Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊரில் மழையாமே?! 38

அதிரைநிருபர் | September 24, 2010 | ,

மற்றொரு மழை நாளில்...
மடித்துக் கட்டிய லுங்கியும்
மடக்குக் குடையுமாய்
தெருவில் நடந்த தினங்கள்...

கச்சலில் கட்டிய
புத்தக மூட்டையும்..
"அடை மழை காரணமாக
பள்ளி இன்று விடுமுறை"யென-
தேனாய் இனித்த
கரும்பலகையும்...

சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வானவில்லும்...

சுல்லென்ற
ஈர வெயிலும்...
மோதிரக்கல் தும்பியும்...
கருவேலும்
புளிய மரமும்
சேமித்த மழையும்
கிளையை இழுக்க
சட்டென கொட்டி
நனைந்த உடையும்...

க்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்
சுப்ஹுத் தொழ
ஜன்னல் தட்டிய நண்பனும்...
வரப்பு வழியும்
பல்ல குளமும்
வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ???? ...

மழையில் நனைந்த
"இன்று இப்படம் கடைசி"யும்...
கன்னி வைத்து காதிருந்த
உப்பளங்களும்...

பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...

முட்டாள் சாதகத்தால்
பாம்பை அழைக்கும்
நுழலும்...
மழையில் நணைந்த இரவில்
குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கும்
விட்டிலும்...

மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...
தட்டுத் தடுமாறிய நடையும்...
சென்னை ரயிலுக்கு
வழிவிடுகையில்
கை காட்டிய குழந்தையும்...

மழையால்
ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால்
பாதிக்கப்பட்ட வாழ்க்கை
மேல் அல்லவா?

                                                      - 
சபீர்       

38 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மழையால்
ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால்
பாதிக்கப்பட்ட வாழ்க்கை
மேல் அல்லவா? //

அதானே பார்த்தேன், எங்கேட காக்காவின் வழக்கமான பெய்யும் மழையூடே வருமென்றிருந்தேன் ஆனால் மழை நின்றதும் வைத்த பஞ்ச் அழகே ! - அவைகள் இயலாதவர்களின் வாழ்க்கை ஆதலால் பாதிப்பு இருந்திருக்காது.

~ செளபாக்கிய வெட்கிரைண்டர் குலுக்களுக்கு தேர்வாகும் என்று நம்புவோமாக ! - எனக்கு நானே சொல்லிக் கொண்டேனுங்க.

Shameed said...

இந்த வேய்ளிலும் மழையில் நனைந்து விட்டோம்

Unknown said...

கடைசி வரிகள் ....சூப்பர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed on Friday, September 24, 2010 8:47:00 PM said...
இந்த வேய்ளிலும் மழையில் நனைந்து விட்டோம் ///

என்ன சாஹுல் மழையில் கருத்துப் போட்டாலும் அளவோடு இருக்கே.. smile, பிரக்கட் போடாம எழுதி கிரைண்டர் ப்ரைஸ் கிடைக்குமா ?

Shameed said...

பிரக்கட்டின் பேடன்ட் உரிமை CROWN னுக்கே சொந்தம் பரிசும் அவருகே !!!!

இதில் யாரும் போட்டி போடகூடாது என்பது எழுதாத சட்டமாக்காபடவேண்டும்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அபு இப்ராஹிமுக்கு செளபாக்யா வெட்கிரைன்டர் தருவதற்கு நான் சிபாரிசு செய்கிறேன்..[கொஞ்சம் பிராக்கெட் குறைந்து இருக்கிறது அல்லவா] மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசாக எவர்சில்வர் டம்ளர் தரலாம்.

சபீர் உன் கவிதை ஏற்கனவே படித்து இருந்தாலும். இப்போது அதிரைநிருபரில் வெளியானது ஒரு அழகான குழந்தையை அலங்கரித்து அறிமுகப்படுத்தியதுபோல் உள்ளது . [ போட்டோ எல்லாம் சூப்பர்.]


ZAKIR HUSSAIN

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பிராக்கட் மேட்டரு இப்படி பரிசுக்கு சிபாரிசு கிடைக்கும் நெனச்சுப் பார்க்கல (இப்படி சொல்லனுமாமே அப்போதான்) பரி வழங்கும் விழா மலேஷிய தலைநகரிலையாமே அதாவது "இந்திய வலைப் பூக்க்ளிலேயே முதல் முறையாக இதுவரை வழங்கிடாத பரிசளிப்பு விழான்னு" விளம்பரமெல்லாம் வேண்டாமே please ஏன்னா எனக்கு வெளம்பரம் புடிக்கும் ஆனா எனக்குன்னா புடிக்காது ! :))

() போடாம பொழுது விடியல காக்கா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"பரி" ன்னு இருப்பதை "பரிசு" ன்னு டக்குனு மாத்திக்குவீங்களாம்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மழையில் நனைய முடியாமல் போய்விட்டது.இல்லாளுக்கு அறுவை சிகிச்சையில் துரித பிரிவில் இருப்பதால் ஏதும் எழுத இயலாமல் ஆகிவிட்டது.பிறகு தேக்கி வைத்துள்ள மழை நீரில் சிறிது மொண்டு முகமாவது கழுவிச்செல்வேன்.வஸ்ஸலாம்.
முஹம்து தஸ்தகீர்.

sabeer.abushahruk said...

:My sincere dhua for mrs Dhasthakir to get well soon inshah Allah.

crown said...

sabeer on Saturday, September 25, 2010 9:55:00 AM said...

:My sincere dhua for mrs Dhasthakir to get well soon inshah Allah.
------------------------------------------------
Assalamualikum brothere sabeer kakka thanks for ur kind duwa for my wife operation.hope she will be alright inshallah.

Yasir said...

வெள்ளிக்கிழமை சிறிது அயர்ந்து தூங்கிவிட்டதால்...மழையில் நனையமுடியவில்லை...ஒவ்வோன்றும் வரிகள் அல்ல வைர வெட்டுக்கள்....சிம்பிளி சூப்பர் காக்கா....நானும் சபீர் காக்காவின் துவாவில் பங்கெடுத்து கொள்கிறேன்..அல்லாஹ் பூரண சுகத்தை சகோ.தஸ்தகீரின் மனைவிக்கு வழங்குவானக .ஆமின்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

My sincere dhua for mrs Dhasthakir to get well soon inshah Allah

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு மழையில் நனைத்த அத்துனை சகோதரர்களுக்கும்.மன்மார்ந்த நன்றி.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.

crown said...

சற்றே ஓய்ந்த
மழை வரைந்த
வானவில்லும்..
--------------------------------------------------
வானவில்(rainbow)வருவது மழை நின்று போனபின் அதாவது ரைன்போ(ன)பின் வரும்....

crown said...

வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ???? ...
--------------------------------------------------
சொல்லவந்தது சென்சார்??? நான் சொல்வது நண்பனிடம் தெரிந்தது தங்கப்பல்????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//My sincere Du'a //

தம்பி தஸ்தகீர், சில நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தாய் அன்றும் சரி இன்று உன்னுடைய பின்னூட்டம் கண்டதும் நம் சகோதரர்களுடன் என் துஆவும் இன்ஷா அல்லாஹ்... பூரண நலம் பெற அல்லாஹ் அதற்கான திடகாத்திடம் தந்தருள்வானாக !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu Alaikum Warah...to my dear all.

May Allah bless health and wealth to Mrs. Thasthageer with immediate cure from her illness.

Nowadays fine articles are publishing at Adirai Nirubar by our wonderful writers and the team of AN. Insha-allah, I am also willing to publish my article at AN soon.

Insha-allah I will be back.

Wassalaam.

M.S.M. Naina Mohamed.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்வரவு MSM.n. : வரவேற்கிறோம் !

Shameed said...

நலம் பெற நாம் அனைவரும் துவா செய்வோம்

Shameed said...

வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ????


நான் சொல்வது நண்பனிடம் தெரிந்தது தங்கப்பல்????

பேர் மாத்தியாச்சா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed on Saturday, September 25, 2010 12:56:00 PM said...
வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கையில்
சட்டென தெரிந்த
நண்பனில் ????
நான் சொல்வது நண்பனிடம் தெரிந்தது தங்கப்பல்????
பேர் மாத்தியாச்சா ?? ///

இதுக்குத்தான் மழையில நனையக் கூடாதுங்கிறது...

அங்கே காக்கா என்னா சொல்ல வந்தாங்கன்னா "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."
இதுதான் 788 வது குறளாமே ! சரி சரி "தலை" தொடச்சிட்டு வாங்க சீக்கிறம் அந்த கம்ப்யூட்டர் மேட்டரைப் பத்த்தி பேசனும்.

Shameed said...

சரி சரி "தலை" தொடச்சிட்டு வாங்க சீக்கிறம் அந்த கம்ப்யூட்டர் மேட்டரைப் பத்த்தி பேசனும்.

சபீர் கூட குளிச்சது நான்தான் ஆனால் வேட்டி அவிழ்த்து
உடம்பு தேய்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது ,

அது வேறு ஆளுங்கோ !!!!

Shameed said...

அபுஇபுறாஹிம் அந்த கம்ப்யூட்டர் மேட்டரைப் பத்த்தி பேசனும்.///////////

அதுவும் தெரிந்து போச்சா !!!!

crown said...

பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.தூவா செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
------------------------
பள்ளியில் போட்ட
குட்டை போல
கால்களை இழுத்து நடந்த
தற்காலிக ஓடைகளும்...
-----------------
ஆஹா என்னே உவமானம்.காலில் போடும் குட்டை(கால்விலங்கு)பூட்டினால் இழுத்து நடப்பது இயல்பு அது ஓடைக்கு உவமானம் அருமை!!!!!.

crown said...

மழை நீருடன்
முயங்கிச் சிவந்த
தண்டவாளத் தடமும்...(செம்புலம் சேர்ந்த நீர்துளிசெம்புலம் சேர்ந்த நீர்துளிப்போல்....தண்(மழையால் குளிர்ந்த)டவாளம் .மருமடியும் நல்ல தொரு உவமானம் அதில் நானும் சில கலந்தேன்!கலக்குங்க காக்கா சங்கத்தமிழ் வார்தை(கள்=மயக்குகிறது).
தட்டுத் தடுமாறிய நடையும்...(தண்ணிலே நல்லா மூழ்கித்திளைத்தால் தடுமாறத்தானே செய்யும்??(பொது ஜனம்)
சென்னை ரயிலுக்கு
வழிவிடுகையில்
கை காட்டிய குழந்தையும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட என்னபுள்ள(ப்பா) நீ இன்னுமா (உன் காட்டில்) மழை பெய்யுது, ஏற்கனவே குளிக்கப் போனவங்களில் ஒரு "தலை"யை துடைக்க வெச்சாச்சு இன்னுமா நனஞ்சுகிட்டு இருக்கே ! (கவிக்)காக்கா மீனே புடிச்சுட்டு வந்திட்டாங்க... வா வா (சீக்கிரம்) சாப்புடனும்

crown said...

மழையால்
ஊரில்
இயல்பு வாழ்க்கை பாதிப்பாமே?
பொய்யும் புறமும்-
கடனும் பற்றாக் குறையும்-
சன்டையும் சச்சரவும்-
வெட்டிப்பேச்சும் வீண் வம்பும்
என்ற-
இயல்பு வாழ்க்கையை விட
மழையால்
பாதிக்கப்பட்ட வாழ்க்கை
மேல் அல்லவா?
-----------------------------------------------
சரியான நெத்தி அடி புத்திக்கு உரச்சா சரி.புரட்டிபோட்டிட்டியலே!எல்லாம் சரி நீர்ரின்றி அமையாது உலகு(வாழ்கை)மாத்தியோசிச்சியலோ?(சகோ.அபு இபுறாகிம் மன்னிக்கனும்),மொத்ததில் நீங்கள் பெய்யன பெய்ய்யும் கவிமழை ஆதலால் நீவீர் நவீன பொய் இல் புலவர்(பொய் புனையாத)என நாம் அழைப்போம்.வாழ்துக்கள்( நான் வாழ்த்த சரியாகுமா???)

Shameed said...

அதிரை ஆலிம்

பாருங்கள் இஸ்லாம் சம்பந்த பட்ட பல நல்ல விசயங்கள் உள்ளன

Riyaz Ahamed said...

அஸ்ஸலாமு அழைக்கும் சபீர்
குற்றால அருவியல் எத்தனை முறை குளித்தாலும் குளித்து கொண்டே இருக்கலாம் உங்க கவிதை மழையில் எத்தனையோ முறை குளித்துவிட்டேன் அனுபவித்த அனுபவ சந்தோசங்கள் மீண்டும் மீண்டும் ...
மடித்துக் கட்டிய லுங்கி அவிழ்த்து கூட தெரியலே கண்ணா கவிதை மழை

sabeer.abushahruk said...

ஒரு உயர்ந்த ரசனை கொண்ட படைப்பாளிகளின் சபையில் நின்று கவிதை வாசித்த திருப்தியைத் தந்த பின்னூட்டங்களுக்கு நன்றி.

குறிப்பாக, தம்பி crown பிரித்து பிரித்து ரசித்ததும், "சட்ட்டென தெரிந்த நண்பனின் கேள்விக்குறிகளை” (கேள்விக்குறி என்னுது இல்லை...தாஜுதினின் யுக்தி) மெக்சிக்கோ நாட்டு சலவைக்காரி ஜோக் ரேஞ்சுக்கு ஆராய்ந்தது ரசனையானது. அதிலும் "பேர் மாத்தியாச்சான்னு" ஷாகுலின் பின்னூட்டம் படித்தவுடன் சிரித்தேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா தன்னடக்கமே போர்வை போர்த்திகொள்ளும் உங்களின் ஏற்புரையை வாசிக்கும்போதே ! "தம்பி"ன்னும் "crown"ன்னும் பிரித்து(ம்) படிச்சுக்கிறோமே ! :)

crown said...

மெக்சிக்கோ நாட்டு சலவைக்காரி ஜோக் ரேஞ்சுக்கு ஆராய்ந்தது ரசனையானது.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .திரு.சுஜாதா சொல்லாமலே சென்றுவிட்டார் நீங்கலாவது சொல்லுங்களே!(அரசல் புரசலாக ஏதேதோ கேள்விபட்டதோடு சரி.குமுதம் அரசும் சொல்ல மாட்டேன்கிறார்)

Shameed said...

crown.
திரு.சுஜாதா சொல்லாமலே சென்றுவிட்டார்

யாருதான் சொல்லிடு போறது

எல்லோரும் சொல்லமதான் போவங்க!!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

டாக்டர் ஒருத்தர் வயித்துல செல்ஃபோனை மறந்து வச்சு தச்சுட்டு ரொம்பவே வருத்தப் பட்டாரம் அட டா "ஆபரேஷன் செய்யும்போது சைலண்ட்ல போடாம இருந்துட்டோமே" அது மாதிரியில இருக்கு சொல்லாம போயிட்டாருன்னு சொல்றது ! :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு