Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேரென்ன...பிறகென்ன? 30

அதிரைநிருபர் | September 18, 2010 | , ,

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?

கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்-
குதித்துத் திறிந்த...
வளர்ந்த தெரு என் தெருவா?

பள்ளிக் கூடப் படிப்பும்-
வகுப் பறைகளின் வசீகரமும்-
வாத்தியார்களின் வாஞ்சையும்-
என...
பயின்ற தெரு என் தெருவா?

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?

பார்த்ததெல்லாம் அழகாகவும்-.
படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?

வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?

வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி
மாய்ந்து...
அடங்கும் தெரு என் தெருவா?

பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!

-sabeer

30 Responses So Far:

Shameed said...

பச்சை மிளகாய் கடித்தது போல் இருக்குமே!!!!
பேரென்ன...பிறகென்ன

Zakir Hussain said...

சும்மா பின்னிட்டே..வைரமுத்து சொன்னதுபோல் ' செல்லாக்காசு" சேர்க்கும் கடைசி இடம் போவதற்க்குள் உணர்ந்து தெளிவடைய வேண்டிய விசயம்.

ZAKIR HUSSAIN

Shameed said...

பிறப்பதற்கே ஊரை விட்டு
வெளிவூர் போய்
பிறக்கிறோம்.
பிறகு எதற்கடா தெரு
நீ பிறந்தது உன்
தெருவிலா சொல்
உழைபதற்கு ஒரு ஊரும்
உழைத்து கலைத்து
ஓய்வு எடுக்க ஒரு
ஊரும் உள்ள
நாம் ஏனடா
இந்த தெரு பாலிடிக்ஸ்
விட்டு ஒளிங்கட
இந்த தெரு வம்பை
நம்மை படைத்த
இறைவன் நம்மை
முஸ்லிமாக படைதான்
ஆனால் நாமோ
இவன் நடுதெருவான்
இவன் மேலத்தெருவான்
இவன் கடல்கரைதெருவான்
என்று பிரித்து வைத்து
எதை கண்டோமட சொல்
தெரு என்பது எதற்கு
தபால் காரனுக்கு
அடையலாம் தெரிவதற்கு
என்பது கூட இவ்வளவு
நாலா நமக்கு விளங்கம
போனது யானோ!!!!

Yasir said...

இந்த கவிதையை வரிகளை சிந்தித்தால்..எவ்வளவு அருமையான விசயத்தை நாம் அனைவரும் அடைய துடிக்கும் விசயத்தை ( தெரு வேறு பாடு இல்லாத அதிரையை )தனக்கே உரிய ஸ்டையிலில்..அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்...சபீர் காக்கா...வாழ்துக்கள் காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?//

//பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!//

முதல் வரியிலும் கடைசி வரியிலும் ஆயிரம் அர்த்தங்கள்..

என்னைப் போன்றவர்களின் எண்ணத்தை அப்படியே உங்கள் பாணியில் எழுதியிருக்கிறீர்கள் அன்பு சகோதரர் சபீர். நன்றி

நம் மக்கள் அனேகம்பேர் இன்னும் திருந்தவேண்டியுள்ளது, நாம் ஒன்று கூடி திருந்தலாம். இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சஃபீர் காக்கா (மனசுக்குள்) வலிக்கிறது ! - ஆனால்
உறுத்தவில்லை நாம் மார்தட்டிக் கொள்வோம்
சாதிப்போம் இன்ஷா அல்லாஹ்
மஹ்சரில் மட்டுமல்ல இங்கேயே ஒரே தெருவில் அல்ல ஒரே குடும்பமாக.

அதற்கு முன்னர் தெருக்களை பிறிக்கும் திரைகளை கிழிக்கத்தான் கத்தி வச்சுட்டிங்களே.. கிழியும்.

நாம் பிறந்தவுடன் குழந்தையாக "அந்த/இந்த" தெருப்பிள்ளை என்று யாரும் சொல்வதில்லை ஆனால் இன்னாரின் மகன், இன்னாரின் பேரன் என்றுதான் குழந்தையாக இருக்கும்போது சொல்றாங்க ஆனா எந்த வசயசுல "இந்த / அந்த " தெருவான்னு தகுதி "பட்டம்" வழங்குறாங்கன்னு தெரியலை(யே) !

கவிதைக் காக்கா (காட்டிப் போட்டாங்க) - ஆனா
பின்னூட்ட காக்கா(கலக்கிட்டாங்க) - ஏனுங்க
கடற்கரை காற்று கற்றுக் கொடுத்தவைகளா இவைகள் ?
எங்கேயிருந்தார்கள் இந்த தலைகள் !
வாலைச் சுருட்டியே வைச்சுக்கிறேன்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைங்களா ஆங்காங்கே எழுத்துக்களுடே "கட்டிப் போட்டங்க"ன்னு சொல்றதுக்கு பதிலா "காட்டிப் போட்டாங்கனு" கால போட்டேன் அந்த இடத்த கழுவிடுங்க ! :)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மீண்டும் நல்லதொரு ஆக்கம். நான் தாபால் காரன் என்கிற பெயரில் முன்பு எழுதிவந்ததேன் அப்பொழுது நான் எழுதிய இந்த கவிதையை இங்கு பதிகிறேன்.( நீங்கள்(சகோதரர் சபீர் காக்கா) கொண்ட உணர்வு நானும் கொண்டிருப்பதில் மகிழ்வு).
------------------------------------------
எத்தனை வீதிகள் நான் கண்டதும்,
கடந்ததும்,கேள்விப்பட்டதும்...
வரை படத்தில் பார்த்ததும்,வண்ணப்புகைபடத்தில் பார்த்ததும்.
தொலைக்காட்சி வழிப் பார்த்ததும்.
பல் வகை வீதிகள்....
ஓரே மயான அமைதியாய் சில...
மரன ஓலமாய் சில...
கூட்டம்,கூட்டமாய் கூடவே மவுனமாய்..
கேளிக்கையாய் கூட்டத்துடன் சில...
மழைப்பொழிவாய்...
சிலப்பனிப்பொழிவாய்..
இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.
பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..
இப்படி நான் பார்த்த,அறிந்த,நடந்த வீதிகளில்,
என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...
என் அன்னையும்,தந்தையும்,
என் உறவுகளும்,சுற்றமும் -
தினம் நடக்கும் என் பால்ய வீதி!
பல நேரம் துற் நாற்றமும்,
அலங் கோலமாய் இருப்பினும்,
நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.
---தபால் காரன்

crown said...

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?
-------------------------------------------------

crown said...

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?
-------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.யாருக்காய் காய்ந்தீர்கள் தவம் கிடந்தீர்கள்.இப்பொழுது உங்கள் இல்லத்தரசி(மச்சி)படிச்சாங்கன்டா உங்க பாடு பெரும் பாடு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வலிக்கிறது சொன்னேனே அதன் காரணம் இதுதான்
===========================================

அவர்கள் அனைவரின்
மனம் வென்றேன்
நற்குணம் என்றார்கள்

புன்னகை செய்தேன்
புதுசா இருக்கான்னு
பேசிக் கொண்டார்கள்

இறங்குமிடம் வந்தது
இறக்கி வைத்தேன்
தங்கமான பிள்ளையானேன்

அழைக்க வந்தவரின்
குரலோ கடிந்தது
அந்தத் "தெருவானோடு"
என்ன பேச்சுன்னு...

பேதலித்து நின்றார்கள்
என்னை சகோதரனாக கண்ட
அந்த பெண்மனிகள்.

நான் மற்றும் எனது ரும்மேட் இருவர் அதில் ஒருவர் இரயிலை விட்டு இறங்கியதும் நடந்தே சென்றுவிடுவார் வீட்டுக்கு நாங்கள் மூவரும் சென்னையிலிருந்து கல்லுரி விடுமுறையில் ஊர் வரும்போது கம்பனில் நிகழ்ந்தது.

Shameed said...

என்ன சபீர் பாய் கவிதை டாமை திறந்து கவிதை ஆராய் ஓடுகிறது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed on Saturday, September 18, 2010 10:16:00 PM said...
என்ன சபீர் பாய் கவிதை டாமை திறந்து கவிதை ஆராய் ஓடுகிறது////

திறந்து விட்ட டாமில் (damil)கவிதை ஆறு ஊரெங்கும் ஓடி எல்லோரையும் இழுத்துகிட்டு வரட்டுமே ! சேறுமிடம் கட(ல்)ற்கரை தானே !

Shameed said...

அபுஇபுறாஹிம்
திறந்து விட்ட டாமில் (damil)கவிதை ஆறு ஊரெங்கும் ஓடி எல்லோரையும் இழுத்துகிட்டு வரட்டுமே ! சேறுமிடம் கட(ல்)ற்கரை தானே !/////////////////////////////////////////

உங்களுக்கு என்ன ஒரு எழுத்து விளையாட்டு .இவ்வளவு நாலா எங்கே சுருட்டி வைத்திருந்தீர்கள் !!!!!

crown said...

என்ன சபீர் பாய் கவிதை டாமை திறந்து கவிதை ஆராய் ஓடுகிறது////
Damamலேயே திறந்துவிட்டிருக்கலாம்.விட்டுடார் இங்கே துபாயில் தொடங்கிட்டார் அதனால் ஆறு பெருக்கெடுத்து ஓடத்தானே செய்யும்???

crown said...

நான் மற்றும் எனது ரும்மேட் இருவர் அதில் ஒருவர் இரயிலை விட்டு இறங்கியதும் நடந்தே சென்றுவிடுவார் வீட்டுக்கு நாங்கள் மூவரும் சென்னையிலிருந்து கல்லுரி விடுமுறையில் ஊர் வரும்போது கம்பனில் நிகழ்ந்தது.
--------------------------------------------------
காலாற நடந்து சென்றவர் காமால் அவர்களா?

crown said...

அழைக்க வந்தவரின்
குரலோ கடிந்தது
அந்தத் "தெருவானோடு"
என்ன பேச்சுன்னு...
--------------------------------------------------
எனக்கே வலிக்கிறதுயென்றால் உங்களுக்கு கூடுதல் வலிதான் உணர்கிறேன்.உணர வேண்டியவர்கள் உணர்வார்களா????

crown said...

அபுஇபுறாஹிம்
திறந்து விட்ட டாமில் (damil)கவிதை ஆறு ஊரெங்கும் ஓடி எல்லோரையும் இழுத்துகிட்டு வரட்டுமே ! சேறுமிடம் கட(ல்)ற்கரை தானே !/////////////////////////////////////////

உங்களுக்கு என்ன ஒரு எழுத்து விளையாட்டு .இவ்வளவு நாலா எங்கே சுருட்டி வைத்திருந்தீர்கள் !!!!!
-------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.எழுத்தில் மட்டுமா விளையாட்டு விளையாட்டுக்குகூட அப்படி மட்டும் சொல்லிவிடாதீர்கள்.தீராத விளையாட்டுபிள்ளை அவர்.ஹாஹாஹாஹா

Shameed said...

என்ன ஒரு எழுத்து விளையாட்டு .இவ்வளவு நாலா எங்கே சுருட்டி வைத்திருந்தீர்கள் !!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown on Saturday, September 18, 2010 11:03:00 PM said...
நான் மற்றும் எனது ரும்மேட் இருவர் அதில் ஒருவர் இரயிலை விட்டு இறங்கியதும் நடந்தே சென்றுவிடுவார் வீட்டுக்கு நாங்கள் மூவரும் சென்னையிலிருந்து கல்லுரி விடுமுறையில் ஊர் வரும்போது கம்பனில் நிகழ்ந்தது.
--------------------------------------------------
காலாற நடந்து சென்றவர் காமால் அவர்களா? ///

பேரைச் சொல்லாமல் சொன்னது "நண்பனுக்கு" தெரிந்தால் போதுமென்று நினைத்தேன் ஆனா மூனாவதா வந்த நன்பனோட தம்பி கண்டு புடிச்சுட்டார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எழுந்து விளையாட வந்தேன் ஆனா சந்து பொந்துகளில் விளையாட தடை அதனலா "ந்" எடுத்துட்டா தடையிருக்காதுல அதான் எழுத்தோடு இப்படி.

ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க, அது ஒரு காலமுங்க ! கா.மு.மே.பள்ளியில படிக்கும்போது "மாவீரன் திப்பு சுல்தான்" ஒரு வானொளி நாடகம் என்னொட செட்டுலேருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நன்பர்களும் நானும் தேர்ந்தெடுக்கப் பட்டோம் அப்போது மாவிரன் திப்புவாக என்னோட வகுப்புத் தோழன் சு.இ.வை தேர்ந்தெடுத்தார்கள் காரணம் அவனோட தெறிக்கும் குரல் வீரவசனம் பேசத்தான்.

அதனால எனக்கு சான்ஸ் இல்லாம போச்சு, அவங்க முதல் ரவுண்டு ரிக்கார்டிங்குக்கு சென்று வந்துவிட்டார்கள், அடுத்து இரண்டாவது ரவுண்டு ரெக்கார்டிங் செல்லும்போது அவனுக்கு தொண்டை கட்டிக் கொண்டது இதுதான் சான்ஸ்ன்னு சொல்லி என்னை அனுப்பிவைத்தார்கள் அங்கே வீர வசனம் எல்லாம் பேசியாச்சு அதன் ஒலிபரப்பு ஆகும் நாளும் தெரிந்து என்னோட சின்ன மாமாவிடம் சொல்லி அதனை டேப் ரெக்கார்டில் பதிவும் செய்யச் சொல்லி ஆர்வமாக காத்திருந்தேன்.

திடீரென்று யாரோ என்னை அடித்து எழுப்புவதுபோல் உணர்ந்தேன் சீக்கிரம் எழுந்திருடா திப்பு சுல்தான் நாடகம் ஒலிபரப்பாகப் போகுதுன்னு அந்த ஒலிபரப்பை ஆவலோடு கேட்டா நண்பன் சு.இ.தான் திப்புவாக பேசினான அப்போ நான் பேசியதெல்லாம் தூக்கதிலையா ?ன்னு நொந்துகிட்டேனுங்க. :)

கனவு மெய்(யப்)படும்னு அப்போ தெரியாதுங்க !

Shameed said...

அபுஇபுறாஹிம்
கனவு மெய்(யப்)படும்னு அப்போ தெரியாதுங்க !/////////////////////////



என்ன மாத்தி மாத்தி யோசித்து கனவு வருதா
அதுசரி கனவு கலரில்லா அல்லது கருப்பு வெள்ளையா (B / W ) வருதான்னு கொஞ்சம் விவரமா சொன்ன நல்ல இருக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed on Sunday, September 19, 2010 1:53:00 PM said...
கனவு கலரில்லா அல்லது கருப்பு வெள்ளையா ? ///

சாஹுல் கண்ணாடி போடம தூங்கிட்டேன்னு நெனக்கிறேன் ஒரே மங்கலா இருந்தது.

இப்போதான் ஜாஹிர் காக்கா எல்லாத்தையும் ஆழ்ந்து வாசிக்க வச்சிருக்கார் ஒரு வேலை கனவுலேயும் நல்லா விழி விரித்து (முழிச்சுகிட்டே) பார்க்கிறேன் (மாற்றி யோசிச்சா இப்படித்தான் நெலம !!!)

Ahamed irshad said...

தெருக் கவிதை இயல்பு..நீளத்தை குறைத்தால் இன்னும் மெருகேறியிருக்கலாம்..நல்லாயிருக்கு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஹமது இர்ஷாத் on Sunday, September 19, 2010 5:14:00 PM said...
தெருக் கவிதை இயல்பு..நீளத்தை குறைத்தால் இன்னும் மெருகேறியிருக்கலாம்..நல்லாயிருக்கு..///

தம்பி இர்ஷாத் : மஹ்சர் வரைக்கும் போகனும்லா அதான், அதனாலென்ன இப்போவே ஒரே தெருவாகிட்டா நீளத்தை குறச்சுக்குவோமே !

sabeer.abushahruk said...

இவை என்ன பின்னூட்டங்களா...புரோத ஊட்டங்களா? எத்தனை சத்தானவை!:

//தெரு என்பது எதற்கு
தபால் காரனுக்கு
அடையலாம் தெரிவதற்கு//

//' செல்லாக்காசு" சேர்க்கும் கடைசி இடம்//

//தெரு வேறு பாடு இல்லாத அதிரையை//

//நாம் ஒன்று கூடி திருந்தலாம்//

//மஹ்சரில் மட்டுமல்ல இங்கேயே ஒரே தெருவில் அல்ல ஒரே குடும்பமாக//

//மழைப்பொழிவாய்...
சிலப்பனிப்பொழிவாய்..
இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.
பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..//

வர்ணனையில் ராஜா(king) என்பதால்தான் தலையில் க்ரீடமா(crown)?

//இல்லத்தரசி(மச்சி)படிச்சாங்கன்டா உங்க பாடு பெரும் பாடு.//

ச்ச்சும்மா மிரட்டாதீங்க. நாங்கள்லாம் பயப்...ப...ட...மா..(just a minute please) ட்டோம்

//பேதலித்து நின்றார்கள்
என்னை சகோதரனாக கண்ட
அந்த பெண்மனிகள்.//

அபுஇபுறாஹிம், எனக்கு அப்படி எந்த அனுபவமும் ஏற்பட்டதில்லை. ஆனால், (என் பெரும்பான்மை நண்பர்கள் பிற தெரு வாசிகளே). ஆனால், அந்த வலியை துள்ளியமாக உணரத் தந்த உங்கள் எழுத்துத் திறன் பிரமிக்க வைக்கிறது.



//நீளத்தை குறைத்தால் இன்னும் மெருகேறியிருக்கலாம்//.sensitiveவான விக்ஷ்யம் என்பதால் possitivவாக எடுத்துக் கொள்ள புரிதல் அவசியம் என்பதால் கொஞ்சம் இழுக்க வேண்டியதாயிற்று.



//கனவு மெய்(யப்)படும்னு அப்போ தெரியாதுங்க// Abul Kalam dreamt about it later... you tried earlier. Let me wish your dreams come true.

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சபீர்! சிறப்பான கவிதை வரைந்து -
மக்களை சிந்திக்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்!
//// பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்! ///

‘’மஹ்சரில் சந்திப்போம் ஒரே தெருவில் –
இறுதி தீர்ப்பு நாள் உண்டு என்ற நம்பிக்கை இருந்தால்’’:

கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை நன்றாக மனதில் பதிய வைத்து பின்பற்றி நடந்தால் குலப்பெருமை, தெருப்பெருமை எல்லாம் மறைந்து விடும். (பின்பற்றுவார்களா?).

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்;! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவேமாட்டீர்! (அல்குர்ஆன்: 17:37)

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்: 31:18)

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன்: 49:13)



பார்த்தேன்
படித்தேன்
பின்னூட்டமிட்டேன்
பின் மறந்தேன்
என்றில்லாமல்
இளைய சமுதாயமே
ஓடி வா
மறுமையின் வெற்றி
ஒன்றே குறிக்கோளாக
கொண்ட ஒற்றுமைக்கான
செயலில் இறங்கி
செயல்படுத்த ஒன்று
கூடினால்
ஒற்றுமையின் கயிற்றை
பற்றி பிடித்தால்
வெற்றி தூரமில்லை
இன்ஷாஅல்லாஹ்!
எனதருமை சகோதரர்களே!
- அலாவுதீன் எஸ் -

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒற்றுமையின் கயிற்றை
பற்றி பிடித்தால்
வெற்றி தூரமில்லை
இன்ஷாஅல்லாஹ்!
எனதருமை சகோதரர்களே!
- அலாவுதீன் எஸ் - //

(ஒற்றுமை) கயிற்றின் முதல்/இறுதி பிடி(ப்பதில்) என்வசமாகட்டும் இன்ஷா அல்லாஹ்

crown said...

வர்ணனையில் ராஜா(king) என்பதால்தான் தலையில் க்ரீடமா(crown)?
_----------------------------------------------
கவிகாட்டின் ராஜாவே! உம் கம்பீர கர்சனையில் என்னை வாஞ்சையுடன் ராஜா என அழைத்த பெருந்தன்மை.தலையில் கிரீடம் சரியா செய்லனா அதுவே தலையை கீரிடும்(காயப்படுத்தும்).அது என்னேறமும் கீழே விழலாம்(crown any time will be down) அதனால் அந்த கிரிடம் இருக்கும் தலைக்கணம் என்கணமும் கொண்டவனல்ல நான்.

அப்துல்மாலிக் said...

நச் என்று வரிகள்

இறுதியில் ட்விஸ்ட் அருமை

திருந்துவார்களா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு