சூரியனுக்கு முன் எழுந்து-
மேற்கு நோக்கி வாக்கிங்!
இருந்து எழுந்து-
பாத்திர பண்டம் துலக்காமல்...
குனிந்து நிமிர்ந்து-
வீடு வாசல் பெருக்காமல்...
சர்க்கரை கரைக்க
சாலையெல்லாம் பெண்கள்!
நடந்து கடக்கையில்
நான் கேட்ட சம்பாக்ஷ்னையில்...
மெகா தொடர்களின்
மகா காட்சிகள்!
உழைத்து உடல் களைக்காமல்...
உண்டு கொழுத்து...
வயிற்றின் டயர் எறிக்க
வழியெல்லாம் ஆண்கள்!
கடக்க நடக்கையில்
காதில் விழுந்ததில்
பாஸ்போர்ட் விசா போய்
மனைக்கட்டு, சதுர அடி!
பள்ளிக் கூடம் போகாமல்-
பள்ளி வாசல் நாடாமல்-
மடிப்புக் கலையாச் சட்டையும்
மாப்ளே மச்சான் பேச்சும்
அலைபேசி விரலுமாய் சிறுசுகள்!
கடக்கும்போது கவனித்ததில்
குறுஞ்செய்தி குசும்பு,
குசுகுசு முனகல்!
வயல்வெளி யெல்லாம்
வீட்டு மனையாகுது...
வாய்க்கால் வரப்பெல்லாம்
கழிவு நீர் ஓடுது!
திரும்பிய திசையெல்லாம்
திடலாத் தெரியாது...கருவேலங் காட்டிலும்
கட்டுமானப் பனி நடக்குது!
பச்சயம் பற்றாமல்
பிராண வாயு குறையுது...
பக்கத்து வீட்டாரோடு
பரிச்சயம் கசக்குது!
விளையாட்டு மைதானம்
வெரிச்சோடி கிடக்குது...
சிறுசு பெருசெல்லாம்
சீக்கு வந்து வாடுது!
மாற்றி யோசி, மக்களே...!
ஊர் பெருக்கலாம்
ஊண் பெருக்கலாமா?
வாயைக் கட்டினால்
நோய் கட்டுறாதா?
நேர் வழி உழைத்துண்டால்
பை பாஸ் அவசியமா?
வீட்டு வேலை செய்தல்
நடைப் பயிற்சியை விட
நான்கு மடங்கு நல்லதன்றோ?
விடியோ கேமில்
வியர்க்காது இளைஞனே...
வெட்ட வெளியில் வா
விட்டதெல்லாம் விளையாடு!
உன்னை மாற்று...
ஊர் மாறும்!
-சபீர்
நன்றி: சகோதரர் ஷாஹுல் ஹமீது
36 Responses So Far:
சபாஷ் ! ஒவ்வொரு பஞ்சும் பெஞ்சுமேல நிக்குது காக்கா !
அருமை,
ஆதங்கம்,
இனிமை,
ஈர்ப்பு,
உண்மை,
ஊக்கம்,
எதேச்சை,
ஏக்கம்,
முதல் வரி(ப்படி) தலைப்பு சொன்ன மாதிரி மாற்றி யோசின்னதும் ஆஹா வாங்கின மனக்கட்டையெல்லாம் விளையாட்டு மைதானமா ஆக்கச் சொல்லுவீங்களோன்னு நெனச்சுட்டேன்.
அட தக்வா (அப்போ துள்காப்)பள்ளி செவத்து ஏறி நின்னு காதர் முகைதீன் ஸ்கூல் பார்த்த காலத்தில ஊரைவிட்டு போனவங்களா நீங்க, சேது ரோட்டுல நின்னுகிட்டு கடற்கரைத் தெரு பள்ளிவாசலைக் கண்ட காலம் எங்கே இப்போ கானும் காட்சிகள் எங்கே ?
சஃபீர் காக்கா நானும்தான் உங்களைப் போல மாத்தி யோசிச்சேன் ஆன முடியலையே காக்கா !
ஊர் பெருக்கலாம்
ஊண் பெருக்கலாமா?
** ஊதிப் பெருத்தவர்கள் பக்கதிலிருப்பதால் மாத்தி யோசிக்கல
வாயைக் கட்டினால்
நோய் கட்டுறாதா?
** வாயைக்கட்டினால் வாயில்லா பூச்சி(யாமே) மாத்தி யோசிக்கல
நேர் வழி உழைத்துண்டால்
பை பாஸ் அவசியமா?
** சீக்கிரமா போகச் சொல்லித்தான் ஏத்திவிட்டாங்களே மாத்தி யோசிக்கல
வீட்டு வேலை செய்தல்
நடைப் பயிற்சியை விட
நான்கு மடங்கு நல்லதன்றோ?
** வூட்ல குந்திகிட்டு ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் வேலை செய்றதுதால மாத்தி யோசிக்கல
விடியோ கேமில்
வியர்க்காது இளைஞனே...
வெட்ட வெளியில் வா
** என் மவன்கிட்டே வா வெளியேன்னு கூப்பிடப் பார்த்தேன் மாத்தி யோசிங்கன்னு சொல்லிடுவானோன்னு விட்டுட்டேன் (காக்கா)
விட்டதெல்லாம் விளையாடு!
உன்னை மாற்று...
ஊர் மாறும்!
** மாறி(விடுகிறேன்) மாறிதான் யோசிச்சேன்
சரி மாத்திக்கிறேன் என்னை...
இப்படிதான் இன்றைய நாகரீக உலகம் இருக்கிறது என்பதை கண்டு,கேட்டு சிந்தையெல்லாம் கவர இப்படி எளிய நடையில் அழகுற எழுதியுள்ள லாவகம் அப்பப்பா,புதுக்கவிதையில் இவ்வளவு வீட்சிலும் எழுத முடிகிறதே! நீவீர் எழுத்துசக்கரவர்தி என்பேன் உவகையுடனே! பின் இப்படியெல்லாம் இருந்தால் சுற்றமும்,சூழலும் நலமாகும் என்கிற கெஞ்சல். சமுதாயதுக்கான ஆதங்கம், பாராட்டபட வேண்டியது.
என்ன அபு இப்ராகிம் பின்னுட்டத்தில் நம்ம(என் )வழியை பின்பற்றுகிற மாதிரி தெரிகின்றது மாத்தி யோசிங்கப்பா
நாம் ஜுபைலில் இருந்தபோது கார் என்ஜின் வேகமா சுத்தி கார் மெதுவா போன கிளோச்சை மாத்து என்று ட்ரபிள் சூட் சொல்லிகொடுத்த நீங்கள் கவிதை எப்படி எழுதுவது என்று சொல்லிதர வில்லையோ !!!!
Shahulhameed says
Wednesday, September 15, 2010 12:36:00 AM
பின்னுட்டத்தில் நம்ம(என் )வழியை பின்பற்றுகிற மாதிரி தெரிகின்றது மாத்தி யோசிங்கப்பா //
மாத்தி மாத்தி(தான்) யோசிச்சேன் முடியலையே சாஹுல் ! அதான் சஃபீர்(காக்கா) வந்தாச்சுல !
வாருங்கள் அன்பு சகோதரர் சபீர் அவர்களே. எங்கள் கோரிக்கையை ஏற்று தனி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி.
பழைய நினைப்புலயே தூங்கி காலத்தை கடத்திவரும் நம் மக்களை தட்டி எழுப்பி மாற்றி யோசிக்க வைத்துள்ளது உங்கள் ஆக்கம்.
//உன்னை மாற்று...
ஊர் மாறும்!//
நீங்கள் சொன்ன ஒவ்வொரு விசயங்களும் என்னையும் நம் மக்களையும் சிரிக்கவும், ரசிக்கவும், சிந்திக்கவும் , நிச்சயம் மாற்றி யோசிக்கவும் வைத்துள்ளது என்றால் மிகையில்லை.
தொடரட்டும் உங்கள் அருமை ஆக்கங்கள். வாழ்த்துக்கள்.
அருமை அருமை
//இருந்து எழுந்து-பாத்திர பண்டம் துலக்காமல்...குனிந்து நிமிர்ந்து-வீடு வாசல் பெருக்காமல்...சர்க்கரை கரைக்க சாலையெல்லாம் பெண்கள்!//
பணத்தை சீனி மூட்டையிலே கட்டிக்கினு போய் டாக்டர் வீட்டுவாசல்லே தவம் கிடக்காக
நல்ல ஆக்கம், மாத்தி யோசிச்சி அடுத்தவங்களையும் யோசிக்க வெச்சிட்டீங்க, சபாஷ்...
சமுதாய அவலங்களையும்....நமது நாட்டில்/ ஊரில் நடக்கும் விசயங்களையும்...இவ்வளவு சிம்பிளாக..வைரமுத்து கூட சொல்ல முடியாது...மாத்தியோசி --ஒரு டாக்டரின் அறிவுரையை விடவும் அருமை.....ஒரு கவிஞனின் வெற்றி...அவன்(ர்) கவிதை படிப்பவர்களின் மத்தியில் எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகிறது என்பதில் தான் இருக்கிறது அந்த வகையில் உங்கள் கவிதை எங்களை எல்லாம் மாத்தி யோசிக்க வைத்து இருக்கிறது காக்கா
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சபீர்; வாழ்த்துக்கள்!
நல்ல கருத்துக்களை கொண்ட கவிதை. மாற்றி யோசித்து இனிமேல் திட்டமிட்டப்படி செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும், சில நாட்களுக்கு எல்லாவற்றையும் கடைப்பிடித்து விட்டு மீண்டும் வந்த இடத்திற்கே வந்து விடுகிறோம். மனமும், உடலும் சோர்வடைதால், உதாரணத்திற்கு : உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு - இருந்தாலும் மாற்றித்தான் யோசிப்போமே! – அலாவுதீன் எஸ்.அபுதாபி,யு.ஏ.இ.
ஷபீர் காக்கா நீங்க ஊரில் இருக்கும் போது ஒரு கவிதையை பற்றி சொன்னீர்கள்..வாப்பா வபாத்தாகிய பொழுது எழுதியதாக...அதை என் மெயிலுக்கு இதுவரை நீங்கள் அனுப்ப வில்லை..உங்களுக்கு ஆட்சேபனை இல்லை யென்றால் ..இங்கே அதிரை நிருபரில் பதியுங்கள்..otherwise pls mail me to : mdyasir@msn.com.....as i அம் very eager to read that poem
வாழ்த்துகள் கவிஞரே. செய்தியும், சுவையும் ஒருங்கிணைந்த ஒரு ஆக்கத்தை படித்த, ரசித்த நிறைவு. மக்கள் யொசிப்பார்களா?
அட ... நல்லாருக்கே!
ஜமீல் said...
அட ... நல்லாருக்கே!
Thursday, September 16, 2010 10:52:00 AM
காக்கா வந்திட்டீங்களே (நல்வரவு தொடரட்டும்)... இனிமேதான் ரொம்பவே மாற்றி யோக்கனும்..
மாற்றி யோக்கனும்..
Correction - மாற்றி யோசிக்கனும்..
அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹ..
நம் ஊர் நம் சமுதாயம் நல்லா இருக்கணும் என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் வருவதில்லை ஒரு சிலருக்கு தான் வருகிறது, இதை படிப்பவருக்கு மனதில் நல்லா மாற்றத்தை அல்லாஹ் ஏற்படுத்த போதுமானவன் - நன்றி பெரியண்ணா
சபீர் காக்கா மாற்றி யோசிச்சேனா அதன் விளைவு இங்கே..
(கம்பன்)எக்பிரஸிலிருந்து இறங்கி ஷிஃபா வரை நடந்தே போகனும்னு - ஆனா ஃஷிபாவை கடற்கரை ஓரத்திலும் இரயிலைடியை ஷிஃபா இருக்கும் இடத்திலும் மாத்தினா என்னான்னு யோசிச்சுட்டேன் (தப்பா ?)
இருபத்தி ஏழு வருஷத்திற்கு முன்னாடி இரண்டு திருமணங்கள் நடந்தது அப்போது ஒரு மணப் பெண்ணிடம் மஹராக என்ன வேண்டும் என்று கேட்க்கப் பட்டது அதற்கு அந்தப் பெண் கேட்ட மஹர் "திருக்குர்ஆனில் நான் இதுவரை மனணம் செய்யாத மூன்று சூராக்களை எனக்கு மனப்பாடம் செய்து தரவேண்டும்" என்று
அடுத்தப் பெண்ணிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு "என் தகப்பனார் என் மூத்த் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே அவர்கள் முழு உழைப்பும் கரைந்தது அதனால் எனக்கு ஒரு பவுன் மட்டும் தங்கமா கொடுத்தா போதும் (மென்றமன்ம்)" என்றார்கள்.
*** இந்த இரண்டு பெண்கள் அன்றைய "உஸ்வதுந் நிஸா (பெண்கள்) மதர்ஸாவில் ஆலிமா பட்டம் வாங்கியவர்கள்"
இப்படி இன்று(ம்) நடக்கனும்னு மாற்றி யோசிச்சேன்...(இது தப்பா ?)
Riyaz Ahamed said...
அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹ..
நம் ஊர் நம் சமுதாயம் நல்லா இருக்கணும் என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் வருவதில்லை ஒரு சிலருக்கு தான் வருகிறது, இதை படிப்பவருக்கு மனதில் நல்லா மாற்றத்தை அல்லாஹ் ஏற்படுத்த போதுமானவன் - நன்றி பெரியண்ணா///////////
அஸ்ஸலாமு அழைக்கும்
ரியாஸ் காகா வருகை அறிந்து சந்தோசம் பிரிந்து கிடந்த நம்மையெல்லாம் இணைத்த அதிரை நிருபருக்கு நன்றி அடிக்கடி வந்து நட்பை புதுப்பித்து கொள்ளுங்கள் நீண்ட நாட்களாக தொடர்பு இல்லாமல் நட்பு துரு பிடித்து விட்டது இனி முலாம் பூசி சரி செய்து விடலாம்
இப்படிக்கு
சின்ன தம்பி சவானா
வாருங்கள் சகோதரர்கள் ஜமீல் அலாவுதீன், ரியாஸ் அஹம்து, இணைய இதயம் (பெயர் தெரியவில்லை) உங்கள் அனைவரின் முதல் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
அதிரைநிருபர் வலைப்பூ பிர்ந்து கிடைக்கும் சொந்தங்களையும் நட்புகளை ஒன்றினைக்கிறது என்ற செய்தியை இங்கு சகோதரர் ஷாஹுல் அவர்கள் மூலம் அறியும் போது உண்மையில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அதிரைநிருபர் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நல்ல செய்திகளால், கருத்துக்களால் நம் சகோதரர்களை ஒன்றிணைப்பது தான். ஒவ்வொரு நாளும் இதில் வெற்றி கண்டு வருகிறோம், இன்ஷா அல்லாஹ். இனியும் வெற்றி காண்போம்.
வழக்கம் போல் நல்ல செய்திகள் வெளிவர இருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள்....
சகோதரர் கிரவுன் அவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. சகோதரர் தஸ்தகீர் புரிந்துக்கொள்வார் என்று நம்புகிறோம்.
crown said...Thursday, September 16, 2010 4:38:00 PM
அஸ்ஸலாமு அலைக்கும் .ரியாஸ் காக்கா நலமா?தம் இடத்தில் சில நேரம் வழிப்போக்கனாய் வந்து,தங்கி உண்டு சென்ற தம்பியின் அன்பு விசாரனை.தொடர்பில் இருங்கள்.சகோ.ஆசீக் எப்படி ,எங்கே இருக்கிறார்?காய்கரிகடை அப்துற்றஹ்மான் எல்லோரையும் கேட்டதாய் சொல்லவும் சலாம் சொல்லவும் .(தொடர்பில் இருந்தால்)
சீனியருங்க சொன்னாங்களேன்னு மாற்றி யோச்சேன், என்னைய் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்களே, நல்லதுதானே நடந்தேறிகிட்டு இருக்கு வாங்க (சொந்த)பந்தங்களே - மலேயா சாப்பாட்டு குறிப்பு வந்தால் சாஹுல் ஆரம்பித்து வைப்பார், கிரன் அப்படி இப்படி தூவி, யாசிர் கொஞ்சம் அத இத தூவி, சஃபீர்கக்கா final touchஅப் கொடுத்து வைங்க சாப்பிட நான் உட்கார்ந்துடுறேன், உன்னைப் போல் ஒருவன்(ன்னு) கடசியா வந்தா என்னோட சஹன்ல இடமுண்டு(ங்கோ)
அஸ்ஸலாமு அலைக்கும்.சரியா உங்கள் பணியை செய்துள்ளீர்கள் அந்த் மாயவரத்தூரைச் சேர்ந்த அப்துற்றஹ்மானுக்கு(வல்ல அல்லாஹ் ரஹ்மான் வழி காட்டவே அப்படி எழுதினேன்)தாவத் கொடுக்க வேண்டியது நம் கடமை . நான் அப்படி யெழுதினால் ஒருகால் அந்த் நபரும்(சகோதரர்) நம்மவர்களுடன் இருப்பதால் படித்து படிப்பினை பெற ஏதுவாகத்தான் பொடி வைத்து எழுதினேன்.
புரிந்துக்கொண்ட எங்கள் அன்பு சகோதரர் கிரவுன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து உங்கள் மனம் திறந்த கருத்துக்களை நம் அதிரைநிருபரில் பதியுங்கள்.
//ஜமீல் said...
அட ... நல்லாருக்கே//
அப்பாடா... மோதிர விரல் குட்டு கிடைத்து விட்டது (இதுக்குத்தான் போய் கூப்பிட்டது)
சகோதரர் அபு இபுறாகீம் பிரிச்சு மேய்ஞ்சது சுவை.
சகோதரர்கள் தாஜுதீன், ஷாகுல், யாசிர், crown, ஜாகிர்(ஃபோன்ல)அ.மாலிக், அலாவுதீன், இ.இதயம், riyaz uncle, எல்லோருக்கும் நன்றியோடு ஒரு சின்ன செய்தி: முதல் முதல் என் மகன் 'A' எழுதிக் காட்டியது சகிக்கல...ஆனா, ஆ ஊன்னு அமர்க்களம் பண்ணி பாராட்டினேன்.அதையும் மிஞ்சிவிட்டது உங்கள் பாராட்டுக்கள்
ஊக்குவித்தமைக்கு மீண்டும் நன்றி.
(தாஜுதீன், யாசிர் கொஞ்சம் காதைக் கொடுங்க்...வல்லரசு
இன்று வந்துவிட்டதால் கொஞ்சம் பிஸி)
முத்தாய்ப்பாக, அபு இபுறாகீம் மாற்றி யோசித்தது
அற்புதம். சாவண்ணா, இயற்பியல் சொல்லித் தராமலேயே
க்ரையோஜெனிக் எழுதிய ஆள், கவிதை சொல்லித்
தந்தால் எங்க கதி?
crown,
அப்ப ரஹிமாவில் எப்ப்டி உங்களை மிஸ் பண்ணினேன்?
ஏனெனில், ஆஷிக், ரியாஸ், ரஹ்மான் இவர்களைக்
காணாமல் என் வார இறுதி நாட்கள் கழிந்ததில்லை.-சபீர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.சபீர் முன்பு என் முன்னோட்டம் பார்கவில்லை யென்று நினைக்கிறேன் உங்களை சந்தித்தும் பேசிகொள்ளமுடியாத சூழல் நண்பன் நாவசின் அந்த அடக்கஸ்தலத்தில் அடக்க முடியாத துன்பத்தில் இருக்கும் பொழுது.மற்றபடி சந்திக்க முயன்றும் ஏனோ காலம் கூடி வரவில்லை இன்சா அல்லாஹ் இனிவரும் என நம்புகிறேன்.
அப்பாடா... மோதிர விரல் குட்டு கிடைத்து விட்டது (இதுக்குத்தான் போய் கூப்பிட்டது)///
அதானே பார்த்தேன் (ஜமீல்)காக்காவின் வருகைக்கு சுழி போட்டது யாருன்னு !
தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் .
ரியாஸ் காக்கா நலமா?தம் இடத்தில் சில நேரம் வழிப்போக்கனாய் வந்து,தங்கி உண்டு சென்ற தம்பியின் அன்பு விசாரனை.தொடர்பில் இருங்கள்.சகோ.ஆசீக் எப்படி ,எங்கே இருக்கிறார்?காய்கரிகடை அப்துற்றஹ்மான் எல்லோரையும் கேட்டதாய் சொல்லவும் சலாம் சொல்லவும் .(தொடர்பில் இருந்தால்)/////////////////////////
சின்ன அண்ணன் ஆசிக் நலமாக சென்னயில் ஐஸ் ஹவுஸ்ல் (கூலாக) இருக்கின்றார் .அப்துல் ரஹ்மான் ரஹீமாவில் காய்கறி கடைவைத்து கொட்டை போட்டது போய் இப்பொது முட்டை கம்பெனியில் முட்டை போட்டுக்கொண்டுள்ளார் .
மாற்றி யோசி, மக்களே என்றதை மாற்றி மாற்றி யோசித்து பிரித்து மாற்றி விட்டு முடிவில் ஷகனில் உட்கார்ந்து விட்டார்
அபுஇபுறாஹிம்
வேற வழி அங்கேதான் கைகள் இணைகிறது !
அபுஇபுறாஹிம் said...
வேற வழி அங்கேதான் கைகள் இணைகிறது !//////////////////////
ஆனால் அங்கு எறச்சி பிரிபடுவதும் உண்மை
இறச்சியை பிரித்து சகனெல்லாம் எறச்சிப்போட்டுடுறாங்க.சாப்பிட்டப்பின் நுகர்ந்து(சிலருக்கு அந்த பழக்கம் நான் கண்டிருக்கிறேன்)பார்த்தால் இறைச்சி கவிச்சியைவிட சகனில் சேர்ந்திருந்த சக நண்பர்களின் நட்பு வாசனைதான் வரும்.(????)அங்கேதான் சமத்துவம் சமைக்கப்படுகிறது(திண்டு ஏப்பம் வரும் நேரம் சமையலா சகோ.சாகுல் கேட்பது காதில் விழுகிறது) மேலான்மைத்தகவல் தந்த தற்கு நன்றி.சின்ன அண்ணன் ஆசிக் கூலா இருக்கார் அதுசரி .சகோ அதுற்றஹ்மான் முட்டை கம்பெனியில் கூலாக இருக்கலாம் அனால் முட்டைதான் கூலாக இருக்ககூடாது சரியா சொன்னேனா?
Shahulhameed said...
அபுஇபுறாஹிம் said...
வேற வழி அங்கேதான் கைகள் இணைகிறது !//////////////////////
ஆனால் அங்கு எறச்சி பிரிபடுவதும் உண்மை
Friday, September 17, 2010 6:39:00 PM //
அங்கே இறைச்சி பிரியர்களால் பங்கிடப்படும்னுதானே வைக்கிறாங்க hypertension முதாதையர்களை (இறைச்சி)ஆனா நீங்க சொல்லிட்டீங்க நல்லதை நாலு/ஐந்து/ஆறு/பேருக்கு (இப்போ மூனுபேராம்) கொடுப்பதுதானே விருந்தோம்பல் (அதுக்காக கொழுப்பையான்னு கேட்கப்படாது மருத்துவச் செலவுக்கு நான் பொறுப்பல்லா) கைவைக்கத்தான் கூப்பிட்டேன் அங்கேயிருப்பதை விரும்பியதைத்தான் சாப்பிடுவோமே (சபையில).
குறிப்பு : நிச்சயமா என்னோட(வூட்டு) விருந்தோம்பல் அது தனிச் சிறப்புடையது கண்டிப்பாக என் நட்புகள் நேசிப்பார்கள் (கேட்டுச் சொல்றேன் வல்லரசிகிட்டே)
"வல்லரசி" உபயம் = சபை-KING "சஃபீர்" காக்கா
//"வல்லரசி" உபயம் = சபை-KING "சஃபீர்"காக்கா//
அபு இபுறாகீம்: வல்லரசு ட்ரபுள் அளவுக்கு வயசாயுடுத்தா என்ன? குறைந்தபட்சம் அமீரகத்தில் இருக்கும் உங்களையெல்லாம் ஒரு முறை பார்த்தால் தேவலாம். தாஜுதீன், நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
//"வல்லரசு"உள்ளுக்குள்ளே பரவுதா? தாஜுதீன்/யாசிர்: யார் சேவை இது?//
இறைச்சி கவிச்சியைவிட-
சகனில்...
சேர்ந்திருந்த
சக நண்பர்களின்
நட்பு வாசனைதான் வரும்// "what a thought!!!கவிதை
//இப்பொது முட்டை கம்பெனியில் முட்டை போட்டுக்கொண்டுள்ளார்//என் ஆம்லெட்டை...சாரி சலாத்தை சொல்லிடு ஐயா. ..sabeer
-
sabeer says
Friday, September 17, 2010 11:09:00 PM
வல்லரசு ட்ரபுள் அளவுக்கு வயசாயுடுத்தா என்ன? //
காக்கா வயச மறைக்கிற அளவுக்கு வயசாயிடல - இருந்தாலும் இந்த வயசோட பார்த்துடரது நல்லது அப்புறம் இங்கே கேட்டது நிஜமாயிடும்ல :)
அது ட்ரபுள் இல்ல ட்ரபுல் சூட்(டிங்) அப்பைக்கு அப்ப.. :)
சேர்ந்திருந்த
சக நண்பர்களின்
நட்பு வாசனைதான் வரும்// "what a thought!!!கவிதை.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சபீர் காக்கா நலம் அறிய ஆவல்.என் கிறுக்கல்களும்,வாசிக்கப்பட்டு ,வாழ்த்து பெற்றதால் கிறு,கிறுகிருத்து போச்சு மனசு. நன்றி!(அபு இபுறாகிம்- தம்பி (கிரவுனு) நீ கிறுக்குப்பயன்னு எனக்கு நல்லா தெரியுமே!!! )
Post a Comment