On saying please!

அன்பர்களே விவாதமல்ல இதனை விதை(யாகத்தான்)க்க பதிகிறேன். இதன் வினைப்பயன் என்னையேச் சாறும். (தலைங்களா தலைப்பு என்னான்னு கேட்பீங்களே அது கோபம் இருக்கிற இடத்திலதானே குணம் இருக்குமாமே அதான் இப்படி)

அதிராம்பட்டினம், இது நான் மட்டுமல்ல என் முன்னோர்கள் ஏன் நீங்களும்தான் பிறந்த, வாழ்ந்த / வாழும் ஊர் இதிலென்ன அதிசயம் என்று உடம்பு முறிக்க வேண்டாமே Please!

தொலைந்ததா அல்லது தொலைக்கப்பட்டதா எங்களின் விருந்தோம்பல் தெரு விட்டு தெரு கொண்டாடிக் கொள்ளும் வாகை, என்னுடைய அனுபவமே இங்கே சாட்சியாகட்டும்.

எனக்கென்று நட்பு வட்டம் நீளமானது அது பரந்து விரிந்து தெருக்களைத் தாண்டியிருந்தது அவர்களை என் / என் சொந்தங்களின் வீட்டு விஷேசமானாலும் அவர்கள் / அவர்கள் சொந்தங்களின் விஷேசமானாலும் அன்போடு அழைப்போம் / கலந்து கொள்வோம் அங்கே கிடைக்குமே அந்த விருந்தோம்பலும், பாசப் பார்வைகளும் எந்த நாட்டிற்கு சென்று அள்ளி வந்தாலும் கிடைக்காதுங்க !

தெருக்களுக்கே தெரியாது எது எல்லைன்னு ஆனா நாம ஆட்களை வைச்சு எல்லை போட்டுக் கொண்டோம் நம் வீட்டுப் பக்கத்தில் வீடுகட்டி வந்தாலும் “அந்தத்தெருவான்னு” சொல்லியே வீழ்ந்தோம் !


  • · எங்கே விட்டோம் கோட்டை ?

  • · எங்கிருந்து நீண்டது இந்தப் பிரிவினைக் கோடு ?

  • · யார் வித்திட்டார்கள் இந்த சாபக்கேட்டிற்கு ?

  • · எவரிடம் உதித்தது தெரு வேற்றுமை ?
இப்படியெல்லாம் கேட்டுடுவேன் ஆனால் இங்கே யாரவது இவன் தான் / அவன் தான்னு கையை காட்டிடுவாங்களோன்னு தயங்கினேன் ஆனா, நம்மவங்க ரொம்பவே பக்குவப் பட்டவங்க (ICE வைக்கலை) அதே நேரத்தில் தஙகளோட தனித் தன்மையை இழக்காதவங்க நிறைந்த சபையிது.

மக்களே உங்களிடம் சொல்ல வந்தது என்னன்னா ரொம்ப சிம்பிள் "உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக" (அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]).

பின்னூட்டம்னு ஒன்னு இருக்கிறதே அங்கே நபிமொழிக்கு ஏற்ப அதாவது "உங்களுக்கிடைய அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது அன்பை வளர்க்கும்" அதனால நல்ல / அறிபூர்வமான / ஆக்கமான வார்த்தைகளை வரி வரியா போட்டீங்கன்னா நேசமெனும் கருவூலம் நிறையுமே ! (வரி(களுக்கு) விலக்கு உண்டு அதிரை நிருபரில்)

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி நல்லதையே நோக்கமாக மையப்படுத்தி மேலான கருத்துகளை நீட்டித் தாருங்கள் மக்களே !

குட்ட வேண்டியவைகள் குட்டிவிட்டு அடுத்து அட ரொம்ப நல்ல புள்ளையா இருக்கிற நீ குட்டு வாங்கிட்டியேன்னு ஒரு "டச்" வைங்க எல்லாம் தானா கரைஞ்சுடும்.

யாரையும் தாழ்த்தியோ / தாக்கியோ பின்னுட்டமிட்டால் கோபம் தலைக்கேறும், அதே நேரத்தில் முகஸ்துதி(யும்) செய்தால் (அதுவும்) தலையில கனம் ஏறிடும் ஆகவே இந்த இரண்டையும் கட்டிப் போட்டு வைப்போம்.

அதிரை நிருபர் சார்பாக என் குறிப்பு: பின்னூட்டங்கள் தடம் புரண்டால், தடுமாற்றம் கண்டால் அப்படியே இந்த விவாதத்திற்கான கதவு சாத்தப்படும் ஆனால் விதை விதைத்துதான் வளர்த்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.

-- அபு இபுறாஹிம்

14 கருத்துகள்

Unknown சொன்னது…

நன்மையான விதைதான் .....நீண்ட பலன் தரும் மரமாக வளர எல்லோரும் பாடுபடுவோம்

sabeer.abushahruk சொன்னது…

சொல்ல வந்தது நல்ல விஷயம். தாரை தப்பட்டையோடு முழ்ங்காமல் இவ்வளவு தயக்கம் ஏன் அபு இபுறாகிம்?

தாக்குவதற்கும் விமரிசிப்பதற்கும்; முகஸ்துதிக்கும் பாராட்டுவதற்கும் நூலிழை அளவுதான் வித்தியாசம். கம்பிமேல் நடப்பது போல.

பிரிவினை வாதி உங்கள் நண்ப்னோ என் நண்ப்னோ அல்ல; அவனோ இவனோதான்.

அதிரை நிருபரின் ப்ங்களிப்பாளர்கள் பலர் உரத்த சிந்தனை கொண்டவர்கள். ஆயினும் ரோசக்காரர்கள். அப்படியொரு ரோசத்தின் விளைவுதான் இந்த அ.நி. என்பது சொல்லித் தெரிய் வேண்டியதில்லை.

அறிவிப்பு பலகை போல செயல் பட எத்தனையோ தளங்கள் உள்ளன.Facebook போன்றதொரு அதிவேக வளர்ச்சியைத்தான் அ.நி.ல் காண்கிறேன்.எனினும், பின்னூட்டங்களில் கவனம் அவசியமே.
-சபீர்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி சிலாகித்து சொல்லிட்டிய எந்த தேசம் சென்றாலும் நண்பனிடம் கொண்ட பாசமும்,விருந்தோம்பலின் விடாப்பிடியான கவனிப்பும்.மிகச்சரியான வார்தையாடல் அது எதார்தம் மற்றும் உண்மை என்பது உங்களிடம் பழக கொடுத்துவைத்தவனில் ஒருவன் என்பதில் விளங்கும்.அப்பொழுதே சமுதாயத்தின் தாக்கமும் , நம் கோபமும் இன்றும் என்றும் மாறாதவையே!

crown சொன்னது…

எங்கே விட்டோம் கோட்டை ?
(அந்த அன்பு கோட்டையை சில அழுக்குப்பிடித்த சீமான்கள் தமக்குள் மதில் எழுப்பி மதி இல்லாமல் விட்ட கோட்டை அது)!
------------------------------------------------
எங்கிருந்து நீண்டது இந்தப் பிரிவினைக் கோடு ?
இந்த பிரிவினை என்னும் கோ(கே)டு ஆரம்பிதவன் அந்த கேடு கெட்ட நல் புத்தியற்ற சீமான்களே! வரிமை கோட அழிக்க முடியாலாம் இந்த உரிமை கோட அழிச்சிட்டு அடிமை கோடு போட்டவனும்,அல்லாஹ்வின் மேல் பயமற்றவனான சீமான்கள் தான்.ஆனாலும் சில சீரிய குணாலனான சீமான்கள் வாய்பொத்தி இருந்ததாளும் வந்த நிலை.
-----------------------------------------------
யார் வித்திட்டார்கள் இந்த சாபக்கேட்டிற்கு ?
( நாமே) முன்னோர்களே மல்லாக்க படுத்துக்கொண்டு தமக்கு தாமே துப்பிக்கொண்ட எச்சில் இந்த சாமக்கேடு.
------------------------------------------------
எவரிடம் உதித்தது தெரு வேற்றுமை ?
எல்லாம் அந்த பாழாய் போன பொருளாதர தாழ்,உயர் நிலை கண்டவர்கள் தமக்குள்ளே பூட்டிக்கொண்ட விலங்கு இது.தாழ்ந்தவன் பூட்டிக்கொண்டான் .உயர் நிலையாளன் நம்மை பூட்டிவிட்டான் அவனுக்கென ஒரு எல்லைப்போட்டான் பிறகு காலச்சக்கரம் மாறி,மாறி மேல் உள்ளவன் கீழேயும்,கீழ் உள்ளவன் மேலேயும் வகுத்ததுதான் இந்த பாகுபாடு இதில் கொடுமை கீழ் இருந்தவன் மேலே போனதும் ,மேல் இருந்தவன் குணத்தை கடன் வாங்கிகொண்டான்.

Zakir Hussain சொன்னது…

Thanks to ABU IBRAHIM

bro.CROWNனின் comments "உண்மையின் பிரதிபளிப்பு", "எதார்த்ததின் எடுத்துக்காட்டு" என புதிதாக எழுதுபவ்ர்களின் உவமையை போட்டு எழுதலாம்.

நம் ஜன்னல்கள் திறந்திருந்தும் கண்ணால் பார்க்க / கத்துக்கொள்ள தயங்கும் புத்திதான் காரணம் .

உண்மை No. 1. பக்கத்தில் இருக்கும் முத்துப்பேட்டையிலும் பல தெருக்கள் இருக்கிறது...பிரச்சினை என்று வந்தால் அவர்களிடம் உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை

அதிரை தும்பி சொன்னது…

I like this article very much,thanks

அதிரை தும்பி சொன்னது…

kashmir,kashmir??

Shameed சொன்னது…

crown
இதில் கொடுமை கீழ் இருந்தவன் மேலே போனதும் ,மேல் இருந்தவன் குணத்தை கடன் வாங்கிகொண்டான்////

இப்படி இங்கே வாங்கி அங்கே கொடுப்பதும் அங்கே வாங்கி இங்கே கொடுப்பதையும் நிறுத்திவிட்டு வங்கியதை குழி தோண்டி புதைத்து விட வேண்டும்

crown சொன்னது…

அன்பர்களே விவாதமல்ல இதனை விதை(யாகத்தான்)க்க பதிகிறேன்.
---------------------------------------------
விதை விதைத்த விதம் அருமை.விதை வீரியம் கொண்டு பின் முளைத்து,வேராகி,தழைத்து,பின் இலையின் தலை முளைத்து,பின் நெடு மரமாய் கிளை பரப்பி( நட்பின்) அதன் கீழே ஒரே குலாமாய் வாழ ,அமைதியெனும் நிழலும்,அது நிகழும். நிழலல அது நிசம்( நிஜம்)தரும்(தரு=மரம்).காலம் வசப்படும் இன்ஷாஅல்லாஹ் வரும் சமூகம் சுகப்படும்,தீயவை சுடப்படும் ,தீயவர்கள் அகப்படும் ,புறப்படும் அன்னா!!!(அபுஇபுறாகிம்) நம் அதிரை நிருபர் பங்களிபாளர்கள் மூலம்.

Yasir சொன்னது…

அபு இபுறாஹிம் விதை விதைத்து விட்டார்...வாருங்கள் அன்பு என்ற உரமிட்டு..ஒற்றுமை என்ற நீர் பாச்சி சீக்கிரம் வளர்த்து ..பயன் பெறுவோம்...கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...சகோ.கிரவுன்...உங்களின் விளக்கவுரை அருமை

அப்துல்மாலிக் சொன்னது…

ஒரு ஊரில் தெருக்கள் பிரிப்பது எளிதாக அட்ரஸுக்கும், நபர்களை தெரிந்துக்கொள்ளதான் ஒழிய நமக்குள் பிரிவினை உண்டுபண்ண அல்லவே. இது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும், அதிரை மக்கள் நாம் என்ற ஒரு சொல் வேண்டும். இது படிக்கும் மாணவர்களிடம் அதிகம் வேண்டும். பரஸ்பர புரிதல் அவசியம், நடக்கனும் இதுதான் நம் ஆவல்

Shameed சொன்னது…

அப்துல்மாலிக்
ஒரு ஊரில் தெருக்கள் பிரிப்பது எளிதாக அட்ரஸுக்கும், நபர்களை தெரிந்துக்கொள்ளதான் ஒழிய நமக்குள் பிரிவினை உண்டுபண்ண அல்லவே. இது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும், அதிரை மக்கள் நாம் என்ற ஒரு சொல் வேண்டும். இது படிக்கும் மாணவர்களிடம் அதிகம் வேண்டும். பரஸ்பர புரிதல் அவசியம், நடக்கனும் இதுதான் நம் ஆவல்//////

