Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை சீற்றம் 1

அதிரைநிருபர் | August 10, 2010 | , ,

கடந்த சில நாட்களாக மிகப்பெரிய இயற்கை சீற்றம் கடும் மழை வெள்ளத்தால் நம் அன்டை நாடான பாகிஸ்தான்                                  படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை செய்திகள் நாம் சாதரனமாக காணமுடிகிறது.

இந்த கடும் மழை வெள்ளாம் கடந்த காலத்தில் இவ்வுலகை ஆட்டிப்படைத்த சுனாமி, ஹைத்தி நாடு புகம்பம் இவற்றைவிட பெரிய இயற்கை சீற்றம் என்று ஐ.நா சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாவம் இந்த பாவப்பட்ட அப்பாவி மக்கள் செயற்கை சீற்றத்தால் நாளுக்கு நாள் அவதிப்பட்டவர்களும் இந்த இயற்கை சீற்றம் இன்னும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க http://gulfnews.com/in-focus/pakistan-floods  சென்று பார்ர்க்கவும்.

நம் அன்டை நாடான பாகிஸ்தானில் எற்பட்ட வெள்ளம் போல் உலகில் வேறு எங்கும் வராது என்று யாரும் எண்ணிவிட முடியாது, இறைவன் நாடினால் இதைவிட படு மோசமான இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அல்லாஹ்வுக்கு பயந்து அவன் நமக்கு தந்த அருட்கொடைகளை எண்ணி நன்றி சொலுத்திவர முயற்சி செய்யவேண்டும்.

இந்த நேரத்தில், நாம் பாதிக்கப்பட்ட அந்த சகோதர சகோதரிகளுக்காக துஆ செய்யவேண்டும். தன் இல்லங்களையும், உடமைகளையும், பெருகளையும், சொந்தங்களையும் இழந்து வாழும் இம்மக்களுக்காக அல்லாஹ்விடம் பிரத்திப்போம்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)


நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸி  رَضِيَ اللَّهُ عَنْهُ    நூல்: அபூதாவூத், திர்மிதி)

வருவது ரமழான் மாதம் நம் முஸ்லீம் சமுதாயம் எல்லாவகையான அழிவுகளில் இருந்தும் பாதுகாப்புபெற அல்லாஹ்விடம் கண்ணீர்விட்டு துஆ செய்வோமாக.


Thanks to Gulf News

1 Responses So Far:

Ashraf said...

இந்த மக்கள்க்காக துவா செய்வோம்.

அஷ்ரப்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.