அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.
அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.
துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.
என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.
இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.
தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:
1. கஸகஸா
2. பான்
3. சுபாரி (beetal nuts), பான் பராக்
அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.
இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.
உண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.
தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
-- தாஜுதீன்
இது தொடர்பான ஆங்கில மடல் செய்தியை அனுப்பிய சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கும், மற்ற சகோதரர்களும் மிக்க நன்றி.
8 Responses So Far:
இந்த தடவை நான் ஊரில் இருந்து வரும் போது ”மானத “ பார்சல் கொண்டு வந்தவர்களிடம் முதலில் விசாரித்தது கஸகஸா உண்டா என்றுதான்..சிலதை பிரித்தும் பார்த்து தான் எடுத்து வந்தேன் நம்மூர் பெண்களுக்கு இதனால் இங்கு எற்படும் இடர்களை பற்றி தெரிவதில்லை.. நல்ல எச்சரிக்கை கட்டுரை சகோதரே...பீலிஸ் கவனம்..
நமக்கு சமையலுக்கு முன்னாடி கூட்டுச் சேரும் என்னன்னா raw materialsன்னு வெவரம் பத்தாது ஏன்னா எது என்ன கலர்ல இருக்கும்னுகூட தெரியாது(ங்க சாஹுல்), சமைச்சு வச்சா சாப்பிடத்தான் வெளங்கியிருந்தேன்..
இங்கே நெறைய கிங்கு(ங்க) இருக்காங்க ஆக்கிப் போட (ருசிக்கா பஞ்சம்) ஏற்கனவே கமிட்டான சாப்பாட்டு விஷயம் வெளியே வரவேயில்ல.. (எல்லாம் சாஹுல் வழி(த்தடம்) சஃபீர்(காக்கா)வுக்கும் வெளங்கும்)
யார் மானத சாமான்கள் கொடுத்தாலும் பிரித்து பார்த்து எடுத்துவருவது புத்திசாலிதனம். சாமான்கள் தருபவருகே அது தடை செய்யப்பட்ட பொருள் என்று தெரியாமல் இருக்கலாம்.இது விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் .
எனக்கு தெரிந்தவரின் மனைவி வரும்போது யாரோ தவறுதலாக ஏர்போட்டில் கொடுத்த பார்சலில் இது போன்ற தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததால் ஆசையாக வந்த அந்த பெண் சிறைபிடிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ரோட்டுலே ஓடுன ஓணானை பிடித்து.... அந்த கதயா போய்டும்
நல்ல விழிப்புணர்வு நண்பரே
இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி
மிகவும் உபயோகமானது .
நல்ல கட்டுரை .
மிக்க நன்றி .
வெளிநாடுகளுக்கு வரும் போது எடுத்துவரும் பார்ஸலில் உள்ளவைகள் பற்றி எடுத்துவருபவர் அறிந்திருப்பது நல்லது.
மிக முக்கியமான இச்செய்தியை முதலில் நம்ம வீட்டு பொம்பளைங்க கிட்ட சொல்லியாகனும். வெளிநாட்டுக்கு நாம வந்தாலும், சாமான்கள் சேகரிப்பது விட்ல இருக்கிற பொம்பளைங்க தானே, அதான் அவர்களுக்கு முதலில் தெரியப்படுத்தனும் எது எது தடை செய்யப்பட்ட பொருட்கள் என்று.
உஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
அதுதேல்லாம் சரி அரபு நாடுகளில் தடை செய்யப்பட்ட கஸகஸா ஹலாலா, ஹராமா? யாருக்காவது தெரியுமா? விளக்கம் சொன்னால் பயனுல்லதாக இருக்கும். மார்க்கம் தெரிந்தவர்கள் விளக்கலாமே.
இப்போதான் தெரியுது நம்மூர் விருந்து சாப்பாடு சாப்பிட்டதும் ஏன் இவ்வளவு மஸ்த் வருது என்று.
கஸகஸா பற்றிய செய்தி மேலும் அறிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பார்க்கவும்
http://vanjoor-vanjoor.blogspot.com/2010/09/blog-post.html
Post a Comment