நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எச்சரிக்கை! தேவை ஒற்றுமை 8

Unknown | செவ்வாய், செப்டம்பர் 07, 2010 | , , ,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக  ரமழான் இரவுத் தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் வழக்கம் போல் நடந்து வருகின்றது.

தொழுகை நடைப்பெறும் இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட சிறிய சலசலப்பு, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்கு போனது மிகவும் வேதனையான செய்தி.  தொழும் இடம் தொடர்பாக நம்மவர்கள் அடித்துக்கொண்டு கொலை செய்துக்கொண்டார்கள் என்று ஒவ்வொரு வினாடியும் எண்ணும் போது கண்ணீர் வராமல் இல்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் இறந்துள்ளார்கள்.

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நக்கீரன் இணையத்தளத்தில் இன்று காலை வெளியான பரபரப்பு செய்தியாக இருந்தது,  இந்த துப்பாக்கி சூட்டிற்கு தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  ததஜ தலைவர் அவர்களின் விளக்கம் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் கொஞ்சம் பதட்டதை தனித்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. முஸ்லீம்களின் சம்பவங்களை வழக்கம் போல் நம் தமிழ் செய்தி ஊடகங்கள் உண்மை செய்தியை போடாமல் மேலோட்டமான செய்தியை போட்டு நம்மவர்களிடம் குழப்பத்தையும், கலவரத்தையும் தூண்ட முயன்று வருகிறார்கள். நாம் நம்முடைய கலிமாவால் முஸ்லீம்கள் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

 ரமழான் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில்  கொலை செய்யும் அளவுக்கு அந்த சகோதரர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது. அடப்படுபாவிகளா இரண்டு முஃமீன்களுடைய உயிர் பிரிந்துள்ளது இவைகளுக்கு எல்லாம் யார் பொருப்பு?
ரமழான் மாதத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் என்பதால் உயிரழந்த அச்சகோதரர்களின் குடும்பங்கள் நிச்சயம் எல்லையற்ற கவலையில் மூழ்கி இருப்பார்கள். அல்லாஹ் அக்குடும்பங்களுக்கு மன நிம்மதியையும், பொருமையையும் தந்தருள்வானாக. ஆமீன். காயம் பட்ட சகோதரர்கள் விரைவில் குணமடைய செய்ய அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக.
என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி... தவறு எங்கு நடந்திருந்தாலும் சரி. கொலை புரியும் அளவிற்கா வெறி முற்றிவிட்டது நம் சகோதரர்களிடம்?
நாளை நமது எதிரியே நம்மை கருவருக்க முற்படும்போது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியாது அழிந்து ஒழிய நல்ல தருணம் அமைத்துவிட்டது. பல இயக்கங்களினால் உண்டான பிரிவினையின் உச்சக்கட்டமா?
இந்த நிலை நீடித்தால், முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் இருந்து துடைத்து எறியப்படும் நாள் வெகுவிரைவில் இல்லை.  அல்லாஹ் காப்பாத்துவானாக!

வல்ல அல்லாஹ், யாவற்றையும் நன்கறிந்தவன். தீர்க்கமான அறிவுடையவன்.... நம் அனைவருக்கும் சிந்தித்து விளங்கும் ஆற்றலை தர போதுமானவன். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாத்துவானாக.
யார் சொர்க்கவாசி யார் நரகவாசி என்பதை படைத்த அல்லாஹ் தான் முடிவு செய்வான். இவ்வுலகில் எவருக்கும் அந்த அதிகாரமில்லை. நம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுப்பட்டால் நம்மால் முடிந்தவரை அவர்கள் ஹக்கை உணரும் வரை நிதானமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர தனித் தனியாக பிரிந்துப் போவதால் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுபடும் மக்களை திருத்துவதற்கான வாய்ப்பு குறைந்துக் கொண்டேதான் போகும். நம் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் சமூக அவலங்களை தூக்கி எறிய இன்னும் நிறைய சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மிக மிக முக்கிய தேவை சமூக ஒற்றுமையை தவிர வேறு எதுவும் இல்லை.

தமிழகத்தில் அனைத்து முஸ்லீம் ஊர்களிலும் தொழுகை நடத்துவதில் பிரச்சினைகள் இருந்து வருகிறது. கவுரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்தை பேணி வாழ இப்புனித ரமழானின் கடைசி நாட்களின் அல்லாஹ்விடம் அழுது அழுது துஆ செய்வோமாக.

இயக்க பேதம் அறவே மறப்போம்,  நாம் எல்லோரும் முஸ்லீம்கள் என்ற சிந்தனையுடன் இனிய உறவு வளர்ப்போம்....

கனத்த இதயத்துடன்

-  தாஜுதீன்.

8 Responses So Far:

Shameed சொன்னது…

தக்க தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. கனத்த இதயத்துடன் எழுதப்பட்ட கட்டுரை கனத்த இதயத்துடன் படிக்கப்பட்டது .ஒரு நிமிட கோபம் இரண்டு உயிர் களை பலி கொண்டு பலரது மனங்களை பாதித்து விட்டது

crown சொன்னது…

ஒற்றுமை என்பது உதட்டளவில்,
உறவுகள் ஏனொ கைகலப்பில்?
சகோதரன் உயிரை குடிக்கும் குரோதம் ஏனோ கொள்கை முரன்பாட்டில் ?
நரகவாதி,சுவர்கவாதி யார் தீர்மானிப்பது அல்லாஹ் அல்லாமல்?
அடித்துக்கொண்டு சாகவா நாமும் வாழ்கிறோம்??
அமைதி மார்கத்தில் ஏனோ தர்கமும்,மூர்கமும்!!!
அனைவருக்கும் சாந்தியும் ,சமாதனமும் சொன்ன இதயம் ...
ஏனோ சகோதரர்களின் ரத்தம் குடித்தது?
அட பாவிகளா! இதைவிட கை சேதம் ஏதும் இல்லை!கருத்து வேறுபாடு என்றால் அமைதியா கலைந்து போய்விடு,பின் கோபம் தனிந்த பின் அந்த நெருப்பு ஆறிவிடும் ஆனால்..
ஏனோ இன்னும் அந்த நெருப்பின் ரணம் இதயமெல்லாம்..
இருந்து தகிக்கிறதே!
இனியேனும் சிந்திப்போமா???இல்லையேனில் இப்படியே ரத்தம் சிந்தி நம் இனத்தின் மேல் கறைபடியுமா?சிந்திப்பீர் தீர்ப்பு வரும் நாளில் ... நிச்சயம் இதற்கெல்லாம் தீர்ப்புவரும்.
கண்ணீருடன் அன்புச்சகோதரன் முஹமது தஸ்தகீர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட "எச்சரிக்கை மணி" - தேவை ஒற்றுமை !

அருமையான உணர்வுகளுடன் எழுதப்பட்ட கட்டுரை, மற்ற வலைப் பக்கங்களில் மீள் பதிவு செய்யப் படவேண்டிய ஆக்கம்...

அதிரை நிருபரின் முன்மாதிரியான கட்டுரைகள் தொடரட்டும் (இன்ஷா அல்லாஹ்)...

mohamedali jinnah சொன்னது…

யார் மீது குற்றம் .போதிய கல்வி இல்லை.சமுதாய மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளார்கள்
அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).
மார்க்கம் சொல்லித் தருபவர்வர்கள் சரியில்லை .குரானையும் ஹதீசையும் விடுத்து மற்றதனை பேசி நமக்குல் பிரிவினை உண்டாக்குகின்ரனர் . காலம் எல்லாம் தொழுதாலும் என்ன பயன் . இறைவன் நமது தொழுகையினை ஏட்றுக் கொள்வானா !
இஸ்லாம் என்றால் அமைதி என்ற விளக்கம் என்ன ஆனது! பணம் மற்றும் பொய்யான புகழுக்கும் ஆசை ஆனால் அல்லாஹ்வின் அருள் மீது நாட்டம் இல்லை. கவுரவம், பிடிவாதம் இருக்கும் வரை தீவிரவாதம் வளர வாய்ப்பு
உண்டு . நாத்திகம் வளரும். ஆன்மீகம் வளர வழி ! தன் குற்றம் பார்க்கட்டும் .
மனித நேயம் போய்விடும் .

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

அப்துல்மாலிக் சொன்னது…

யார் மீது குற்றம் சுமத்துவது, சமுதாயத்தின் மீதா, மக்களின் மனநிலையின் மீதா. இறைவனை வணக்குவதில் மாற்று மதத்தினர்தான் கலவரத்தில் ஈடுபட்டு வழிபாட்டுத்தளங்கள் வருடக்கணக்கில் மூடிவைக்கப்பட்டிருக்கும், நம்மிடையும் இந்த நிலை என்ண்ணி (உயிரை பழிவாங்கும் கலவரம்) மனது கலங்குகிறது. இதில் அதிகம் பாதிப்பு நம் சமூகத்திற்கும் சகோதரர்களுக்கும்தான். இந்த சம்பவத்திற்கு பிறகாவது ஒற்றுமையுடன் எல்லா இயக்கத்தையும் ஒரு இயக்கமாக்கி வாழ வழிவகை செய்யவேண்டும். நடக்குமா?

mohamedali jinnah சொன்னது…

அல்-குர்ஆன் 2:114
Sahih International
And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.
Muhsin Khan
And who is more unjust than those who forbid that Allah's Name be glorified and mentioned much (i.e. prayers and invocations, etc.) in Allah's Mosques and strive for their ruin? It was not fitting that such should themselves enter them (Allah's Mosques) except in fear. For them there is disgrace in this world, and they will have a great torment in the Hereafter.
Yusuf Ali
And who is more unjust than he who forbids that in places for the worship of Allah, Allah's name should be celebrated?-whose zeal is (in fact) to ruin them? It was not fitting that such should themselves enter them except in fear. For them there is nothing but disgrace in this world, and in the world to come, an exceeding torment.
Tamil NEW
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

mohamedali jinnah சொன்னது…

தவறு செய்பவரைவிட தவறு செய்ய தூண்டுபவன் மிகவும் கொடியவன் அதிகம் தண்டிக்கப் பட வேண்டியவன்.
மனம் மிகவும் வேதனை அடைகின்றது.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

தங்களின் கவலைகளை இங்கு பகிர்ந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

நம்மிடம் ஒற்றுமை நிலைக்க தொடர்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்துக்கொண்டே இருப்போம்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு