Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு 1 20

தாஜுதீன் (THAJUDEEN ) | August 05, 2010 | , ,

அன்பு சகோதரர்களே, கல்வி விழிப்புணர்வு சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் “கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”                                என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது நினைவிருக்கும்.             அந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நம் சகோதரர் ஷரபுதீன் அவர்கள் “இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம்.” என்று நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்கள் என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். இது சம்பந்தமாக இணையத்தில் ஏதாவது நல்ல விசயங்கள் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்த நேரத்தில் சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடமிருந்து ஒரு மடல் வந்தது, அதில் “CARREER and JOB” சம்பந்தமாக மிக அற்புதமான விடியோ சொற்பொழிவு சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D.  அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இது மிக பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இந்த வீடியோக்களை மிக கவணமாக அனைவரும் கேளுங்கள்.

சகோதர் சரபுதீன் அவர்களும் நல்ல திட்டங்கள் இருப்பதாக நமக்கு மடல் இட்டார்கள், இந்த வீடியோ தொகுப்பு நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்ப்பார்கிறோம்.

பகுதி - 1
 

 
பகுதி - 2
 

 
பகுதி - 3
 

 
பகுதி - 4
 

 
பிடிந்திருந்தால் பின்னூட்டமிடுங்கள். தயவு செய்து இந்த வீடியோக்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், முடிந்தால் இதை தரவிரக்கம் செய்து உங்கள் வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள்..


சமூக நோக்கத்துடன் இந்த பயனுள்ள செற்பொழிவை நமக்கு தந்த சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களுக்கு மிக்க நன்றி.  அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்.


 
தகவல்: முதுவை ஹிதாயத்

20 Responses So Far:

Adirai khalid said...

Masha Allah, this is a unique and Deep Impact messages. well said by Dr.M.I.SMB. lots of analyzes this guidance will bring to our community straightaway and whenever needed,
zijakallah hair

Unknown said...

மாஷா அல்லாஹ்! இந்தக் காயல்பட்டினச் சகோதரரின் 'கேரீர் கைடென்ஸ்' சொற்பொழிவு, நமதூர் பண்பாட்டு மற்றும் பழக்கங்களையொட்டிய பயனுள்ள சேவை. இன்ஷா அல்லாஹ், இதை நிச்சயம் எமது ஏ.எல்.எம். பள்ளியில் போட்டுக் காட்டி, மாணவ மாணவியர்க்குப் பயனுள்ளதாக்குவோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மாஷா அல்லாஹ்! நல்ல சொற்பொழிவு.

அஹ்மது மாமா நிச்சயம் நம் மாணவ மாணவிகளுக்கு இந்த அருமையான செற்பொழிவை காண்பிக்க வேண்டும். மிக முக்கியம் பெற்றோர்களுக்கு இதை காண்பிக்க வேண்டும்.

கவணிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சொற்பொழிவு நம்முர், காயல்பட்டினம் போன்ற ஊர்களில் பேசப்படும் தமிழில் இருப்பது தான். நிச்சயம் இது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

யாராவது இதை குறுந்தகடுகளாக இலவசமாக வெளியிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Unknown said...

இந்த ஐடியா எனக்கும் வந்தது. செய்வோம், இன்ஷா அல்லாஹ்!

அப்துல்மாலிக் said...

கல்வி விழிப்புணர்வு மிக மிக முக்கியம், சிறந்த வழிகாட்டல்தான் ஒருவரை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச்செல்கிறது

நல்ல பகிர்வு

Shameed said...

தெளிவான வீடியோ காட்சி விவரமான பேச்சு .
வீடியோகளை வைத்து பல ஹராமான காரியங்கள் நடக்கும் இந்த உலகில் வீடியோவை வைத்து பல நல்ல காரியங்களும் செய்யலாம் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு இந்த வீடியோ காட்சிகள்

Ashraf said...

நல்ல பயனுள்ள தகவல்

அதிரைநிருபர் said...

வருகை தந்த அனைத்து சகோதரர்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

வாங்க சகோதரர் அஸ்ரப், உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

இன்னும் படிப்பு பற்றிய வழிகாட்டல் விடியோக்கள் விரைவில் வெளியிடப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மிகச்சரியானதொரு வழிகாட்டியாக அமைந்த காட்சிப்பதிவும் அவர் தரும் உதாரன ஆதாரணங்களும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.இவ்வளவு எளிய முறையில் விளக்கினார்.சமீபத்தில் நான் கேட்ட மிகச்ச்சிறந்த ஊக்கம் தரும் உரை நடை இது.அல்ஹம்துலிலாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்....கண்ணான வாப்பா...என்னா அலஹா சொல்றாஹ...இதெல்லாம் சி.டி. போட்டு ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர்களால் போட்டு மாணவர்களுக்கு காட்டப்பட வேண்டிய பொக்கிசம். ஆசிரியர்கள் சொல்லித்தருவது புத்தகப்பாடம். இவர் சொல்லித்தருவதோ வாழ்க்கைப்பாடம். இது இல்லாமல் அது இல்லை. அது இல்லாமல் இது இல்லை. இரண்டும் ஒன்றோடொன்று பிணையப்பட வேண்டும். இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட ஒரு மாட்டு வண்டியின் நடுவே உட்காருபவர் (மாணவர்) சரியாக அதை இயக்கினால் அவர் போய் சேர வேண்டிய பாதை/இலக்கை எளிதில் அடையலாம் என்பதை மிக அருமையாக சொல்லி இருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கும் அதை கேட்கும் ஒவ்வொரு மாணாக்கருக்கும் அல்லாஹ் நேரான பாதையை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கி வைப்பானாக. ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஆசிரியர்கள் அடிக்கடி மாடுலேசனுடன் மாடு,மாடுன்னு திட்டுவதை(வதை!)பார்த்து(அனுபவித்து)இருக்கலாம்.சகோ. நைனா சொன்னபிந்தான் விளங்குகிறது மானாக்கன் மாடுஅல்ல(ஒருவகையில் மாடுதான் மாடு என்றால் செல்வம்)அந்த மாடுகளை செலுத்துபவன்(சாரதி?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க க்ரவ்ன் எங்க வாத்திங்க நிறையவே அப்படிச் சொல்லியிருக்காங்களே... "எருமை மாடு"ன்னு மறக்க முடியுமா அந்த வாத்தி(யாரு)ங்களை ! மாடு ஒட்டியிருக்கிறோம் மழைக்காக வகுப்பறையில் ஒதுங்கியிருந்த மாடுகளை (!!!)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.கல்வியெனும் நிலத்தில் படிப்பு எனும் புல்லை சிலர் (மாணவ,மாணவியர்) நுனிப்புல் மேய்வதும் சிலர் ஆழ(full )மேய்வதும் இதனால்தான் அழைத்தனரோ மாடு என்று?புல்லை,full-லா மேய்பவனே படிப்பாளி??? புல்லரிக்கிறதா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அப்ப எப்படி புத்தகப்புழு என்றுவந்தது? (க்ளூ) யாராவது சொல்வாங்களா?(சகோ.சாகுல் முதல் சகலரும் வருவாங்க அய்யா புழுவச்சி தூண்டி(விட்டாச்சு)போட்டாச்சு.

crown said...

ஏனுங்க க்ரவ்ன் எங்க வாத்திங்க நிறையவே அப்படிச் சொல்லியிருக்காங்களே... "எருமை மாடு"ன்னு மறக்க முடியுமா அந்த வாத்தி(யாரு)ங்களை ! மாடு ஒட்டியிருக்கிறோம் மழைக்காக வகுப்பறையில் ஒதுங்கியிருந்த மாடுகளை (!!!
-------------------------------------------------
"எருமை மாடு"ன்னு மறக்க முடியுமா அந்த வாத்தி(யாரு)ங்களை (அந்த வாத்தியங்களை?????)
எப்படியோ கொ(வ)ம்பு சீ(ஏ)வி விட்டுட்டேன்.
நைனா தம்பி காக்கா இனி மூக்கனாங்கயிறு போட்டு அடக்க வேன்டியது உங்கவேலை.எங்கே வார்தைச்சித்தர்(உன்னைப்போல் ஒருவன்)சகோ.ஹாலிது?ஓரங்க நாடகம் தொடரும் என்றார்விட்டார் குறை.தொட்டார் குறையாய் போனதேனோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//புத்தகப்புழு என்றுவந்தது? (க்ளூ)// படிக்கும்போது புழுங்கி புழுங்கி படிப்பதனாலோ ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எங்கே வார்தைச்சித்தர்(உன்னைப்போல் ஒருவன்)/// ரூம் போட்டு யோசிச்சுகிட்டு இருக்காரோ என்னவோ ? பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் படிக்கும்போது புழுங்கி புழுங்கி படிப்பதனாலோ ?
குலுங்கி குலுங்கி சிரித்தேன்,குளு,குளுவென்றிருந்தால் புழுங்க வேண்டியிருந்திருக்காது.வேர்வையிலும் கோர்வையா ஓயாமல் படிப்பவரே புத்தகப்புழு?அப்படியென்றால் நீங்கள் சொன்ன புழுக்கம் சரிதான்(அன்னாத்தே!) காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஓயாமல் படிப்பவரே புத்தகப்புழு? // இப்போவெல்லாம் ப்ளாக்புழு(தான்) அத்தனைப் புழுக்களும் வலை மேய்ச்சலில் இருப்பவர்களாகவே இருக்கிறனர், அச்சுப் புத்தகம் படிப்பது என்னவோ அதிகமாக குறைந்து விட்டது மெய்யே.

புழுங்கி புழுங்கி(ன்னா) : அதப் படிக்கனும் இதப் படிக்கனும் எதப் படிக்கனும்னு தெரியாம பரீட்சை நேரத்தில் படிக்காததை எல்லாம் கிழிச்சு எடுத்துகிட்டு ஓடாம இருக்கத்தான் இந்தப் புழுக்களின் வேலை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு