Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர்கள் தினம் - செப்டம்பர் 5 2

அதிரைநிருபர் | September 04, 2010 | , ,

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்                   மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களிடம் வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

நம்மில் பலர் பள்ளி கல்லூரி நாட்களில் ஏனோதானோ என்று இருந்திருந்த வேலையில் யாராவது ஒரு ஆசிரியரால் நாம் நம்மிடம் இருந்த தீயவைகளை தூக்கி எறிந்து நல்ல மனிதனாக மாறியிருப்போம். நம்மை நல்லவனாக மாற்றிய அந்த ஆசிரியரை இங்கு நாம் நினைவுப்படுத்திப் பார்க்கலாமே.

ஆசிரியர் பணி ஒரு புணிதமான பணி என்பது உலகறிந்ததே. எத்தனையோ நல்லாசிரியர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில கருப்பு ஆடுகள் எல்லாத்துறையிலும் தான் இருக்கிறார்கள், இதில் ஆசிரியர்துறை ஒன்று விதிவிலக்கல்ல.  இங்கு நாம்  நல்லவர்களைப் பற்றி மட்டும் பேசலாம்.

நம்மூரில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, நம்மூர் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் நிலைநிறுத்திக் கொண்டு படித்த பட்டதாரி நம்மூர்வாசிகள் ஆசிரியர் பணியை தேர்ந்தேடுத்து மக்கள சேவை செய்ய முன்வரவேண்டும், குடும்பத்தவர்களும் அதற்கு உற்சாகமூட்ட வேண்டும். இதற்கு பள்ளி கல்லூரிகளும் பணம் கேட்காமல் ஆசிரியர் பணியில் நம்மூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

படித்த அதிரை பட்டதாரிகளை, ஆசிரியர் பணியில் சேர  (பணம் வாங்காமல்)  பள்ளி  மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஊக்கப்படுத்தி, ஒத்துழைக்குமா?

--அதிரைநிருபர் குழு

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னை அடித்த, அரவனைத்த, ஆறுதல் சொன்ன, சிரிக்க வைத்த, நண்பனாக இருந்த அனைத்து (என்)பள்ளி ஆசிரியர்கள் அவனைவருக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்" :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மறந்துட்டேன், என்னை பெஞ்சு மேலே ஏற்றிய, வகுப்பறைக்கு வெளியிலே நிற்கவைத்த, விளையாட்டு மைதாத்தில் (சுடுமனலில்) முட்டிபோட வைத்த எல்லா நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கும் "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்"

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு