Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு ஒப்ப(ந்த)ம் போடுங்க அப்பா ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2014 | , , , , , , ,

அதிரை அப்பாவுக்கும் அவர்களின் பேரனுக்கும் நடக்கும் உரையாடல்....

பேரன்: "அப்பா.. அஸ்ஸலாமு அலைக்கும்....."

அப்பா:  "அலைக்கு முஸ்ஸலாம்…. யாரு.. ஜாகிரா....?"

பேரன்: "என்னப்பா.. ஜாகிராண்டா பொம்ப்லாபுள்ளப் பேரப்பா. எம்பேரு ஜாகிருசேன்ப்பா..."

அப்பா:  "சரி..சரி.. என்ன இஷாவுல பளியாசள்ள ஒன்ன பாக்கலையே...ஏ… இஷா தொழுவலையா…?"

பேரன்:  "என்னப்பா... நான் தொழுகைய விடுவேனா..? ரெண்டாவது சஃப்ல தூணுக்கு கிட்டகூட நீங்க நிண்டு தொழுவுனதைப் பாத்தேனே...."

அப்பா:  "கோவிச்சிக்கிடாதே… சும்மா கேட்டேம்மா, சரி என்ன விஷயம்..?"

பேரன்:  "என் ரேங்க்கார்டுல கையெழுத்து போடனும்ப்பா போடுவியளா...?"

அப்பா:  "கெரண்டு போன நேரத்துல வேற வந்திக்கிற....!"

பேரன்:  "பத்திரத்திலையா போடச் சொல்றேன் ரேங்கார்டுதானப்பா..."

அப்பா:    "நீ ரேங்கு எத்தன எடுத்திக்கிரா..?"

பேரன்:  "ரெண்டாவது ரேங்கப்பா.. எல்லாத்திலையும் நல்ல மார்க்தான்ப்பா இங்கிலீஸ்ல மட்டும் எட்டுமார்க் சபீர் ங்க்ரவ கூட எடுத் திட்டதாலே நான் ரெண்டாவது ரேங்…"

அப்பா: "இனி இங்கிலீஸ்ல கவனமாயிரு அப்பதான் ஒலக மொழி எல்லாம் கத்துக்கலாம்."

பேரன்:   "உங்களுக்கு ஒலக மொழி எல்லாந்தெரியுமாப்பா...?"

அப்பா:  "ஹும்…. ஒலகத்தில எல்லா மொழியிலும் சிரிக்க மட்டும் தெரியும்."

பேரன் : "ஆமா… நீங்க சின்னபுள்ளையிலே வேட்டிய கெலஞ்சுவச்சுட்டு கொளத்துல குளிப்பியலாம் !. மைத்தாங்கரயிலே தும்பிபுடிப்பி யலாம்ல ?"

அப்பா: "ஆமா…. வேட்டில உள்ள சாயமெல்லாம் போயிடும்ல அதனாலதாம்மா…"

பேரன்:  "மைத்தாங்கரயிலுமா சாயம்போவும்..? யாம்ப்பா.......!!!!"

அப்பா:  "இதெல்லா யாரு உனக்கு சொன்னது..?"

பேரன்:  "அவ்பக்கர்ட அப்பா சொன்னாக"

அப்பா:   "யார்ரா அது...."

பேரன்: "அதாம்பா.. கெரண்டு குஞ்சாட்டம் தாடிக்கு கலரெல்லாம் அடிசிருப்பாக. ஜும்மாவுட்டு நீங்க பேசிக்கிட்டு வந்தியளே அவ்வொதான்"

அப்பா: "அட நம்ம நெய்னாமதா.... அப்படி எல்லாஞ் சொல்லகூடாது. நீ…குர்ஆன் பாடம் முடிச்சிட்டியா இல்லையா..?"

பேரன்:  "இன்னிக்கிதான் சூரத்துல் ஜக்ரப் பாடங்குடுத்தேன், இன்னும் பாக்கி ஈக்கிது… !"

அப்பா: "முடிக்க இன்னும் ஆறேழு ஜுசு இரிக்கிதா .....? "

பேரன்:  "ஜக்ரப் இருபத்தஞ்சாவது ஜுசுப்பா அஞ்சுதாபாக்கி. "

அப்பா:  "உவ்ளோ நாளா ஒதுரமாரித்தெரியுது. இன்னும் முடிக்கலையா....?"

