அழகழகாய் தெருவுகளாம்.
ஒருத்தெருவில் மரணமென்றால்,
மறுத்தெருவினர் கண்ணில் நீர்குளமாம்!களவு,பொய்,சூழ்ச்சி,
கபடம்,சூது,புறம் பேசல்-கடுகளவும் இல்லை!
ஒற்றுமை,ஓர் அணித்திரள்-
ஓர் தலைமை கட்டுப்பாடு!
இப்படி ஒரு ஊரா?
அடுத்தவூரில் இதேபேச்சு!
பட்டி மன்றம்...
இப்படி இருந்தால் என நினைத்தோம்,
ஏக்கப்பெரு மூச்சுதான் வெற்றாய் வருகிறது!
இனி வருங் காலேமேனும் இவை நடக்குமா?
-- MOHAMED THASTHAGEER
மறு பதிவு, நன்றி அதிரை போஸ்ட் செவ்வாய், 29 ஜூலை, 2008
புகைப்படம்: நன்றி சகோதரர் ஜாஹிர்
9 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். நான் கண்ட கணவு நினைவாகுமா? நிறைவேறுமா? ஊரைப்பற்றிய உங்கள் கணவுகளையும் தொடருங்கள் என் கணவு நிஜமாக தூஆ செய்யுங்கள்.
இது நம் அனைவரின் நீஈஈஈஈண்ட நாள் கணவு, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் வருகிறது.
நம்முடைய இந்த எண்ணங்கள் நிறைவேற துஆ செய்வோம்.
அதற்கு கொடுப்பினை வேணும்...அடுத்த சந்ததியிலாவது உண்மை ஆகட்டும். தஸ்தகீர் வெல்டன்.
ஆசைக் கனவுகள் அப்படியே நிஜமாகட்டும், நிகழ்விலும் கண்டுர கைகோர்ப்போம் வாருங்கள் சகோதரர்களே... இன்றல்ல அன்றிலிருந்து இதே சிந்தனையோடுதான் பழகிவருகிறோம் ஆனால் இப்படி ஒரு தளம் இல்லாமிருந்தது.
நல்லதோ கெட்டதோ அப்போது அந்தந்த தெருக்களுக்கு சென்றுதான் சொல்ல வேண்டும் அல்லது அங்குள்ளவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடிந்தது.
அன்று திருமணமென்றால் அடுத்த முனை தெரிவிலிருக்கும் நம் பள்ளி அல்லது கல்லூரி அல்லது விளையாட்டுத் தொடர்பு நண்பர்களை அழைக்க எவ்வளாவு ஆசையாசையாக செல்வோம் அவர்களும் எவ்வளவு இனிமையாக வந்து கலந்து கொள்வார்கள் அது ஒரு வசந்த காலம் - ஏனோ அந்தச் சூழல் தொலைந்ததுன்னு தெரியவில்லை.
ஜாஹிர் காக்கா, இன்றும் இருக்கிறது நூல் இழைத் தொடர்பு(கள்) இதனை இரும்புச் சங்கியாக மாற்றியே ஆகனும் இன்ஷா அல்லாஹ் (நம் யாவரின் அவா).
கிரவுன்(னு) இன்று எழுதிட்டே ஆனா நீண்ட நாள இது(தானப்பா) நம் ஏக்கம் !
# முதல் வரியை படிக்கவும் என்ன பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்று நினைத்து கடைசி வரியை படிக்கவும் தான் புரிந்தது விசயம்.
# சகோ CROWN இது உங்கள் கனவு என்று மார்தட்டி கொள்ளாதீர்கள் இங்கு வரும் ஒட்டு மொத்த சகோதர்களின் நினைவுகள் தான் உங்களுக்கு கனவுகளாக வந்துள்ளது என்பது மட்டும் உண்மை
இது ஒரு கானல் நீர் போன்றதுதான்...தெரியும் ஆனால் இருக்காது....சகோ.கிரவுன் நல்ல கனவுதான் ...ஆனா பலிக்காது....பகல்ல கண்டு இருப்பீங்கண்டு நினைக்கிறேன்..அல்லாஹ் நாடினால் நடக்கும்
க...ன...வா....?
படிக்க த்ரில்லா இருந்தது
நான் ஊருக்கு கிளம்பி வரும் போது நிறைய கனவுகளோடு வந்தேன்னு சொன்னேன் என்னோட "வல்லரசிகிட்டே" ஆனா அவங்க அதுக்கு "டிரெயின்ல தூங்கிட்டு வந்தேன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவீங்கன்னு சொன்னாங்க பாருங்க" !
அப்புடியே அசந்துட்டேன் !
அஸ்ஸலாமு அலைக்கும்.கருத்துச்சொன்ன அத்துனை சகோதரர்களுக்கும் மனம் கனிந்த நன்றி.கணவு மெய் பட நாம் எல்லாம் ஒருங்கினைந்தால் அது(எதுவும்)சாத்தியமே! நாம் எல்லாரும் தொடர்பில் இருப்பது அவசியம்.சகோ.சாகுல்,அபுஇபுறாகிம் இருக்கிறார்கள் மற்றவர்களும் இணையலாமே??என் இனைய முகவரி
crowngeer@yahoo.com
Post a Comment