Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் – 2 20

ZAKIR HUSSAIN | August 12, 2014 | , , , ,

ஜெர்மனி

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றிபெற்றது  என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வெற்றிற்க்கு பின்னனியில் எவ்வளவு பெரிய ட்ரைனிங் &  டிசிப்ளினும் இருக்கிறது என பார்த்தால் ஜெர்மனியிடம் மானுட உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது. டெக்னாலஜியில் எப்போதும் "பூந்து விலாசும்" திறமை ஜெர்மனிக்கு கைவந்த கலை. [BMW, Mercedes Benz, Audi] ஜெர்மனி பொதுவாகவே மிகவும் குளிரான நாடு. ஐஸ் கட்டிகள் சாலை ஓரம் மணல் மாதிரி கிடக்கும் சூழ்நிலையில் கால்பந்து விளையாண்ட விளையாட்டாளர்கள் உலகக்கிண்ண விளையாட்டு நடந்த பிரேசிலுடைய ட்ராப்பிக்கல் க்ளைமேட்டுக்கு அவர்களது உடம்பு ஒத்துப்போக 6 மாதத்திற்கு முன்பே வந்து பிரேசிலின் தலை நகரில் ஒரு ஸ்கூல் அளவுக்கு பெரிய பில்டிங் / க்ளினிக் [டாக்டர் மற்றும் மருந்துகளுடன்] வந்து தங்கி விட்டார்கள்.

6 மாதம் தொடர்ந்து விளையாட்டுதான் , பயிற்சியின் போது அவர்களது உடம்பு ப்ரேசிலின் தட்ப வெட்ப நிலையுடன் ஒத்துபோனது. அதை விட பெரிய விசயம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதி விளையாட்டு நடக்கும் ஸ்டேடியம் மாதிரியே அவர்கள் தங்கியிருந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் பக்கத்தில் ஜெர்மனி கட்டியது.


அதைவிட பெரிய விசயம் என்னவென்றால் வெற்றிக் கோப்பையை வாங்கியவுடன் அவர்கள் கட்டிய அந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் / க்ளினிக் / கால்பந்தாட்ட மைதானம் அனைத்தயும் பிரேசிலின் ஏழைக்குழந்தைகள் பயன் படுத்திக்கொள்ள தானமாக கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஜெர்மனி உலகுக்கு கற்றுத் தரும் பாடம் இதில் தர்மம் / இலக்கை நோக்கி பயனிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட 6 மாதப் பயிற்சி. க்ளைமேட் ஒத்துக் கொள்ள அவர்கள் செய்த தியாகம். 

முதலில் பயிற்சியை பார்ப்போம். இன்றைய சூழலில் நிறைய பேற் வெற்றியை ஒரு தம்ப்ட்ரைவிலோ / அல்லது தாயத்திலோ [படிக்காத பார்ட்டிஸ்] கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். இன்றைக்கு விமானம் ஏறி நாளைக்கு வெளிநாடு போய் நாளன்னைக்கு கார் / பெரிய வீடு / பெரிய சொத்து / பெரிய வசதியான வீட்டில் ஒரு சிவப்பான பொண்ணு மனைவியாக / அமுத சுரபியாக அல்லது பின் நம்பர் கேட்காத ஏ.டி.எம். மெஷினாக மாமனார் என்று செட்டிலாக நினைக்கிறார்கள்.

வாழ்க்கையில் பயிற்சி , கடினமான  & சந்தோசமான கால கட்டங்களை தாண்டாமல் கிடைக்கும் வெற்றியையும் பணத்தையும் பாதுகாப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.

எந்த தொழிலும் பயிற்சியோ அல்லது படிப்பில் சிறப்போ இல்லாத இளைஞர்கள் சமயங்களில் வீட்டிலும் வெளியிலும் ஒரு செயற்கையான மதிப்புடன் அலையும்போது பெற்றோர்களை நினைத்து கவலைப்படத் தோன்றும்.

திருநங்கைகள் செய்த பாவம் என்ன ?

திருநங்ககைகளை நம் ஊர் பக்கத்தில் பிச்சை எடுப்பவர்களாகவும், சமூகம் கேவலமாக பார்க்கும் தொழில் செய்பவர்களாகவும் மட்டும் தான் பார்க்கிறது. உலகவரை படத்தில் ஒரு கவுரவ சிம்பளாக தெரியும் நகரங்களில் திருநங்கைகள் டிசைனராகவும் , பெரும் அளவில் காசு பார்க்கும் பெர்சனல் ஹெல்த் பொருட்களை விற்கும் பிசினஸ் உமன் / மென் ஆகத்தான் பார்க்கிறது.  நியூயார்க் , லண்டன் , டோக்கியோ , இங்கேயெல்லாம் இருக்கிறேன் என்று சொல்பவர்களை சமூகம் உயர்வாகத்தான் பார்க்கிறது. நகரத்துக்கும் மனிதனை மதிப்பதற்கும் எது பாலம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.

திருநங்கைகள் ஆவதற்கு காரணமே அவர்களின் நடத்தையில் சின்ன வயதில் ஏற்படும் மாற்றத்தின்போது அதை திருத்தாமல் அவர்களை வீட்டை விட்டு துரத்தி அவமான சின்னமாக அவர்களை பார்ப்பதுதான் என்பது நிதர்சனம்.

அவர்களின் தடம் மாறிய வாழ்க்கைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்கள் நடத்தப்படும் விதமும் , பிறந்த வீட்டிலேயே அன்பு இல்லாத சூழ்நிலையும் அவர்களை சமுதாயத்தின் குப்பையாக வெளியே வீசப்படுகிறார்கள். 

எல்லா வருமானத்தையும் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் பெரியவர்களை கவுரவமாக வெளியே துரத்தும் சமுதாயம் தான் செய்தது சரி என்றே சொல்கிறது. ஆனால் தன்னால் துரத்தப்பட்ட இந்த மனிதர்களை நடு ரோட்டிலும் , பொது போக்குவரத்துகளிலும் சீண்டாமலும், அசிங்கமாகவும் , பல பட்டப்பெயர்களிலும் அழைப்பது ........நாம் கல்விபெற்றவர்கள்தானா என்பதை சந்தேகிக்க வைக்கிறது.  

ஊனமுற்றோர்களை நாம் மதிப்பது இல்லையா?... இவர்களின் [திருநங்கைகளின்] மனதை ஊனப்படுத்தியர்வர்களை பற்றி நாம் ஏதாவது சிந்திக்கிறோமா?. குறைந்தபட்சம் நாமாவது ஊனப்படுத்தாமல் இருப்போம். பிறப்பில் தவறுகள் இருப்பின் [Genetically malformed]   சில நாடுகள் அவர்களின் தவறை ஒரு நோயாளியின் குற்றமாகவே கருதுகிறது [ சிவில் சட்டங்கள் மட்டும்].  

மனித உரிமைச் சட்டங்களின் கடுமை வரும் நாளில் இவர்களை கொஞ்சமாவது கவுரவமாக வாழ விடும். 

அதற்கும் கல்வி ஒன்றே இருளைப்போக்கும்.

பொங்கியவன்

இதுவொன்றும் சரித்திர கதாநாயகனோ, சாண்டில்யன் கதையில் வருபவனோ, அல்லது சினிமா படத்தலைப்போ அல்ல.

ஃபேஸ் புக்கிலும், ஈமெயிலிலும் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு வசை பாடுபவர்களும், 10 வருசத்துக்கு முன் வந்த ஏதோ ஒரு போட்டோவை இப்போது நடக்கும் அவலத்துடன் சம்பந்தப்படுத்தி "எங்களுக்கும் தெரியும்ல" என முந்திக் கொள்பவர்களைத்தான்  சமூகம் இனிமேல் பொங்கியவனாக கருதும்.  உணர்ச்சிவசப்படுவதற்கு உண்மையான காரணம் , சரியான புரிதல் அறிவு இல்லாதது... இல்லையென்றால்  மற்றவனின் அங்கீகாரத்திற்காக ஏங்குவது. மற்றவனின் அங்கீகாரத்துக்கு ஏங்குவதின் வேர்... சின்ன வயதில் குடும்பமே சேர்ந்து "நொச்சு" கொட்டிய சூழ்நிலை. என்ன செஞ்சாலும் "வெளங்காதவன்" என்று பெயர் எடுத்த காரணம்.

சரி வேர் என்னவென்று பார்தாகி விட்டது, விளைவு தெரிய வேண்டாமா?

மதம் சார்ந்த விசயங்களில் இவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள கடவது. மற்ற மதத்தினரும் படிக்கிறார்கள் என்பது தெரியாமல் மதங்களை இழிவு படுத்தினால்... விளைவு ஊரைச்சுற்றி போலீசும், அப்பாவி மக்களின் உயிரும், தேவையற்ற கோர்ட் வாயிதாக்களிலும் தன்னுடைய உழைக்கக்கூடிய வயதையே தொலைத்து விடக்கூடும்.

வெறுப்புகளை கொட்டி கூட்டம் சேர்க்க முடியாது. அன்பினால் மட்டும்தான் கூட்டம் சேரும். வெறுப்புடனும் கூட்டம் சேரும் அதன் ரினிவல் டைம் மிகக் குறைவு.

இப்போது தமிழகத்தை பிடித்திருக்கும் நோய்... "என் கருத்தை ஏற்காவிடில் நீ எனக்கு எதிரி" எனும் சிந்து சமவெளி காலத்து நோய்.

இதன் தாக்கம் தொடர்ந்து இருக்குமானால் தமிழகத்தை குறிப்பாக முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை முன்னேற்ற இன்னும் சில நூறு வருடங்களை கடக்க வேண்டி வரும்.

தவறு செய்தவர்கள்  என்று நீங்கள்  நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....

உலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்

ZAKIR HUSSAIN

20 Responses So Far:

Adiraipirai.in said...

அருமையான ஆக்கம்! உலகின் நடப்புகளையும் வாழ்கையின் பாடங்களையும் கடந்த சில காலங்களாக நடந்து வரும் சமுதாய சிக்கல்களையும் ரத்தினச் சுருக்கமாக அழகாய் சொன்னீர்கள

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Zakir Hussain,

Very useful points on toil behind success,
necessity of human reforming education,
and dire warning on the condition of 'Munnetra Kazhagangal', newer newer groups each one is well focusing on empowering themselves, yelling each other usig social media.

The world likes to see the surface(the result) of the successful people and wants to wonder and zealous about successful people. But dont want to study the success making factors(the reason behind success).

There are genuine associations and groups which only focus on strengthening themselves to provide service to the fellow human. But most of the groups(both political and religious) are trying to strengthen themselves by finding faults with other groups, yelling others to highlight they are pure. This strategy wont work. Because people are no more stupids in this information world. Those weak groups will collapse.

Thanks and best regards

B. Ahamed Ameen from Adirai.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

ஜெர்மனியின் வெற்றியை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது; அது அவர்களின் 6 மாத வினை! என்பதில் ஓர் உண்ணத படிப்பினை இருக்கிறது.

ஒரு வெற்றிக் கோப்பைக்காக அவர்களின் அர்ப்பணம் ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, அந்த பயிற்சிக் களத்தை அவர்கள் ஏழைகளுக்காக விட்டுச் சென்ற பாங்கு வியக்கத் தக்கது.

அருமையான கோல்!

sheikdawoodmohamedfarook said...

//Those weak groups will collapse//மருமகன்அஹமத்அமீன்சொன்னது.Not only weak but also cunning groups one day will collapse.

sheikdawoodmohamedfarook said...

//என்கருத்தைஏற்காவிடில்நீஎனக்குஎதிரி//''உன்மகளுக்குமாப்பிளைதரமாட்டேன்!போடா!''

crown said...

ஜெர்மனியின் வெற்றியை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது; அது அவர்களின் 6 மாத வினை! என்பதில் ஓர் உண்ணத படிப்பினை இருக்கிறது.

ஒரு வெற்றிக் கோப்பைக்காக அவர்களின் அர்ப்பணம் ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, அந்த பயிற்சிக் களத்தை அவர்கள் ஏழைகளுக்காக விட்டுச் சென்ற பாங்கு வியக்கத் தக்கது.

அருமையான கோல்!
-------------------------------------------
நன்றி:கவிவேந்தன் சபீர் காக்கா!

crown said...

நகரத்துக்கும் மனிதனை மதிப்பதற்கும் எது பாலம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.
-------------------------------------------------------------------------
க'பாலத்துக்குள் இருப்பதா? இல்லை கல்பு"க்குள் இருப்பதா? இல்லை க"பாலத்துக்கும் இதயத்துக்கும் பாலமாய் இருப்பதா?

crown said...

தவறு செய்தவர்கள் என்று நீங்கள் நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....

உலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்
-------------------------------------------------------------------------------
அழகு!!!!!!!!!

sheikdawoodmohamedfarook said...

//அவர்கள்கட்டியபில்டிங்/கால் பந்தாட்டமைதானம்எல்லா வற்றையும்ஏழைகுழந்தைகளுக்குவிட்டுவிட்டு//என்னதான்வுலக கப்புஎடுத்தாலும்ஜெர்மானியர்களுக்குசமத்துகொரச்சத்தான்.செலவை பாக்காமேரெண்டொருவாரம்தங்கிஅதையெல்லாம்நல்லவெலைக்கி வித்துட்டுவந்தாஊருலேதோட்டம்தொரவைவாங்கிபோட்டுயுளுவுற காயிலேகால்மேலேகால்போட்டுசோறுஉங்கலாமுல!

sabeer.abushahruk said...

திருநங்கைகளில் பெரும்பாலோர் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவதால் அந்த ஒட்டு மொத்த பாலினமும் நாகரிக சமுதாயத்தில் கேவலமாகப் பார்க்கப்படுகின்றனர்.

விதிவிலக்காக குறைந்த சதவிகிதத்தினரே அந்தஸ்தான தொழில் செய்கின்றனர். எனவே அவர்களுக்காக அளவுக்கு அதிகமாக அநுதாபப்பட அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

sabeer.abushahruk said...

//தவறு செய்தவர்கள் என்று நீங்கள் நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....

உலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்//

தெரிகிறது; மிக அழகாகத் தெரிகிறது!

நல்ல கதம்பம் டா!

Yasir said...

மாஷா அல்லாஹ்.....ஜாஹிர் காக்காவின் ஆக்கத்தில் எப்பொழுதுமே அனைத்து சுவைகளும் நிறைந்து இருக்கும் ...அந்த வகையில் இவ்வாக்கமும் டபுள் ஹிட்....ஜெர்மனியின் திட்டமிடல் புருவத்தை உயர்த்த வைக்கின்றது

காக்கா-ஊரில் தண்ணீர் பஞ்சமும் மற்ற துன்பங்களும் அதிகமாக மற்ற நல்ல செயல்களும் எண்ணங்களும் குறைந்ததே காரணம்...விரைவில் அதிரையில் வெக்கேஷன் கட்டுரையில் பார்ப்போல்

Yasir said...

//திருநங்கைகளில் பெரும்பாலோர்// கவிக்காக்கா அவர்கள் அதில் தள்ளப்படுகின்றார்கள் என்றே கூறலாம்..the left with no option....

Yasir said...

கொச்சின் - ல இருந்து வந்தாச்சா .....

sabeer.abushahruk said...

வந்துட்டேன் யாசிர்,

அங்குள்ள லுலு மால் மிகப் பிரமாண்டமாகக் கட்டியுள்ளனர். லுலு ஹைப்பர் மார்க்கட் துபையைவிட பெருசு.

(கொச்சின் சாலைகள் சேத்தியாத்தோப்பு திண்டிவனம் சாலையைவிட மோசம்)

Ebrahim Ansari said...

மனம்விட்டுப் படிக்கவும் , வாய்விட்டு சிரிக்கவும், சிந்தனையை செலவு செய்து சிந்திக்கவும் வைக்கும் அசத்தல் தம்பி கட்டியுள்ள வழக்கமான அழகான தோரணம்.

அப்துல்மாலிக் said...

அருமையான சிந்தனை கலந்த விழிப்புணர்வு பதிவு காக்கா

Iqbal M. Salih said...

அற்புதமான ஆக்கம்!
வெல்டன் ஜாகிர்.

ZAKIR HUSSAIN said...

என் பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உடனே ஏற்புரை எழுத முடியாத அளவுக்கு கொஞ்சம் வேலைகள் அதிகமாகிவிட்டது.
தனித்தனியே உங்களின் வார்த்தைகளுக்கு மீழ்பதில் சொல்ல ஆசைதான். நேரம் கிடைத்தவுடன் தொடரலாம்

Thanx Once Again

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு