சுற்றும் தலையே சும்மாயிருந்திடு

மல்லுக் கட்டும் தமிழே !
மல்லாக்க படுத்து யோசிக்கிறேன்.

எனக்கென்று ஒரு கணினி
அதிலிருந்ததோ ஆங்கிலம்

நான் படித்த கல்வியோ
புத்தகமும் கையேடுகளும் தமிழ்வழியே !

தவித்திருந்தேன் தாகமெடுத்திருந்தேன்
தட்டிக் கொடுக்க யாருமில்லையேன்னு

தேனீ "உமர் தம்பி" கண்டெடுத்தார்கள்
ஆத்திச்சூடியை ஆங்கிலத்தில் தட்டெழுத

அன்றே தந்தார்கள் இதனை
ஆனந்தமும் ஆச்சர்யமும் அசத்தியது

மனசு சொன்னதையெல்லாம் தட்டினேன்
அன்றிலிருந்து இன்று வரையிலும்...

சுற்றும் தலையே சும்மாயிருந்திடு
சுற்றம் என்னோடு இருக்கிறார்கள்....

நிற்க !

ஏனிந்த மேதாவிப் பேத்தலென்று கை ஓங்கிவிடாதீர்கள்.

கணினி பழுதுபார்க்கும் அல்லது புதிய வியாபார சேவைகள் செய்யும் நம்மக்களிடம் காணும் சில / கண்ட நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

உங்களில் யாருக்கேனும் இதுபோல் ஏதேனும் அனுபவங்கள் இருந்தால் இங்கே சொல்லுங்களேன்.

சிலருக்கு தாங்கள் விரும்பும் தமிழ் எழுத்து வர மல்லுக் கட்டியிருக்கலாம், என்னதான் செய்திட்டோமென்று பேந்தப் பேந்த முழித்திருக்கலாம், சிலருக்கும் நெட்டே சிக்கலாகியிருந்திருக்கலாம் இதைச் சரிச்செய்ய அவர்கள் காட்டும் அந்த கெத்து இருக்கே அடாடா !

சொல்லுங்க மக்களே...


-- அபு இபுறாஹிம்

7 கருத்துகள்

Shameed சொன்னது…

என்ன நம்ம பிரச்னையை அப்படியோ அவுத்து விட்டுட்டியளே !!!

முன்பெல்லாம் கம்ப்யூட்டர் பிரச்னை வந்தால் சிங்கப்பூரில் உள்ள நண்பனை தொந்தரவு செய்து அவன் அங்கே இருந்து டீம் விவர் மூலம் சரிசெய்து விடுவான் ,இப்போது தாஜுதீன் வேலை இருந்தாலும் நமக்காக அங்கே இருந்து (துபாய்)சரிசெய்வதற்கு உறுதுணையாக உள்ளார் ,நமது அடுத்த இலக்கு
அபு இப்ராகிம்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் கற்றும் தன்னடக்கம்,ஏதும் கானாதைபோல் சபை அடக்கம்.முற்றும் துறந்த முனிவன் கூட முழுதும் துறப்பதில்லை இப்படி ஏதும் தெரியாதென்று சொல்லித்திருவதில்லை.முன்னும் ,பின்னும் ,இன்னும் உங்களைப்பற்றி அறிந்தவன் சொல்வேன் தெரியாது என்று சொல்லி சொல்லியே எல்லாம்தெரிந்து கொள்ளும் இந்த வித்தை எப்படி வந்தது உம் மிடத்தில் அதுவும் சுற்றம் தந்த பரிசா?போதும் உங்களின் அவையடக்கம்.

Unknown சொன்னது…

அபு இப்ராகிம் காக்கா உங்கள மாதுரிதான் தஸ்தகீரும் ...எல்லா வற்றையும் தெரிந்துகொண்டு ....
தெரியாததுபோல் ...போதும் .போதும் தஸ்தகீர் சூப்பரா ஒரு படைப்பு ஒன்றை எழுதி
விரைவில் அ. நி . படைக்க வும் ..அதில் தஸ்தகீரின் டச் இருக்கணும் ... நிச்சயமாக நான் ஆவலுடன் எதிர்பார்கிறேன்

ROYAL SON 4 சொன்னது…

harmys on Sunday, September 26, 2010 8:08:00 AM said...

அபு இப்ராகிம் காக்கா உங்கள மாதுரிதான் தஸ்தகீரும் ...எல்லா வற்றையும் தெரிந்துகொண்டு ....
தெரியாததுபோல் ...போதும் .போதும் தஸ்தகீர் சூப்பரா ஒரு படைப்பு ஒன்றை எழுதி
விரைவில் அ. நி . படைக்க வும் ..அதில் தஸ்தகீரின் டச் இருக்கணும் ... நிச்சயமாக நான் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்குஅப்துற்றஹ்மான் போதும் பொதும் புல்லரிக்கிறது.மேலும் என்னைப்பற்றி உன்னிடம் யாராவது அறிமுகப்படுத்தினால் அது எவ்வளவு நகைச்சுவையோ அவ்வளவு நகைச்சுவை அபுஇபுறாகிம் காக்காவிடம் என்னைப்பற்றிச்சொல்வது.ஆக்கம்ம் அனுப்பிவிட்டேன் இனி தாஜுதீன் பாடு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சிலரிடமும் கேட்டும் விட்டேன் "ஏனப்பா இப்படி பில்டப்பு கொடுக்கிறீங்க உங்கள் மாதிரி "டிரமைச்சாலிகள்" ஹெல்ப் பன்னாதானே ஊரில் இருப்பவர்களுக்கு உதவமுடியும்னு" முகத்தில் அடிக்க வில்லை ஆனால் பதில் சொன்ன விதம் அப்படி.

அட போங்க காக்கா அவனவன் அதக் காட்டி இதக் காட்டி எதோ செஞ்சு ஐரோப்பா(க்களுக்கும்) வேறு கண்டங்களுக்கும் போயிடுறாங்க நாங்க இங்கே இருந்துகிட்டு அத இத காட்டி எங்க பொலப்பு நட்த்துனா மட்டும் மூக்கு சிந்துங்க்றீங்களே(ன்னு). இதுதான் இப்படின்னா ஏன் நம்ம கண்டத்திலேருந்து வர்ரவங்களும் சரி அடுத்தக் கண்டங்களேருந்து வர்ரவங்களும் சரி கேட்டவுடனே எல்லாம் கண்ணுக்கு முன்னாடி வந்திடனும்ன்ல பில்டப் கொடுக்கிறீங்க அதுக்கு ஈடா நாங்களும் காட்ட வேண்டாமா ?"

என்ன மக்களே இந்த வாதம் எப்படீ !!!!!!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

1992ம் வருடம் கும்பகோணம் அல் அமீன் ஸ்கூலில் முதன் முதலில் பார்த்தது இந்த கணினியை, இன்று வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. முதன் முதலில் கணினி கற்க ஆரம்பித்த
அன்று பில்டப் கொடுத்தவர்களை என்னால் மறக்கவே முடியாது.

sabeer.abushahruk சொன்னது…

//அன்று பில்டப் கொடுத்தவர்களை என்னால் மறக்கவே முடியாது//சரியாக சொன்னீர்கள்.

அபு இப்ராஹீம் சொல்வதுபோல் கணினியில் எழுத ரொம்ப தடுமாரியவர்களில் (தடுமாருபவகர்ளில்) அடியேனும் ஒருவன்