Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்களும் அதிரை நிருபர்களே 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2014 | , ,

அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்...
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

அப்துர்ரஹ்மான்
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்!

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை!

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்!

அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

அப்புறம்...நான்:
கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்...
புத்திமதி சொன்னேன்
கவிக்காக்கா என்றனர்...
ஊர் நினைவில் உழன்றேன்
அதிரைக் கவி என்றனர்...
தற்போது...
அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!

ஊக்கத்தை
ஊட்டி வளர்ப்பதில்
போட்டியின்றி வென்ற
ராஃபியா காக்கா (எம் எஸ் எம்):
ஜஹபர் சாதிக்
அபு இஸ்மாயில்
அஹமது மன்சூர்
அப்துல் ரஷீத் ரஹ்மானி
அதிரை அபூசகோதரிகள்
ஃபாத்திமா ஜொஹரா
கதீஜா

இன்னும்...
இர்ஷாத் எனும்
இளங்காற்றும்...
கடைசியில் வந்தாலும்
கலக்கும் ரியாஸ்...
அதிரை ஆலிம் எனும்
அறுமைத் தோழர்...
தற்போது
ஜகா வாங்கி நிற்கும்
ஜலீல் மற்றும் ஜலால்

வலைப்பூ வந்து
வாசித்து
கருத்தைக் கருவேற்ற
வாசக வட்டமும்
அதை
பின்னூட்டமெனெ
பின்னியெடுத்த பங்களிப்பாளர்களும்
இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்
என-
அத்தனை பேரும்
அதிரை நிருபரே!


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
Sabeer.abuShahruk
இது ஒரு மீள்பதிவு

7 Responses So Far:

Shameed said...

இன்றைய பிரம்மாண்ட எழுத்தாளர்களையும் சேர்த்து புதிய பதிவாக போட்டிருக்கலாம்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சாகுல் காக்கா சொன்ன மாதிரி இது புல் மீள்(ஸ்) பதிவல்ல பழய சாதம் !மாபெரும் புது எழுத்தர்களை சேர்திருக்கலாம்!
மறுபடியும் பெரிய விருந்தே படைத்திருக்கலாம்! எங்கே கவி மேஸ்திரி மீண்டும் புதிதாய் சமையுங்கள்!பறிமாற அ. நி உண்டு! உண்டு ரசிக்க நாங்களுண்டு!

Ebrahim Ansari said...

எங்கே நடுவுலே கொஞ்சம் பக்கங்களைக் காணோமே என்று நினைத்தேன். நிறைவாகத் தெரிந்தது மீள் பதிவென்று.
அளவு சாப்பாடானாலும் ருசியான அருமையான சாப்பாடு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அத்தனை நிருபருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது ஒரு மீள்பதிவு, மீண்டும் ஒரு பதிவு மிக விரைவில் இன்ஷா அல்லாஹ் !

அப்துல்மாலிக் said...

வேலைப்பழுவினால் ஓடியவர்களை தூண்டில் போட்டு இழுப்பது என்பது இதுதானா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு