ச‌கோ. த‌ஸ்த‌கீர் நான் சொல்வ‌து ச‌ரியா? இல்லை கிட்ட‌த்த‌ட்ட‌ த‌வ‌றா? நீரே கூறும்....

Ashraf said...

கவிஞர் ரஹ்மானின் வரிகள் மிக அற்புதம்

அதிரை அஷ்ரப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பளிங்கு மாளிகையில்
பளிச்சிடும் மின் விளக்குகளின்
மத்தியில் அற்பமாக எரியும்
மெழுகுவர்த்தி ....இந்த மெழுகன் யார் ?///

A : அதிருக்கட்டும் இந்த மெழுகுவர்த்தியை கொளுத்தி விட்டவர்களே (பதில்) சொல்லட்டும் !
-------------------------------
ஏராளமான கேள்விகளுக்கு விடையா நம்மில் ஒவ்வொருவரும் ஒரு பதிலாகத்தான் இருக்கிறோம் நிச்சயமாக !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ. நைனா தாம் சொன்னது சிலதுக்கு மட்டும் பொருந்திவருவதாக நினைக்கிறேன் மருபடியும் படித்து பார்கவும்.
உம்மை போல் புலமை மிக்கவன் நான் அல்லன்.எனவே மருபடியும் மன்னிக்கவும் இருந்தாலும் சகோ. நைனா தம்பி காக்கா சொன்னபடி நாமே பொருந்தி வருகிறோம் என்பது உண்மை ஆனால் இந்த நாம் என்பதும் சமுதாயத்தில் இந்த உலகில் உள்ளவர்கள் என்பது என் கருத்து இதில் பண்ணையும் உண்டு.ஓவியன் ,
இன்னும்பிறரும் உண்டு என்பது என் எண்ணம்.

Unknown said...

நைனாவும், அபுஇப்ராஹிமும் சொன்னது நான் நினைத்து எழுதியவையே.........

ஆனால் நான் நினைக்காத வகையில் என் எழுத்துக்கே புது அர்த்தம் ...தஸ்தகீரின் ஸ்பெஷல் ....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நெ(ne) - சரி(யா?), நை(wai / nai) சரியா ? எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார்கள் இந்த செம்மொழி மாநாட்டிலும் சில எழுத்துக்களில் கைவத்தார்கள் ஆனால் அதன் பின்னர் என்ன ஆனதுன்னு தெரியலையே... தெரிந்தவர்கள் சொல்லவும்.

அப்துல்மாலிக் said...

நல்ல சிந்தனை, வரிகளின் கோர்வை அருமை...

நல்ல தேடல்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு