ஹைடெக் (கலி) காலம்.


ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.
அரையில் பாதி கால் அளவே இன்று ஆடையானது.
ஒரு ஆணைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,
பல ஆணைச்சேர்ந்தால் நட்பு ஆனது.
படிக்காத காலத்தில் இல்லாத பினியெல்லாம்.

மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது, புதிதாய் தோன்றலானது.
ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.
காண்ட்டீர் அக்காலம்.
ஆட வரும் (டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.
அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன், காதலி..
ஹைடெக் (கலி) காலம்.
ஆணும் பெண்னாய் மாறிடமுடியும்..
பெண்ணும் ஆணாய் மாறிட முடியும்.
விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-
காலத்தின் நாகரீக சிதைவு.

----(crown)தபால் காரன்.
(Mohamed thasthageer)

11 கருத்துகள்

Yasir சொன்னது…

//அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன், காதலி..
ஹைடெக் (கலி) காலம்// எது நடக்குதோ இல்லையோ ...இந்த மொபைல் வந்த பிறகு இது நிறைய நடக்குது....ஊரில் நான் கண்டது ,கேட்டது..அல்லாஹ் காப்பற்ற வேண்டும்..அதிரை நிருபர் இந்த படத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்...10000% ஹை-டெக் கலிகால கவிதைக்கு பொருத்தமான படம்

அதிரைநிருபர் சொன்னது…

சகோதரர் யாசிர், புகைப்படம் வழக்கம் போல் நம்ம கூகிலில் தான்.

சகோதரர் தஸ்தகீர், தங்களின் கவிதைக்கு நம் பதிந்திருக்கும் புகைப்படமும் அழகு சேர்க்கிறது. உங்களுக்கு சந்தோசம்தானே

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

எல்லாம் இந்த செல்போனும், சீரழிக்கும் மெகா சீரியல்களும் தான் ஹை டெக் கலிகாலத்துக்கு காரணம்.

பெருசு சிறுசு என்று யாரையும் விட்டு வைக்கவில்லை இந்த ஹை டெக் சைத்தான்கள்.

பாவம் சில அப்பாவிகள்....

Yasir சொன்னது…

ஷபீர் காக்கா...கலிகாலச்சிரழிவைப்பற்றி உங்கள் ஸ்டையிலில் ஒரு கவிதை எழுதுங்களேன் ( கம்யூட்டரை பாவம் விட்டுருங்க-எங்க பொழப்பே அதனால் தான் ஒடுது )

Shameed சொன்னது…

இறைவனின் படைப்பை இந்த கலியுகத்தில் மாற்றினால் (மறுமயில்) மறுயுகத்தில் களி தான் சாப்பாடு

Yasir சொன்னது…

//இந்த கலியுகத்தில் மாற்றினால் (மறுமயில்) மறுயுகத்தில் களி தான் சாப்பாடு// உளுந்து அல்லது பொருமா களி அல்ல---நெருப்புகளி

sabeer.abushahruk சொன்னது…

Dear Bro. Crown,

Good concept. Well written, deserved worries, justified annoyance at the last line.

Beautifully ornamented by exclussive photograph (journalizm is in the blood of Adirai Nirubar Group, I believe).
Good post from the postman but with bad news. (Dont want to prize anymore as I am afraid of the whip of Abu Ibrahim)

(Bro. Yasir, thanks for inducting but lets wait for a light or humorous article and then we attack with another poem as I am afraid of "indigestion" problem if continue with frequent poems.)

-sabeer

crown சொன்னது…

Assalamualikum .Thank you very much of all comments particulars Br .sabeer's one is tonic to my writing skill'.some time when readers make comments that may cut off breath of the author"s . but,here all i received positive comments are like boost and Its make refresh to make more, more articles or poems once again i go say thanks all.

Yasir சொன்னது…

Dear Sabeer kakka...it is not true that some one will get digestion problem if you write poem often....poem like yours is like a "Digene " for us...it will digest all our work related troubles and give great relax to our minds....brothers what do you say ?? agree with me ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இண்டர்நெட்டும் சரி கை அலைபேசியும் சரி கூர்மையான கத்திமே மேல் கால் வைத்து நடப்பது / கை அழுத்தி தேடுவது போல்தான் அதன் பயன்பாடு தடம் புரண்டால் வலி / ரணம் நமக்கே.

அன்று கம்பிவழி தொலைபேசியில் பேசும்போது பொறுமையிருந்தது, காத்திருந்தோம் நாம் கூப்பிடும் சொந்தம் அடுத்த முனைக்கு வரும் வரை, ஆனால் இன்று கையடக்க அலைபேசியோ "தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எல்லைக்கு அப்பால் இருக்கிறார் / அல்லது வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்று பதில் வருகிறது அதுவரைக்கும் பொறுமையில்லை மீண்டும் மீண்டும் விரல்கள் அழுத்திக் கொண்டேயிருக்கிறது.

Sabeer Khaka : நீங்கள் கொடுக்கும் "prize"க்கு வரிவிலக்கு உண்டு, நூழிலை வித்தியாசம் தெரிந்தவர்களாச்சே உங்களிடமா நான் அப்படி prise !? நிச்சயமாக இருக்கவே இருக்காது :)

தம்பி தபால்காரனே : நம்மூரில் நான் இருந்தவரை எனக்கு டமில் அட்ரஸ்(தமிழ் முகவரி)யிட்டு ஒரு கடுதாசியும் வந்ததில்லை அதுக்காக இப்படியா "comments"ல ஆங்கிலீஸ் பொலங்குது !