Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 84 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

காரணமின்றி முஸ்லிம்களை தவறாக எண்ணுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்!  உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்படையோன். (அல்குர்ஆன்: 49:12)

''சந்தேகம் கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நிச்சயம் சந்தேகம், பேச்சில் மிகப் பொய்யாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1573)

முஸ்லிம்களை இழிவாகக் கருதுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். ( அல்குர்ஆன் : 49:11 )

''ஒரு முஸ்லிமான தன் சகோதரரை இழிவாக நடத்துவதே, ஒரு மனிதனுக்கு தீமையாக அமைய போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1574)

''அணுவளவேனும் பெருமையை தன் உள்ளத்தில் வைத்திருப்பவர், சொர்க்கத்தில் நுழைய முடியாது' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''தன் ஆடை அழகாக, தன்  செருப்பு அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இது பெருமையா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன். அழகை விரும்புகிறான். பெருமை என்பது, சத்தியத்தை மறுப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1575 )

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இன்ன மனிதரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று ஒருவர் கூறினால், அப்போது அல்லாஹ் ''இன்னாரை நான் மன்னிக்க மாட்டேன் என்று கூறி என்மீது அதிகாரம் செலுத்துபவன் யார்? இதோ! நான் அவனை மன்னித்து விட்டேன். உன் நற்செயலை வீணாக்கி விட்டேன்'' என்று கூறுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு அப்துல்லா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1576)

பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன் : 33:58)

''இரண்டு விஷயங்கள், மக்களிடம் உள்ளன. அந்த இரண்டுமே இறை மறுப்புக் கொள்கையாகும். 1) பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது 2) இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1578 )

ஏமாற்றுவது கூடாது!

''நபி(ஸல்) அவர்கள் உணவுக் குவியல் அருகே சென்றார்கள். அதனுள் தன் கையைப் புகுத்தினார்கள். விரல்களில் ஈரப்பதம் பட்டது. ''உணவுப் பொருள் விற்பவரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! மழை பெய்து விட்டது'' என்று அவர் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''அந்த ஈரம் பட்ட தானியத்தை மக்கள் பார்க்கும் வகையில் மேற்பகுதியில் நீர் வைத்திருக்க வேண்டாமா? நம்மை ஏமாற்றுகிறவர், நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1579)

''பொருளின் விலையை ஏற்றி விடும் வகையில் நீங்கள் ஒருவருக்கொருவர் செயல்படாதீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1580)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//''அணுவளவேனும் பெருமையை தன் உள்ளத்தில் வைத்திருப்பவர், சொர்க்கத்தில் நுழைய முடியாது" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அப்போது ஒருவர், ''தன் ஆடை அழகாக, தன் செருப்பு அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இது பெருமையா?)'' என்று கேட்டார்.

''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன். அழகை விரும்புகிறான். பெருமை என்பது, சத்தியத்தை மறுப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதுமாகும்''என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1575 )//

எக்காலத்திற்கும் ஏற்ற ஏகத்து மார்க்கத்தில் இன்றையச் சூழலில் நமது சகோதரர்களின் நிலையை எண்ணி வேதனை கொள்ள வைக்கிறது...

அல்லாஹ் பதுகாப்பானாக !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.. காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு