Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு அதிரைவாசியின் அந்த நாள் நினைவுகள்.... 34

அதிரைநிருபர் | September 26, 2010 | ,

அது ஆச்சி கிட்டத்தட்ட 25 வருசம்,.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.
வெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளம்மாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,,ஓன்னு சத்தம் போடுவாங்க!பெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்க!தொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்க!ஆஹா!அப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும், நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது.
தொட்டு விளையாட்டு, கன்னுவிளையாட்டு, சாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவ!அவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை?)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.
திடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பா!வர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார், பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்க!சிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க.சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க!அவங்க விளையாட்டுத்தொடரும்.
லேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்க!இல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவ!ஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு  நா லஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே 2 பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்க!யாரும் வரங்கலான்னு பாக்க காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க. மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவ!இப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா... ஸ்ஸ்ஸ் ஆஆஆ இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப்(ஆட்டோகிராப்) நீளும் கை வலிக்கிது அது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க!


--தபால்காரன். (CROWN)

34 Responses So Far:

Yasir said...

போறது என்னமோ சைக்கிளில் தான்..ஆனா கட்டுரை படிக்கும் போது ராக்கெட் வேகத்தில் சென்றதுபோல இருந்து....அசைபோட ஒரு அருமையான ஆக்கம்..வாழ்த்துக்கள் பிரதர்

ZAKIR HUSSAIN said...

சின்ன வயதுக்கு அழைத்து சென்ற தபால்காரருக்கு நன்றி "காரன்" என மரியாதை இல்லாமல் விளிக்க முடியவில்லை.எனக்கு என்னவோ செடியங்குளத்தில் குளிக்கும்போது அடித்த வெளிநாட்டு [சிலோன்] சோப்பு வாசனை அடித்தது உண்மை.

சகோதரர் தாஜுதீன்,இந்த கமென்ட்ஸ் எழுதும்போது இதில் ஏதாவது படம் "COPY & PASTE" செய்ய முடியாதா?

ZAKIR HUSSAIN

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் .கருதிட்டவர்களுக்கு நன்றி.இந்த ஆக்கத்திற்கு போடப்பட்ட வண்ணப்படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது.இந்த சைக்கிள் படத்தைப்பார்த்ததும் உடனே என் மனதில் கவிதை குழந்தை பிறந்த்தது இதோ அந்த கவிதை பேசுகிறது.(தன்னந்தனியே நிற்கும் சைக்கிள்/கைம்பெண்(விதவை) உவமானம் கொள்க!).
------------------------------------
என்னை முதலில் நீ வாங்கிய போது(இங்கு பெண் வாங்கப்படுவதில்லை ஆண்வாங்குகிறான் ,கூடவே பராமரிப்பு செலவாக வரதட்சனையும் சேர்த்து)
பொட்டிட்டாய்,பூவிட்டாய் நித்தம் சுத்தம் செய்து என்னை அலங்கரிதாய்.
செல்லும் இடமெல்லாம் என்னையும் அழைத்துகொண்டாய்.
என் மேலே அமர்ந்து வலம் வந்தாய்.
என்னை சுமக்கவேண்டிய உன்னை நான் சுமந்தேன்.வாழ்கைச்சக்கரம் இப்படியே சுழன்று என் சக்கரமும் சுழல ஆரம்பித்தது.
வெகு தூர வாழ்கைப்பயணம் செல்வோம் என்றிருந்தேன்.உன் தீச்செயலால் நீ போய் சேர்ந்து விட்டாய்.
உன் பயணம் முடிந்து விட்டது என் வாழ்வை பாழாக்கி,பொட்டுழித்து,பூபரித்தது உன் சுற்றமும் சொந்தமும்.
இன்று ஹைடேக் கலிகாலம் எல்லாரும்(காரும் ,விமானமும் தேடிக்கொண்டார்கள்)புறக்கனிக்க சில விடலைகள் தொந்தரவு மட்டும் தாங்க முடியல.
என்னை இந் நிலையில் மீட்டு, கூட்டி(ஓட்டி)ச்செல்ல யாராவது முதுகுள்ள உண்மை ஆம்பள உண்டா(மருமணம் செய்ய)??????

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் தஸ்தகீர், கொஞ்சம் நேரத்தில், பல பழைய நினைவுகளை தூண்டிவிட்டுட்டீங்க. ரொம்ப நன்றி.

நல்ல பன்ச் சைக்கிள் கவிதையும் அருமை.

வாழ்த்துக்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சகோதரர் தாஜுதீன்,இந்த கமென்ட்ஸ் எழுதும்போது இதில் ஏதாவது படம் "COPY & PASTE" செய்ய முடியாதா?//

சகோதரர் ஜாஹிர் COPY & PASTE செய்து நேரடியாக் செய்ய முடியாது, html script வைத்து பதிய முடியும், இதுவரை நான் முயற்சி செய்து பார்க்கவில்லை, முயற்சி செய்துவிட்டு பிறகு தெரியப்படுத்துகிறேன்.

இதில் அனுபவம் உள்ளவர்கள் வேறு வழிகள் இருந்தால் தெரிவிக்கலாமே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//போறது என்னமோ சைக்கிளில் தான்..ஆனா கட்டுரை படிக்கும் போது ராக்கெட் வேகத்தில் சென்றதுபோல இருந்து....அசைபோட ஒரு அருமையான ஆக்கம்..//

சகோதரர் தஸ்தகீர் அவர்களின்சைக்கிளையும் , சகோதரர் சாஹுல் அவர்களின் கிரயோஜெனிக் ராக்கேட்டையும் இணைத்து பொருத்தமாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் யாசிர் :)

chinnakaka said...

ஆழம் இல்லாதா வெள்ளக்குளத்தில் குளித்தாலும் நினைவுகளை ஆழத்தில் இருந்து நோண்டி எடுத்த தபால்காரர்க்கு வாழ்த்துக்கள். தபால் லேட்டா வந்தாலும் நினைவுகள் நிழலாடுகிறது அடுத்த டெலிவரி எப்போ (அதங்க அடுத்த தபால்)

Unknown said...

அருமை தஸ்தகீர் ....இது மாதுரி நிறைய போஸ்ட் செய்யவும் ....படங்கள் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது ....

sabeer.abushahruk said...

இத்தனை சுவாரஸ்யமான வாழ்க்கையெல்லாம் தொலைத்துவிட்டு எதையோ தேடி அலைவதைத்தான் என் நண்பன் இக்பால் (கலிஃபோர்னியா) இப்படி எழுதினான்.:


தேடல்:

என்னை விற்று
எதையோ பெற்று
பின் -
அடைந்ததை அனுபவிக்க
என்னைப் போய்
எங்கே தேடுவேன்?!

என்று.
crown: A nice nostalgia to hang over.
//எனக்கு என்னவோ செடியங்குளத்தில் குளிக்கும்போது அடித்த வெளிநாட்டு [சிலோன்] சோப்பு வாசனை அடித்தது உண்மை// எனக்கும்தான்டா. (நமக்கு ஏது தனித்தனியே நிகழ்வுகள்)

crown said...

sabeer on Sunday, September 26, 2010 11:57:00 PM said... (நமக்கு ஏது தனித்தனியே நிகழ்வுகள் ....?
------------------------------------------------
இதைப்படித்ததும் காதல் கவிதை எழுத்தோன்றியது என் மனம்.
அன்பே!நமக்கு ஏது தனித்தனியே நிகழ்வுகள் ....?
நீயும் நானும் பிரியும் வரை.(இங்கு எஞ்சியிருக்கும் காலத்தை குறிப்பிடவில்லை கடந்த காலத்தைப்பற்றி அவர்கள் ,எல்லா ரீதியிலும் பிரிந்துவிட்டார்கள்).

Shameed said...

ஏன் crown தபால்காரன் என்று பெயர் வைத்ததால் தான் இத்தனை தாமதமா !!!! இதை போஸ்ட் செய்ய ,

மலரும் நினைவுகளை தூண்டி மாங்காய் ,புளி திண்ட நினைவுகளை கிளறி காலையில்
இருந்து பல் கூசுகின்றது
பத்தாததற்கு புளியங்காய் படம் வேறு போட்டு வாணி ஒரு பக்கமா ஒழுகுது

crown said...

ஏன் crown தபால்காரன் என்று பெயர் வைத்ததால் தான் இத்தனை தாமதமா !!!! இதை போஸ்ட் செய்ய
------------------------------------------------
postpone (தாமதம்) ஆகும்னு போன்ல சொல்லலன்டாலும் போஸ்ட் பன்னிட்டோம்ல! அதனால் இந்த postpone!!!! (தாமதத்தை மன்னிக்கனும்)அதனாலேயே தாஜுதீனுக்கு சுட,சுட 2 ஆக்கம் ஒன்னு ஜாலி,மற்றொன்று சீரியஸ் அனுப்பியுள்ளேன் அவர்(postpone) தாமதம் செய்யாமல் இருக்க போஸ்டிலோ,போனிலோ சொல்லிடுங்களேன்.

crown said...

ஆழம் இல்லாதா வெள்ளக்குளத்தில் குளித்தாலும் நினைவுகளை ஆழத்தில் இருந்து நோண்டி எடுத்த தபால்காரர்க்கு வாழ்த்துக்கள். தபால் லேட்டா வந்தாலும் நினைவுகள் நிழலாடுகிறது அடுத்த டெலிவரி எப்போ (அதங்க அடுத்த தபால்).
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அபுல்ஹசன் நலமா? தமாமில் நம்மவர்கள் நலமா?குடும்பம் அங்கு வந்தது கேள்விப்பட்டு மிக்க சந்தோசம்.தம்முடைய கருத்தை பார்த்து பரவசப்பட்டு நாளாகிவிட்டது.அடுத்த டெலிவரி எப்ப?தபால்னு இங்கே என்னேரமும் வந்துவிழும். நான் கேட்ட நினைப்பது உங்க வீட்ல அடுத்த டெலிவரி எப்ப?(குடும்பம் வந்துவிட்டதால் கேட்கிறேன்)!ஒரு புது உயிரின் ஜனனம் கான ஆவல் ஆமீன்.கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்லுங்கள் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பவே நானும் உன் காக்காவும் சொன்னோம் இப்படியெல்லாம் சுத்தாத(டா)ன்னு யாருக்குத் தெரியும் இங்கே இப்படியேல்லாம் இருக்கிறவங்க நெனப்ப உசுப்புவேத்துவான்னு ! இவ்ளோவையும் எப்படி(ப்பா) காலையில முழிச்சதுலேருந்து செய்தீங்க ? ஆனா இப்போ முழிச்சா வேலை கிழிச்சா வீடுன்னும் போச்சு(ங்க)!

Abu Khadijah said...

பழைய நினைவுகளை அசைபோடுவதில் இருக்கும் சந்தோஷம் அப்பப்பா,

கேள்வி: புளி ஜாஸ்தியா திண்ட என்னாகும்? கொஞ்சம் சொல்ல முடியுமா Br.Zakir?

ZAKIR HUSSAIN said...

?? புளி ஜாஸ்தியா திண்ட என்னாகும்? கொஞ்சம் சொல்ல முடியுமா Br.Zakir?

= தமிழில் ஏற்கனவெ ' வயத்திலெ புளியெ கரைச்சமாதிரி' என உவமானத்துடன் 'வயத்தலச்சல்" பற்றி எடுத்து இயம்பிவிட்டார்கள்.

புளி "கிரியாவூக்கி"யிலிருந்து [inducer] டெவலப் ஆகி அமிலத்தன்மை[acidity] அதிகமாகி ஏற்கனவே வயிற்றில் இருக்கும் லக்டோஸுடன் [ பாலில் அதிகம் காணப்படுவது] கலந்து ஜீரணமாகும் நேர அளவில் குழப்பம்[physiological clock] ஏற்படுத்தி
உடனே செளசால்யம்[Toilet] தேடச்சொல்லும்.இது எப்பவாவது புளி சாப்பிடுபவர்களுக்கு.

அடிக்கடி புளியின் அளவு அதிகம் எடுத்துக்கொள்பவர்கள் தனது சொத்தில் / வருமானத்தில் கணிசமான [ அப்டினா என்ன அளவு?] அளவு ப்ரஸ்ஸர் மருந்து வாங்க தனியாக எடுத்து வைத்து விட்டு புளியை சேர்த்துக்கொள்ளலாம். இது எல்லாம் இப்போதைய World Health Organization's standard ல் 35 வயதை தாண்டும்போது கடைபிடிக்கலாம் [ வாடகைக்கா என Bro.சாகுல்[Dammam] கேட்டாலும் கேட்கலாம்.


புளி அதிகம் சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் உடனே ப்ரஸ்ஸருக்கான காரணம் தெரியாது.இது உப்புக்கும் பொறுந்தும். இது ப்ரைமரி ஹைபர்டென்ஷன் என சொல்வார்கள். அப்படி தெரியும்போதெ வாழ்க்கை முறையை மாற்ற அடம்பிடிப்பவர்கள் மருத்துவத்துக்கு பெரும் செலவு செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ஜாஹிர், உங்கள் ஸ்டைலில் சொல்லப்படும் மருத்துவ குறிப்பை படிக்கும் போதே பாதி நோய் குணமாகிவிடும். :)

சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வலைப்பூவில் உங்களை "டாக்டர்" ஜாஹிர் என்று அழைக்கலாமே என்று நான் கோரியிருந்தேன், அதை சகோதரர் யாசிர் அல்லது சாஹுல் காக்கா அதை ஆதரித்தாக ஞாபகம்.

Shameed said...

புளிக்கு இவ்வளுவு விளக்கமா இதை கேட்டபின்பும் வாடகை எண்ணம் வருமா ?
புளி ஜாஸ்தியா திண்ட என்னாகும்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்னை கேட்டல் என் பதில் புளி திண்டால் புளிக்கும் என்றுதான் சொல்லிருப்பேன்

sabeer.abushahruk said...

//"டாக்டர்" ஜாஹிர் என்று அழைக்கலாமே என்று நான் கோரியிருந்தேன்//

தற்போதைகு "அபு டாக்டர்" என்று அழைக்கதான் முடியும். கட்டுரை மட்டும்தானே எழுதினான். ஊசியா போட்டான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே டா(ப்ட)க்ட்(க)டருங்க ! "அபு DR" (உபயம் சஃபீர் காக்கா)

ஆக புளிக்கும் புள்ளி வைத்தால் அழகாத்தானே இருக்கும் !

புளியங் கொம்பை புடிச்சாச்சு புளுஞ்சி எடுக்காம இருந்தா சரி...

Shameed said...

sabeer
கட்டுரை மட்டும்தானே எழுதினான். ஊசியா போட்டான்.

சகோ ஜாகிர் எழுதும் ஒவ்ஒரு கட்டுரையும் பல ஆயிரம் ஊசிகளுக்கு சமம்.

Abu Khadijah said...

நன்றி சகோ. ஜாகிர் உங்கள் விளக்கத்துக்கு, புளி ஜாஸ்தியா திண்டா புத்தி மங்கி போகும்னு பெரியவோங்க சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் , அதான் கேட்டேன்

crown said...

Shahulhameed on Monday, September 27, 2010 9:55:00 PM said...

புளிக்கு இவ்வளுவு விளக்கமா இதை கேட்டபின்பும் வாடகை எண்ணம் வருமா ?
புளி ஜாஸ்தியா திண்ட என்னாகும்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்னை கேட்டல் என் பதில் புளி திண்டால் புளிக்கும் என்றுதான் சொல்லிருப்பேன்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சகோ.சாகுல் சொன்னதேயே சொல்லியிருப்பேன் அப்படிதான் கருத்து பதிய இருந்தேன் அவர் முந்திக்கொண்டார்.சற்றே என் கருத்து மாற்றம் இருந்திருக்கும்.அதிக புளித்தின்டா அதிகமா புளிக்கும்.பிறகு புளியே திங்க முடியாமல் ச்சீச்சீ இந்த (புளி)ப்பழம் புளிக்கும்ன்னு சொல்லிவிடுவேன்.

crown said...

ஊசிபோடும் விசயமும் அதே கதிதான் நான் சொல்லவந்த விடயத்தை சகோ.சாகுல் சொல்லிவிட்டார் என்னே டெலிபதி அதில் நீங்கள் இருவரும் அதிபதி.

Shameed said...

Adirai Express
நன்றி சகோ. ஜாகிர் உங்கள் விளக்கத்துக்கு, புளி ஜாஸ்தியா திண்டா புத்தி மங்கி போகும்னு பெரியவோங்க சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் , அதான் கேட்டேன்

எங்க குருப்லே இர்பான் காக்கா ஊர் வந்துடா நார்த்தங்காயில் புளியும் பட்டை மிளகாயும் திணித்து சப்பி சப்பி குடித்து விட்டு ஒட்டு மாங்காய் வாங்கி வாங்கப்ப புளிப்பு பத்தலை என்பார் ,இப்போதும் அவர் ஆளும் மங்கவில்லை அறிவும் மங்கவில்லை

ஒரு வேலை இத சாபிடமா இருந்த இப்போ இஸ்ரோ விலே வேலை கிடைத்து இருக்குமோ !!!!

ZAKIR HUSSAIN said...

தொழிற்சாலைகளுக்கு ஒனர் ஆகிற விசயம் மாதிரி அல்ல ஒரே ஆர்டிக்கில் எழுதி டாக்டர் பட்டம் வாங்குவதற்கு.

உங்களின் பாசத்தின் வெளிப்பாடுக்கு ஈடு இணை இல்லை.


புளி அதிகம் சாப்பிட்டால் புத்தி மங்கும் என்பதற்கு காரணம் "நீண்ட கால ரத்த பாதிப்பின் விளைவுதான்" ஒரு நாள் புளியில் புத்தி கெடாது

ZAKIR HUSSAIN said...

சினிமாவில் ஒரே பாட்டில் முன்னேறி கார், பங்களா, தொழிற்சாலைகளுக்கு ஒனர் ஆகிற விசயம் மாதிரி அல்ல ஒரே ஆர்டிக்கில் எழுதி டாக்டர் பட்டம் வாங்குவதற்கு.

உங்களின் பாசத்தின் வெளிப்பாடுக்கு ஈடு இணை இல்லை.


புளி அதிகம் சாப்பிட்டால் புத்தி மங்கும் என்பதற்கு காரணம் "நீண்ட கால ரத்த பாதிப்பின் விளைவுதான்" ஒரு நாள் புளியில் புத்தி கெடாது

Yasir said...

இனிமேல் “புளி” யை கண்டாலே “கிலி” தான்..சகோ.ஜாஹிர் டாக்டரின் விளக்கம்.. சிறப்பு மருத்துவரின் அட்வஸைவிட மேல்..

££Plus££ said...

நியாபகம் வருதே!! நியாபகம் வருதே!!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.தாஜ் நான் அனுப்பிய கல்வி பற்றிய கட்டுரை,கலரி சோறும் கலாட்டவும் (உன்மை சம்பவம் சிறுகதையாக)கிடச்சிருக்கும் என நம்புகிறேன்.மேலும் கலரிச்சோறும் கலாட்டாவவும் மயிர் என்ற வார்தையை நீக்க வேண்டியதில்லை காரணம் அதுவே முடிக்கு உன்மையான சுத்த தமிழ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown on Thursday, September 30, 2010 6:02:00 AM said...
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.தாஜ் நான் அனுப்பிய கல்வி பற்றிய கட்டுரை,கலரி சோறும் கலாட்டவும் (உன்மை சம்பவம் சிறுகதையாக)கிடச்சிருக்கும் என நம்புகிறேன்.மேலும் கலரிச்சோறும் கலாட்டாவவும் மயிர் என்ற வார்தையை நீக்க வேண்டியதில்லை காரணம் அதுவே முடிக்கு உன்மையான சுத்த தமிழ். //

தம்பி கிரவ்ன், ஆக்கங்கள் அதிரை நிருபர் மின் அஞ்சலுக்கு குவிந்த வண்னமிருக்கிறது என்பதை என்னால் அறிய முடிகிறது ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்துவிட்டுத்தான் பதிவுகளாக்க வெண்டுமென்று அதிரை நிருபர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதற்காக எதனையும் விடுபட்டுவிட்டது என்று எண்ண வேண்டாம். ஆக்கங்கள் எழுதி அனுப்பிய பின்னர் அதனில் திருத்தம் அல்லது விவாதமிருப்பின் பதியப் படும் முன்னர் தனி மின் அஞ்சல் / தனித்தூது (chatting) வழியாக அதிரை நிருபர்குழுவுக்கு அரியத்தரவும்.

இந்த தம்பியின் உணர்வு என் (க்ரவுன்)தம்பிக்கும் புரியும் :) ஊர் நலனே உன்/என் நலனாகட்டும் இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

///தம்பி கிரவ்ன், ஆக்கங்கள் அதிரை நிருபர் மின் அஞ்சலுக்கு குவிந்த வண்னமிருக்கிறது என்பதை என்னால் அறிய முடிகிறது ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்துவிட்டுத்தான் பதிவுகளாக்க வெண்டுமென்று அதிரை நிருபர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதற்காக எதனையும் விடுபட்டுவிட்டது என்று எண்ண வேண்டாம். //

சீக்கிரம் வெளியிடுங்கள் ..நாங்களும் காத்திருக்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAKIR HUSSAIN on Thursday, September 30, 2010 10:49:00 AM said...

சீக்கிரம் வெளியிடுங்கள் ..நாங்களும் காத்திருக்கிறோம். ///

சீக்கிரம் பதிவாகும் இன்ஷா அல்லாஹ், வேலைப் பளுத்தூக்கி கொண்டே பதில்தருவதிலும் மகிழ்சியே ஜாஹிர் காக்கா !

நிச்சயம் !
நிதர்சனம் !
நிமிர்ந்திருக்கும் !
நிதானமிழக்காமல் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு