ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - ஒரு புத்தாக்கம்

நமதூரில் 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற பாரம்பரியமான முன்னோடிச் சமூக அமைப்பு, 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.  கடந்த காலத்தில் யார் யார், எப்படி எப்படி இச்சங்கத்தை நிர்வகித்துவந்தார்கள் என்பதை நாம் இப்போது கருத்தாடல் செய்ய விரும்பவில்லை.  மாறாக, இதன் செயலாக்கங்களை எதிர்காலத்தில் எப்படிப் பயனுள்ளவையாக முன்னெடுத்துச் செல்வது என்பதையே இங்குப் பேசப் போகிறோம்.

அதற்கு முன்னதாக, அண்மையில் இச்சங்கத்தின் Revival அல்லது  Reformationக்காக, இச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமதூர் 'மஹல்லா'க்களின் நலன் விரும்பிய சகோதரர்கள், குறிப்பாக ஆலிம்கள் எடுத்துக்கொண்ட நன்முயற்சிகளையும் இங்கு நினைவுகூர்வது இன்றியமையாததாகும்.  கடந்த புனித ரமளான் ஒரு மாதம் முழுவதிலும் சந்திப்புகள், ஆலோசனைகள், விமரிசனங்கள், பரிந்துரைகளால் தம்முடைய இபாதத்துகளைக்கூடக் குறைத்துக்கொண்டு, சங்கத்தின் சிறந்த  புத்தாக்கத்திற்காகப் பாடுபட்ட நல்லவர்களை நாம் நன்றியோடு நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

அந்த நல்லவர்கள் முதலில் செக்கடிப்பள்ளியிலும், பின்னர் மரைக்காபள்ளியிலும் பொதுக்குழுவையும் செயற்குழுவையும் கூட்டி, அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் வழிநடத்தி, முடிவில் in a diplomatic way இதன் எதிர்கால நிர்வாகிகளைத் தெரிவு செய்தார்கள்.

முதல் நாள் அமர்விலேயே - பொதுக்குழுக் கூட்டத்தில் சிலர் எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்ததை நம்மால் அவதானிக்க முடிந்தது.  அவர்கள் 30 பேர் கொண்ட தேர்வுக் குழுவுக்கு எடுக்கப்படாததன் காரணமாகவோ என்னவோ, அடுத்த நாள் மரைக்காபள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வுக்குச் 'சமுகம்' அளிக்கவில்லை.  ஆனால், சிலர் தங்களையும் தேர்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆலிம்களிடம் வற்புறுத்தியதால், அவர்களும் அக்குழுவில் சேர்க்கப்பட்டார்கள்.  இடையில் சில சலசலப்புகள் ஏற்பட்டாலும், நடுவர்களின் அரவணைப்பு முறை, அவர்களை அடங்கச் செய்தது!

ஒற்றுமையை குலைப்பதையே நோக்கமாகக் கொண்ட ஷைத்தான்கள் சிலர் தூபமிடப்பட்டவர்கள் போல் ஆயினர்!  அதன் விளைவு, ஒரு notorious நோட்டீஸாக வெளிவந்ததாம்!  "மரண அறிவிப்பு" என்று தலைப்பிடப்பட்ட அந்த நோட்டீஸில், 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' மரணமடைந்துவிட்டதாகவும், அதற்கான மூன்றாம் 'ஹத்தம்' மரைக்காபள்ளியில் ஓதப்படுவதாகவும் அந்த நோட்டீஸை வெளியிட்ட 'பந்தாக்கள்' ஓலமிட்டிருந்தார்கள்!  அந்த நோட்டீஸ் ஆலிம்களின் பார்வைக்கு வந்தபோது, அவர்கள் அதை 'mind' பண்ணவில்லை.

நிர்வாகக் குழு அமைந்த பின்னர் வெளியில் வந்த எம்மிடம் 'well wisherகள்' சிலர், "உங்களை ஏன் புறக்கணித்தார்கள்?  இது திட்டமிட்டுச் செய்த சதியல்லவா?  ஆலிம்சாக்களுக்கு என்ன தெரியும்?  இது அவர்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்த முடிவு; உங்களைப் பற்றியெல்லாம் 'அப்படி' 'இப்படி' என்று பேசி இருக்கிறார்களே?" என்று நம் மீது கரிசனம் உள்ளவர்கள் போன்று கருத்துக் கூறினார்கள்.  "தேர்ந்தெடுக்கப்படாதது நல்லதுதான்;  அப்போதுதான் நமக்குள்ள மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியும்" என்று நாம் சமாதானம் சொல்லியும், அவர்கள் தமது 'பல்லவி'யையே பாடிக்கொண்டிருந்தனர்.  We didn't care.
நாம் பல கருத்துகளைக் குறிப்பெடுத்துக்கொண்டு போயிருந்தும், அடக்கத்தால் அவற்றை வாசித்துக் காட்டவில்லை.  பின்னர் தனிமையில், சம்மந்தப்பட்டவர்களீடம் அவற்றுள் சிலவற்றைக் கூறி, அவர்களின் இசைவைப் பெற்றோம்.  இன்னும் சில unresolved matters உள்ளன.  அவற்றைப் புதிய நிர்வாகக் குழுவிடம் நம் பரிந்துரைகளாக முன்வைக்கிறோம்:

  • செயற்குழுவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெளிவில்லை.  நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட 30 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களே செயற்குழு உறுப்பினர்களா?  இதனை விரைவாக முடிவு செய்ய வேண்டும்.  ஏனெனில், எங்களையும் சேருங்கள் என்று சிலரும், எங்களைச் சேர்க்காதீர்கள் என்று சிலரும், வெளியூர்களில் உள்ள சிலரும் இதில் இடம்பெற்று உள்ளார்கள்.
  • சங்கத்தின் தற்போதைய 'பைலா' கண்டிப்பாக மறு பரிசீலனை செய்யப்பட்டு, சேர்க்க வேண்டியவை சேர்க்கப்பட்டுப் புதிய உருவில் வெளியிடப்பட வேண்டும்.  அதன் பிரதிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
  • இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்தில் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஊருக்கே பொதுச் சங்கமாக அமைவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
  • உள்ளூர் ஆலிம்களை முன்னிலைப் படுத்தியே ஒற்றுமை முயற்சிகளும் சங்கச் செயல்பாட்டு முறைகளும் பேசப்பட்டன.  ஆனால், எமது கருத்துப்படி, அந்த ஆலிம்களுக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய உள்ளன.  எனவே, அவர்கள் சங்க நிர்வாகத்தில் ஈடுபடாமல், 'ஷரீஅத்' சம்மந்தமான விஷயங்களில் மட்டும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
  • சங்கத்திற்குட்பட்ட தெருக்களில் நடக்கும் திருமணங்களில் வரதட்சனை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நமதூரில் நடக்கும் மார்க்கப் புறம்பான அநாச்சாரங்களுக்குச் சங்கத்தின் மூலம் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சம்மந்தப்பட்டவர்களிடம் அவற்றை நிறுத்தக் கோரவேண்டும். 

நாம் குறிப்பெடுத்துச் சென்றவற்றுள் சிலவற்றைப்பற்றி நிர்வாகிகள் தேர்வுக் கூட்டத்திலேயே பேசப்பட்டுவிட்டதால், அவற்றை மீண்டும் குறிப்பிடவில்லை.

சிலரின் அரசியல் பின்புலம், அடாவடித் தனம், காவல்துறைத் தொடர்பு, காட்டிக் கொடுக்கும் கயவாலித் தனம், கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், முறையான அரசுப் பதிவைப் பெற்ற நமது சங்கம் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடவேண்டும் என்பதுவே எமது வேணவா.

எமக்கு உள்ளூரிலும் வெளி நாடுகளிலிருந்தும் ஆர்வமூட்டும் பரிந்துரைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி!

(இன்ஷா அல்லாஹ், 'அல்-அமீன் பள்ளி' பற்றிய எமது அடுத்த கட்டுரை விரைவில்.)

-- அதிரை அஹமது

17 கருத்துகள்

அதிரைநிருபர் சொன்னது…

// 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஊருக்கே பொதுச் சங்கமாக அமைவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.//

நல்ல யோசனை, ஊர் ஒற்றுமையை வெறும் தீர்மானத்தில் இல்லாமல் செயல்களிலும் இருக்க வேண்டும் என்பதை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்களின் நடத்தைகளால் உறுதி செய்ய வேண்டும் என்பது என்னைப் போன்றாவர்களின் ஆவல்.

அதிரைநிருபர் சொன்னது…

//திருமணங்களில் வரதட்சனை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.//

வரதட்சனை திருமணங்களில் கலந்துக்கொள்வதில்லை என்பதை கொஞ்சம் அளுத்தமாக சொன்னலாம்.

//நமதூரில் நடக்கும் மார்க்கப் புறம்பான அநாச்சாரங்களுக்குச் சங்கத்தின் மூலம் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சம்மந்தப்பட்டவர்களிடம் அவற்றை நிறுத்தக் கோரவேண்டும்.//

மார்க்கப் புறம்பான அநாச்சாரங்களை கொஞ்சம் விரைவாக நம் அனைவருக்கு தெரியப்படுத்தினால் நாமும் அவற்றை வலுவாக எடுத்துச் சொல்ல ஏதுவாக இருக்கும்.

நல்ல அலசல் விமர்சனம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

/// இச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமதூர் 'மஹல்லா'க்களின் நலன் விரும்பிய சகோதரர்கள், குறிப்பாக ஆலிம்கள் எடுத்துக்கொண்ட நன்முயற்சிகளையும் இங்கு நினைவுகூர்வது இன்றியமையாததாகும்.///

இந்தச் சங்கத்தின்கட்டுப் பாட்டிலிருக்கும் "மஹல்லா"க்கள் எவை ? ஊருக்கு பொதுவான சங்கமாக இருக்கிறதென்றால் இவைகள் அவசியம் வெளித் தெரிய வேண்டும்.

எங்களின் ஆதங்கங்களில் சிலவற்றையும் "ஒரு புத்தாக்கம்" உள்ளடக்கியது அனைவரின் சார்பாகத்தான் என்று ஏற்போம்.

Shameed சொன்னது…

// 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஊருக்கே பொதுச் சங்கமாக அமைவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.//////////////
நல்லெண்ணம் தான்.
ஆனால் ஒரு சிலர் பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டினால் குழப்பங்களே மிஞ்சும் என்பது புரியாமல் இருப்பது ஏனோ !!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Shahulhameed said...

நல்லெண்ணம் தான்.
ஆனால் ஒரு சிலர் பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டினால் குழப்பங்களே மிஞ்சும் என்பது புரியாமல் இருப்பது ஏனோ !!!!

இந்த "பஞ்ச்" ஊட்டிவிட்டவங்களுக்கா இல்லை கிள்ளி விட்டவங்களுக்கா ?


தொட்டிலை ஆட்டி விட்டதை எங்கையோ வாசித்த மாதிரி எனக்கு ஞாபகம்.

Shameed சொன்னது…

அபுஇபுறாஹிம்
இந்த "பஞ்ச்" ஊட்டிவிட்டவங்களுக்கா இல்லை கிள்ளி விட்டவங்களுக்கா ? /////////

ஊட்டி விட்டவங்கதான் கில்லி விடுறாங்க கில்லி (அந்த கில்லி அல்ல)
விடுரவங்கதான் ஆட்டிவிட்றாங்க தொட்டி.

இது என்னங்க "பஞ்ச்" மேலே ஒர்த்தன் எல்லாத்தையும் பார்த்துகொண்டு இருக்கின்றான்
கடைசிலே அவன் கொடுப்பான் பாருங்க பிக் பஞ்ச்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நீங்க "ப்ஞ்ச்" மேல ஒருத்தன்னு சொன்னத அவரசத்தில "பெஞ்சு" மேலன்னு படிச்சுட்டேன் அதுக்கபுறம்தான் மீண்டும் வாசிச்சேனா தலையில குட்டு விழுந்த feel(smiling(s) :))

crown சொன்னது…

அபுஇபுறாஹிம்
இந்த "பஞ்ச்" ஊட்டிவிட்டவங்களுக்கா இல்லை கிள்ளி விட்டவங்களுக்கா ? /////////

ஊட்டி விட்டவங்கதான் கில்லி விடுறாங்க கில்லி (அந்த கில்லி அல்ல)
விடுரவங்கதான் ஆட்டிவிட்றாங்க தொட்டி.

இது என்னங்க "பஞ்ச்" மேலே ஒர்த்தன் எல்லாத்தையும் பார்த்துகொண்டு இருக்கின்றான்
கடைசிலே அவன் கொடுப்பான் பாருங்க பிக் பஞ்ச்.

Friday, September 17, 2010 5:21:00 PM
Blogger அபுஇபுறாஹிம் said...

நீங்க "ப்ஞ்ச்" மேல ஒருத்தன்னு சொன்னத அவரசத்தில "பெஞ்சு" மேலன்னு படிச்சுட்டேன் அதுக்கபுறம்தான் மீண்டும் வாசிச்சேனா தலையில குட்டு விழுந்த feel(smiling(s) :))
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மாத்தி படிச்சா ஏன் smiling???? that spelling mistake now i am smiling(hahahahaha)சும்மா டாமாசுக்கு.

Shameed சொன்னது…

எதிர்காலத்தில் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஊருக்கே பொதுச் சங்கமாக அமைவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.//////////////

ஏன் ஊருக்கே நாங்கதான் (ஒரு குறிப்பிட்ட தெரு பெயரை சொல்லி ) பஞ்சயாத்து செய்தோம் என்று ஒரு கட்டுரை போட்டு அதுக்கு பின்னுட்டம் இட அடிதளமா இது

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.சாகுல் நீங்க சந்தேகப்படுவது சரிதான்.இப்படிப்பட்ட சூழல் தான் இதுவரை ஒவ்வொருத்தெருவிலும் நடந்தேறிவருகிறது அது நம் துரதிஸ்டம். நான் என் முகவரி என்று கொள்வது என் தெருவையல்ல நான் என்ற என் தனித்துவதை அதற்கு சாட்சிகள் என் நண்பர்கள் எல்லாத் தெருவிலும் படர்ந்து இருப்பது.
அவ்வாறு ஒரு சிந்தனை இருக்க அதை சந்தேகக் கண்கொண்டு பார்க வேண்டாம் என்பது என் வேண்டு கோள் இப்படியே சொல்லிக்கொண்டுப் போனால் ஒற்றுமைக்கு அடிகோலிட முடியாது.கட்டிடம் என்பது அது எங்கே வேண்டும் என்றாளும் இருக்கட்டும் அதில் உறுப்பினராக அனைத்து தெரு வாசிகளும் பங்கு பெறத்தோதுவாய் அமைந்தால் சுழற்சி முறையில் தலைமை அமைந்தால் அது சாத்தியம் அது பற்றி பேசலாமே???

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Shahulhameed said...
ஏன் ஊருக்கே நாங்கதான் (ஒரு குறிப்பிட்ட தெரு பெயரை சொல்லி ) பஞ்சயாத்து செய்தோம் என்று ஒரு கட்டுரை போட்டு அதுக்கு பின்னுட்டம் இட அடிதளமா இது
Friday, September 17, 2010 6:23:00 PM //

அன்பின் சாஹுல் அதான் அங்கே ஏறி / இறங்க அனுமதியுள்ள நம் மதிப்பை பெற்ற சகோதரர் சரியான மறுப்பு பின்ன்னுட்ட மிட்டிருக்காங்களே அவர்கள் நம் கருத்தோடு ஒட்டியவங்க அதுமட்டுமல்ல நம் சார்பாக பதிஞ்சுட்டாங்க... நாம அவர்களை நம்மோடு சிந்திக்க வைக்கலாம்னு மாற்றி மாற்றி யோசிப்போம் (ஐயா இது கண்ட கனவல்ல ஏன்னா என் வூட்டுக்காரங்க தூங்கிட்டேன்னு சொல்லிடுவாங்க)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Shahulhameed said...
ஏன் ஊருக்கே நாங்கதான் (ஒரு குறிப்பிட்ட தெரு பெயரை சொல்லி ) பஞ்சயாத்து செய்தோம் என்று ஒரு கட்டுரை போட்டு அதுக்கு பின்னுட்டம் இட அடிதளமா இது
Friday, September 17, 2010 6:23:00 PM //

அன்பின் சாஹுல் அதான் அங்கே ஏறி / இறங்க அனுமதியுள்ள நம் மதிப்பை பெற்ற சகோதரர் சரியான மறுப்பு பின்ன்னுட்ட மிட்டிருக்காங்களே அவர்கள் நம் கருத்தோடு ஒட்டியவங்க அதுமட்டுமல்ல நம் சார்பாக பதிஞ்சுட்டாங்க... நாம அவர்களை நம்மோடு சிந்திக்க வைக்கலாம்னு மாற்றி மாற்றி யோசிப்போம் (ஐயா இது கண்ட கனவல்ல ஏன்னா என் வூட்டுக்காரங்க தூங்கிட்டேன்னு சொல்லிடுவாங்க)

Unknown சொன்னது…

"ஏன் ஊருக்கே நாங்கதான் (ஒரு குறிப்பிட்ட தெரு பெயரை சொல்லி ) பஞ்சயாத்து செய்தோம் என்று ஒரு கட்டுரை போட்டு அதுக்கு பின்னுட்டம் இட அடிதளமா இது?" -Shahul

தம்பி ஷாஹுல், நாகரிகமான பின்னூட்டங்கள் வரவேற்கத் தக்கவை. இது போன்ற negative responses வெறும் காழ்ப்புணர்ச்சிகளையே பெருக்கும். ஊரின் ஒரு பகுதியில் இயங்கும் சங்கம், அதன் எதிர்காலச் சிறப்புக்களால் ஊரின் மற்ற தெருவாசிகளைக் கவர்ந்து, அவர்களும் அந்தச் சிறப்பில் கை கோர்த்து ஒன்றிணையும்போது, அவர்களும் இயல்பாகவே அச்சிறந்த அமைப்பில் பங்கு பற்றுவார்கள். அவர்களும் இணைந்த பின்னர், அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கத்தானே செய்யும்? அப்போது, ஊரின் ஒற்றுமை நிலைநாட்டப்படுமே என்ற பரந்த மனப்பான்மை ஏன் உங்களுக்கு ஏற்படவில்லை? Please avoid narrow mindedness.

Shameed சொன்னது…

அதிரை அஹ்மது said...
தம்பி ஷாஹுல், நாகரிகமான பின்னூட்டங்கள் வரவேற்கத் தக்கவை. இது போன்ற negative responses வெறும் காழ்ப்புணர்ச்சிகளையே பெருக்கும். ஊரின் ஒரு பகுதியில் இயங்கும் சங்கம், அதன் எதிர்காலச் சிறப்புக்களால் ஊரின் மற்ற தெருவாசிகளைக் கவர்ந்து, அவர்களும் அந்தச் சிறப்பில் கை கோர்த்து ஒன்றிணையும்போது, அவர்களும் இயல்பாகவே அச்சிறந்த அமைப்பில் பங்கு பற்றுவார்கள். அவர்களும் இணைந்த பின்னர், அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கத்தானே செய்யும்? அப்போது, ஊரின் ஒற்றுமை நிலைநாட்டப்படுமே என்ற பரந்த மனப்பான்மை ஏன் உங்களுக்கு ஏற்படவில்லை? Please avoid narrow mindedness/////////////////////
தெரு புகழ் பாடிகளுக்கு ஊக்கம் தரும் பின்னுட்டமிட்ட உங்களுக்கும் நீங்கள் மேற்சொன்ன வார்த்தை பொருந்துமா? அது நாகரிகமா சற்று சிந்தித்து பாருங்கள் அஹ்மத் காகா அவர்களே

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அந்த சர்ச்சைக்குரிய பதிவு இப்போது அங்கேயிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறது, பிரிந்த மனங்களை இனைக்கும் பரந்த மனம் கொண்டவர்கள் நாம் (சொல்வதில் மட்டுமல்ல நிகழ்த்திக் காட்டுவோம்).

Cool down சொல்வதா hot down சொல்வதா ? எது எப்படி இருந்தாலும் இந்த சர்ச்சை இப்போ downஆகட்டுமே

Unknown சொன்னது…

"தெரு புகழ் பாடிகளுக்கு ஊக்கம் தரும் பின்னுட்டமிட்ட உங்களுக்கும் நீங்கள் மேற்சொன்ன வார்த்தை பொருந்துமா? அது நாகரிகமா சற்று சிந்தித்து பாருங்கள் அஹ்மத் காகா அவர்களே!" - ஷாஹுல். இவர் எதைச் சொல்ல வருகின்றார் என்பது, என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை! அறிவாளிகள் யாரேனும் விளக்கினால் நல்லது.

அதிரைநிருபர் சொன்னது…

அன்பு அதிரை சகோதரர்களே,

மற்ற வலைப்பூக்களில் வெளிவரும் செய்திகள் பற்றி தயவு செய்து இங்கு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதிரைநிருபர் முழுக்க முழுக்க சர்ச்சையில்லாதவற்றில் கவணம் செலுத்தி நம் கருத்துக்களால், பின்னூட்டங்களால் அதிரையில் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

பிரிவினை தூண்டும் எந்த பின்னூட்டமும் யார் பதிந்தாலும் அதை நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம் என்பதை இங்கு உறுதியாக பதிவு செய்கிறோம். இதுவரை இந்த பதிவுக்கான பின்னூட்டங்கள் போதும்.

எவ்வளவோ நல்ல விசயங்கள் பற்றி நாம் ஆக்கபூர்வமாக கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

இத்துடன் இந்த பகுதியில் உள்ள பின்னூட்டம் நிறுத்தப்படுகிறது. அனைத்து சகோதரர்களும் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இது தொடர்பாக மேலும் கருத்துச்சொல்ல விரும்புபவர்கள் எங்கள் ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். adirainirubar@gmail.com