(நம்)உள்ளத்தில் உள்ளதை உண்மையாக போட்டு உடைத்து விட்டீர்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அன்பின் நேசங்களான,
தம்பி அப்துல் ரஹ்மான்,
காக்கா சஃபீர்,
தம்பி கிரவ்ன்,
காக்கா ஜாஹிர் ஹுசைன்,
காக்கா சாஹுல்,
தம்பி யாசிர்,
தம்பி அப்துல் மாலிக்,

என்னடா இப்படி இந்த "அதிராம்படினத்தான்" மொற(வ)ச்சு பார்க்கிறானேன்னு நெனப்பு இருந்தா அதுக்குதான் சொன்னே தலப்புலையே எல்லாமே என்னைச் சாரும்(னு).

சரி மேட்டருக்கு வருவோம், நேரடியாகவே உள்ளத்தில் உள்ளதை அப்படியேச் சொன்ன உங்களனைவரின் உணர்வுகளுக்கு பலன் நிச்சயமாக கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

பின்னுட்டத்திற்கே பின்னுட்டமிடும் தெம்பு / திள்ளு நம்ம தல சாஹுல் காக்காவுக்க்தான் இருக்கு, காத்திருக்கேன் இன்னும் வருமென்று.

அப்துல் ரஹ்மான் தம்பி உன்னுடையது நல்ல துவக்கம் ! ஏன் தெரியுமா ? தண்ணிரை அதிரைநிருபரில் ஆரம்பத்தில் பாய்ச்சிய "harmys"தான் விதைக்கு நீர் ஊற்றி வார்த்திருக்கிறார்.

சஃபீர்காக்க "தாரை தப்பட்டை" அடிக்க ஆள் அனுப்பினேன் அவனுங்களெல்லாம் ஆஹா இவனுங்க ஒன்னா சேர்ந்தா நமக்கு பொழப்பு நடக்காது புறக்கனிப்பு செய்தாங்க. சரி நம்மை அணைக்க இங்கே (என்)ஊரே இருக்கேன்னும் நானே இறங்கிட்டேன்.

தம்பி கிரவுன்(னு) அன்றும் சரி இன்றும் சரி எப்போவுமே நீ சரியாகவே இருக்கிறாய் / இந்திருடுவாய் இன்ஷா அல்லாஹ்...

ஜாஹிர் காக்கா window look மாற்றத்தை தரும், பிரச்சினைன்னு வந்தால்தானே ஒன்னுசேருவதா சேராமலிருப்பதான்னு பிரச்சினையே, அந்தப் பிரச்சினையே வரவிடாமல் தடுத்தே விட்டால் (மாற்றி மாற்றி யோசிச்சுட்டேனா). காக்கா உங்களின் கேள்விக்கு நம் செய்ல்களை பதிலாக்குவோம் இன்ஷா அல்லாஹ்..

யாசிர் தம்பி உரமிட்டு வளர்த்தெடுக்க வரிகளால் வாழ்த்தும் சொன்னார்கள்.

அப்துல் மாலிக் தம்பி நானும் பள்ளிக்கூட நட்பைதான் அசைபோட்டேன் அதுதான் சரியான தருனமென்றும் தகுதிச் சான்று வழங்கியது வீனாகாது, நிச்சயம் நடந்தேறும்.

காக்கா மற்றும் தம்பி(மார்)களே ! விதை விதைத்தாகிவிட்டது ! வளர்த்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ்..

FLASH தகவல் : என்னிடம் கைபேசியிலும் / மின் அஞ்சலிலும் பேசிய / எழுதிய நண்பர்கள் நல்லாத்தானே எழுதியிருக்கேன்னு சொன்னவர்களை இங்கேயும் வந்து பங்கெடுங்களேன் அழைத்தேன் வருகிறோம்னு சொன்னவர்கள் வருவார்கள்.

ஒருவேளை விதை விரிந்து பரந்து ஊருக்குள் படர்ந்து மரமானதும் அவ(ர்)க(ளின்) பங்கை எடுக்க வருவார்கள், நிச்சயமாக பங்களிப்பு இருக்கும் என்று உறுதியாக நம்புவோமாக !

கதவு திறந்தே இருக்கிறது...

Shameed சொன்னது…

மெயிலில் வந்தவர்களை ப்ளாக் கில் வர சொன்னது
அசத்தலான வரவேற்ப்புரை வருகைக்கு ரெட் கார்பெட் போட்டதுபோல் உள்ளது