நம் அதிரைநிருபர் மற்றும் பல அதிரை வலைப்பூக்களில் சில நாட்களுக்கும் முன்னர் வெளியான பிச்சைக்காரர்களின் அட்டகாசம் மற்றும் நாம் செய்யும் தர்மங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இரு வேறு கட்டுரைகள் வெளியாகி நம் அனைவரையும் சிந்திக்க தூண்டியது. இக் கட்டுரைகள் ஜக்காத், மற்றும் தர்மம் சம்பத்தப்பட்டது என்பதால், அந்த இரண்டு கட்டுரையையும் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளேன்.
அல்லாஹ்வின் உதவியால் இவ்வருடம் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்தவரை நன்மைகள் பல செய்துள்ளோம், அவைகளில் மிக முக்கியமானது ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி சிலர் தனிப்பட்டமுறையிலும், வேறு சிலர் விரும்பிய அமைப்புகள் உதவியோடு ஜக்காத்தை வசூலித்து அதை தேவையுடையவர்களுக்கு கொண்டுச் சென்று சேர்ப்பதில் மும்முரம் காட்டினார்கள், நிச்சயமாக சேர்த்திருப்பார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாமல் இருக்கும் பட்சத்தில், அப்படி ஏதும் இருக்கவும் கூடாது என்று நம்புவோமாக.
பரவலாக பல அமைப்புகளால் வசூலிக்கப்பட்ட ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா ஆகியவைகள் அந்தந்த ஊர்களில் முறையாக தேடிப்பிடித்து தேவையுடைய வரியவர்களுக்கு முழுமையாக பகிர்ந்து கொடுக்கப்பட்டதா என்று இயல்பான கேள்விகள் நம்மைபோன்றோரின் எண்ண ஓட்டத்தில் எழாமல் இல்லை.
“ஜக்காத்” இது மிகப் பெரிய அற்புதமான "வறுமை ஒழிப்புச் சட்டம்" என்பதை நாம் அனைவரும் அறிந்ததே, இத்திட்டத்தை எப்படியெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துள்ள நாம் அதனை பல்வேறு காரணங்களால் இந்த அற்புதமான சட்டத்திட்டத்தை முறையாக செயல்படுத்த தவிறிவிட்டோம் அல்லது தவறி வருகிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இவைகளுக்கான காரணிகள் என்ன? யார்தான் இதற்கு பொறுப்பு? எப்படி “ஜக்காத்” என்ற கடமையை முறையாக அமுல் படுத்துவது?
நம்மைப் போன்றவர்களின் மனதில் நிலைத்திருப்பது ஒன்றே ஒன்று தான் அது நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமையின்மையே.
நம் ஊரையே எடுத்துக் கொள்ளுங்கள் குறைந்த பட்சம் 5 அல்லது அதற்கு மேலாக சமுதாய அமைப்புகள் (கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள், மற்ற அமைப்புகள்). இவ்வமைப்புகளால் பல வகைகளில் நன்மைகள் இருந்தாலும், போட்டி உணர்வு, பொறாமை வலுவாகி அமைப்புகளின் எண்ணிக்கையை விட, அவர்களால் பிரச்சினைகள்தான் அதிகம். கொள்கைகள் அடிப்படையில் பார்த்தால் நம் சமுதாய வளர்ச்சிக்கு பல அமைப்புகளால் நன்மைகளைவிட இடையூறுகள் தான் காணமுடிகிறது. அவைகளை பட்டியலிட்டால் வருடங்கணக்கில் பேசிக்கொண்டே போகலாம். நம் நோக்கம் இயங்கி வரும் சமுதாய இயக்கங்களைப் பற்றி குறை செல்லவதல்ல, மார்க்கரீதியில் நன்மையான காரியங்களை செய்யும் போதும் சரி, சமூக அரசியல் சம்பத்தப்பட்ட விசயங்களாக இருந்தாலும் சரி, சமுதாய ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதில் அமைப்புகளின் பங்கிற்கு அவைகளின் இயக்க வெறிதான் முன்னிலையில் உள்ளது என்ற ஆதங்கமே.
இவ்வகையான இயக்க மாயை நம் சமுதாயத்தின் மேல் விழுந்த சாபக்கேடு. இயக்க மாயை வலையில் சிக்கியிருக்கும் நல்ல அறிவாற்றலுள்ள சகோதரர்கள் அடுத்தவரை குறை கண்டு இயக்கம் நடத்தும் அரசியல் தந்திர போக்குகளை தூக்கி எறிந்துவிட்டு, அமைப்புகளின் எண்ணிக்கையை குறைத்து உங்களின் சீரான தெளிவான எண்ணங்களால் உயர்ந்திருங்கள், உங்களால் சமுதாயம் மேன்மையடையட்டும்.
குழுக்களாகவோ, பல அமைப்புகளாலோ வசூலிக்கப்படும் / சேகரிக்கப்படும் கடமையான ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா இவைகளை ஒரே அமைப்பின் கீழ் ஓர் அணியாக ஒன்றினைந்து விநியோகிக்கப்பட வேண்டும். நம்வூரில் பொதுசேவை நிறுவனமான “பைத்துல்மால்” போன்று அனைத்து தெருக்களின் பிரதிநித்துவம் பெற்ற ஒளிவு மறைவில்லாத (transparent) ஓர் அமைப்பு மூலம் ஜக்காத்தாக வசூலிக்கப்பட்டவைகளை விநியோக்கிக்கலாமே. நம்மிடையே எத்தனையோ விசயங்களில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நம் சமுதாயத்தின் வறுமை ஒழிப்பு என்ற ஒரே கண்ணோட்டத்தில் ஜக்காத், மற்றும் பித்ரா விசயத்தில் மட்டுமாவது ஒன்று சேர்ந்து வருடத்தில் ஒருமுறையேனும் நல்ல ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, அவற்றை முறையாக அமுல்படுத்த முயற்சிகள செய்யலாமே.
என்றுதான் ஒழியும் நம் சமுதாயத்தில் வேற்றுமையும், வறுமையும் ? எப்போது வரும் நம் சமுதாய ஒற்றுமை?
எங்கே செல்கிறது இந்த பாதை?
-- தாஜுதீன்
13 Responses So Far:
முத்தான யோசனை
முயற்சித்தால் முடியும் .
சகோ.தாஜிதீன் சொன்னது போல்..வறுமையை ஒழிக்கும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்று தந்தது இஸ்லாம்..இங்கு சொல்லப்பட்ட யோசனைகளை கடைபிடித்து ஒரு அமைப்பை உருவாக்கினால் நமது சமுதாயத்தில் வறுமை ஒரளவிற்க்கு ஒழிக்க முடியும்...அந்த உதவி தேவைபடுவர்களுக்கு சென்றடையும்..அல்லது...நோன்பு மாதத்தில் புர்காவை வாடகைக்கு எடுத்து கொண்டு “ tempera vary "முஸ்லிமாக வலம் வரும் குறத்திகளுக்கு போய்விடும்
எங்கே செல்கிறது இந்த பாதை?//
athaane
Yasir
புர்காவை வாடகைக்கு எடுத்து கொண்டு “ tempera vary "முஸ்லிமாக வலம் வரும் குறத்திகளுக்கு போய்விடும்
என்னம்மா வாட்ச் பண்றாங்க குறத்தியை !!!!
இந்த வாடகை புர்கா மேட்டர் இத்தனை நாலா நமக்கு புலப்படவில்லையோ?
To
Bro.Yasir
//புர்காவை வாடகைக்கு எடுத்து கொண்டு “ temporary' "முஸ்லிமாக வலம் வரும் குறத்திகளுக்கு போய்விடும்//
இப்படியெல்லாம் நடக்குதா நம் ஊரில்...நான் தான் 'அப்டேட்"ஆகாத ஆளாகிவிட்டேன் என நினைக்கிறேன்.
சொல் பேச்சுக் கேட்டால் சொர்க்கம் போகும் இந்த பாதை.
சன்டித்தனம் செய்தால்...?
//நம்வூரில் பொதுசேவை நிறுவனமான “பைத்துல்மால்” போன்று அனைத்து தெருக்களின் பிரதிநித்துவம் பெற்ற ஒளிவு மறைவில்லாத (transparent) ஓர் அமைப்பு மூலம் ஜக்காத்தாக வசூலிக்கப்பட்டவைகளை விநியோக்கிக்கலாமே//
தெருவுக்கொரு அமைப்பு என்பதைவிட ஊரின ஒரே அமைப்பாக பைத்துல் மாலையே வைத்துக்கொண்டு பைத்துல் மாலின் நிர்வாகத்தின் கீழேயே தெருவுக்கு ஒரு பிரதிநிதி நியமித்து வசூலித்து விநியோகிக்கலாமே?
சவுதி(ஜுபைல்) முதல் துபை வரை கிளைகள் நியமித்து பைத்துல் மாலுக்காக வசூலித்து அனுப்பியவர்களில் நானும் ஒருவன் என்ற தகுதியில் என் கருத்தை பதிவு செய்துள்ளேன்.மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் பதில் சொல்லவோ, பதில் பெற்றுத் தரவோ சம்மதம்.
அன்பு தாஜுதீன், சமூக அக்கறை பற்றி உங்களிடம் கற்க வேன்டியது நிறைய இருக்கு. வாழ்க உங்கள் நோக்கு.
அதிரை பைத்துல்மாலையே மையமாக வைத்து தெருவுக்கோ / முஹல்லாவுக்கோ ஒன்று அல்லது அதற்குமேலும் பிரதிநிதித்துவம் கொடுத்து செயல்படுத்தினால் அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும் அதன் பலனால் நம் நல்லெண்ணமும் ஈடேரும் !
இதற்கு ஊரிலிருக்கும் தலைகள் தங்கள் தலக்கட்டுக்கு மேலிருக்கும் கனத்தினை இறக்கிவிட்டு நலனையே முன்னிருந்து கைகோர்க்கலாமே !
நாமும் இணைந்திராத இயக்கங்களில்லை அவைகளோடு கைகோர்த்தோம், வியந்தோம், வியர்த்தோம் அதோடு அயர்ந்தோம் எல்லாவகையிலும் பட்டோம் இது அனுபவ புலம்பலில்லை நிஜம், இருப்பினும் இவைகள் முடிவுரையில்லையே...
//இவைகள் முடிவுரையில்லையே...// very well said
அபுஇபுறாஹிம் on Monday, September 27, 2010 11:41:00 PM said...
அதிரை பைத்துல்மாலையே மையமாக வைத்து தெருவுக்கோ / முஹல்லாவுக்கோ ஒன்று அல்லது அதற்குமேலும் பிரதிநிதித்துவம் கொடுத்து செயல்படுத்தினால் அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும் அதன் பலனால் நம் நல்லெண்ணமும் ஈடேரும் !
இதற்கு ஊரிலிருக்கும் தலைகள் தங்கள் தலக்கட்டுக்கு மேலிருக்கும் கனத்தினை இறக்கிவிட்டு நலனையே முன்னிருந்து கைகோர்க்கலாமே !
நாமும் இணைந்திராத இயக்கங்களில்லை அவைகளோடு கைகோர்த்தோம், வியந்தோம், வியர்த்தோம் அதோடு அயர்ந்தோம் எல்லாவகையிலும் பட்டோம் இது அனுபவ புலம்பலில்லை நிஜம், இருப்பினும் இவைகள் முடிவுரையில்லையே...
------------------------------------------------
அதானே சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.(வெல் ஸெட்ன்னு சொல்லனும்னு பார்த்தா சபீர் காக்கா சொல்லிட்டாங்க அதான் அதிகமா சில பில்டாப்)
அஸ்ஸலாமு அலைக்கும்., சமுதாயத்தின் வறுமை ஒழிப்பு என்ற ஒரே கண்ணோட்டம்.தம்முடைய எண்ண ஓட்டம் அடைய வேன்டும் ஈடேற்றம். அனால், உண்மை உரைப்பின் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றம் காரணம் சமுதாயத்தில் புரிந்த்து நடப்பதில் உள்ள தடுமாற்றம்.இது மாற வல்ல அல்லாஹ்வை வேண்டுவோமாக. நல்ல சமுதாயச்சிந்தனையுள்ள ஆக்கம்.பாராட்டுக்கள்.
சகோதரர்கள் Shahulhameed, Yasir, அப்துல்மாலிக்,ZAKIR HUSSAIN, sabeer, அபுஇபுறாஹிம், crown உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
//என்னம்மா வாட்ச் பண்றாங்க குறத்தியை !!!!// ஆமா காக்கா இது தற்செயலாக நடந்தது...நோன்பில் மனைவி வீட்டில் இருந்த போது ஒரு புர்காபோட்ட பெண் வந்து காசு கேட்டார்..வீட்டுக்காரங்க காசு கொடுத்துவிட்டு இது குறத்தி -வேசம் போட்டுக்கிட்டு வந்து இருக்கா என்றார்கள் ..நான் நம்பவில்லை.2 நாள் பிறகு அவளை பஸ்டாண்டில் பாசி மணிகளுடன் பார்த்த பிறகு உண்மை தெரிந்தது..//இப்படியெல்லாம் நடக்குதா நம் ஊரில்// ஆமா காக்கா...சீரியஸா காக்கா -ஒரு பெண்மணி அவர்களுக்கு புர்கா வாடகைக்கு கொடுக்கிறார்..
//பைத்துல் மாலின் நிர்வாகத்தின் கீழேயே தெருவுக்கு ஒரு பிரதிநிதி நியமித்து வசூலித்து விநியோகிக்கலாமே?
சவுதி(ஜுபைல்) முதல் துபை வரை கிளைகள் நியமித்து பைத்துல் மாலுக்காக வசூலித்து அனுப்பியவர்களில் நானும் ஒருவன்/// காக்காவின் கருத்தை ஆமோதிக்கிறேன்....
Post a Comment