பேரன்: "இது நாலாவது தடவை பாடங்குடுக்கிறேன். நீங்க எவ்ளோ பாடங்குடுத்துப்பியபப்பா...?"

அப்பா:  "நா… பதினொன்னோ, பன்னெண்டோ குடுத்த ஞாபகம்… !"

பேரன்:  "என்னப்பா டயங்கேட்டமாரி சொல்றியோ…"

அப்பா: "ஆமாப்பா அப்போ பள்ளிக்கு போயிக்கிட்டுதான் இருந்தப்போ காய்ச்சல் வந்துடுச்சு பள்ளிக்கு போகல. ஆனா இப்போபாரு நானா பலதடவை திருப்பி, திருப்பி ஒதுறேனா இல்லையா..?"

பேரன்: "நீங்க, பெரியம்மாவை கல்யாணம் முடிக்க யுவ்ளோ பணமும் நகையெல்லாம் வாங்கினியலாமே...நெசமாப்பா......?"

அப்பா: "நா… வாங்களே எங்க வாப்பா உம்மா வாங்குனாக பெரியவங்க வாங்கும்போது நாம சின்னபுள்ளே பேச்சை கேக்கவா போறாங்க ....?"

பேரன்:  "சின்னப் புள்ளக்கிதான் கலியான முடிக்க மாட்டாங்களே.... யாம்ப்ப நீங்க....!!"

அப்பா:  "(உடனே) யாரோ கதவ தட்டுர மாரிதெரியுதே…. அங்க பாரு.. !"

பேரன்:  "ஆமா கெரண்டுப்பா….. பேச்சை மாத்தாதியோ.."

அப்பா:  "இதுவும் அந்த நெய்னாமது சொன்னதா ..?"

பேரன்: "ஆமாப்பா.உண்மையத்தானே சொன்னாக... அல்ஹம்துல்லில்லாஹ் கெரண்டு வந்துடுசிபா.... இந்தாங்கப்பா கையெழுத்த போடுங்கப்பா....."

{பேரன் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கி விட்டு சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றதும்}

அப்பா மனதிற்குள் எம்பேரன் நல்ல புத்திசாலியாக இருக்கிறானென்று சந்தோசத்துடன், யாஅல்லாஹ் எம்பேரனை தர்பியத்தான, சாலிஹானவனாக ஆக்கி பரக்கதாக்கிவை என்று துஆச் செய்தவாறே படுக்க செல்கிறார்.

ZAEISA

குறிப்பு: பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க !

3 Responses So Far:

sabeer.abushahruk said...

ஹாஹாஹ்ஹா!

எத்ன நாளாச்சி அப்பா பேரன் பேசிக்றத கேட்டு!

அப்பாவுக்குப் பேரனோ பேரனுக்கு அப்பாவோ சளச்ச ஆள் இல்ல; என்னா போடு போட்றாங்க.

அந்த "கெரண்டு குஞ்சு" சேடைய படிச்ச ஒடனே சிரிச்சிட்டேன்.

பேரன் கிளாஸ்ல நானும் ஜாயிரும் இருக்றதாலே அப்பாட்ட ஒரு சீக்ரெட்ட சொல்லிப்புட்றேன்.

நீங்க கையெழுத்துப் போட்ட ரேங்க் கார்ட சரியா பாத்தியலா? ஒங்க பேரன் 'தேதிய காமிச்சி அதான் ரேங்க்குன்னு' கையெழுத்து வாங்கிட்டான். கையெழுத்து வாங்க்றதுக்கு முன்னால ஒங்க கண்ணாடிய ஒளிச்சி வச்சிட்டுத்தான் வந்தான். ஏச்சிப்புட்டானே அப்பா. கம்பெனிய கவுத்துப்புட்டானே.

(அப்பாவ சந்திக்கனுமே...ஊர்லயா?)

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜாகிர் பாய் உங்களை அவசியம் பாக்கணுமே...நீங்களும் ஊர்லேதாணு நினைக்கிறேன்.இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்

ZAKIR HUSSAIN said...

வ அலைக்கும் சலாம், ஊரில் இருக்க ஆசைதான் இப்போது [ நிறைய கல்யாண இன்விட்டேசன்...இங்கு உள்ள சூழ்நிலை இப்போது நான் அங்கு வர முடியாத சூழ்நிலையாக இருக்கிறது ]

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு