இது எழுத நினைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.... ஒரு முறை நண்பர்களுடன் கதைத்தது... பிறகு.. எழுத தூண்டுகோல் ஆனது.
பினாங்கு... சின்னவயதில் கேள்விப்பட்ட 'சொர்க்கம்".
இன்றய திகதியில் என வீட்டு கொல்லைபுரத்துக்கு போர மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி போகும் இடம் ஆகிவிட்டது
தரகர் தெருவும் , கடல்கரை தெருவும் கொஞ்சம் தலை தூக்க உதவிய ஊர்.[ ஆனாலும் அங்கு போய் வந்தவர்கள் செய்த அலப்பரை கொஞ்சம் ஒவர்.நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.
ரயிலில் வந்து இறங்கியதும், ஒதும் பாத்திஹா, பின்னாடி ஒடி வரும் பசங்க ,… கொடுமை என்னவென்றல் அதில் அவர் மகனும் வருவான் அது அந்த ஆளுக்கு அது தெரியாது" இந்த சிதம்பர ரகசியத்தை வீட்டில் உட்கார்ந்து வெத்திலை, பாக்கு இடிக்கும் கிழவிதான் சொல்லவேன்டும், பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வார்.
பினாங்கு ஆட்கள் வந்தவுடன் கேள்விப்படும் சுடு தண்ணி, எறச்சான்ம், சேமியா எல்லாம் கால ஓட்டத்தில் நிறைய மாசுபட்டுவிட்டது.
ஆட்கள் அறிவாளி மாதிரி காண்பித்து கொன்டாளும் வீட்டு நடு முத்தத்தில் வெள்ளை வேட்டி [80 x 80] உடுத்தி குளிக்கும் அவலம் எல்லாம் இவர்களிடத்தில் நிறைய இருக்கும்
இவர்கள் தரும் "பல்லி முட்டாய், பிஸ்கோத்துக்கு’ பல முறை ரெங்கு பெட்டிக்கு பக்கதில் வரும் பசங்கள் எல்லாம் இப்பொது இல்லை.
நிலைக்கதவின் ஓரத்தில் நின்று நலம் விசாரிக்கும் நம்தெரு பெண்கள். பல வருடம் ஊருக்கு வராமல் அடம் பிடிக்கும் கணவன், பிள்ளை, உடன் பிறந்தவன் என்று எல்லோரையும் நலம் விசாரிக்கும் முறை[அப்போதெல்லாம் நம் ஜனங்களிடம் வறுமை இருந்தாளும் ஒழுக்கம் இருந்தது]. . " ஆமா அவனை "பொரொயில்"['PRAI" is name of the place in Main Land. Remember PENANG is an island] பார்த்தென், அக்கரைக்கு போயிட்டான்ல என்று சொல்வது, சில அறிவுரைகளையும் [கருத்து கந்தசாமி ஸ்டைலில் நமது ஆட்கள் சொல்வதும் இப்போது வந்த மொபைல் ஒழித்துவிட்டது
காது ஒரத்தில் பஞ்சு, கொஞ்சம் பச்சை கலர் சென்ட். காலரில் மடித்த கர்சீப், ஸ்டிச்கர் கிழிக்காத சட்டை, கையில் பட்டன் குடை என்று [கொஞ்சம் சின்ன வயது ஆட்கள் என்றால் Rayban கண்ணாடி, கலர் செருப்பு வந்த புதிதில் இவர்களின் "பில்டப்பு"க்கு மயங்காதவர்கள் இல்லை.
கஸ்டம்ஸ் விதி முறைகளின் மாற்றம், மற்றும் இப்போது வந்த கார்கோ சர்வீசஸ்... “நாகப்பட்டினதில் ஜப்தி பண்ணிட்டான்”, “டூட்டி கடுமை” போன்ற வார்த்தைகள் மறைய காரணமாகி விட்டது.
"என்ன ஈந்தியா?" [ இந்தியா தான் இவர்கள் வாயில் இப்படி ஆனது]
"பினாங்கிலெ ரோட்டிலெ சோரே போட்டு திங்கலாம்" போன் ற அல்ட்டாப்புகள் எல்லாம் நான் இங்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன இடங்களை பார்த்து சிரிப்புதான் வந்தது.
கறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில் தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம் பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை]
நாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...உலகம் இப்படித்தான் என்று எனக்கு அப்போ தே காண்பித்தது
கப்பல் கல்லுக்கு[ship ticket] மனைவியின் நகை, வலையல் எல்லாம் அடமானம் போவதும் இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் "என் இனமே இப்படி அடிப்படை தேவைக்காக மொத்தமாக அவதிப்பட்டதே என்று, இன்றும் என் மனம் வலிக்கும்'
வாழ்க்கையில் நாம் எவ்வளவு சாதித்தாலும், அந்த "வேர்களின்" பங்களிப்பு நிறைய இருக்கிறது.
Zakir Hussain
24 Responses So Far:
சபாஷ் - மற்றுமொரு படைப்பு - ஜாஹிர்=ஜாஹிர்(காக்கா), வரி வரியாக வாசித்த இன்னொரு வரலாறு. இதுவரை மேலோட்டமாக (வலைப்பூக்களில் மட்டுமே) வாசித்து வந்த எனக்கு சீனியரின் ஆக்கங்கள் ஆழ்ந்து வாசிக்க வைத்தது மெய்.
--------------------------
///நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.///
இப்படியெல்லாம் Style உங்களால்தான் சொல்ல முடியும்.
/// கறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில் தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம் பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை] ///
மிகச் சரியான நிஜம், படிக்கும் காலங்களில் கண்கூடாக கண்டது. இறைச்சிக் கடைக்காரர்களுக்குப் போட்டியாக இப்போதுதான் மருத்துவர்கள் இருக்கிறார்களேன்னு (மாத்தி யோசிச்சேன்).
முதல் ஆக்கமே அசத்தலாய் உள்ளது , எப்போதோ பார்த்த விசயங்களை நினைவு வைத்து எழுத்தில் கொண்டுவருவது என்பது ஒரு கழைதான் அது உங்களிடம் நிறையவே உண்டு .
ரஜுல கப்பல் நம்மமவ்ர்களை சுமந்து சென்ற அந்த கப்பலை நேரில் பார்த்து இல்லை ,போட்டோ வில் கூட இன்றுதான் பார்கின்றேன் ,
(ரொம்ப லேட் என்று அபு இப்ராகிம் சொல்வது காதில் விழுகிறது )
where is our root?(நமது வேர் எங்கே என்பதை ரூட் போட்டு சொல்லிவிட்டீர்).அது வேறு,இது வேறு என்றாலும் அந்த ''வேர்''வையின் உழைப்பு நம்மை (ஊரை)பொருளாதரத்தில் நிமிர்த உதவியதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளீர்கள் வழக்கமான உங்கள் நையாண்டியுடன்.சிலதுகள் பழயது என்று தள்ளிவிட முடியாதவையாக இருக்கும்.முதல் காதல் போல் சொதப்பலாக வந்தாலும் சுகமே!ஆனாலும் நீங்கள் எந்த இடத்திலும் சொதப்பவில்லை.
பினாங்கு பற்றி "சினாங்கா" எழுதிபுட்டீங்க
அத எப்படிங்க 3 வருடமா "பொங்குஷ்" போட்டு கட்டிவைச்சிட்டிங்க
பன்டாங் லீப்பையும்., கலர் கலராய் பத்தைகைலிகளையும், பொறை போட்ட மல்லியப்பு பொட்டமாஸ் மேல்துணியும், பல்லிமுட்டாயையும், பல வடிவம் கொண்ட பிசுகோத்தையும், இறக்குமதி செய்துவிட்டு, ரொட்டி சன்னா, கறிவேப்பிலையும், கட்டம் போட்ட கைலியையும் ஏற்றுமதிசெய்தவர்களின் பெருமை நம்மவர்களையே சாரும்.
வருடக்கணகில் சேமித்து வைத்வைத்த ஹாக்ஸ் முட்டாய் இலவசமாய் கொடுத்த கைலேஞ்சி., கோடாலி சாப், மீசக்கார தைலம், சைனா டார்ச் லைட், இது போன்றவைகளை அடைத்து வைத்த ரங்கு (ரங்கூன்) பொட்டி, கஷ்டங்களை மலேய் கடல்கரையில் கலட்டிவைத்துவிட்டு, இந்திய பெருமையையும் கொரவத்தையும் சுமந்துவரும் எம்.வி.சிதம்பர கப்பல் நாகப் பட்டினத்தில் கரைதட்டியதும் நம் மக்களுக்கு வரும் குதுகலங்களைப் பற்றி சினாங்கா எழுத சாகோதர் ஜகிருக்குத்தான் முடியும்.
படிக்கும் யாவரையும் ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்குக்குள் அழைத்துச் சென்றுவிடும் வரிகள். கூட்டிக்கழித்து பார்த்தால் திரைகடலோடி திரவியம் தேடிய தமிழினம் தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
பினாங்கு போலவே பர்மாவும் கொழும்பும் கூட நம் வேர்களை சுமந்துள்ளது.
உங்கள் பதிவை படித்தபின் ஃப்ளிக்கரில் தேடியபோது இந்த அசைபடம் கிடைத்தது.
http://www.flickr.com/photos/rogvon/3985219499/
(என்றாவது ஒரு நாள் நமது சேது ரோடும் இது போல பிஸியான ஸ்ட்ரீட் ரெஸ்டாரொன்டாக கூடும்)
அருமை, கிட்டத்தட்ட இன்றும் வெளிநாட்டு வாழ் மக்களீன் வாழ்க்கை முறையும் அப்படியேதான் இருக்கு, ஒரு லெவளுக்கு மேல் ஒமல் பையில் சரக்கு குறைவதிலேருந்து ஆரம்பிக்குது....
//பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வா// சான்ஸ்ஸே இல்லே காக்கா இதே மாதிரி எழுத....அருமை அருமை....அது ஏன் காக்கா நம்மூர் ஆள்கள் அங்கு சென்றவர்கள் பெரும்பாலும் ஊரில் மனைவி இருந்தும் அங்கு ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்...மலேசியாவில் முதிர் கன்னிகள் அதிகமா ?
//நாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...//
சான்ஸே இல்லை சகோதரர் ஜாஹிர். இதுப்போன்ற ஆட்கள் தங்க பல் கட்டி ஒவர் பில்டப் கொடுப்பாங்களே பாருங்கள். வெளிநாட்டு செல்வதற்கு முன்பு ஜோக்கு அடித்தால் கூட சிரிக்காதவர்கள், தங்க பல் கட்டியதும் பல்லை காட்டி சிரிப்பதும், ஓவரா பேசுவதும் இன்று நினைத்தால் வேடிக்கை.
தங்கத்தின் விலை அதிகமானதாலோ என்னவோ இப்போது தங்கப்பல் கட்டும் பழக்கம் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை.
வாழ்த்துக்கள் சகோதரர் ஜாஹிர்
நன்றி Bro.அபு இப்ராஹிம், என் எழுத்து நீங்கள் ஆழ்ந்து வாசிக்க உதவியாக இருந்தது கண்டு சந்தோசம்.
Broசாகுல்..நானும் S.S.ரஜூலா கப்பலை நேரில் பார்த்ததில்லை, M.V. சிதம்பரம் கப்பலில் சின்ன பிள்ளையாக இருக்கும்போது 'பாஸ்' வாங்கி உள்ளே போய்வந்த ஞாபகம்.
Bro.Crown அந்த வேர்களை மறந்த்தால் நாம் முன்னேறியவர்கள் என சொல்ல முடியாது.
Bro.உன்னைப்போல் ஒருவன், apa khabar? உங்களுக்கு நிச்சயம் மலேசியாவில் IC இருக்க வேண்டும்.
Bro.முத்துவாப்பா...நமது சேதுரோடு இப்படி ஆகிவிட்டால்...ஆனாலும் ஆகலாம். நிங்கள் சொன்ன வீடியொ பினாங்கில் எடுக்கப்பட்டது.பெரும்பாலும் சீன உணவுகள் அவை.
Bro.அப்துல் மாலிக், நன்றி...இருப்பினும் இந்த சூப்பர்லேட்டிவ் பந்தா துபாய் வந்தபோது வந்தது.
Bro.யாசிர்...நிங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதினால் அது ஒரு மெகா சீரியல் அளவுக்கு எழுத வேண்டும். சில பாயின்ட் மட்டும் ...நமது ஊரில் கூட்டுகுடும்பமுறை, வெகேசன் 5 வருடம் ஒருமுறை, சமயங்களில் 10 வருடம். ஒரு ஆண் சம்பாத்தியத்தில் "உரிமையுடன்' உட்கார்ந்து திண்ணும் சோம்பேறிக்கூட்டம். உறவைச்சொல்லியே "உருவிகிட்டு" விடும் சொந்தங்கள்...இதெல்லாம் தெரியாத / காதில் விழாத பினாங்கு வாழ்க்கை...இப்போது புரியும் என நினக்கிரேன். சில விசயங்கள் எழுதலாம் சென்சார் மூலை தடை சொல்கிறது.
Bro.தாஜுதின் நன்றி
..தங்கபல் 'எனாமல் கேப்பிங்" கண்டுபிடிக்காத காலத்தில் அறிமுகமான விசயம். டென்டிஸ்ட்ரி வளர்ந்து விட்டது..ஆட்கள் தான்.....
ZAKIR HUSSAIN
தாஜுதீன்
இப்போது தங்கப்பல் கட்டும் பழக்கம் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை. //////////////////////
இபோதானுங்கோ தங்கம் ஆண்கள் பயன் படுத்த கூடாது என்பது நிறையபேருக்கு தெரியவந்துள்ளது
புரியுது காக்கா...//ஒரு ஆண் சம்பாத்தியத்தில் "உரிமையுடன்' உட்கார்ந்து திண்ணும் சோம்பேறிக்கூட்டம்/// இந்த கூட்டங்கள் எப்போதான் ஒழியப்போகிறதோ
பெரிய புளியமரத்துத் தாயக்கொட்டை, சின்னப் புளியமரத்து "ஆப்பா மியா ஓராங்", "சூடா மாக்கான்?" என்று வெளிமொழி மேட்டிமை காட்டும் பந்தா பற்றியெல்லாங்கூட தீம்பா நிறைய எழுதலாம்.
மாற்றி யோசித்து மாற்றம் கொண்டுவந்துள்ள நமது அதிரை நிருபரில் நல்ல மாற்றங்கள். இப்போது வசதியாக உள்ளது. தமிழ் டைப் செய்ய , அங்கும் இங்கும் ஒடி போய் டைப் செய்ய வேண்டியது இல்லை.இருந்த இடத்தில் இருந்துகொண்டு வேண்டியதை அடித்து தள்ளலாம்.
(கட்டுப்பாடு முக்கியமுங்க என்று அபு இபுராஹிம் உரக்க சொல்வது காதில் விழுகின்றது)
ZAKIR HUSSAIN
Bro.உன்னைப்போல் ஒருவன், apa khabar? உங்களுக்கு நிச்சயம் மலேசியாவில் IC இருக்க வேண்டும்.
O IC
Shahulhameed on Saturday, September 18, 2010 3:21:00 PM said...
மாற்றி யோசித்து மாற்றம் கொண்டுவந்துள்ள நமது அதிரை நிருபரில் நல்ல மாற்றங்கள். இப்போது வசதியாக உள்ளது. தமிழ் டைப் செய்ய , அங்கும் இங்கும் ஒடி போய் டைப் செய்ய வேண்டியது இல்லை.இருந்த இடத்தில் இருந்துகொண்டு வேண்டியதை அடித்து தள்ளலாம்.
(கட்டுப்பாடு முக்கியமுங்க என்று அபு இபுராஹிம் உரக்க சொல்வது காதில் விழுகின்றது ///
கட்டுபாடுகள் இங்கு இல்லை ஏன்னா கற்றவர்களும் கரிசனம் காட்டுறகங்களும் கலாய்க்கிறமிடது அதோடு எல்லாமே இங்கே தெளிவானவங்கதான் அதனால தட்டி தட்டி கொடுக்கிற உங்களுக்குமா கட்டு(சாப்ப்ப்)பாடு (சாப்பாட்டை மனசு வச்சுகிட்டு நீங்க எழுதினீங்கன்னா நானா பொறுப்பு :))
Zakir Hussain on Saturday, September 18, 2010 2:53:00 PM said...
நன்றி Bro.அபு இப்ராஹிம், என் எழுத்து நீங்கள் ஆழ்ந்து வாசிக்க உதவியாக இருந்தது கண்டு சந்தோசம்.
Bro.யாசிர்...நிங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதினால் அது ஒரு மெகா சீரியல் அளவுக்கு எழுத வேண்டும். ///
ஜாஹிர்(காக்கா) அங்க இங்கே தேடிதேடி புடிக்கிறோமேன்னு நெனக்காமா இன்னொரு விஷயத்துக்கு கோடு போட்டீங்க அப்புறம் ரோட்டையும் போடுவீங்க(ன்னு) தெரியும் எங்களுக்கு (மேலே கருத்துச் சொன்ன யாவரும் support please !!)
சீனியருங்க உரிமையில கேட்டு வைக்கிறேன் புள்ளைங்க படிப்ப பத்தி சொல்லுங்களேன்..., கால் ஆண்டுத் தேர்வு முட்டி மோதும் நேரமிது.
நகைச்சுவையில் தோய்த்த நல்லதொரு நினைவூட்டல்
பினாங்கில்; கால் பாதங்களின் மேடு பள்ளங்களுக்கேற்ப குழிந்துபோன கித்தா செருப்பும், மக்கியும் தேமல்போல கிழிந்தும்போன கஞ்சிப்ராக்கும் அணிந்து பிரித்தெடுத்த அட்டைப்பெட்டியே பாயாகவும் ஒரே சொத்தான பெட்டியே தலையணையாகவும் வாழ்ந்த நம் முன்னோர்களை நேரில் கண்டது நினைத்தால் அழுகை வரும்.
-சபீர்.
நம் முன்னோர்களை நேரில் கண்டது நினைத்தால் அழுகை வரும். //
நான் துபாய் வந்த புதிதில் இங்கே எனக்கு நண்பர்களால் காட்டப்பட்ட இடங்கள் அங்கே சில சொந்தங்கள் / நண்பர்கள் உறங்கி எழுந்த வசிப்பிடங்களை கண்டதும் கலங்கியிருக்கேன்.
பினாங்கில்; கால் பாதங்களின் மேடு பள்ளங்களுக்கேற்ப குழிந்துபோன கித்தா செருப்பும், மக்கியும் தேமல்போல கிழிந்தும்போன கஞ்சிப்ராக்கும் அணிந்து பிரித்தெடுத்த அட்டைப்பெட்டியே பாயாகவும் ஒரே சொத்தான பெட்டியே தலையணையாகவும் வாழ்ந்த நம் முன்னோர்களை நேரில் கண்டது நினைத்தால் அழுகை வரும்.
-சபீர்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்ததை பிள்ளைகள் ஹாயா தலைகால் புரியாமல் அலைந்த காலமும் இன்னும் சாபக்கேடாய் இருக்கத்தான் செய்கிறது.கண்ணீர் வர வழைத்தது நீங்கள் நினைவூட்டியவை.
ஷாஹுல் ஹமித் said /// ZAKIR HUSSAIN Bro.உன்னைப்போல் ஒருவன்,உங்களுக்கு நிச்சயம் மலேசியாவில் iC இருக்க வேண்டும்.///
///O IC///
அதையும்(கண்டம்)தான்டி OCI card இந்திய அரசு தந்த card தாங்க
உன்னைப்போல் ஒருவன்
அதையும்(கண்டம்)தான்டி OCI card இந்திய அரசு தந்த card தாங்க
A / C ரூம்ல உட்காந்து யோசிப்பீங்கள !!!!
இருக்கிர ஊரே குளிராதானே இருக்கிது.,
எதுக்கு சாவுல் காக்க ஏசி ரூம்பு போட்டு யோசிக்கனும்
அஸ்ஸலாமு அழைக்கும் ஜாகிர்
நம் ஊர் வேர்கள் பினாகில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளிலும் இதே நிலை தான், இதை தெரிவித்த உன் ஸ்டைலே தனி ஸ்டைல் தான் அவர்கள் விட்ட பீலா தான் நம் சமுதயத்தின் வெளிநாட்டு மோகம் நாமும் நாலு பேரை போல் நல்ல இருக்கணும் என்ற ஆதங்கம் இன்ஷா அல்லாஹ் நல்ல இருக்கட்டும்
லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்ட பின்னுடம் இட்டு கலக்கிடியலே.ரியாஸ் காக்கா !!!!
Post a Comment