"உபயம்" TO: இந்த ஆர்டிக்கில் எழுத தூண்டுதலாக இருந்த சகோதரர்கள் அபு இப்ராஹிம் , தாஜுதின், சாகுல் , யாசிர், உன்னைபோல் ஒருவன், கிரவுன்.
மலேசியாவில் பெருநாள்.... அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நாம் செய்யாத சில நல்ல விசயங்களை இந்த மலாய்க்காரர்கள் செய்கிறார்கள். அதாவது பெருநாள் தொழுகை தொழுதவுடன் வீட்டுக்கு வந்து தாய் தகப்பனிடம் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சலாம் கொடுத்து பிறகு "மன்னிப்பு" கேட்பது. சமயத்தில் நான் நினைப்பது உண்டு .. இந்த மாதிரி நம் ஊரிலும் இருந்தால் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைகள் ஓய்ந்து இருக்குமே. .. அந்த நாள் எப்போது தான் வருமோ..
[ கடப்பாசி , வட்டிலப்பம் பற்றி ஒன்னும் சொல்லலியே எனும் நண்பர்கள் கொஞ்சம் அவதானிக்க!]
சிலரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லாத பட்சத்தில் மையவாடிக்கு போய் அவர்களுக்காக யாசின் ஓதுவது [ சின்ன பிள்ளைகள்கூட ] அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு வருவார்கள். " நல்ல நாளும் பெரியா நாளும் யான் வாப்பா மைத்தாங்கரைக்கு போரா " என்று எந்த பெரியவர்களும் ” ப்ரேக்” போடுவதில்லை. ஏதோ நாம் மட்டும் "சாகாவரம்' வாங்கி வந்த மாதிரி.
அடுத்த மிகப்பெரிய விசயம் “BALIK KAMPUNG’ [ கிராமம் திரும்புதல்]
மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூர் எனபது அனைவருக்கும் தெறிந்ததே, ஆனால் இங்கு இருப்பவர்களின் பூர்வீகம் மற்ற ஊர்களாக [கிராமம்] ஆக இருக்கும். நோன்பு ஆரம்பத்திலேயெ இந்த பஸ், ரயில் டிக்கட் எல்லாம் விற்று முடிந்துவிடும். அதையும் தாண்டி பெருநாளைக்கு முதல் நாள் [ அல்லது 2 நாளைக்கு முன் ] எக்ஸ்பிரஸ் ஹைவே, நேசனல் ஹைவே எல்லாம் பிதுங்கும். ஒரு முரை இந்த டிராபிக்கில் மாட்டி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வர 4 மணி நேரம் பிடிக்கும் ஹைவேயில் 10 மணி நேரம ஆகி நத்தையை விட கேவலமாக நகர்ந்து , இடையில் உள்ள ஹைவே டாய்லெட் எல்லாம் உள்ளே புக முடியாத அளவு மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிந்ததால் அந்த இடத்திலேயெ முடிவெடுத்தேன்
• இந்த மாதிரி பெருநாள் காலங்களில் அவுட் ஸ்டேசன் தவிர்ப்பது.
• ஆட்டொமேடிக் கியர் கண்டுபிடித்து இவ்வலவு நாள் ஆகியும் 'எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும் என்ற மங்கம்மா / மங்காத்தா சபதத்தை கைவிடுவது.
மலேசியாவின் ஹைவெ ஒரு வித்யாசமானது. மலேசியாவின் தென்கோடி சிங்கபூரிலிருந்து வட எல்லை தாய்லாந்து வரை [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] ஏறக்குறைய 1100 கிலோ மீட்டரையும் ட்ராபிக் லைட் இல்லாமல் கடக்கலாம், அவ்வளவு நீட்டமான, நீட்டான ஹைவே. இப்போது இந்தியாவில் நிறைய ஹைவே ப்ராஜக்ட் இவர்கள் தான் செய்கிறார்கள்.
'பெருநாள் அன்று பெருநாள் தொழுகை இங்கு உள்ள டெலிவிசனில் நேரடி ஒளிபரப்பு உண்டு. தமிழ் புத்தாண்டுக்கு தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசும் / உளரும் நடிகைகளை வைத்து பேட்டி எடுக்கும் கொடுமை மாதிரி எதுவும் இவர்கள் செய்வதில்லை.
இங்கு உள்ள TV3 இஸ்லாத்தின் வளர்ச்சியையும் சரித்திரங்களையும் JEJAK RASUL என்ற நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 20 எபிஸோட் வரை எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறது. [ மலாய் மொழியில்] ஒரு எபிஸோட் = 30 நாட்கள், ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு லொகேசன்.. இதுவரை இவர்கள் கவர் பண்ணாத நாடே இல்லை எனலாம். இந்த வருடம் இவர்கள் கவர் செய்த இடங்களில் 30 நோன்பும் கொரியாவிலும் , ஜப்பானிலும் எந்த அளவு இஸ்லாம் வளர்த்து இருக்கிறது என்றால்... வார்த்தைகளுக்கு கட்டுப்படாத அந்த மக்கள் ... ஈமானின் பலத்தை இவர்களிடமிருந்து நாம் கற்ருக்கொள்ள நிரைய இருக்கிறது.
பிள்ளைகளுக்கு பெருநாள் காசு கொடுப்பதைகூட கலைநயத்துடன் ஒரு அழகிய என்வெலெப்பில் வைத்து செய்வார்கள். அதன் பெயர் "அங்பாவ்' இந்த சிஸ்டம் சீனர்களிடம் “சுட்டது’.
மற்றபடி பெருநாள் சாப்பாடு [ இப்பதான் நம்ம சப்ஜெக்ட்டுக்கு இந்த ஆளு வர்ராய்ன்யா என்பது காதில் விழுகிறது ]
நாம் எல்லாம் தென் இந்திய முஸ்லிம்களாக இருப்பதால் நம் அதிராம்பட்டினத்து 'தொலி, [ எந்த "லி"] வட்டிலப்பம் [ஹைபர்டென்சனின் 'சத்ரு'] கடப்பாசி, இடியப்பம் , எறச்சானம் என்று வயிறு 'காந்தும்" மெனுக்கள் அதிகமாகும். அடுத்த நாளின் "மொளவுதண்ணி' , ரசத்தின் ருசியில் மீண்ட சொர்க்கம் தெரியும்.
சாப்பாடு விசயங்களை ஒரு தனி ஆர்டிக்கில் ஆக எழுதலாம்.
இப்போது புதிய சமுதாயங்களின் காலமாக இருப்பதால் ரெடிமேட்சட்டையின் அளவு ஸ்டிக்கர் கிழிக்காமலும், டிஸ்ப்லேயில் மடித்துவைத்தமாதிரியெ அயன் பண்ணாது கித்தா[ரப்பர்] செருப்பும், பாம்பு மார்க்] சென்ட் போட்டு நமக்கெல்லாம் பெருநாள் காசு தந்து வளர்த்த அந்த வலுவான அப்பாக்கள் இப்போது இல்லை. [ இவர்களை பற்றி ஒரு ஆர்டிக்கில் முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். Infact that was my fisrt article in internet , அதிரை நிருபர் அனுமதித்தால் மறுபடியும் வெளியிடலாம், நான் அனுப்பி தருகிறேன்]
மலேசியாவில் கலர்புள்ளான விசயங்கள் கொட்டிகிடக்கிறது.
இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள். ஒவ்வொறு வார இறுதியிலும் பெருநாளைக்குறிய விருந்து இருக்கும்.
22 Responses So Far:
என்னடா மலேயாவுல MSM(n)மான்னு நெனச்சுபுட்டேன்...
கலக்கல் கலர்ஃபுல் ரத்தினச் சுருக்கம்...
// [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] //
அதானே அங்கேவுட்ட கோட்டைய கூகில்லதான் தேடியிருக்கேன் நிறைய தடவை..
சமீபத்தில் எனது மகனுக்கு ரோஸ்கவரில் அன்பளிப்பு பணமாக என் நன்பனின் குடும்பம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள் அந்தக் கவரை ரசித்தேன் ஏன்னா அது நம்ம தொழிலோடு ஒட்டிய கலையென்பதால்.. இப்போதான் புரியுது அந்த மலேசிய நட்பு கொடுத்தது அவர்களின் வழக்கமென்று.. :)
ஆகா புதிய தகவல், தனக்கேற்ற ஸ்டைலில் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் படிக்கக்கூடிய செய்திகள் சகோதரர் ஜாஹிர் அவர்களில் கட்டுரை.
அட சும்மா தானே கேட்டோம். அவ்வளவு சீக்கிரம் ஒரு கட்டுரையை எழுதியனுப்பிய சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு மிக்க நன்றி.
விசா, ஏர்டிகேட் இல்லாமல் ஒரு 10 நிமிடத்தில் எங்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற பெருமை அன்பு சகோதரர் ஜாஹிர் அவர்களையே சேரும். அப்பப்போ எங்களை மலேசியாவிற்கு உங்கள் எழுத்துக்களால் சில நிமிடங்கள் அழைத்துச் செல்லுங்கள்.
சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை.
// [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] //
//• ஆட்டொமேடிக் கியர் கண்டுபிடித்து இவ்வலவு நாள் ஆகியும் 'எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும் என்ற மங்கம்மா / மங்காத்தா சபதத்தை கைவிடுவது.//
சான்ஸே இல்லை இது மாதிரியேல்லாம் சகோதரர் ஜாஹிர் அவர்களால் மட்டும் தான் எழுத முடியும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த கட்டுரை அமைய நானும் ஒரு தூண்டுதல் என்று சொன்ன பெருந்தன்மைக்கு முதற்கண் நன்றி. நச் என்று சில வரிகளிலேயே சிலாகித்து எழுதிய விதம் அருமை.லேனா தமிழ் வாணனின் எழுத்துச்சாயல் அதிகம் உள்ளது ஆனால் சுஜாதாவின் எழுத்துதான் உங்களின் அதித விருப்பம்ன்னு நினைக்கிறேன்.மீண்டும் உங்கள் எழுத்தினால் எங்களை கட்டிபோட்டுவிட்டிர்.வாழ்த்துக்கள்.
இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள். ஒவ்வொறு வார இறுதியிலும் பெருநாளைக்குறிய விருந்து இருக்கும்.
-------------------------------------
கன்டிப்பாக (பேறு)பெருருருரு நாள்ள்ள்ள்ள்ள் தான். நீண்ட தொரு மகிழ்சி. மனதுக்கு நெகிழ்சியும் ,புத்துணர்ச்சியும்.
வெங்காயம் வெட்டுன கையோட எங்களுக்கு ஆர்டிக்கில் எழுதுனதுக்கு நன்றி .ஆனால் வெங்காய வாடை(நெடி ) கொஞ்சம் கூட ஆர்டிக்கிலில் வராமல் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை.
எப்பொதும் போல் சிந்திக்க வேண்டிய மெசேஜ் நிறையவே உள்ளது ( பெருநாள் தொழுகை தொழுதவுடன் வீட்டுக்கு வந்து தாய் தகப்பனிடம் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சலாம் கொடுத்து பிறகு "மன்னிப்பு")
இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள்.
அப்போ நீங்க வெங்காயம் வெட்டுவதில் எக்ஸ்பெர்ட் ஆகி இருப்பீர்கள் என நம்புகின்றேன்
"அங்பாவ்' எங்களுக்கு எப்போ கொடுப்பீங்க !!!!!
எப்பொதும் உங்கள் கட்டுரை பற்றி நிறைகள் தான் சொன்னேனன் (குறை (எந்த ர )இருந்தவுலே சொல்ல )இதில் ஒரு குறை சாப்பாட்டு மேட்டரை கடைசில் போட்டது ,இங்கு பலரும் கட்டுரையை கீழ் இருந்து மேலே படித்து இருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் (அபு இப்ராகிம் நீங்க எப்புடி )
நேரம் இன்மை காரணமாக தொடரும் நாளை
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அருமை ஜாஹிர்..ஆனால் அந்த 'மன்னிப்பு' விஷயம்தான் உதைக்குது. இந்த மன்னிப்புக்கும் கிருஸ்துவர்களின் 'பாவமன்னிப்பு'க்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதுபோல் எனக்குப்பட்டது அதான் கேட்டேன்.. இந்த கேள்விக்கு நீங்கள் மட்டும் பதில் சொன்னா போதும்..
வேற யாரும் சொல்லவேண்டாம்...
ரொம்ப நன்னா இருக்கு ஜாகிர், இவ்ளோ சீக்கிரம் தருவிகன்னு நினைகள்ளே
பிரியாணி சமைச்ச கயோடோ எழுதிட்டிங்கன்னு அவதானிக்கமுடிகின்றது
நம்ம "BALIK KAMPUNG " வந்து எப்போ எங்களுக்கு பெருநாள் "அங்பாவ்" தரபோரிங்க ?
ஏன் ஜாகிர் மலேய் காரங்க பொளிஷ்ட்டர்/ சில்க் துணி விரும்பி அனியிரங்கா ?
இங்கு ஆஸ்திரேலியாவில் இமாம் அவர்கள் பெருநாள் குத்பவின் இறுதியில் மக்களிடம் அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றத்திற்கு
பாவமன்னிப்பு கோரினர், அன்றே நான் சில காலமாக பேசாமல் இருந்த ஒரு நண்பருடன் மன்னிப்பு கோரினேன். இதுதான் இஸ்லாம் நமக்கு காற்று தருவது, தந்தது
அதை (நல்ல விசயங்களை) பிறருக்கும் சொல்வது நம் கடமை சதககாவில் சேரும் மிக்க நன்றி ஜாகிர் வாழ்த்துக்கள்
சகோதரர் : இர்ஷாத்: கிருஸ்தவ நண்பர்களின் பாவமன்னிப்பு மாதிரி அல்ல இது. இது "மன்னிப்பு கோருதல்..பெரியவர்களிடம்" நாம் சிறிய வயதில் இருப்பதால் சமயங்களில் பெரியவர்களின் மனம் கோனும்படி நடந்து இருப்போம், இதை பெருநாள் அன்று பெரியவர்களிடம் [பெரும்பாலும் பெற்றோரிடம்] " அல்லாஹ்வின் பொருத்தம் வேண்டி என்னை மன்னிக்கவும்" என கேட்பது.
" அங்பாவ்' கேட்ட பெர்சுங்களுக்கு[ Bro.Shahul / Bro.unnaiPol oruvan ...இது கல்யாணமானவர்கள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கொடுப்பது [உடனே "எத்தினியாவது கல்யாணம் சொல்லலியே' என கேள்வி கேட்க வேண்டாம்]
thanx to Bro.abu ibrahim/ Thaj/ crown for your wonderful comments.
Zakir Hussain
Shahulhameed says
Monday, September 13, 2010 12:52:00 AM
இங்கு பலரும் கட்டுரையை கீழ் இருந்து மேலே படித்து இருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் (அபு இப்ராகிம் நீங்க எப்புடி )///
அளவான சாப்பாடு(ன்னு) சொல்லாம சொல்லியிருக்கலாம் நம்ம ஜாஹிர்(காக்கா)... அதான் நம்ம மேட்டரை எடுத்தாலே.. அடுத்து சமையல் குறிப்பு கேட்டுவோமோன்னு தயங்கியிருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் அதான் சாப்பாட்டுக்கு என்று தனியா வருதாமே (சொல்லியிருக்காங்களே கவனிக்கலையா சாஹுல்)
இர்ஷாத் கேட்ட கேள்வியும் என்னுள் உதித்தது, அவைகள் அம்மக்களின் வழக்கமென்று சொல்லியிருப்பதால் வாசித்ததோடு சரி ஏன்னா அதனை மார்க்கமாக சொல்லவில்லை (இது இர்ஷாத்துக்கான பதில் அல்ல ஏன்னா மற்றவங்க சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டார்)
சகோதரர் ஷாஹுல், நம்ம ஊர்ல முதல்ல சாப்பாடு மேட்டரை பேசுவோம், மலேசியாவுல கடைசியில தான் போல தெரியுது.
அது சரி எல்லோருக்கும் பெருநாள் மஸ்த் இன்னும் தெளியவே இல்லை அதுகுள்ள சாப்பாடு குறையா?
:-)
மலேசியாவின் பெருநாள் சிறப்பு அறுமை, நாம் சென்னையிலேர்ந்து ஊருக்கு போவது போல் எல்லா நாட்டுலேயும்தான் இருக்கு போல, மலேசியாவில் முர்த்தபா ஃபேமஸாமே, பெருநாள் தொழுதவுடன் பெரியவர்களிடமும் உறவினர்களிடமும் முகம் கொடுத்து அன்பை பறிமாரிக்கொள்வது புதுசு, இந்த முறையை நிச்சயம் நாமும் ஃபாலோ செய்யனும். குறிப்பிட்ட நபர் ஹஜ் போகும்போது மட்டுமதான் இதுமாதிரி நடக்கும் நம்மூர்ல
நல்ல தொகுப்பு
மற்றுமோரு வைரம் ஜாஹிர் நானாவின் கிரிடத்தில்...சகோ.தாஜிதீன் சொன்னது போல் மலேசியாவிற்க்கே சென்று பெருநாள் கொண்டாடியது போன்று இருந்து..படிப்பவர்களை வார்த்தைகளால் வசியப்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலை..வாழ்த்துக்கள்
அது சரி வாப்பகிட்டையோ அல்லது வேற பெரிசுங்ககிட்டையோ வாங்க வேண்டிய திட்டெல்லாம் வாங்கிட்டு முட்ட வேண்டிய மொறப்பெல்லாம் மொறச்சிட்டு சாப்பிடாம "ம்ம்ம்"ன்னு ஊட்டுல ரூமில உட்கார்ந்து இருக்கும்போது அமைதிய கிளிச்சுகிட்டு ஒரு கொரல் வருமே "அவன் சாப்பிட்டானா இல்லையான்னு" அந்த கரிசனம் உங்க மலேசியாவுல இருக்கா !!
ஜாகிர்,
மணியனின் பயணக் கட்டுரை வாசித்த உணர்வு.
கதை, கவிதை, உண்மைச் சம்பவம் என சுவாரஸ்யமான விஷயங்களை சொல்வதில் சிரமம் இருக்காது. ஆனால், நீ சொல்ல வந்த விஷயம் கம்பி மேல் நடப்பதுபோல், சுவாரஸ்யப் படுத்தலேன்னா கூட்டம் கலைஞ்சிடும். பின்னூட்டங்கள் பார்க்கும்போது கூட்டம் சேர்கிறது வாத்தியாரே.
//எங்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற பெருமை அன்பு சகோதரர் ஜாஹிர் அவர்களையே சேரும்//
//மலேசியாவிற்க்கே சென்று பெருநாள் கொண்டாடியது போன்று இருந்து//
நீ எழுதியது கேட்பவர்களுக்கே அனுபவித்த உணர்வு எனில், உன்னோடு சுற்றிய எனக்கு 'நினைவுகள் மலராமல்' போகுமா?
சாப்பாட்டு விஷயங்களை குறைத்து எழுதி ஷாகுல், அபு இபுறாகீம் ஆகியோரின் வதுவாப்பேரை வாங்காமல் சீக்கிரம் தனி ட்ராக் காண்பது சாலச்சிறந்தது.
அப்படி எழுதும்போது எனக்கு அரவே பிடிக்காத ப்ளாச்சான் (எப்டிடா திண்றீங்க. உஸ்ஸ்ஸ். நாக்கு துவங்கி பேக்கு வரைக்கும் என்னா உறைப்பு), ஐஸ் கச்சான்(வார்த்தை குளறும் அளவுக்கு வாய் உறைந்துவிடும்) பற்றி சிலாகித்து எழுதினே... அப்புறம் எங்கள் மிளகா பச்சி,போன்டா பற்றியெல்லாம் நாங்களும் எழுதுவோம். மீ கொரிங், சோத்திலே நெத்திலி கருவாடு போட்டுத் திண்பீங்களே (நாசி சம்திங்?) பற்றியெல்லாம் எழுது.
கோலாலம்பூரிலிருந்து பினாங்க் போகிற வழியெல்லாம் சாப்பிட்ட விதவிதமான பழங்கள் பற்றி எழுது.(துரியான் சாப்பிட்ட பின்பும், உன் ப்ரோட்டன் சாகா கார் முழுக்க உள்ளூர் கக்கூஸ் வாடை அடித்தும், இறங்கி வேறு கார் பிடித்து வீடு போகாமல் நம்முடன் தொடர்ந்து பயணம் செய்து பொறுமை காத்த நம் துணைவியரின் தியாகம் மறக்க முடியுமா? போன மாசம் நீ அனுப்பிய துரியான் துதலும் செம ருசி (மனைவி வரும் முன் ஷார்ஜாவிலேயே திண்று தீர்த்துவிட்டேன்.)) எத்தனை சுவையான பழம் அத்தனை நாற்றம் ஏனோ.
ரம்புதான், மங்குஸ்தான், கேட் ஐ, ஸ்டார் ஃப்ரூட் எல்லாம் மலேசியா போன்ற சுவையை வேறு எங்கும் தருமா அறியேன்.
வழியில், ஈப்போவில், ரயில்வே ஸ்டேஷ்ன் கூட்ஸ் ஹோட்டலில் மலேசியன் ஸ்டைலில் சமைத்திருந்த இறால், பட்டர் வொர்த்தில் திண்ணது, பினாங்க் குயின் ஸ்ட்ரீட்டில் மேஞ்சதுனு எவ்வளவு இருக்கு எழுத.
சபீர்
ஜாஹிர்(காக்கா) இதுக்குதான் சபீர்(காக்கா)வை நாங்க இழுத்தது... சாப்பாடனாலும் கூப்பாடானாலும் சமைக்கவும் அழைக்கவும் தனி கெத்து வேனும்ல ! எடுத்துக் கொடுதாச்சு இனிமே பாக்கி என்னான்னா மலேயாவிலேருந்துதான் வரனும்... (எங்க மேட்டரையும் சேர்த்துதான் சொல்றோம்)
it's not comment from shabeer kakka....it is a mini article about Malaysia in his style and in a very jovial format...Allah blessed you both with wonderful skills....we need need more more from you kakkas
shabeer kakka we are still waiting for your exclusive article in ADIRAINIRUBAR
மலேசியாவிற்கு உங்கள் நண்பர்கள் பலரும் வந்து தங்கி ஊரை சுற்றி பார்த்து சென்றுள்ளார்கள் (அடியோனும் ஒருவன் ) அப்போது நடந்த சுவையான சம்பவங்களைவும் தொகுத்து தாங்கள் பாணியில் கட்டுரையாக வெளிட்டால் நன்றாக இருக்கும் ,(உதாரணம் நான் அங்கு வந்திருந்த போது தாய் ரெஸ்டாரென்ட் போய் என் வயிரு புல்லானது உங்கள் பர்ஸ் காலியானது )
சபீர், நீ எழுதியிருக்கும் விதம் ..கண்ணை மூடிக்கொண்டும், மூடாமலும் சொல்லலாம் 'நீ ஒரு பினாங்கு சபுராளி"
சாகுல்..பர்ஸ் காலியாகும் அளவு நீங்களும் நானும் சாப்பிடவில்லை..ஆனால் ரெஸ்டாரன்ட்டில் கொண்டு வந்து வைத்த சோற்றின் அளவு பார்த்து 'நான் என்ன ஓடாவியா?' [ கடற்கரைத்தெரு ஆட்களுக்கு மட்டும் சிரிப்பு நிச்சயம் வரும்] என கேட்டது ஞாபகம் இருக்கிறது.
அபு இப்ராகிம்..எந்த நாட்டுக்கு போனாலும் அந்த கரிசணை எல்லா தகப்பனுக்கும் உண்டு. தகப்பனின் தியாகம் நம் சமுதாயத்தில் எப்போதும் "காந்தி கணக்கு" அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லை.
ZAKIR HUSSAIN
தகப்பனின் தியாகம் நம் சமுதாயத்தில் எப்போதும் "காந்தி கணக்கு" அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லை. ///
இல்லே ஜாஹிர்(காக்கா) எப்போவுமே accountable அது நமக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்... (அப்போ கேட்டு வச்சது கேசுவலாதான் :) வேறு எந்தவிதமான் நோக்கமில்லை )
ஜாஹிர்(காக்கா) மலேசியாவில் கல்வித் தரம் எப்படி ? அதற்கான செலவுகள் மற்ற நாடுகளை compare பான்னா கூடுதலா / குறைவா ? ஏன்னா எனக்குத் தெரிந்த சிலர் அங்கே (ஊரில் பள்ளிப் பட்டிப்பு முடித்து விட்டு) அதற்கு மேல் படிக்க உகந்த இடமென்று 'அடி'க்'கடி' சொல்கிறாங்க..
சொல்லுங்களேன் please !
//ரெஸ்டாரன்ட்டில் கொண்டு வந்து வைத்த சோற்றின் அளவு பார்த்து 'நான் என்ன ஓடாவியா?'//
நகைச்சுவை உணர்வு உள்ள எல்லோருக்கும் சிரிப்பு வரும்.
சகோதரர் ஷாஹுல் அவர்களின் ஒவ்வொரு எழுத்தும், பேச்சும் நல்ல நகைச்சுவை உள்ளது என்பது ஒவ்வொரு நாளும் நாம் கண்டுவருகிறோம்.
ஷாஹுல் காக்காவும் ஏதோ வித்யாசமான கட்டுரை எழுதுறாங்க போல தெரியுது... :)
Post a Comment