படுப் பதுவோ...
போர்த் துவதோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,
நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!
திறந்த கண்களும்...
பறந்த பார்வையும்...
உறத்த நோக்கும்
அல்ல விழிப்பு,
பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!
காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச் சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை,
நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத் திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!
உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,
உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!
தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,
தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!
மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!
-சபீர்
27 Responses So Far:
படுப் பதுவோ...
போர்த் துவதோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,
நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!
------------------------------------------------
இமை கதவடைப்பதுவோ,இன்ன பிற செய்கையும் அல்ல உறக்கம் என்பது.மனசஞ்சலம் ,பேராசை,காமம் இன்னும் சில தீய துர்குணங்கள் அடக்குவதே எனும் பொருள் பொதிந்த போதி மரம் உங்கள் கவிதை நல்ல எண்ணதை விதைத்து இந்த உறக்கம் மூலம் சமுதாய மனித குலம் விழித்தெழ அருமையான ஆக்கம்.எப்படி பாரட்ட?????????
திறந்த கண்களும்...
பறந்த பார்வையும்...
உறத்த நோக்கும்
அல்ல விழிப்பு,
பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!
------------------------------------------------
நாம் நினைத்து கொண்டிருப்பதல்ல விழிப்பு!அது விழிப்பல்ல உறக்கம்.உண்மை விழிப்பு பிறர் துன்மம் களைவதும்,பிறருக்கு தீங்கிழைகா திருப்பதும்.அந்த துன்பத்தில் பங்கெடுப்பதுவுமே உன்மை விழிப்பு அடடா,இமை மூடி யோசித்தேன் பின் என் செயல் விழித்தது,மூளை முதன் முதலில் யோசிக்கத்துடங்கியது.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே என்னே வார்தை பிரயோகம்,இந்த கவிதை படிக்க கிடைத்தது எம் யோகம்.
உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,
உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!
---------------------------------------------
மூச்சு நிற்பதும் ,இதயம் இயங்காமல் மெய் (உடல்)உயிர் நீங்குவதுமல்ல இறப்பு என்பது.உயிர் இருந்தும் பிறருக்கு உதவாத இந்த உயிர் போத்திய மேனியும் செத்த பொணமே!.ஐயா!மேனி சிலிர்கிறது.உயிர்வரை இனிக்கிறது.வார்தை வருவதற்குள் நாவு நீர் தீர்ந்துவிடுகிறது.யதார்தம் அத்தனையும் உள்ளார்த்தம்.
அருமை..
வார்த்தை கோர்வை அதைவிட...
வாழ்த்துக்கள்
தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,
தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!
-----------------------------------------------
ஞானம் தாம் பெற்ற அறிவு ஞானமல்ல அது பிறருக்கு கற்பிக்கும் போதும்,எடுத்து உதவும் போதும் கிடைப்பதுவே ஞானம் அருமை,இதைவிட சொல்ல எனக்கு ஞானம் போதவில்லை.
Excellent !
வரிகளைத் தேடுகிறேன் வார்த்தகளால் பாராட்ட !
வரிகளை மடிப்பதெல்லாம்
கவிதை என்றாகாது !
சஃபீர் காக்காவின் கவிதைகள்
என்றுமே !
மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!
Once again EXCELLENT !
என்னோட படிக்காதவன் சொன்னான் எனக்கு டமில் தெரியாதுன்னு !
மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!
-------------------------------------------------
மாய ,மதிகெட்ட மயக்கம் அறிவு நீர் கொண்டு தெளிவடை.
உன்மையை ,எதார்தம் அறி!தனித்திரு,விழித்திரு,பசித்திரு.....மாய்மாலங்கள் மாயட்டும் மாச்சரியங்கள் மழுங்கிப்போகட்டும்.
மாஷா அல்லாஹ்
நல்ல நடை, சீரிய சிந்தனை, அடிமனதின் வெளிப்பாடு, அகண்ட பார்வை, நேர்மையான வரிகள், எழுத்தில் ஆழப்பதிப்பு , உங்கள் அர்தம் சொரிந்த வாசிப்பின் பிரதிபளிக்கும் ஒளிப்பிம்பம் என் வாசிப்பில் ஒரு கிளர்சியை வீசிசெல்கிண்றது
இப்போதெல்லாம் இங்கு இனயத்தில் விரயம் செய்ய வாய்ப்புகள் குறைவு, பின்னூட்டம் கூட இடமுடிவதில்லை காரணம்
வேலை, சமுதாய நிகழ்சிகள் கூட இருக்கலாம்
அது மட்டுமல்லாமல் "கலபுல" (அர்த்தம் புரியாமல்) என்று வரும் பின்னூட்டங்கள் பதில் கொடுக்கவும் மனம் வரவில்லை. முன்பு பிரியாணி வட்டிலாப்பம் என்று வரும் பிறகு அது பிரக்கெட்டில்() அடைத்து வந்தது . இப்பொழுது வழக்கு மொழியில் வழுக்கி விழிந்துள்ளது. கவணிக்கவும் !!!
பிடித்த வரிகள்
1
காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச் சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை,
நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத் திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!
2
திறந்த கண்களும்...
பறந்த பார்வையும்...
உறத்த நோக்கும்
அல்ல விழிப்பு,
பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!
வாழ்த்துக்கள் சபீர் !!!
படித்தேன், ரசித்தேன், யோசித்தேன்.
சபீர் காக்காவை வாழ்த்துவதற்காக என் மனதிடம் யாசித்தேன்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன்.
தேனீயால் மட்டும் "தேன்" கிடைப்பதில்லை, சபீர் காக்காவின் கவிதையாலும் "தேன்" கிடைக்கும் என்று.
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
படிக்கும் அனைவரையும் பல்லாயிரம் முறை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
தொடருங்கள் உங்கள் "தேன்" கவிதை சேவையை.
//உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,
உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!/// என்னே ஒரு ஆழம் பொதிந்த வரிகள்...உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லாமல் திண்டாடுகிறேன்..... magnificent, marvellous.....
உன்னைப்போல் ஒருவன் on Thursday, September 30, 2010 12:57:00 PM said.../// அது மட்டுமல்லாமல் "கலபுல" (அர்த்தம் புரியாமல்) என்று வரும் பின்னூட்டங்கள் பதில் கொடுக்கவும் மனம் வரவில்லை. முன்பு பிரியாணி வட்டிலாப்பம் என்று வரும் பிறகு அது பிரக்கெட்டில்() அடைத்து வந்தது . இப்பொழுது வழக்கு மொழியில் வழுக்கி விழிந்துள்ளது. கவணிக்கவும் !!! ///
அன்பின் ஹாலித், உன்னுடைய (உரிமையில் அழைக்கிறேன்) வேலைப்பளுவுக்கு ஊடல இங்கே நிதர்சனமா கருத்தை பதிந்ததுபோல் அவ்வப் போது வந்தும் செல்லவும். நிற்க ! இங்கே தாம் குறிப்பிட்டதுபோல் () சரி, சாப்பாடு, வழுக்கு மொழி வழுக்கிவிழுந்ததை கண்டு சும்மா இருக்காமல் அப்படியே சூட்டோடு சூடு ஒரு குட்டு வைக்க வேண்டியதுதான அப்போதுதான் அவைகள் உணரப்படும். இதனைக் முன்னிருத்தி உன்னோட நல்ல சிந்தனையோட்ட கருத்துக்களை இங்கே பதியத் தவறவேண்டாம், தொடர்ந்து வருவதோடில்லாமல் உள்ளத்தில் உள்ளதை (சொல்பவன் நீ) சொல்லிவிடு !
மேலே () போட்டது உனக்கும் எனக்கும் மட்டுமே.
யதார்த்தங்களை பதார்த்தங்கள் போல்
பு(கு)ட்டு வைப்பதில்
முதல் முன்னோடி நீங்கள்தான்.
சபீர்...இந்த கவிதையை படிக்க அழகாக இருக்கிறது, ஆனால் எழுத தேவை உண்மையை எதிரில் நிக்க வைத்து பார்க்கும் மனம். வாழ்க்கையின் நிதர்சனம் உனக்கு காட்டியதை உனக்குள் வாங்கி அழகிய தமிழில் ஒரு ஆபரணம் மாதிரி செய்கூலி சேதாரம் இல்லாமல் தந்திருக்கிறாய்.
excellent...
\\பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!//
beautiful..........
நிழல் சுடாது ஆனால் நிஜம் நிமிர வைக்கும் ஆதலால் "இது கவிதைத் தங்கமே மெய்"யே
அருமையான வார்த்தைகள் கொண்ட கவிதை
வாழ்த்துக்கள் சபீர் அவர்களே.
மனிதர்களுக்கு மத்தியில் நிகழும்
மனிதர்களுக்குள் நிகழும்
நிகழ்வுகள்
உறங்கியதுபோல் விழித்து
விழித்ததுபோல் உறங்கி
ஜனித்ததுபோல் மரித்து
மரித்ததுபோல் ஜனித்து
வாழ்வதுபோல் தாழ்ந்து
தாழ்வதுபோல் வாழ்ந்து
கற்றதுபோல் கல்லாது
கல்லாததுபோல் கற்று
அனைத்தும்
யதார்த்தங்களையும்
மதிமயக்கங்களையும் சார்ந்ததே!
அதையுணைர்ந்து
மனிதன் மனிதனாக வாழ
மனதுக்குள்
மனிதம் குடிகொள்ளவேண்டும்.
அன்புடன் மலிக்கா
சகோதரர் அதிரைக் கவி "சஃபீர்" அவர்களின் பதிவுகள் யாவும் என்றுமே கவிதைகளே ! அதன் பின்னுட்டங்களும் கவிதையாகவே அமைவது அதன் சிறப்பே ! வாருங்கள் கவிஞர் மலிக்கா அவர்களே !
சகோ.crownதான் முதலில் விமரிசக்க வேண்டும் என விரும்பினேன்.நடந்தது.
எல்லோரும் விமரிசிக்கும்போது crown பதவுறையாகவே பங்களிப்பார். (திருக்குறளைப்போலவே பரிமேலழகரின் பதவுறையும் பேசப்பட்டதை நினைவுகொள்க)
சகோ. உன்னைப்போல் ஒருவன்...
உங்களைப்போல் ஒவ்வொருவரும்
என்னைப்போல் ஒருவனாக இங்கு இணைந்தோமானால்
நம்மைப்போல் நிறைய இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் பசி ஆறலாம்.
கவிதையை விமரிசித்த நீங்கள்
//அடிமனதின் வெளிப்பாடு//
என்ற சொற்களில் என்னை விமரிசித்ததாகவே கொள்கிறேன்.
சகோ. அபு இபுறாகிம், yasir, தாஜுதீன், ஷாகுல், அ.மாலிக், harmys: உஙகள் அனைவரின கை தட்டல்களுக்கும் நன்றி.
ஜாகிர்: என்னை அறிந்த உனக்கு என் கவிதைகள் என் கொள்கைகள் என்பதும் தெரியும்.
//ஒரு ஆபரணம் மாதிரி செய்கூலி சேதாரம் இல்லாமல் தந்திருக்கிறாய்//.
உன்னால் மட்டுமே இவ்வளவு சொகுசாக விமரிசிக்க முடியும்
அன்புடன் மல்லிக்கா:
//மனிதன் மனிதனாக வாழ
மனதுக்குள்
மனிதம் குடிகொள்ளவேண்டும்//.
இதைச் சொல்லத்தான் நான் இத்தனை வார்த்தை ஜாலம் செய்ய வேண்டியதாயிற்று.
இப்படி 'நச்" சென்று சொல்லத் தெரியாமல் போயிற்றே!
இந்த கவிதையை 'தகுதியானதாக" கண்டெடுத்த அதிரை நிருபர் குழுக்கு என் நன்றி.
-sabeer
sabeer on Friday, October 01, 2010 9:57:00 PM said... :: சகோ. அபு இபுறாகிம், yasir, தாஜுதீன், ஷாகுல், அ.மாலிக், harmys: உஙகள் அனைவரின கை தட்டல்களுக்கும் நன்றி. //
கவிக் காக்கா கைத்தட்டலோடிருக்க மாட்டோம், கைகோர்ப்போம் உங்கள் உணர்வுகளோடும் உளமுடன் என்றுமே இன்ஷா அல்லாஹ்...
அபுஇபுறாஹிம் on Friday, October 01, 2010 10:13:00 PM said...
sabeer on Friday, October 01, 2010 9:57:00 PM said... :: சகோ. அபு இபுறாகிம், yasir, தாஜுதீன், ஷாகுல், அ.மாலிக், harmys: உஙகள் அனைவரின கை தட்டல்களுக்கும் நன்றி. //
கவிக் காக்கா கைத்தட்டலோடிருக்க மாட்டோம், கைகோர்ப்போம் உங்கள் உணர்வுகளோடும் உளமுடன் என்றுமே இன்ஷா அல்லாஹ்...
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.அபுஇபுறாகிம் என் பெயரை சொல்லாமல் விட்டுடிங்களே என்னையும் உங்க குரூப்ல சேக்காததற்கு உங்களுடன்(செல்ல)சண்டை.(சும்மா டமாசுக்கு)
sabeer on Friday, October 01, 2010 9:57:00 PM said...
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.crownதான் முதலில் விமரிசக்க வேண்டும் என விரும்பினேன்.நடந்தது.
--------------------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்).
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சபீர்! உணர்வுபூர்வமான அருமையான
உண்மையான கவிதை :
''அதிரை கவி சபீர் அழகான பட்டம்''
வாழ்த்துக்கள்!
1) /// மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்! ///
------------------------------------------
அனைத்தையும் மறந்து
அசைபோடும்
எண்ணங்களுக்கு
தாழ்ப்பாள் இட்டபின்
வரும் ஆழந்த உறக்கமே
உறக்கம் தவிர
பஞ்சு மெத்தையில்
கண் மட்டும் மூடியிருக்க
பலதரப்பட்ட கவலையுடன்
இரவு முழுதும் புரண்டு கொண்டு
இருப்பது உறக்கம் இல்லை.
2) /// பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு! ///
---------------------------------------------------------
பிறர் வலி உணராமல்
என் வலி பெரிதென
காலங்களை கடத்திக்
கொண்டு இருக்கும்
இயந்திர மனிதனாகி
போன வேளையில் மனிதத்தை
எங்கே தேட???
3) /// நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத் திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை! ///
---------------------------------------------------------
தினமும் விடிகிறது
நான் என் நலம்
மட்டும் எண்
கண் முன்னால்
தோன்ற அதை மட்டும்
செய்து - இதுதான் வாழ்க்கை
என்று பிறந்தேன்
வளர்ந்தேன் - செத்தேன்
என்று சென்று விடுகிறேன்
இதில் மனிதத்தை
எங்கே தேட?
4) /// உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாம லிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்! ///
------------------------------------
பிற உயிர்களுக்கு
நான் உதவ
அந்த உயிரால்
எனக்கு என்ன லாபம்
என்று கணக்கு
போடும் மனிதனாகி
போன வேளையில்
மனிதத்தை எங்கே
போய் தேட???
5) /// தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்! ///
------------------------------------------------------
என் முயற்சியால்
கஷ்டம் பல அடைந்து
பெற்ற அறிவை
எந்தவித விளம்பரமும்
லாபமும் இல்லாமல்
உனக்கு தருவேனோ?
என்று கேட்கும் மனிதர்களிடம்
அறிவையும் - மனிதத்தையும்
எங்கே தேடுவது?
6) /// மயக்கம் தெளி!
யதார்த்தம் அறி! ///
-----------------------------------------------------
மயக்கம் தெளிந்தேன்
யதார்த்தையும்
அறிந்தேன்
என் நலம்,என் அறிவு,
என் குலப்பெருமை
திரும்பிய பக்கம்
எல்லாம் நான்! நான்! நான்!
எங்கே மனிதத்தை தேட???
---------------------
Alaudeen .S.
என் முயற்சியால்
கஷ்டம் பல அடைந்து
பெற்ற அறிவை
எந்தவித விளம்பரமும்
லாபமும் இல்லாமல்
உனக்கு தருவேனோ?
என்று கேட்கும் மனிதர்களிடம்
அறிவையும் - மனிதத்தையும்
எங்கே தேடுவது?
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .சகோ.அலாவுதீன் அற்புத விளக்(கு)கம்!!!!!!!மொத்ததில் நான் என்ற சுயனல இருள் நீங்கி நாம் என்ற விளக்கு ஒளித்தரட்டும் சமுதாயம் மிளிரட்டும்.(உங்க வார்தைகளை கடனாகத்தருவீயலா)
//என் முயற்சியால்
கஷ்டம் பல அடைந்து
பெற்ற அறிவை
எந்தவித விளம்பரமும்
லாபமும் இல்லாமல்
உனக்கு தருவேனோ?
என்று கேட்கும் மனிதர்களிடம்//இது மதி மயக்கம்; யான் பெற்ற அறிவு பெறட்டும் இவ்வையகம் யென போதிக்க எண்ணுதல் தெளிவு. விளங்கி விளக்கியமைக்கு நன்றி
வீழ்கின்ற நிழலை
எழுந்து நிற்கச் சொல்லும் அதிரைக் கவி "சஃபீர்" காக்கா உங்களால் இங்கே பின்னூட்டங்களினூடே மற்றுமொரு சமுதாயக் கவியை கண்டெடுத்தோம் இவைகள் தொடரும் என்றும் இன்ஷா அல்லாஹ்...
வஅலைக்கும் ஸலாம் வரஹ் சகோதரர் தஸ்தகீர் அவர்களே!
***சகோ.அலாவுதீன் அற்புத விளக்(கு)கம்!!!!!!!*** இந்த அற்புத விளக்கைதான் இன்று வரை தேடிக்கொண்டு இருக்கிறேன். கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பரிசு உண்டு.
***(உங்க வார்தைகளை கடனாகத்தருவீயலா) ***
வார்த்தைகளை கடனாக தந்தால் (கடன் அன்பை முறித்து விடும்). அதனால் தங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன். சகோ.அலாவுதீன்.
alavud38 on Monday, October 04, 2010 12:56:00 PM said... வார்த்தைகளை கடனாக தந்தால் (கடன் அன்பை முறித்து விடும்). அதனால் தங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன். சகோ.அலாவுதீன
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பளிப்பாகத்தருவதும் சகோதரனின் கடனே(கடமை)
Post a Comment