Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பூக்கள் ....எனும் அழகிய பலன் 11

அதிரைநிருபர் | September 22, 2010 | , ,


நீரினை நோக்கி  தளர்வில்லாமல் 
வேரின் பயணம் .....

சூரியனிடமிருந்து  ஒளி பெற்று 
இலைகள் தன்னுள்
கிரகித்து கொள்ளும் சக்தி ....

நாம் கொடுக்கும் காரிய வாயுவை 
பெற்று ஆபத்பாந்தவனாக பிராணவாயுவை 
நமக்கு திருப்பி தரும்  தன்மை ....

கடும் கோடையிலும்,
கடும் குளிரிலும் ,
மழை வெள்ளத்திலும் 
தளராமல் தொடரும் லட்சிய பயணம் ....

விண்ணில் வீம்பாக 
உலா வரும் மேகக் கூட்டத்தை 
தன்  இனிய தாலாட்டல் 
உருக வைத்து மழையைப்
பெரும் லாவகம் ....

தொல்லை தருபவர்கள்  எனத்
தெரிந்தும் நிழலை கடை 
விரிக்கும் பெருந்தன்மை ......

இத்தனையும் ஏன்?
மரம், செடிகளின் 
கடைசி லட்சியம் 
பூக்களையும் ,கனிகளையும் 
பெறுவதுதான்...
நம் ஈமானை போல 

ஒருப்  பூவை 
நெருங்கி பார்வையிடுவோமேயானால் 
அது சொல்லும் ஆயிரமாயிரம் 
ரகசியங்களை ...

வண்ண வண்ணப் பூக்கள் 
நிறைந்த  பூஞ்சோலையில் 
உலா வரும்போது 
பூக்கள் சிந்தும் மந்தஹாசம் 
நம் மனதை கொள்ளை  கொள்ளும் (சம்ஹாரம்) ...

இந்த பூக்களின் மந்தஹாசம் 
நம்மை ஏன் மயக்க வேண்டும்?

புனித ரமலான் மாதத்தில் 
நாம் நம் ஈமானை 
தொடர்பு படுத்தினால் 
தெரியும் விடை 

அப்துல் ரஹ்மான்
----harmys----

11 Responses So Far:

Yasir said...

விண்ணில் வீம்பாக
//உலா வரும் மேகக் கூட்டத்தை
தன் இனிய தாலாட்டல்
உருக வைத்து மழையைப்
பெரும் லாவகம் ....

தொல்லை தருபவர்கள் எனத்
தெரிந்தும் நிழலை கடை
விரிக்கும் பெருந்தன்மை ///

கவிதை கவிதை....படிக்கும் போதே மனதை ரம்மியமாக்கும் வரிகள்...அருமை கலக்கீட்டிங்க சகோ.அப்துல் ரஹ்மான்

Shameed said...

தொல்லை தருபவர்கள் எனத்
தெரிந்தும் நிழலை கடை
விரிக்கும் பெருந்தன்மை ......


அசத்தி விட்டன அந்த வரிகள்

ZAKIR HUSSAIN said...

கவிதை அழகு...உங்கள் தமிழ் இன்னும் அழகு ..இந்த படத்தில் உள்ள பூக்களைப்போல்...என்னிடமிருந்து ஒரு சின்ன வேண்டுகோள் ..நிரம்ப படியுங்கள்..நிரம்ப எழுதுங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி எப்போதும் உன்னுள்ளம்போலவே ஈரமான வரிகள் அவைகள் என்றுமே குளுமையிருக்கிறது. ஜாஹிர் காக்கா சொன்னதையே நானும் வழி மொழிகிறேன் நிறைய வாசி(யு)ங்கள், அவைகளோடு கவிதையாக்குங்கள் இவைகள்தான் எங்களையும் சுவாசிக்கத் தூண்டும். keep it up (ஆங்கிலீஸ்ல கருத்து போட்டங்களேன்னு இங்கே போட்டுட்டேன்(பா))

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அப்துற்றஹ்மான் நிறைய எழுதினேன் அது கனினி செய்த கோளாரினால் பதிவாகாமல் போய்விட்டது.பிறகு பூச்செண்டுடம் வருகிறேன்.(சில குட்டும் தருவேன் )

sabeer.abushahruk said...

ரசனையான வரிகள். கவிக்கோவின் பெயர் ராசி. வாழ்த்துக்கள்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அப்துற்றஹ்மான், நான் முன்பே நிறைய எழுதி கருத்தைப்பதிந்தேன் ஆனால் சில கோளாறுகளினால் அது பதியாமல் போய்விட்டதால் மருபடியும் பதிகிறேன்.முதலில் பூச்செண்டு தருகிறேன்(பிறகுத்தான் செல்லக்குட்டு நான் தானே உரிமையுடன் குட்ட முடியும்?மற்றவர்கள் நாசுக்காய்த்தவிர்த்திருக்கலாம்).எல்லாரையும் போல் என்னையும் மிகக்கவர்ந்த வரிகள்.
விண்ணில் வீம்பாக
உலா வரும் மேகக் கூட்டத்தை
தன் இனிய தாலாட்டல்
உருக வைத்து மழையைப்
பெரும் லாவகம் ....

தொல்லை தருபவர்கள் எனத்
தெரிந்தும் நிழலை கடை(குடை),(கொடை)யாளி)
விரிக்கும் பெருந்தன்மை ......
************************************************
வைர வரிகள் அப்பப்பா... உன் கவித்தாகத்தால் தமிழ் மேகமாய் மாறி கவி மழை(மாரி)பொழிந்திருக்கிறாய்.
-----------------------------------------------

crown said...

குட்டுவதற்கு முன் சின்னதாய் ஒரு தகவல் பரிமாற்றம்.இங்கே யாவரும் நல விரும்பிகளே!.யாரும் மேதைகள் அல்ல.(பலருண்டு நான் அல்ல)முன்பு இந்த தளத்தில் ஒரு சகோதரர் ஆக்கம் ஒன்று பதிந்திருந்தார்.அந்த தம்பி கையாண்டத் தலைப்பு மார்கதிற்கு எதிரானதாய் இருந்தது அதை சுட்டிக்காட்டினேன்.தள நிர்வாகியும் தலைப்பை மாற்றிவெளியிட்டார்.அந்த தம்பி என் தம்பியிடம் நம்ம ஊர் காரங்களே ஏதாவது குறை சொல்றவங்கலா இருக்காங்க என்று சொல்லிய தோடல்லாமல் மற்றொருத்தளத்தில் மார்கத்திற்கு உகந்ததல்லாத தலைப்பை போட்டே கட்டுரை வெளியிடிருந்தார் அவர் இஸ்டம் ஆனால் விமர்ச்சனம் பன்னுரவங்க யாரும் சொந்த விருப்பு ,வெறுப்பு கொண்டு பண்ணுவதில்லை.

crown said...

வண்ண வண்ணப் பூக்கள்
நிறைந்த பூஞ்சோலையில்
உலா வரும்போது
பூக்கள் சிந்தும் மந்தஹாசம்
நம் மனதை கொள்ளை கொள்ளும் சம்ஹாரம் ...
--------------------------------------------------
பூக்கள் சிந்தும் மந்தஹாசம் ( நறு முகை=சிறு பு(பூ)ன்னகை நல்லதொரு வார்தையாடல்.கவிஞர் அய்யா! சம்ஹாரம் என்றால் கொள்ளை கொள்வது அல்லவே? அழிப்பது (கொல்வது) அல்லவா?அந்த் இடத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சுகந்தம்!( நாற்றம்= நறுமணம்) என்று வந்திருந்தால் சொல்லவந்தது பொருந்திருக்கும்.(சரியா ,தவறா? கவிஞரே!)
இதனால் தான் சகோ.சபீர் காக்கா போன்றோர்கள் ஏதும் சொல்லாமல் ரத்தினச்சுருக்கமாய் கருத்திட்டுள்ளனர்.அனால் உன்னுடய பால்யகால நண்பனும்,வாசகனுமான என்னால் இதை சு(கு)ட்டிகாட்டாமல் போக மனம் இல்லை புரிந்திருப்பாய் என நம்புகிறேன்.உன் முயற்சியில்,பயிற்சியில்,வார்த்தை கவர்ச்சியில்,முதிர்ச்சி தெரிவதால் உன் கவிதையைப்படித்ததுடன் உடலின் அழற்சி நீங்கிவிட்டது மேலும் வளர்ச்சி அடைய உணர்ச்சி பூர்வமாய் வாழ்த்துகிறேன்.வஸ்ஸலாம். அன்பன் முஹமது தஸ்தகீர்.

Unknown said...

தாஜுதீன் ...ப்ளீஸ் ( சம்ஹாரம்) என்ற வார்த்தை யை அடைப்பு குறிக்குள் வைக்கவும் ...
தஸ்தகீர் ....இப்ப சரி என்றே நினைக்கிறேன் ......கொள்ளும் ,கொல்லும் என இரு அர்த்தங்கள் (செல்லமாக) இருக்கட்டும் என்றுதான் வைத்தேன்
எல்லோருடைய ரசிப்பிற்கும் ,விமர்சனத்திற்கும் நன்றி .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட என்னங்கப்பா "தம்பி"களா இப்படிப் போட்டு பெறட்டி எடுக்கிறீங்க "தம்பி"ங்கிறதுனாலதான் கேட்டேன் ஏன்னா எனக்கு(ள்ளு)ம் தம்பி இருக்குங்கோ ! அட விடு(தம்பி) அதான் சொல்லவந்த விஷயம் சொல்லியாச்சு அதனாலா "தம்பி"கள் எப்போவும் தங்க(மான)கம்பிகள்தான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு