நெத்திரை | தூக்கம் |
வெலங்கலே | புரியவில்லை |
தேதண்ணி | தேநீர் |
வர்ரவோ / வர்றாக | வருகின்றார் |
வாபுச்சி / வாபுச்சா | தந்தையின் அம்மா |
உச்சி உறுமநேரம் | பகல் 12 மணி |
மாலை மகதி நேரம் | மகரிப் நேரம் |
செரவடி /சடபுடம் | தொந்தரவு |
கூளம் | குப்பைகள் |
எறச்சி ஆனம் | ஆட்டுக்கறி குழம்பு |
ஈக்கிது | இருக்கிறது |
கலரி சாப்பாடு | கல்யாண விருந்து |
பவலு | பகல் |
யாஹ்வம் | நினைவு |
பசியாறுதல் | காலை உணவு |
அளிமாலு | அலமாரி |
உம்மம்மா | தாயின் அம்மா |
பச்சை பாலவன் | சிறு வயது பிள்ளை |
புளியாணம் | ரசம் |
களிச்சல்லே போவான் | ஒரு வகை நோய்( lose motion ) |
காலம் காத்தாலே | காலையில் |
வெரசா வா | உடனே வா |
இம்புட்டும் | இவ்வளவும் |
சின்னத் | சுன்னத் |
நபுசு | மனசு |
நசிபூ | விதி |
கொறை | குற்றம் சொல்லுதல் |
நேரபமா | <>>>
இப்போதைக்கு நெனப்பு வந்தது இம்புட்டுதான் பாக்கிய பொறவு வட்சுகல்லாம் .
இதுலே குத்தம் கொறை ஈந்தா நசிபூ கட்டளைன்னு நேனைகாமே நபுச கட்டுபாடுதாமா வெரசா அதே வேலை செரவடி சடபுடம் இல்லாம கடுதாசி போட்டுருங்க வாப்பமரா நீங்க எல்லாம் நேரப்பமா ஈகனும்
--Shahulhameed
Dammam
53 Responses So Far:
அதிரையின் அசத்தல் மொழி ! ஆஹா நல்ல சுழி போட்டாச்சு, இனிமே (அசந்த)சொல்ல மறந்த அதிரை மொழிகள் இனிமேல் படையெடுக்கும் ! MSM(n) back to stage please !
நம் ஊர் தமிழை சார்ந்து ஏதோ ஒரு தமிழ் அல்லது மொழி இருக்கவேண்டும். இத்தனை பழமையான் ஊர் அல்லவா?..ரிசேர்ச் செய்யும் நண்பர்களே இனிமேல் இது உங்கள் நேரம்..
தமாமில் சாகுல் இருந்தாலும் அவரின் நினைவுகள் இன்னும் அதிராம்பட்டினத்தில் தான் இருக்கிறது
சவண்னாக்கா இன்னும் நெறையா ஈக்கிது போல ஈக்கிது நீங்க நோய் நொடி இல்லாம நீண்ட ஆயுசுடன் நெறைய எழுதுவியண்டு கத்துகிட்டு ஈக்கிறோம்
உடுபட்ட அதிரை மொழி...
வாப்பிச்சா = உம்மாவின் மாமியார் (?)
ஒசக்க = மேலே
இம்புட்டு = இவ்வளவு
அவ்ளோ = அவ்வளவு
திட்டுமுட்டு = நெஞ்சடப்பு
கொதறத்து = குழப்பம்
கொமரு = கன்னிப்பெண்
புதுனமாயீக்கு = அதிசயம்
எலவு = துக்கம்
எலப்பு = இளைப்பு
யாம வெள்ளக்கட்டி மாதில சொல்றீய செத்த இருமா வெளக்க அமத்திட்டு வர்ரேன்
பள்ளியில படிக்கும்போது என்னிடம் கடுதாசி எழுதிக் கேட்டாங்க பாசக்கார (ஒரு)பொண்டாட்டி அவங்க மாப்புள்ளைக்கு அதுதாங்க இது... அவங்க சொன்ன சில பிரைவெட் சமாச்சாரங்கள் அன்றே மறந்துட்டேன்.
அம்புள்ள "(மஹன் பெயர்)" வாப்பாவுக்கு,
உங்க மனவி எலுதியது, நாங்க எல்லாம் நல்லா ஈக்கோம், நீங்க நல்ல சொஹத்தோட ஈப்பீய அதான் எங்க நாபஹமில்ல உங்களுக்கு.
போன மாசம் அனுப்பின காசு செலவுக்கே பத்தல ஒன்னும் சேர்மானமில்ல, மவனோடு செலவு உசந்துகிட்டே போவுது, யாரோட சேர்ரான் எங்கே போரான்னு வெளங்கல " " அவூட்டு கல்சடயோட சுத்துரான் சொல்லு பேச்சு கெடயாது.
அவூட்டுக்கு போன் போடவேனாம் ஒங்கட்ட பேசுனா, ஒங்க ராத்தாவோட பொல்லாப்பு எனக்கு எதுக்குங்க.
" " ராத்தா மொவன் தான் தபாலு எலுதிச்சு (ஆகவே நம்ம பெயர் அங்கே குறிப்பிட்டு விட்டதால் இத்தோடு இதனை மடிச்சுடுறேனே).
ஆராய்ச்சி ஆரம்பிச்சாச்சு, ஷாகுல்.
இன்னும் தேடி இனைக்கவும்.
இது இந்த வகையா என்று பாருங்கள்:
நோன்பு வைக்கும் நிய்யத்து(வாப்புச்சாக்கள் சொல்லித்தருவது): இன்னபைத்து, சோமகாதி, அன்னந்தாயி, ஆரிய சின்னத்து, ...(நவைத்து ஸவ்மஹதின் அன் அதாயி ஹாதி ஹிஸ்ஸனத்தி)
அபு இபுறாகிமின் கடிதம் cute, ஷாகுலின் dictionaryயோடு ஒத்துப் போகுதா?
சகோதரர் அபு இப்ராஹிம், நீங்கள் எழுதிய லட்டரை பார்த்தவுடன் சின்ன வயதில் சபீரிடம் டோக்கன் வாங்கிகொண்டு காத்திருக்கும் படிக்காத மனுஷிகளின் ஞாபகம். "எம் புள்ளெ சபீர் கையாலெ எழுதினாதான் பினாங்கிலேருந்து பணம் வருது வாப்பா...அவன் கை ராசியான கை " என சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறேன்
தபால் எழுதமுன் கணவன் பணம் அனுப்பாததற்க்கு திட்டி விட்டு தபாலில் "உங்க சதுர சுகத்தெ கவனமா பாத்துகுகுங்கொ' என அப்ரானியா சொல்லும்போது...ஆச்சர்யம்.
அந்த கொதரத்த ஏம்மா கேக்குறே கொதவளைல கைவச்சுல கேக்குரானுவோ ஒரே இம்மூசாவுல ஈக்கீது !
கொதரத்து = கொடுமையை (இங்கே)
கொதவளை = கழுத்து
இம்முசு = தொந்தரவு
ஜாஹிர் காக்கா அப்படியே சஃபீர்காக்காகிட்டே சொல்லி என்னக்கு ஒரு கடுதாசி எழுதித் தரச் சொல்லுங்க "பணம் வரும்லே"
"உங்க சதுர சொவத்த" = "take care of health" இதைத்தானே அன்று(ம்) இன்று(ம்) நம்மக்கள் நாளு சதுர சுவற்றுக்குள் வெளிநாடுகளில் பார்த்து கொண்டார்கள் கொண்டிருக்கிறார்கள்
சஃபீர் காக்கா, அதெப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம அப்புடியே ஒப்பிச்சுட்டிய ?
சரி நம்வூரில் புழங்கிய அல்லது இன்னும் இருக்கலாம் "அரபு தமிழ்" பற்றி தெரிந்தவர்கள் சொல்லாமே..
எனக்குத் தெரிந்து மிகச் சரளமாக தமிழில் அதிவேகமாக வாசிக்கும் அன்றைய பெண்களைக் கண்டு வியந்திருக்கிறேன் ஏன்னா அவர்கள் பள்ளிப் படிப்பும் இல்லை தமிழும் வாசிக்கத் தெரியாது ஆனால் புத்தகம் திறந்து மடைதிறந்த வெள்ளமாக தமிழில் அவர்க்ளைன் குரல் வாசிக்கும் உற்று நோக்கினால்தான் தெரியும் அவர்கள் அப்படியே "அரபி எழுத்துக்களால் எழுதப்பட்ட தமிழ்" ஹதீஸ், வரலாறு, என்று விளங்கியது !
இது இவ்வாறிருக்க கடந்த 20ம் தேதியன்று பேரூராட்சி கூட்டத்தில் புதிதாக வந்த EO முன்னிலையில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தலைவர் EO விடம் பள்ளிவாசல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மேற்கொண்டு தான் மேலதிகாரிகளை கலந்தாலோசிக்கவேண்டும் என்று சொன்னதாகவும் பின்னர் 13வது வார்டு திமுக உறுப்பினர் நூர் முகம்மது தலைவரிடம் பள்ளிவாசல் விசயம் இவ்வளவு சிக்கலானதற்கு அவரே பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். முன்னதாக மன்ற உறுப்பினர்கள் 9 பேர் கடந்த மாதம் ஆட்சித்தலைவரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக மனு அளித்திருந்தனர். அதனை குறிப்பிட்டு எனக்கெதிராகவா நம்பிக்'கை'யில்லா தீர்மானம் கொண்டு வருகிறாய் என்று ஒருமையில் திட்ட ஒரே ரகளையில் அந்த கூட்டம் முடிந்திருக்கிறது. பள்ளி விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் தலைவருக்கு துணையாக இருந்து வரும் சில திமுகவினர் மெளனியாக இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நூர்முகம்மது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நூர்முகம்மது வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் அவரது மனைவியின் புடவையை கிழித்ததாகவும் அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்ததோடு அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத கைது ஆணை அதிராம்பட்டிணம் காவல்நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர் பதிவு செய்துள்ளதாக நூர்முகம்மது தெரிவித்துள்ளார். (வழக்கு எண் 225/2010, 147,148,294(b), 506 ii IPC) தற்போது தலைமறைவாக உள்ள அவர் தஞ்சாவூர் DSP க்கு அதிராம்பட்டிணம் காவல்துறை மனுபெறாததை குறிப்பிட்டும் மேற்கண்ட சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்துள்ளார்.
இது போன்ற அரசியல் வாதிகளுக்கு தொப்பியும், கைலியும் போன்ற ஆடை அணிகளங்கள் மட்டும்தான், தானும் ஒரு முஸ்லீம் என்று காட்டும் அடையாலமாக கருதப்படுகின்றது.
இது போன்ற கயவர்களின் அந்த ஆடைஅணிகலங்களை கலற்றிவிட்டு ஊரைவிட்டே துரத்திவிடவேண்டும்.
மேலும் இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்ட வேண்டும்
இவர்கள்தான் அல்லஹ்விடம் நேரடியாக போர்செய்ய விரும்புகிண்ற்வர்கள். இவர்களை நினைத்தால் இரத்தம் கொதிக்கத்தான் செய்யும்
மேலும் நிதானமும், பொருமையையும் நாம் கடைப்பிடிப்பது இந்நேரத்தில் மிக அவசியம்.
இன்ஷாஅல்லாஹ் ஓற்றுமையை கடைப்பிடிப்போம். இவர்கள் போன்ற நயவஞ்சகர்களை சூழ்சிகளை முறியடிப்போம்.
Al Ameen பள்ளி விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் தலைவருக்கு துணையாக இருந்து வரும் சில திமுகவினர் மெளனியாக இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நூர்முகம்மது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நூர்முகம்மது வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் அவரது மனைவியின் புடவையை கிழித்ததாகவும் அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்ததோடு அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத கைது ஆணை அதிராம்பட்டிணம் காவல்நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர் பதிவு செய்துள்ளதாக நூர்முகம்மது தெரிவித்துள்ளார். (வழக்கு எண் 225/2010, 147,148,294(b), 506 ii IPC) தற்போது தலைமறைவாக உள்ள அவர் தஞ்சாவூர் DSP க்கு அதிராம்பட்டிணம் காவல்துறை மனுபெறாததை குறிப்பிட்டும் மேற்கண்ட சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்துள்ளார்.///
இது போன்ற அரசியல் வாதிகளுக்கு தொப்பியும், கைலியும் போன்ற ஆடை அணிகளங்கள் மட்டும்தான், தானும் ஒரு முஸ்லீம் என்று காட்டும் அடையாலமாக கருதப்படுகின்றது.
இது போன்ற கயவர்களின் அந்த ஆடைஅணிகலங்களை கலற்றிவிட்டு ஊரைவிட்டே துரத்திவிடவேண்டும்.
மேலும் இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்ட வேண்டும்
இவர்கள்தான் அல்லஹ்விடம் நேரடியாக போர்செய்ய விரும்புகிண்ற்வர்கள். இவர்களை நினைத்தால் இரத்தம் கொதிக்கத்தான் செய்யும்
மேலும் நிதானமும், பொருமையையும் நாம் கடைப்பிடிப்பது இந்நேரத்தில் மிக அவசியம்.
இன்ஷாஅல்லாஹ் ஓற்றுமையை கடைப்பிடிப்போம். இவர்கள் போன்ற நயவஞ்சகர்களை சூழ்சிகளை முறியடிப்போம்.
யாங்கேக்குறியே... ஊருக்கு லீவுலெ வந்ததுலேர்ந்து ஒரே வேலெவெட்டியா போச்சு. சட்டுபுட்டுண்டு ஒரு கட்டுரை எழுதுரத்துக்கு சரியான நேரெம் கெடெக்க மாட்டிக்கிது. ஊர்லெ மழெ கொட்டு,கொட்டுண்டு கொட்டுது. மதராஸுலெ என்னாண்டாக்கா மழெ வரத்துக்கு இந்த மழெ காலத்துலெயும் மழெ பைத்து ஓதனும் போலெ ஈக்கிது நெலெமெ... வேயிலு வாட்டுதுண்டு சொல்ல வர்ரேன்.
ஏன்சுலெ (ரூமில்) ஏசி இல்லாமெ ஈக்க முடியாது போல ஈக்கிது.
வானத்துலெ மப்பும், மந்தரமும் (சீந்தாப்பு) வந்து மழெ பெய்யாமெ ஆப்படிச்சிட்டு மனுசனுவோ செய்யிற தப்புக்கெல்லாம் ஈசாக்காட்டிட்டு போயிடுது.
சிக்னல்லெ நின்டா ஆயாசமா (அலுப்பாக) இருக்குது...கோவம், கோவமா வருது...ஒத்தக்கி ஒத்தெ போட்டு பாத்துக்குவோமாண்டு சொல்ரவங்கெல்லாம் சிக்னல்லெ வந்து நிண்டா என்னா ஆகுமோ?
வெளியிலெ பொறப்புட்டா சீக்கனம் போயிட்டு வெரசன வந்த்திர்ன்மா ஈக்கிது...
நாளெக்கெ வேரெ பாபர் மசூதி நிலம் யாருக்குண்டு கோர்ட்டு தீர்ப்பு சொல்லப்போவுதாம்....
ஆனா ஒன்னுமட்டும் சொல்றேங்கெ....இறுதியில் அழுது,புலம்பப்போவது இறைவனல்ல இறை இல்லத்தை ஈவு, இரக்கமின்றி இடித்துத்தள்ளிய கயவர்கள் தான் நிச்சமாக...
கொஞ்சம் வெளியிலெ வேலெ ஈக்கிது...பொறவு வர்ரேன்...சரியா.....
இன்ஷா அல்லாஹ்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நம்ம ஊரின் அசத்தல் மொழியை எல்லாரும் இம்புட்டு ஒசரதுலே வஞ்சி ஈபியோனு நா மினா (கனவு)கண்டது கூட காணலே
வாப்பமர உங்க எல்லார்க்கும் ஆண்டவன் ஆய்ச போட்டு வச்சி நேரபம ஈக்கணும்.
உம்மாவின் மாமியா அதாங்க வாப்புச்சா சுருக்கு பையில் இருந்து காசே கேழப்பி நாக்கு ரொட்டி கரும் கல்கோன வேங்கி திண்டதும் யாருக்கும் யாஹ்வம் இல்லமே போச்சி .
எங்கே நம்ம யாசிர் கிரௌன் மற்றும் பல சகோ; காணமே போட்டகதுலே டிக்சனரிய தோண்டுரார்களோ !!!
சகோதரர் உண்மை விரும்பி (பெயர் தெரியவில்லை),
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி, இது போன்ற செய்திகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு adirainirubar@gmail.com செய்தியாக அனுப்பினால் தனி பதிவாக போடுகிறோம்.
இந்த செய்தி வேறு ஒரு அதிரை வலைப்பூவில் வெளியானது என்பது இணைய அதிரை சகோதரர்கள் அறிந்ததே.
ZAKIR HUSSAIN
உங்க சதுர சுகத்தெ கவனமா பாத்துகுகுங்கொ'
அப்போ சதுர சுகத்தெ கேட்ட நாம
இப்போ சதுர அடி கணக்கை கேட்கிறோம்
அட !
யான்சு = Room
ஈசாக்காட்டிட்டு = ஏய்ய்ப்பு
உபயம் MSM(n).
சாஹுல் எல்லாம மினா வுல வந்தாப்ள ஈக்கிது !
ZAKIR HUSSAIN
தமாமில் சாகுல் இருந்தாலும் அவரின் நினைவுகள் இன்னும் அதிராம்பட்டினத்தில் தான் இருக்கிறது
நம்ம உருக்கு ஈர்ப்பு சக்தி அதிகமுங்க!!!
அபுஇபுறாஹிம்
ஆஹா நல்ல சுழி போட்டாச்சு
சுழி போட்டதும் போதும் சும்மா சுத்தி சுத்தி அடிகிறாங்க
சுருக்கு பை மேட்டரைம் அவுகுறாங்க!!!!
சபீர் கையாலெ எழுதினாதான் பினாங்கிலேருந்து பணம் வருது வாப்பா...அவன் கை ராசியான கை
ஆமாங்க
மனோரவிற்கு சமைகபோய் pipeலே தண்ணீ வரலே சபீர் வந்து திறந்ததும் தான் pipeலேதண்ணீ வந்தது.
தண்ணீ பிடித்துக்கொண்டு சமைக்கும் இடம் வந்ததும் ஒருவர் உடம்பு கலரில் ஜட்டி போட்டுகொண்டு நின்றார்,,, மேற்கொண்டு விபரம் அபு இப்ர்ராஹீம் சபீர் அவர்களிடம் கேட்டு தெரிந்து
கொள்ளவும்.
ஆமா..சாகுல் காக்கா...இனிமே தேடுவதற்க்கு எதுவும் இல்லை எல்லாத்தையும் தான் இங்கே கமெண்ட் போட்டவங்க சொல்லிட்டாகளே...சீனியருங்க நீங்க பேசுங்க...நாங்க கேட்டுக்கிட்டு இருக்கோம்...உங்க ஆக்கம் எல்லாரையும் “ ராகத்து “ படுத்தி விட்டது...அசத்துங்கள் தொடர்ந்து
Yasir
ஆமா..சாகுல் காக்கா...இனிமே தேடுவதற்க்கு எதுவும் இல்லை
அப்புடி எல்லாம் சொல்லக்கூடாது
"செரவடி" இல்லாமா அமைதியா யோசனை செய்தால் "புதுனமா" ஏதாவது வார்த்தை கிடைக்கும்.
சின்னக்கா நீங்களும் உங்களுக்கு தெரிந்த சின்ன சின்ன வாத்தையை போடுங்களேன்
சொனங்கி வரலாம்னுதாக்கா ஈந்தேன், படக்களமா இலுத்துல போடடானுவொல வேலய பாக்க ஈக்கவா முடியும், இந்த தவால்காரன் எங்கேபோனன் அவ்ளோ தவாலு எலுதில கொடுத்தேன் ஒன்னுமே போய்ச் சேரலயாமே கோவமாவுல ஈக்காங்க !
தவாலு எலுதில கொடுத்தேன் ஒன்னுமே போய்ச் சேரலயாமே கோவமாவுல ஈக்காங்க !
கோவத்தை கொறைக்க
கூடத்துல உள்ள காத்தாடிய போட்டு வுட்டு கொஞ்சம் காத்தாட இரிங்க
காக்கரண்டாவுல ஈக்கு ! என்னத்த சொல்ல காக்க செத்த விசிறிய எடுங்க காக்கா :)
யான் ஊட்டுலே உபிஸ் இன்னு ஒரு பொட்டி வெக்கலையா?
விசிறி எடுத்து வீச ஏழல வாப்பா முந்தா நேத்துலே ஈந்து கை வேதனையா ஈக்கிது
யன்னனே தெரியலே ஒரே குத்தலும் கொடச்சலுமா ஈக்கிது
அட ஏங்க்காக்க அந்த பொல்லாப்பு யுபிசா அதான் தூங்கி உளுவுர லெவுத்தம்பி மாதில முளிக்கிரதும் தூங்குரதுமாவுல ஈக்கு !
ஹனீப் பள்ளில சூபு'வ தொழிவிட்டு அப்படியே ராஹத்தா நடந்துவந்து ஆலடிக்குளம் வழியா சேர்மாடிக்கு வந்து நாய்க்கர் கடையில தேத்தனி'ய சொல்லிட்டு எதுத்தாப்புல வர்ற பஸ்ஸ பாத்துக்கிட்டே டீ குடிச்சிக்கிட்டு ஈக்கீறது....ம் ம்ம்..
அஹமது இர்ஷாத் on Wednesday, September 29, 2010 4:57:00 PM said...
ஹனீப் பள்ளில சூபு'வ தொழிவிட்டு அப்படியே ராஹத்தா நடந்துவந்து ஆலடிக்குளம் வழியா சேர்மாடிக்கு வந்து நாய்க்கர் கடையில தேத்தனி'ய சொல்லிட்டு எதுத்தாப்புல வர்ற பஸ்ஸ பாத்துக்கிட்டே டீ குடிச்சிக்கிட்டு ஈக்கீறது....ம் ம்ம்.. ///
என்னா புள்ளமா கொளத்துமோடு பக்கமா போவிய, தேத்தனியோட சுடச் சுட சேதியும் கெடக்குமே காதுல உளுவுமே !
அது எப்படி எல்லோரும் ஒரு கலக்கு கலக்கி அதிரை அழகு தமிழில் விளையாடுகிறீர்கள்?
இன்னாமா கொட்டுது அதிரை அழகு தமிழ் மழை. தமிழ் ஆர்வளர்கள் கோபம் கொள்ளாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
எல்லாத்தையும் எல்லா காக்காமார்களும் தம்பிமார்களும் சொல்லுப்புட்டீங்க, என்னால தேடி புடிச்சு சொல்லமுடில, ரூம் போட்டு யோசிச்சாலும் இங்கு பின்னூட்டமிட்ட நம்மூராள்களுடன் போட்டி போட முடியாது போல தெரியிது.
சகோதரர் சபீர், அதிரை அழகு தமிழில் ஒரு கவிதை எழுதுங்கள், தனிப்பதிவாக போடலாம். சகோதரர் சாஹுல் அவர்களில் அதிரை தமிழ் அகராதியில் தேடிக்கொள்ளுங்கள். தமிழ் ஆர்வளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போடாமல் இருந்தால் சரி.
என்னா புள்ளமா கொளத்துமோடு பக்கமா போவிய, தேத்தனியோட சுடச் சுட சேதியும் கெடக்குமே காதுல உளுவுமே !//
நாஞ் சொன்னது சிஎம்பி ரோடு வழியா போயி வண்டிப்பேட்டையிலிருந்து நாய்க்கர் கடைக்கு போற வழில ஆலடிக்கொளம்..
செ.மு
புறுகறவு முறுவுல அடிச்சி முறுவு பொறு பொறுண்டு வீங்கி போச்சி
வட்டார மொழியை பிழைத்திருத்தம் செய்ய நினைத்தால் முடியாது....
"அல்லாட காவலா சீதேவிதனமா, பரக்கத்தா, நல்லபுடியா, நேரப்பமா......... போயிட்டு வாங்க வாப்பா" என்று ஊர்ல உள்ள பெருசுங்க நம்மல வெளியூர் செல்லும் போது வழியனுப்புற ஸ்டைலே தனிதான்.
சரியான பொன்னிமா இவன் ( நோஞ்சான்.பயந்தாகொள்ளி ) ( கண்டுபிடிச்டோம்ல ) உரும நேரத்ல வரமாட்டுகிறான்.
நாம குத்தம் கொரையெல்லாம் சொல்லலம, புள்ளைவோ போற பாத நல்லாத்தானே ஈக்கிது !
வாட செ.மு
எப்புடிடா ஈய்கிறாய் சும்மனாச்சும் இந்த பக்கம் வந்துடு போடா ,ஆமா கேக்க மறந்த்டேன் ஒன்னோட கம்புடரை எல்லாம் யார்ரா "ஏசவு" பண்றது
சகோதரர் ஷாஹுல் இப்போ சொல்லுங்க "மேப்புடியான்" என்கிற வாத்தைக்கு சரியான அர்த்தத்தை. இது தான் சரியான மேடை.
பெயரை சொல்ல விரும்பாத பொருளை அல்லது விரும்பத்தகாத ஒன்றை மேற்கோள் காட்டுவதே "மேப்புடியான்" இது மேற்கோள்லில் இருந்து உருமாறிய சொல்லாக நமது வட்டாரத்தில் வலம் வரும் ஒரு வார்த்தையாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து ,மேற்படி "மேப்புடியான்" பற்றி விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்.
மினாவ்ல மேம்படியான பத்தேன், அத மேப்புடியான்கிட்டே சொன்னேன், ஆன மேப்புடியான் யாருன்னு கேட்டேன் மேப்புடியான்டேயே மேப்புடியான கேக்குறியேன்னு மேப்புடியாண்டே சொல்லுன்னு மேப்புடியான்.. ஆட மொவத்துல தண்ணீ ஊத்தியா எலுப்பாட்டுறது..
"குடினீ" போட்டு குடிச்சிட்டு படுங்க மேப்புடியான் மினா வெல்லாம் வராது.
”தரசலாகுழி” -தண்ணி ஒடும் பொந்து
“மாடாகுழி” -விளக்கு வைக்கும் இடம்
“புட்டாமாவு” -முகப்பவுடர்
“இஸ்கோத்து “ -பிஸ்கட்
“வெல்லனமே “ --சீக்கிரம்
“யாமம் ஜாமம் “ - நள்ளிரவு
“எண்னை குத்தி “ - எண்ணெய் பாட்டில்
“பீது ரோடு “ - உடைந்த கண்ணாடி தகடு
“மெத்தை “ - மேல் மாடி
“முத்தம் “ -முற்றம்
உபயம் : வல்லரசி :)(சபீர் காக்காவிடம் விளக்கம் கேட்கவும் )
Yasir மேட்டரை படிக்கவுமே உபயம் யார் என்பது "வெளங்கி" போச்சி
சகோ தாஜுதீன் இந்த வழியை பின்பற்றவில்லையோ ஏன்?
குதுரு
மட்டப்பா
பத்தாயம்
தலவாணி
கொழிக்கி
சொளவு
ரொம்ப பினாதுறான் என்று சொல்றது காதில் கேக்குது
யாசிரை போல் முயற்சி செய்தால் இன்னும் வார்த்தைகள் கிடைக்கும்
எங்கே கிரௌன் ஆளை காணோம் நாளைய தீர்ப்பை எழுதுவதில் மும்முரமாக இருப்பதுபோல் உள்ளது !!!!
//சகோ தாஜுதீன் இந்த வழியை பின்பற்றவில்லையோ ஏன்?//
இங்க தான் காக்காமார்கள் எல்லாம் போட்டு தாக்குறியலே, நாம எழுதுற தமிழ் முடிந்த வரை எழுத்துப்பிழையில்லாமல் இருந்தாலே போதும். இருந்தாலும் நீங்க சொன்னதுக்காக யோசிச்சு பார்த்தேன்.
சவுக்காரம் - சோப்பு
சர்சலாகுழி - வீட்டில் தண்ணி ஓடும் துவாரம் (ஓட்டை)
காது குடும்பி - பட்ஸ்
கேத்தல் - ஜஃக் (jug)
செப்பை, செவுலு - original தமிழில் எப்படி சொல்றதுண்டு தெரியலை.
ரயிலடி, பஸ்ஸடி - இது தான் எல்லோருக்கும் தெரியுமே...
வைக்க - வைக்கோள்
கலனி - கால்நடை உணவு
கானு - சிறிய சாக்கடை
முடுக்கு - சந்து
நாசுவன் - முடிவெட்டு ஆண்
நாசுவத்தி - முடிவெட்டும் பெண் ( அதன் நம்ம மனப்பெண்களை அழகு படுத்த முயற்சி செய்யும் நம்மூர் beautisian)
விளக்காரி - தீன்பண்டங்கள் விற்கும் பெண்
வெளக்கமாறு - துடைப்பான்
சாச்சி - சித்தி
சாச்சா - சித்தப்பா
ராத்த - அக்கா
ராத்தம்மா, காக்கம்மா - அம்மாவின் அக்கா
காக்கா - அண்ணன்
முக்குசளி - முக்கிலிருந்து வரும் கழிவு
மூத்துரம் முடுக்குது - சிறுநீர் கழிக்கப்போதற்காக சொல்லும் சொல்.
கண்ணூப்பி - கண்ணிலிருந்து வரும் கழிவு
மூக்குப்பி - காதிலிருந்து வரும் கழிவு
நேவம் - நகம்
வண்ணான் - டோபி ஆண்
வண்ணாத்தி - டோபி பெண்
சவுக்காரம் - சோப்பு
மண சவுக்காரம் - மேலுக்கு போடும் சோப்பு.
குளுவுது - குளிர்கிறது
பரச்சி, பல்லத்தி - விட்டு வேலை செய்யும் மாற்று மதத்து ஒரு ஜாதியிலுந்து வரும் பெண்.
தெற்கத்தியாள் - அதிரைக்கு தெற்கு திசையிலிக்கும் ஊர்களில் இருந்து வந்த பெண்.
மொம்மாத்து - ஃமுகம்மது பாத்திமா
ஆமாத்து - அஹமது ஃபாத்திமா
மாவன்னா - மாட்டுக்கறி
சட்டை தேக்கனும் - சட்டையை அயன் செய்யனும்
நேத்து - நேற்று
முந்தா நேத்து - நேற்று முன் தினம்
நாளை பரத்தைக்கு - நாளை மறு தினத்துக்கு
சவுறு - சஹர்
சவுறு பக்கிரிஸா - அதான் எல்லோருக்கும் தெரியுமே
மையித்தாங்கரை - அடக்கஸ்தலம்
பந்து மேட்ச் - கால்பந்தாட்டம்
கிட்டிக்கம்பு - கிட்டிபில்
பலிங்கி விளையாட்டு - கோலி விளையாட்டு ?
மரவட்டை - அட்டைப் பூச்சி
ஒமலு - மீன் வாங்கி வரும் பை
சவுக்குப்பை - பிளாஸ்டிக் பை
அஞ்சரப்பெட்டி - மசாலா தூள்கள் உள்ள டப்பா
டிரங்கு பெட்டி - துணி வைக்கப்படும் இரும்பு பெட்டி.
சோப்பாலை - பலகையாள் செய்யப்பட்ட ஒரு வகை கட்டில்
திருவளை - தேங்காய் திருவ பயன்படும் கருவி
படிக்கன் - பெருசுங்க எச்சில் துப்புவதற்காக பயன்படுத்தும் பொருள்.
ஈபிகாரன் - மின்சார நிலையத்தில் வேலை பார்ப்பவர்
கிணத்தடி - கிணர் அருகில் இருக்கும் இடம்
பிளால் தண்ணிர் - மீன்/இரால் கழுவப்பட்ட தண்ணிர்
பொத்தான் - சட்டையில் உள்ள பட்டன்
கர்ச்சிப்பு - கைக்குட்டை, கைத்துணி
கொறங்கு பெடல் - அறைகுறையாக சைக்கிள் ஓட்டுவதற்கு (எப்படி சரியாக சொல்வது என்று தெரியவில்லை)
பெரளி - கிண்டல்
சாவன்னா - சாஹுல் ஹமீது
சாஹுல் காக்கா இது போதுமா? இன்னும் வேணுமா?
இங்கு சொல்லப்பட்டவைகள் எல்லாம் வழக்கத்தில் உள்ளவைகள், யார் மனதையும் புண்படுத்தியிருக்காது என்று நம்புகிறேன். அப்படி இருந்தால் தெரியப்படுத்துங்கள் நீக்கிவிடுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் .வேலை பளு அதிகமானதால் ஏதும் கருத்திட முடிய வில்லை.அதற்காக இதோ ஒரு கற்பனை காவியம்.
ஒருதந்தையின் புலம்பல்.
----------------------------
(ஊரிலிருந்து மனைவிடமிருந்து வந்த கடித்தை படித்துபார்ததும் அதில் வந்த மகனைப்பற்றிய செய்தியை தன்னுடைய ரூம் காரரிடம் கீழ்கண்டவாறு புலம்புகிறார்).
நெத்திர தொலச்சி
ராவு பகலு உலச்சி
நசிபு நம்ம நெல மாறல!
கொற ஏது(ம்)வக்காம
இள வயசுகாரனுவனு எல்லா(ன்)செஞ்சா,
உம்மா பேச்ச கேக்காம
சேர்வார் பேச்ச கேட்டுபுட்டு
தருதலையா அலைய்ரானுவ.
என்னா செய்ரதுன்னு வெலங்கல.
ஊட்டுக்கு வெரசா வரதில்ல,
கொஞ்ச உம்மாக்கு கூடமாமாயா இருந்டா இருக்க மாட்டங்குறா(ன்)
நம்ம நசீபு நாமதா(ன்)
ஒலுங்க படிக்க முடியல,
நம்ம வாப்ப மார்கலால படிக்க வக்க முடியாது போச்சு.ஆனகா நாம அவொலுக்கு ஒத்தாசையா
நடந்துகிட்டோம்.இப்ப உல்ல புல்லங்க நம்ம பேச்ச எங்கே கேக்குது?
எதுகெடுத்தாலும் எதுத்து பேசுறானுவ.
பாஸ்போர்ட் எடுன்னாலும் கேட்க மாட்டங்குற(ன்)
இன்ன செய்ரதுன்னே புரியல.ஒரே செரவடியா இருக்கு.இவன நெனச்சால அவ!(வீட்டுகாரம்மா) சாவப்போறா .என்னத்த சொல்ல (இவ்வாறு புலம்மிகொண்டே உறங்கி போகிறார்.பாவம் அவர் காலைல போர்ட்ல வேலைக்குப்போகனும்).
blockbuster article....shahul kaka rocks!!!
தாஜுதீன்
சாவன்னா - சாஹுல் ஹமீது
லேட்டா சொன்னலும் பழைய வார்த்தைகளை லேட்டஸ்ட்டா சொல்லிபுடியலோ
இதுலே நம்மளையும் இழுத்து போட்டு சொன்னது தான் ஹை லைட்
ஒரு செய்திய மட்டும் உட்டுபுடியலே
உபயம் யார் என்று?
கிரௌன் சுருக்குனு வரமே ஏன் இம்புட்டு லேட்ட வந்தியோ என்னமோ ஏதோனு எங்களுக்கு ராத்திரி எல்லாம் நித்திரை இல்லாம அவதியா போச்சி இப்புடி பண்ணுனா நாங்க எல்லாம் உங்க கூட டுக்க உட்டுருவோம் ,
//ஒரு செய்திய மட்டும் உட்டுபுடியலே
உபயம் யார் என்று?//
உபயம் யாருமில்லை, இதுக்கு உங்க தூண்டுதல் பின்னூட்டம்தான் காரணம் சாஹுல் காக்கா. பழச அசைப்போடுறதுல உங்கல போன்ற காக்காமார்கள் இருக்கும் போது எல்லாம் தானா புத்திக்கு வந்துகீது.
இன்னும் என் வள்ளரசிகிட்ட (சபீர் காக்கா உங்க வள்ளரசி கவிதையை மறக்க முடியல) கேக்கல, கேட்டுப்பாத்து எதாச்சும் மிஸ்ஸானது இருந்தா பதிஞ்சிற்றேன் சாஹுல் காக்கா.
ஆலே ரொம்ப வருசமா காணல எங்கே இர்க்கியே.இந்த சாமாங்கெல்லாம் வாங்குவோலா
இதுக்கு உங்க தூண்டுதல் பின்னூட்டம்தான் காரணம் சாஹுல் காக்கா. பழச அசைப்போடுறதுல உங்கல போன்ற காக்காமார்கள் இருக்கும் போது எல்லாம் தானா புத்திக்கு வந்துகீது.
நம்ம நபுசுலே அம்புட்டு மேட்டர் நமகே தெரியாம ஒளிஞ்சு கெடக்குது அதே வெளி கொடுவர ஏலாமா இருந்தோம் அப்போ
இப்போ அதுக்குதான் அதிரை நிருபர்ன்னு ஒரு SPARK கெடச்சி எல்லா விசயத்தையும் அள்ளிக்கிட்டு வருதுல்ல.
Shahulhameed said...
நம்ம நபுசுலே அம்புட்டு மேட்டர் நமகே தெரியாம ஒளிஞ்சு கெடக்குது அதே வெளி கொடுவர ஏலாமா இருந்தோம் அப்போ இப்போ அதுக்குதான் அதிரை நிருபர்ன்னு ஒரு SPARK கெடச்சி எல்லா விசயத்தையும் அள்ளிக்கிட்டு வருதுல்ல. ///
எங்க நபுசு சும்மா கடக்க மாட்டேங்குது ஒரே கொடச்சலாயீக்கு ஹைடெக் (சாஹுல்)காக்கா இன்னும் எதாச்சும் ஆக்(க்கம்)கிப் போடாம அசதியாயிட்டங்களான்னு ? கெளம்புங்க கெளம்புங்க ஊரில மழையாமே அதவுடுங்க நம்ம MSM(n) வந்ததும் அதிரை நிருபரில் மழையாமே... தலையில கீரிடம் வச்சுகிட்டே இங்கே ஒருத்த(ன்)ர் தும்முறார்...
Post a Comment